பாணர் (குறுநில மன்னர்கள்)

தென்னிந்திய குறுநில மன்னர்கள்

பாணர் என்பவர்கள் தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் ஆட்சிசெய்த குறுநிலத் தலைவர்களாவர். இவர்கள் தங்களை மகாபலி சக்கரவர்த்தியின் வழியில் தோன்றியவர்களாகக் கூறிக்கொண்டனர்.[1] இவர்கள் சங்ககாலம் தொட்டு கடந்து 100 ஆண்டுகள் முன்பு வரை இசை சமூகமாக தொடங்கி குறுநில மன்னர்கள் வரை சிறப்புடன் வாழ்ந்து வந்தது அறியமுடிகிறது.

ஆட்சிப்பரப்பு

தொகு

சித்தூரின் மேற்கு, பழைய வட ஆற்காடு மாவட்டத்தின் வடமேற்கு, கருநாடக மாநிலத்தின் கோலார் பகுதியின் கிழக்கு, தகடூரின் சிலபகுதிகள், பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சில பகுதிகள் பாணர் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் பாணர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[2]

தலைநகரம்

தொகு

வேலூர் மாவட்டத்தின் இன்றைய திருவல்லமே அன்று வாணபுரம் என்னும் பெயரில் பாணர்களின் தலைநகராக இருந்தது. பல்லவர்களின் கொடியில் இருந்த நந்தி உருவத்தையே பாணர்களும் மேற்கொண்டனர்.

காலகட்டம்

தொகு

கி.பி.4-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.16-ஆம் நூற்றாண்டுவரையில் பாணர்கள்பற்றிய குறிப்புகள் வரலாற்றில் காணப்படுகின்றன.[3] பாணர்கள் துவக்கத்தில் சாதவாகனர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்தனர் என்றும், பின் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாயினர் என்றும் கருதப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. அ.கிருட்டிணசாமி பல்லவர்கால குறுநில மன்னர்கள் தமிழ்நாட்டு வரலாறு,பல்லவர்-பாண்டியர் காலம் முதல் தொகுதி பக்.318-319
  2. ச.கிருஷ்ணமூர்த்தி,நடுகற்கள் பக்.231
  3. தகடூர்வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன்.