குந்தவை
குந்தவை (Kundavai) என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பல அரசப் பெண்களின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த ஒரு பிரபலமான பெயராகும். குந்தவை என்ற பெயரில் வாழ்ந்து சென்ற சில பெண்கள் பின்வருமாறு:
- மேலைக் கங்க மன்னர் முதலாம் பிருதிவிபதியின் (பொ.ஊ. 853–880) மகள் குந்தவை என்பவர் ஆவார். அவர் மல்லாதேவாவனின்[1] மகனும் வாரிசுமான பாண இளவரசர் முதலாம் விக்ரமாதித்யனை மணந்தார். திருவல்லத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு இவர் பல கொடைகளை வழங்கினார்.[2]
- அரிஞ்சய சோழன் மணந்த கீழைச் சாளுக்கிய இளவரசியின் பெயர் குந்தவை. அவர் வீமன் குந்தவை என்று குறிப்பிடப்படுகிறார். இவரே சோழ மரபில் அறியப்படும் முதல் குந்தவை.
- சுந்தர சோழன் தன் பெரிய தாயார் மீது கொண்ட அன்பால் தன் மகளுக்கு குந்தவை என்று பெயர் சூட்டுகிறார். அவர்தான் முதலாம் ராசராச சோழனின் அக்காள் குந்தவை பிராட்டியார் வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து அரசியாக வாழ்ந்தாரென தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுகிறார்.[3] இவர் ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவரையர் வந்தியத் தேவர் மாதவேவியார், உடையார் பொன் மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் குறிக்கப்படுகிறார்.[4]
- இராசராச சோழன் தன் அக்காளின் மீதிருந்த அன்பின் காரணமாக தன் மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டார். இந்த குந்தவையே இராசேந்திர சோழனுக்கு தங்கையும் கீழைச் சாளுக்கிய மன்னர் விமலாதித்தனின் பட்டத்து அரசியான குந்தவை ஆழ்வார்.[3]
- கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனின் மகளும் முதலாம் குலோத்துங்க சோழனின் தங்கையாக ஒரு குந்தவை என்று குறிக்கப்படுகிறார். இவர் இராசராசன் குந்தவை, பராந்தகன் குந்தவை, ஆழ்வார் குந்தவை என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sailendra Nath Sen. Ancient Indian History and Civilization. New Age International, 1999. p. 470.
- ↑ M. S. Govindasamy (1965). The Role of Feudatories in Pallava History. Annamalai University, 1965. p. 30.
- ↑ 3.0 3.1 "South Indian Inscriptions, Volume I: Part II - Tamil and Grantha Inscriptions". What Is India News Service. 2007-02-23. பார்க்கப்பட்ட நாள் 2011-06-01.
- ↑ 16. குந்தவை, தினமணி, 30, ஆகத்து, 2018