அரிஞ்சய சோழன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோப்பரகேசரி வர்மன் அரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன்னின் மகன் மற்றும் இராஜாதித்தர், கண்டராதித்தரின் ஆகியோரின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவருக்கு மேல்பாடி என்ற ஊரில் பள்ளிப்படை அமைக்கப்பட்டது.
{{{map}}} {{{caption}}} | |
ஆட்சிக்காலம் | கி.பி. 956 - 957 |
title | கோப்பரகேசரி வர்மன் |
தலைநகரம் | தஞ்சாவூர் |
அரசி | கல்யாணி வீமன் குந்தவையர், கோதை பிராட்டியர் |
பிள்ளைகள் | சுந்தர சோழன் |
முன்னவன் | கண்டராதித்தர் |
பின்னவன் | சுந்தர சோழன் |
தந்தை | முதலாம் பராந்தக சோழன் |
பிறப்பு | தஞ்சாவூர் |
இறப்பு | கி.பி.957 ஆற்றூர் |
கல்யாணி வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். கல்யாணி வீமன் குந்தவை என்பவள் கீழச்சாளுக்கிய வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.
956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான்.