இரண்டாம் பூதுகன்

இரண்டாம் சத்தியவாக்கிய கொங்கணிபன்மர் பெருமானடி பூதுகன் (938-961 ) என்பவன் மேற்கு கங்க மரபைச்சேர்ந்த மன்னன் ஆவான் [1]. இவனுக்கு முன்னிருந்த மன்னனான மூன்றாம் இராசமல்லன் இவனது அண்ணன் ஆவான். இவனைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சியைக் இரண்டாம் பூதுகன் கைப்பற்றினான்.

இராஷ்டிரகூடர்கள் தொகு

இரண்டாம் பூதுகன் தன் அண்ணனிடமிருந்து சிம்மாசனத்தைக் கைப்பற்ற இராஷ்டிரகூடர் மன்னனான மூன்றாம் அமோகவர்சன் உதவியைநாடி அவன் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினான். இதனால் இராஷ்டிரகூடர்களுடன் நல் உறவு உண்டானது.

மேலும் இரண்டாம் பூதுகன் தனது மகள் ரேவகண்ணிமதியை மூன்றாம் அமோகவர்சனுக்கு திருமணம் செய்வித்து உறவைப் பலமாக்கிக்கொண்டான்.

தக்கோலப் போர் தொகு

கி.பி.949-இல் நடந்த தக்கோலப் போரில் இராஷ்டிரக்கூடர்களுக்கும் சோழர்களுக்கும் நடந்த போரில் இராஷ்டிரகூடர்களுக்கு ஆதரவாக இரண்டாம் பூதுகனும் தன்படைகளுடன் போருக்குச் சென்று நஞ்சு தோய்ந்த அம்பினால் சோழ இளவரசன் இராஜதித்யனைக் கொன்றான். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.

உசாத்துணை தொகு

Dr. Suryanath U. Kamat, Concise history of Karnataka, 2001, MCC, Bangalore (Reprint 2002)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பூதுகன்&oldid=3327374" இலிருந்து மீள்விக்கப்பட்டது