பேச்சு:நல்வழுதியார்
இக்கட்டுரையை ஒரு ஆசிரியரே எழுதியிருப்பதால் இங்கிருக்கும் தகவல்களை வெட்டி நல்வழுதி கட்டுரையில் இடுவது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 23 மே 2013 (UTC)
- நல்வழுதியார் புலவர். நல்வழுதி கற்பனை அரசன். தொடர்பு இல்லை. --Sengai Podhuvan (பேச்சு) 13:28, 23 மே 2013 (UTC)
நல்வழுதி கட்டுரையை எழுதியவர் நிரோஜன் சக்திவேல். அவர் அந்த உள்ளடக்கங்களை சதாசிவ பண்டாரத்தார் எழுதிய நூலில் இருந்து எடுத்திருப்பார் என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை. இரண்டிலுமே கூறப்பட்டிருக்கும் பாடல்கள் ஒன்றாகவே உள்ளது அதனால் இணைக்கத்தான் வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:20, 23 மே 2013 (UTC)
ஒரே தீர்வு
தொகு- சதாசிவப் பண்டாரத்தார் கல்வெட்டுகளைக் கொண்டு வரலாறு படைத்தவர். அவரைச் சங்ககால வரலாற்றுக்கு இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டாம்.
- வரலாற்றுக்கு ஆக்கம் தேடுங்கள்.
- அரசர் எனக் காட்டப்பட்டுள்ள கற்பனையை நீக்கிவிட்டுப் புலவர் எனக் காட்டி இணைத்துவிடலாமா?
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:54, 23 மே 2013 (UTC)
நீங்கள் இப்படிக் கூறுவீர்கள் என்று தெரிந்து தான் நான் சரியாக தெரியவில்லை என்றேன். அக்கட்டுரையை எழுதிய நிரோஜனிடம் முகநூல் மூலம் அது எந்த நூல் எனக் கேட்டும் இன்னும் பதிலில்லை. ஆனால் நான் என்னிடமுள்ள சங்ககால வரலாறு என்னும் நூலை பார்த்தில் இருவருமே புலவர்களாக இருந்தாலும் ஒரு சிறு இடத்துக்கு அரசனாக இருந்ததாலே அவர்கள் வழுதி என்னும் பெயருடன் அழைக்கப்பட்டதாக ஒரு புகழ்பெற்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் பெயரைக் கூற நான் விரும்பவில்லை. கூறினால் அந்த ஆய்வாளரை நான் கேவலப்படுத்தியதாக என் மீது பழி விழும். பழி போடுவது எளிது. ஆனால் அதற்கு அந்த ஊரியவர் இல்லை எனில் போட்ட பழியை திரும்பப் பெறுவது கடினம். மயிலை சீனி. வேங்கடசாமி, சதாசிவ பண்டாரத்தார் போன்ற ஆய்வாளர்கள் மேல் அனைத்து தமிழ் பற்றாளர்களுக்கும் பற்று உண்டு. அவர்களை யாரும் கொச்சைப்படுத்த விரும்பமாட்டார்கள். அதனால் அவர்களை கொச்சைப்படுத்துவதாக கூறி உங்களை நீங்களே கொச்சைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
நான் ஏற்கனவே கூறியது போல் விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலை தரவுதளம். இதில் ஒரு ஆய்வாளர் கூறியது உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து கூற விக்கிப்பீடியா சர்வதேச தொல்லியல் துறை அல்ல. இது ஒரு விடயம் பற்றிய பல வல்லுநர்களின் கருத்துக்களை தரும் ஒரு கலைக்களஞ்சியம். அதனால் இது உண்மையா பொய்யா கற்பனையா என்பதை பேசுவதை விட இந்த இந்த ஆய்வாளர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்பதே சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:16, 24 மே 2013 (UTC)
- \\உண்மையா பொய்யா கற்பனையா என்பதை பேசுவதை விட இந்த இந்த ஆய்வாளர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்பதே சிறந்தது. \\
விருப்பம்அருமை தென்காசியாரே. என் எண்ணமும் இதுதான். புலவர்களை அரசனாக சிலர் கருதுவதை நாம் நீக்கவேண்டாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:23, 24 மே 2013 (UTC)
- நல்வழுதி கட்டுரையில் பேசுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 23:46, 24 மே 2013 (UTC)