இராஜாதித்தர்
இராஜாதித்தியர் (Rajaditya Chola 10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) என்பவர் முதலாம் பராந்தகச் சோழரின் (ஆட்சிக் காலம் 907–955) மற்றும் சேர இளவரசி கோ கிழான் அடிகள் ஆகியோரின் மகனாவார்.[1] இவர் தக்கோலப் போருக்கு (948–949) தலைமை தாங்கியதற்காக அறியப்படுகிறார்.[2]
இராஜாதித்தர் | |
---|---|
பிறப்பு | பழையாறை, சோழர் |
இறப்பு | கி.பி. 949 தக்கோலம் |
அரசமரபு | சோழர் |
தந்தை | முதலாம் பராந்தக சோழன் |
தாய் | கோ கிழான் அடிகள் |
மதம் | இந்து சமயம் |
போரில் இறந்த இளவரசர் ராஜாதித்யனின் மரணம் குறித்து வழக்கத்திற்கு மாறாக சோழர்களால் நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வு குறித்த பதிவானது முதலாம் இராசராசனின் பெரிய லேடன் செப்பேடு[3] (கி.பி. 1006) மற்றும் இராசேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடு (கி.பி. 1018) ஆகியவற்றில் காணப்படுகிறது.[4][2] சோழர் செப்பேடுகளில் உள்ள சில விவரங்களில் வேறுபட்ட தகவல்கள், மேலைக் கங்கர் மரபைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் மற்றும் இளவரசர் இரண்டாம் பூதுகன் (மூன்றாம் கிருஷ்ணனின் இளம் கீழ்த்தலைவர்) ஆகியோரின் அடக்கூர் கல்வெட்டில் காணப்படுகிறது.[5][2] சோழப் படையில் கேரளத் தளபதியான வெள்ளங்குமரனின் கல்வெட்டுகளிலும் போரைப் பற்றிய மறைமுகக் குறிப்புகளைக் காணலாம்.[6]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇராஜாதித்தியன், சேர பெருமாள் இளவரசி கோ கிழான் அடிகள் மற்றும் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) ஆகியோரின் மகன் ஆவார்.[7] முதலாம் பராந்தகன், கோ கிழான் அடிகள் மற்றும் கிழான் அடிகள் ரவி நீலி (அவரது இரண்டு மகன்களான இராஜாதித்யன் மற்றும் அரிஞ்சய சோழரின் தாய்கள்) ஆகிய இரு சேர இளவரசிகளை மணந்ததாக அறியப்படுகிறது.[8][2] ஒரு சேர இளவரசிக்கும் பராந்தகருக்கும் நடந்த திருமணம், கி.பி. 910, கங்க மன்னர் இரண்டாம் பிருதிவிபதி அத்திமல்லானின் உதயேந்திரம் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[9][10]
இராஷ்டிரகூடர் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடனுடனான பெரும்போரை திருமுனைப்பட்டி நாட்டில் முதலாம் பராந்தக சோழன் எதிர்நோக்கி இருந்ததாகத் தெரிகிறது. 930களில், அல்லது கிபி 923 ஆம் ஆண்டிலேயே,[11] இளவரசர் இராஜாதித்தன் யானைகள் மற்றும் குதிரைகள் உட்பட கணிசமான படைகளுடன், தன் முழு குடும்பத்துடன், திருமுனைப்பட்டி நாட்டிலுள்ள இராஜாதித்தியபுரத்திற்கு (திருநாவலூர்/திருமாநல்லூர்) புதிய சோழ அரசின் வடக்கு எல்லைகளைப் பாதுகாத்தக்க அனுப்பபட்டார்[12]).[2] 930களின்[13] நடுப்பகுதியில் அவரது தாயார் (சேர இளவரசி கோ கிழான் அடிகள்) மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அரிஞ்சய சோழன் ஆகியோர் இராஜாதித்தியபுரம் சென்று சேர்ந்தனர்.[2] திருமுனைப்பட்டி நாட்டுக்குச் சென்ற கேரள (சேர) தலைவர்களின் பல இராணுவ வீரர்கள் இராஜாதித்யனுக்கு ஆதரவாக நின்றனர்.[2]
தக்கோலப் போர்
தொகுதக்கோலப் போர், தக்கோலம் என்பது தற்போதைய வட தம்ழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள ஊராகும்.[2]
தக்கோலப் போரில் இராட்டிரகூடர் மற்றும் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் (மேலைக் கங்கர், பணர், வைதும்பர் உட்பட)[2] மற்றும் படைகள் ஒரு பக்கமும். சோழ இளவரசர் இராஜாதித்யரும், சோழ வீரர்களும் ,அவர்களுத்து துணையாக, கேரள (சேரர்) தலைவர்களின் படைவீரர்களும் மறுபக்கம் இருந்தனர்.[2]
தக்கோலப் போரில் போர்க்களத்தில் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இது சோழர் படையின் தோல்விக்கு காரணமாயிற்று.[2] அடக்கூர் கல்வெட்டின் படி, போரின் போது யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த இராஜாதித்தியரை, இரண்டாம் பூதுகன் அம்பை எய்தித் தாக்கபட்டார்[5] சோழ இளவரசர் அங்கேயே இறந்தார். சோழர்களின் படை பின்னர் தோற்கடிக்கப்பட்டு, குழப்பத்தில் பின்வாங்கியது.[2] இப்போரின் முடிவில் சோழப் பேரரசு வீழ்ச்சி கண்டது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 96-100.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Ali, Daud. "The Death of a Friend: Companionship, Loyalty and Affiliation in Chola South India." Studies in History, vol. 33, no. 1, Feb. 2017, pp. 36–60.
- ↑ Epigraphia Indica 22 (1933–34), no. 34: vv. 19–21.
- ↑ South Indian Inscriptions 3 (1920), no. 205: v. 54.
- ↑ 5.0 5.1 Epigraphia Indica 6 (1900–01), no. 6c: 53–56.
- ↑ Epigraphia Indica 27 (1947–48), no. 47: 293–96.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 99-100.
- ↑ George Spencer, ‘Ties that Bound: Royal Marriage Alliance in the Chola Period’, Proceedings of the Fourth International Symposium on Asian Studies (Hong Kong: Asian Research Service, 1982), 723.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 96-101, 437, 442, 445 and 473.
- ↑ South Indian Inscriptions 2 (1895), no. 76: v. 8.
- ↑ South Indian Inscriptions 7 (1932), No. 1009.
- ↑ 12.0 12.1 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 100-101.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 100-01.
மேலும் படிக்க
தொகு- George Spencer, 'Ties that Bound', P. F. I. S. A. S. (Hong Kong: Asian Research Service, 1982), 723.
- Daud Ali. 'The Death of a Friend'. Studies in History, vol. 33, no. 1, 2017, pp. 36–60.
- M. G. S. Narayanan, Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013.
- Epigraphia Indica
- Epigraphia Indica 6 (1900–01), no. 6c: 53–56
- Epigraphia Indica 22 (1933–34), no. 34: vv. 19–21.
- Epigraphia Indica 27 (1947–48), no. 47: 293–96.
- South Indian Inscriptions
- South Indian Inscriptions 2 (1895), no. 76: v. 8.
- South Indian Inscriptions 7 (1932), No. 1009.
- South Indian Inscriptions 3 (1920), no. 205: v. 54.