குந்தவை பிராட்டியார்
குந்தவை என்று பொதுவாக அறியப்படும் குந்தவை பிராட்டியார் (Kundavai Pirattiyar) என்பவர் தென்னிந்தியாவில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ இளவரசி ஆவார்.[1] இவர் இரண்டாம் பராந்தக சோழன் மற்றும் வானவன் மகாதேவி ஆகியோரின் மகளாவார்.[2][3][4] திருக்கோயிலூரில் பிறந்த இவர் சோழப் பேரரசரரான முதலாம் ராஜராஜனின் அக்காள் ஆவார். இவருக்கு இளைய பிராட்டியார் குந்தவை நாச்சியார் என்ற பட்டப் பெயர் இருந்தது.
குந்தவை | |
---|---|
தஞ்சாவூர் இளவரசி | |
கல்கியின் பொன்னியின் செல்வனில் சித்தரிக்கப்பட்ட குந்தவை. | |
பிறப்பு | ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் ஸ்ரீ குந்தவை நாச்சியார் 945 கி.பி திருக்கோயிலூர், இடைக்காலச் சோழர்கள் (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | பழையாறை, இடைக்காலச் சோழர்கள் (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
துணைவர் | வல்லவரையன் வந்தியத்தேவன் |
அரசமரபு | இடைக்காலச் சோழர்கள் (பிறந்தது) பாணர் (திருமணமானது) |
தந்தை | சுந்தர சோழன் |
தாய் | வானவன் மதேவி |
மதம் | சைவ சமயம் |
இவரது கணவர் வல்லவரையன் வந்தியத்தேவன் அவரது சொந்த ஆட்சிப் பகுதியான பாண இராச்சியத்தில், மன்னராக முடிசூட்டப்பட்டார். ஆனால் இவர் அந்த இராச்சியத்தின் ராணியாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்காமல் தஞ்சையின் இளவரசியாகவே இருந்தார்.[5]
வாழ்க்கை
தொகுகுந்தவை கிபி 945 இல் சோழ மன்னர் இரண்டாம் பராந்தகச் சோழன் மற்றும் அரசி வானவன் மகாதேவி ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். இவருக்கு ஆதித்த கரிகாலன் என்ற அண்ணனும், ராஜ ராஜ சோழன் என்ற தம்பியும் இருந்தனர்.
குந்தவை சோழ நாட்டின் கீழ் சிற்றரசாக இருந்த பண மரபைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியதேவனை, மணந்ததாக தஞ்சைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.[5] ராஜராஜன் காலத்தில் இலங்கையில் போரிட்ட சோழர் படையின் தளபதியாக வந்தியத் தேவன் இருந்தார். இவரது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் 'வல்லவரையநாடு' என்றும், அவ்வப்போது 'பிரம்மதேசம்' என்றும் அழைக்கப்பட்டது.
குந்தவை தன் பெரியம்மா செம்பியன் மாதேவியுடன், கொடும்பாளூர் இளவரசி திரிபுவன மாதேவி மற்றும் முதலாம் ராஜராஜனின் மகனான தன் மருமகனான இராசேந்திரனை, வளர்த்தார். முதலாம் இராசேந்திரன் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பழையாறையில் குந்தவை மற்றும் செம்பியன் மாதேவியுடன் கழித்தார்.
பரவலர் பண்பாட்டில்
தொகுகுந்தவை முதலாம் இராசராசனின் வழிகாட்டியாக கொண்டாடப்படுகிறார். இராசேந்திர சோழனை வளர்க்க உதவியதால் இவரது செல்வாக்கு அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. இவரது காலம் தனித்துவமானதாக இருந்தது, அரச பெண்கள் கூட்டணிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டனர். குந்தவையின் தந்தை இவர் சுதந்திரமாக வாழும் விருப்பத்தை அனுமதித்தார். அதன்பிறகு இளவரசி தனது வாழ்நாள் முழுவதும் சோழ இராச்சியத்தில் தங்க முடிவு செய்தார். இரசனை மற்றும் கற்றலுக்காக சோழ சாம்ராஜ்யம் முழுவதும் மதிக்கப்பட்ட குந்தவை, மற்ற அரச குலங்களின் மகள்களைக் கவனித்து, அவர்களுக்கு கலை, இசை, இலக்கியம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
வாழ்க்கையும் பணிகளும்
தொகுகுந்தவை தீர்த்தங்கரர், விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு பல கோயில்களைக் கட்டினார். இவர் பல சமண துறவிகளையும் வேதாந்தப் பார்ப்பனர்களுக்கும் வேண்டியவைகளைச் செய்தார் .[6][5] இவர் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளார்.[7][8]
இவர் பல சமணக் கோயில்களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது, ஆனால் குறைந்தது இரண்டு சமணக் கோயில்களில் இவரால் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஒன்று ராஜராஜேஸ்வரத்தில் (தற்போது தாராசுரம் என்று அழைக்கபடுகிறது) மற்றொன்று திருமலையில் காணப்படுகிறது.[8] இவர் தன் தந்தையின் பெயரால் தஞ்சாவூரில் விண்ணகர் ஆத்துரச்சாலை என்ற பெயரில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். மேலும் அதன் பராமரிப்புக்காக ஏராளமான நிலங்களை நன்கொடையாக வழங்கினார்.[9][10] மேலும் தன் தம்பி முதலாம் இராஜராஜ சோழன், மருமகன் இராசேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சியின்போது தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பகட்டான நன்கொடைகளை வழங்கினார்.
தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு இவர் அளித்த சில பரிசுகள் இராசராசனின் 29வது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.
குந்தவை தன் வாழ்வின் கடைசி காலத்தை தன் மருமகன் இராசேந்திரனுடன் பழையாறையில் உள்ள அரண்மனையில் கழித்தார்.[10][11][12]
பவலர் பண்பாட்டில்
தொகு- கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 ஆம் ஆண்டு வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன், இராஜராஜனின் ஆரம்ப நாட்கள், ஆதித்த கரிகாலன் படுகொலை மற்றும் உத்தம சோழன் சோழ அரியணை ஏறுதல் ஆகியவற்றைச் சுற்றியுள்ள மர்மங்களை அடிப்படையாக்க் கொண்டுள்ளது.
- திரிஷா கிருஷ்ணன்' பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் குந்தவை பிராட்டியாராக நடித்தார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lalit kalā, Issue 15, page 34
- ↑ Early Chola art, page 183
- ↑ A Topographical List of Inscriptions in the Tamil Nadu and Kerala States: Thanjavur District, page 180
- ↑ Worshiping Śiva in medieval India: ritual in an oscillating universe, page 5
- ↑ 5.0 5.1 5.2 South Indian Inscriptions – Vol II-Part 1 (Tanjore temple Inscriptions)
- ↑ Women in Indian life and society, page 49
- ↑ Śrīnidhiḥ: perspectives in Indian archaeology, art, and culture, page 364
- ↑ 8.0 8.1 Encyclopaedia of Jainism, page 1000
- ↑ Ancient system of oriental medicine, page 96
- ↑ 10.0 10.1 Great women of India, page 306
- ↑ Encyclopaedia of Status and Empowerment of Women in India: Status and position of women in ancient, medieval and modern India, page 176
- ↑ Middle Chola temples: Rajaraja I to Kulottunga I (A.D. 985–1070), page 381