மகோதயபுரத்தின் சேரர்கள்
கேரளாவின் பெருமாள் வம்சம் (Chera Perumals of Makotai)[1] அல்லது மகோதயபுரத்தின் சேரமான் பெருமாள் வம்சம் என்றும் அழைக்கப்படும் [1] சேரமான் பெருமாள் வம்சம்[2] (சுமார் பொ.ஊ. 9ஆம்-12ஆம் நூற்றாண்டு) இன்றைய கேரளாவை ஆண்ட வம்சமாகும்.[3] சேரமான் பெருமாள்களின் இருப்பிடமான மகோதை அல்லது மகோதயபுரம், மத்திய கேரளாவில் உள்ள இன்றைய கொடுங்கல்லூருடன் அடையாளப்படுத்தப்படுகிறது.[4][5] ஆரம்பத்தில், அவர்களின் செல்வாக்கு இன்றைய கொல்லம் மற்றும் கொயிலாண்டிக்கு இடைப்பட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடக்கு கேரளாவில் சந்திரகிரி ஆறு வரையிலும் தெற்கில் நாகர்கோவில் வரை பரவியது.
மகோதயபுரத்தின் சேரர்கள் கேரளாவின் பெருமாள் வம்சத்தினர் | |
---|---|
பொ.ஊ. சுமார் 9ஆம் நூற்றாண்டு–பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி | |
தலைநகரம் | |
பேசப்படும் மொழிகள் | |
சமயம் | இந்து சமயம் (சைவ சமயம்) |
வரலாறு | |
• தொடக்கம் | பொ.ஊ. சுமார் 9ஆம் நூற்றாண்டு |
• முடிவு | பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி |
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
வரலாறு
தொகுஇடைக்கால சேரர்கள் தாங்கள் பல்லவர் காலத்திற்கு முந்தைய (ஆரம்பகால வரலாற்று) தென்னிந்தியாவில் செழித்தோங்கிய சேரர்களிடமிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.[6] இன்றைய மத்திய கேரளா மற்றும் கொங்கு சேர வம்சம் பிரிந்து (பொ.ஊ. 8-9 ஆம் நூற்றாண்டு) சேர பெருமாள் சாம்ராச்சியத்தை உருவாக்கியது.[7] சேர குடும்பத்தின் இரு பிரிவுகளுக்கும் இடையே உள்ள சரியான தொடர்பு அறிஞர்களுக்கு புலப்படவில்லை.[8] நம்பூதிரிகள் கரூரில் இருந்து ஆள சேர மன்னனிடம் ஒரு ஆட்சியாளரைக் கேட்டனர். மேலும் அவர்களுக்குப் பூந்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்பட்டது. எனவே சாமோரின் 'பூந்துரக்கோன்' (பூந்துறை அரசர்) என்ற பட்டத்தை பெற்றனர். சேர பெருமாள்கள் பெரும்பாலும் சூரிய வம்சத்தின் (சூரிய குலம்) உறுப்பினர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.[9]
சேர பெருமாள் இராச்சியம் அதன் செல்வத்தின் பெரும்பகுதியை மத்திய கிழக்குடனான கடல் வணிக உறவுகளிலிருந்து (மசாலா வர்த்தகம்) பெற்றது.[1][10] இராச்சியத்தில் உள்ள கொல்லம் துறைமுகம், மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான வெளிநாட்டு இந்திய வர்த்தகத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது.[11] பெரியாறு பள்ளத்தாக்கில் அமைந்திருந்த நம்பூதிரி-பிராமணர்களின் விவசாயப் பகுதிகள் மகோதைய இராச்சியத்திற்கு மற்றொரு முக்கிய ஆதாரமாக இருந்தன.[1][12]
எழுத்து முறை
தொகுசேரமான் பெருமாள்கள் கேரளாவில் உள்ள அனைத்து பதிவுகளிலும் ஒற்றை எழுத்து முறையையும் (கிரந்த எழுத்துக்களுடன் கூடிய வட்டெழுத்து) மொழியையும் (மலையாளத்தின் ஆரம்ப வடிவம்) பயன்படுத்தியதற்காக அறியப்பட்டார்கள்.[13]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Thapar, Romila, The Penguin History of Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002. 331-32.
- ↑ Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143-44.
- ↑ Thapar, Romila, The Penguin History of Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002. 326-27.
- ↑ Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143-44.
- ↑ Veluthat, Kesavan. 2004. 'Mahodayapuram-Kodungallur', in South-Indian Horizons, eds Jean-Luc Chevillard, Eva Wilden, and A. Murugaiyan, pp. 471–85. École Française D'Extrême-Orient.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 89-90 and 92-93.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 89-90 and 92-93.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 80-81.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 80-81.
- ↑ Thapar, Romila, The Penguin History of Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002. 364-65.
- ↑ Thapar, Romila, The Penguin History of Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002. 382-83.
- ↑ Thapar, Romila, The Penguin History of Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002. 379-80.
- ↑ Veluthat, Kesavan. "History and Historiography in Constituting a Region: The Case of Kerala." Studies in People's History, vol. 5, no. 1, June 2018, pp. 13–31.