கண்டராதித்தர்
இராசகேசரி வர்மன் கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் பொ.ஊ. 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
கண்டராதித்த சோழன் | |
---|---|
ராஜகேசரி, மேற்கே எழுந்தருளின தேவர் தஞ்சாவூர் அரசர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 955–956 |
முன்னையவர் | முதலாம் பராந்தக சோழன் |
பின்னையவர் | அரிஞ்சய சோழன் |
அரசி | செம்பியன் மாதேவி வீரநாராயணியார்[1] |
குழந்தைகளின் பெயர்கள் | உத்தம சோழன் |
தந்தை | முதலாம் பராந்தக சோழன் |
மதம் | சைவ சமயம் |
மறைவு
தொகுகண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார்.
இவரைப் பற்றிய நூல்கள்
தொகுகண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.[2]
திருப்பணி
தொகுஇவர் பல சிவன் கோயில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்தார். கல்வெட்டுகளில் இவர் சிவஞான கண்டராதித்தர் என்று குறிப்பிடப்படுகிறார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ S. R. Balasubrahmanyam. Early Chola Temples: Parantaka I to Rajaraja I, A.D. 907-985. Orient Longman, 1971. p. 250.
- ↑ அருணாசலம், மு., தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- ↑ உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை