HK Arun
பயனர்:HK Arun
     
பயனர் பேச்சு:HK Arun
     
பயனர்:HK Arun/திட்டம்
     
பயனர்:HK Arun/குறிப்பு
     
பயனர்:HK Arun/படிமம்
     
Special:Emailuser/HK Arun
   
பயனர்:HK Arun/மணல்தொட்டி
 
முகப்பு
     
பேச்சு
     
திட்டம்
     
குறிப்பு
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
தொகுப்பு

தொகுப்புகள்


2011 2010-2009-2008

குங்ஃபூ பல்லவன்

தொகு

HK Arun , your's compile in குங்ஃபூ பல்லவன் essay was deleted. i don't know how it was. i request you to please send it again. that video and website. தென்காசி சுப்பிரமணியன்

பாராட்டுகள்

தொகு

உங்கள் பங்களிப்புகளை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அருண்! கிரந்தத்தைக் குறைத்தோ, இல்லாமலோ எழுதலாமே! ஆங்க்காங், ஃகாங்க்காங், ஃகொங்க்காங் எல்லாமும் மாற்று வடிவங்கள். ஃகொங்க்காங் என்பது நீங்கள் கூறும் அதே ஒலிப்பு. --செல்வா 02:48, 5 சனவரி 2011 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரையே உங்கள் கட்டுரை! பாராட்டுகள்!--செல்வா 02:49, 5 சனவரி 2011 (UTC)Reply

உங்கள் பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது செல்வா! மிக்க நன்றி. இந்த 2011 ஆம் ஆண்டில் ஹொங்கொங் தொடர்பில் அனைத்து முக்கியப் பிரிவுகளிலும் கட்டுரைகளை எழுதவேண்டும் என நினைத்துள்ளேன். அதில் ஒரு 100 கட்டுரைகளாவது முழுமையானக் கட்டுரைகளாக எழுத வேண்டும் என்பது திட்டம். முடிந்தளவு முயற்சி செய்கிறேன். உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி! --HK Arun 16:39, 5 சனவரி 2011 (UTC)Reply

பாராட்டுகள் அருண். உங்களது கட்டுரையை முதற்பக்கத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி. செல்வா கூறியதையே நானும் கூறுகிறேன். சற்று கிரந்தத்தைக் குறைத்துக் கொள்வது விக்கி நடைக்கு ஏற்றவாறு இருக்கும். எண்ணிப் பாருங்கள்...

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 16:46, 5 சனவரி 2011 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

அருண்,

  • புதிய கட்டுரையில் வேலை முடியாதிருப்பின் {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் மேல் இட்டுவிடுங்கள். கட்டுரை முழுமையடைந்த பின்னர் இதனை நீக்கி விடலாம். சில கட்டுரைகளில் இறுதியில் புள்ளிகளுடன் நிற்கக் கண்டேன், அப்படி விடுவதற்கு பதில், இவ்வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள்.
  • புதிய கட்டுரைகளில் ஆங்கில விக்கி இணைப்பை இறுதியில் தந்து விட்டால், பிற மொழி விக்கிகளுடன் இணைப்பதற்கு வழி செய்யும். ஆ. விக்கி இணைப்பை மட்டும் இணைத்தல் தானியங்கிகள் பிற மொழி இணைப்புகளை இணைத்துவிடும், பிற மொழி விக்கிகளிலும் த. விக்கி இணைப்பை இணைத்து விடும்.

--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 6 சனவரி 2011 (UTC)Reply

அவ்வாறே செய்துவிடுகிறேன் சோடாபாட்டில். நன்றி! மேலும் நான் தொடங்கும் கட்டுரைகளை முடிந்தவரை முழுமையாக்கும் நோக்குடனேயே எழுதிவருகிறேன். --HK Arun 04:18, 6 சனவரி 2011 (UTC)Reply

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்

தொகு

வணக்கம் HK Arun:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:23, 8 சனவரி 2011 (UTC)Reply

ஹொங்கொங் வலைவாசல்

தொகு

அருண், நீங்கள் ஹொங்கொங் பற்றிய வலைவாசல் ஒன்று உருவாக்க முயலுகிறீர்கள் போல் தெரிகிறது. உதாரணத்துக்கு வலைவாசல்:தமிழீழம் பாருங்கள். முதலில் வலைவாசல்:ஹொங்கொங் பக்கத்தை உருவாக்குங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 05:29, 9 சனவரி 2011 (UTC)Reply

ஓம் சிறிதரன், அதனைத் தான் செய்துக்கொண்டுள்ளேன். இந்த 2011 ஆம் ஆண்டின் எனது திட்டமிடலாகவே ஹொங்கொங் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் எழுது வேண்டும் என எண்ணியுள்ளேன். ஹொங்கொங் வாழ் தமிழர்கள், ஹொங்கொங் தொடர்பான விடயங்களை தமிழில் அறிந்துகொள்ள விளையும் போது போதிய தகவல்கள் இல்லை. இதனை நான் இங்கு பலரும் சொல்ல கேட்கிறேன். ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கில விக்கிப்பீடியாவை நாடுகின்றனர். அதலும் தமிழர் தொடர்பான தகவல்கள் இல்லை அல்லது குறைவு எனலாம். எனவே இந்த ஆண்டு இதனை செய்ய திட்டமிட்டுள்ளேன். அதற்கு ஒரு முகப்பு பக்கத்தை செய்துக்கொண்டால், தேவையானப் பகுப்பையும் வார்ப்புருக்களையும் உருவாக்கிக்கொண்டு எழுதிக்கொண்டு போகலாம்.

இரசிப்பதும் உருசிப்பதும் முதலில் கண்கள் என்பர். எனவே முகப்பு பக்கமும் கொஞ்சம் வடிவாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதில் ஏற்படும் சிக்கல்களை சற்று கவனிப்பீர்களானால் உதவியாக இருக்கும். நன்றி! --HK Arun 05:58, 9 சனவரி 2011 (UTC)Reply

வலைவாசல்

தொகு

"Portal" எனும் சொல் "Port" எனும் சொல்லுடன் நெருங்கியத் தொடர்பைக் கொண்டது. முன்னாள் காலத்தில் கடலில் செல்லும் கப்பல்கள் கரையை தொடும் போது முன்னே தெரியும் ஒரு நிலப்பரப்பின் முகப்பு (முகம்) "Port" என அழைக்கப்பட்டதாக அறிகிறேன். அதே பொருள் அடிப்படையில் தமிழர்களும் எதிரே தெரியும் துறைக்கு (நிலப்பரப்பிற்கு) துறை + முகம் = துறைமுகம் எனும் சொல் வழக்கையும் அவதானிக்கலாம். இச்சொல்லுக்கான வரைவிலக்கணமாக ( A place (seaport or airport) where people and merchandise can enter or leave a country.) என்று கூறப்பட்டாலும், நுழையும் முகம் அல்லது முகப்பை மையப்படுத்தியே இச்சொல்லின் தோற்றம் தெரிகிறது.

எனவே துறைமுகம் எனும் சொல்லில் உள்ள "முகம்" முகப்பு எனும் அடிப்படையில் (வீட்டின் முகப் பாகமான) வாசல், தற்போதைய வலையுலகப் பயன்பாட்டில் கலைச்சொல்லாக "வலைவாசல்" எனப் பயன்படுகிறது. இங்கே "வலை" எனும் சொல் இணைய வலையமைப்பைக் குறித்தாலும், வலைத்தளம், வலைப்பதிவு போன்றவற்றின் வலைவாசலாகவே எண்ணத் தோன்றுகிறது. இந்தச்சொல் எந்த வகையிலும் பிழையானது இல்லை தான். ஆனால் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் விக்கிவாசல் என்பது கூடுதல் பொருத்தமாக உள்ளது. அதனால் தான் ஹொங்கொங் வாசலுக்கு ஹொங்கொங் விக்கிவாசல் என்று பெயரிட்டுள்ளேன்.--HK Arun 06:33, 9 சனவரி 2011 (UTC)Reply

விக்கிவாசலை உருவாக்கும் போது வலைவாசல்:ஹொங்கொங் என்றே பெயரிட வேண்டும். வேறு முறையில் பெயரிட முடியாது. அது வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். எனவே வலைவாசல்:ஹொங்கொங் என்பதைப் பெயர் மாற்ற வேண்டாம்.--Kanags \உரையாடுக 06:42, 9 சனவரி 2011 (UTC)Reply
//அது வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.// விளங்கவில்லை. விக்கிவாசல் ஹொங்கொங் எனப் பெயரிடுவதில் என்ன பிரச்சினையுள்ளது? தொழிநுட்ப பிரச்சினைகளைக் கூறுகிறீர்களா? --HK Arun 07:00, 9 சனவரி 2011 (UTC)Reply
portalகள் பெயரிடும் மரபு வலைவாசல். வேறு பெயர்களில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. அனைத்து வலைவாசல்களும் விக்கிக் கட்டுரையாகக் கணிக்கப்படமாட்டாது. ஏனைய பெயர்களில் உருவாக்கப்படும் வலைவாசல்கள் விக்கிக்கட்டுரைகளாகக் கணிக்கப்படும். அது விக்கியின் வளர்ச்சிக்கு (அல்லது விக்கி புள்ளி விபரங்களுக்கு) உகந்ததல்ல. ஹொங்கொங் விக்கிவாசலை வலைவாசலுக்கு மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடுக 01:20, 13 சனவரி 2011 (UTC)Reply

பிரச்சினையில்லை. --HK Arun 01:29, 13 சனவரி 2011 (UTC)Reply

வேறு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் செய்துவிடுங்கள். நன்றி! --HK Arun 01:29, 13 சனவரி 2011 (UTC)Reply

அருண், மூல வலைவாசலில் இருந்து வேறு வலைவாசல்களை அமைக்க வலைவாசல்:ஹொங்கொங்/**** எனப் பெயரிடலாம்.--Kanags \உரையாடுக 01:38, 13 சனவரி 2011 (UTC)Reply

படிமங்கள்

தொகு

அருண், நீங்கள் சில படிமங்களைத் தரவேற்றியிருக்கிறீர்கள். அநேகமாக இவை அனைத்தும் நீங்கள் எடுத்த படங்களாகவே உள்ளன. இவற்றை ஏன் பொதுவில் தரவேற்றக்கூடாது. [1] இல் தரவேற்றினால் அனைத்து (தமிழ் உட்பட) மொழி விக்கிகளும் தங்கள் கட்டுரைகளில் உங்கள் படங்களைப் பயன்படுத்த முடியும். பொதுவில் தரவேற்றும் போது படிமத்தின் பெயரைத் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் தருவது நல்லது. உதவி தேவையெனில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 04:06, 13 சனவரி 2011 (UTC)Reply

ஆமோதிக்கிறேன். உங்களின் பல படங்கள் அங்கு featured picture ஆவதற்கான தகுதி பெற்றவை. மேலும் நீங்கள் எழுதும் சில ஆங்காங் தலைப்புகள் பிற மொழி விக்கிகளில் இன்னும் தொடங்கப்பட வில்லை என்பதால், அவைத் தொடங்கப்பட்டால், உங்கள் படங்கள் பொதுவில் இருப்பின் மிகப்பயனுள்ளதாக இருக்கும். --சோடாபாட்டில்உரையாடுக 04:34, 13 சனவரி 2011 (UTC)Reply

சிறிதரன், சோடாபாட்டில் இருவரது கருத்துக்களும் நன்றி! நீங்கள் கூறுவது போன்று, இதன் பிறகு தரவேற்றும் போது விக்கியூடகத்திலேயே தரவேற்றுகிறேன். அவற்றிற்கான பெயர்களையும் ஆங்கிலத்திலேயே இடுகின்றேன். நான் இதுவரை தரவேற்றிய படிங்களை விக்கியூடகத்தில் மீள்தரவேற்ற முடியுமானால், தரவேற்றி உதவுங்கள். அவை என்னால் எடுக்கப்பட்ட படங்களே ஆகும். நன்றிகள்! --HK Arun 07:15, 13 சனவரி 2011 (UTC)Reply

தொகுக்கும் போது குறுக்கிடல்

தொகு

அன்பின் அருண், உங்கள் சிக்கல் இங்கு பலருக்கும் உண்டு. ஒரே கட்டுரையை இருவர் ஒரே நேரத்தில் தொகுக்கும் போது இந்த "முரண்பாடு" வழு எழுவதுண்டு. இப்படியான நேரத்தில் உடனடியாகவே உங்கள் உலாவியில் back பொத்தானை அழுத்தினால் நீங்கள் தொகுத்த பின்னரான பகுதி வரும். (இது 100 இற்கு 80 வீதமான சந்தர்ப்பங்களில் வரும், ஆனால் வராமலே அழிந்து போன சந்தர்ப்பங்களும் உண்டு.) அப்படி உங்கள் புதிய தொகுப்பு வந்தால் நீங்கள் புதிதாக சேர்த்த பகுதியை உங்கள் கணினியில் வேறோர் இடத்தில் சேமிக்க வேண்டும். பின்னர் அதனை மீண்டும் கட்டுரையில் செருகலாம். மற்றும் படி ஒரு முறை அழிந்தால் அதனை மீண்டும் தருவிக்க முடியாது:(.--Kanags \உரையாடுக 23:07, 20 சனவரி 2011 (UTC)Reply

நன்றி சிறிதரன். நகல் (Copy) எடுத்துவைத்துக்கொண்டாலும் பிறகு (paste) செருகிவிடலாம். பின்னர் விளங்கிக்கொண்டது. --HK Arun 04:51, 21 சனவரி 2011 (UTC)Reply

தனிப்பட்ட சந்தேகம்

தொகு

அருண்,

ஹாங்காங் லீகல் எய்ட் கட்டுரையைப் படித்த போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. லீகல் எய்டு என்பது ஒருவர் தாமாகப் போடும் வழக்குகளுக்கும் வழங்கப்படுமா? (எ.கா, விவாகரத்து போன்ற குடிசார் வழக்குகள், நட்ட ஈடு கேட்டுத் தொடருவன போன்றவை). அல்லது அவர் மீது ஏதேனும் குற்ற்ம் சாட்டப்பட்டு/வழக்குப் போடப்பட்டு டிஃபன்சுக்கு பணம் இல்லையெனில் மட்டும் கொடுப்பார்களா?--சோடாபாட்டில்உரையாடுக 19:36, 23 சனவரி 2011 (UTC)Reply

அதனை விரிவாக எழுத வேண்டும். (தொடர்புடைய நூல் உள்ளது) தற்போதைக்கு சுருக்கமாக, ஹொங்கொங் நாட்டில் இருந்து கொண்டு, ஹொங்கொங் அரச அமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளும் உள்ளன. அவற்றிற்கும் சட்டவுதவி வழங்கப்பட்டது. அவ்வாறு போடப்பட்ட சில வழக்குகள் மனிதவுரிமை சட்டவாளர்களால் வெற்றிபெற்றமையினால், ஹொங்கொங் அரசு தமது சட்டங்கள் சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைகளும் கூட ஏற்பட்டன. --HK Arun 19:44, 23 சனவரி 2011 (UTC)Reply

தாமாக போடும் வழக்குகளுக்கும், குடிசார் வழக்குகளுக்கும் வழங்கப்படுகிறது. விவாகரத்து தொடர்பாக சற்று அறிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. --HK Arun 19:46, 23 சனவரி 2011 (UTC)Reply

சில சுவையான விடயங்களும் உள்ளன. ஹொங்கொங்கிற்கு அரசியல் புகலிடம் கோரி வந்தவர்களை, ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர், வீசா அற்ற நிலையில் ஹொங்கொங் அரசு பிடித்து தடுப்பு காவலில் வைத்தது. அவ்வாறோனர் சார்பாக மனிதவுரிமை அமைப்புகள் வாதிட்டன; அரசியல் புகலிடம் கோரும் ஒருவரை சட்டத்தின் படி தடுப்பு காவலில் வைக்க முடியாது என்று. அதற்கும் சட்டவுதவி திணைக்களம் உதவு வழங்கியது. இந்த வழக்கில் மனிதவுரிமை சட்டவாளர்கள் வெற்றிப்பெற்றனர். முடிவு, ஹொங்கொங் அரசு தற்போது இலட்சக் கணக்கில் நட்ட ஈடு வழங்கிவருகிறது. இங்கே ஹொங்கொங் அரசு மனிதவுரிமை சட்டங்களிற்கு அமைய தோழ்வியடைந்தது என்பதை விட, ஹொங்கொங் அரசாங்கம் மனிதவுரிமை சட்டங்களுக்கு எந்தளவு மதிப்பளிக்கிறது என்பதையே பார்க்கவேண்டும். --HK Arun 19:53, 23 சனவரி 2011 (UTC)Reply

விரிவான விளக்கத்துக்கு நன்றி அருண். --சோடாபாட்டில்உரையாடுக 06:00, 24 சனவரி 2011 (UTC)Reply

விக்கிப்பீடியர் அறிமுகம்

தொகு

தாங்கள் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் கொடுக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:46, 12 பெப்ரவரி 2011 (UTC)

+1. உலகின் பல பகுதிகளில் உள்ள விக்கிப்பீடியர்களைத் தள அறிவிப்பில் அறிமுகப்படுத்தி வரும் இவ்வேளையில் உங்கள் அறிமுகத்தை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அருண் பக்கத்தில் இட்டால் நன்றாக இருக்கும்--இரவி (பேச்சு) 12:05, 21 பெப்ரவரி 2013 (UTC)

ஜன்னிய இராகங்களின் வார்ப்புரு

தொகு
அருண், நீங்கள் எனது உரையாடல் பக்கத்தில் விட்ட உங்கள் குறிப்புத் தொடர்பாக:
ஜன்னிய இராகங்களுக்கு வார்ப்புரு உருவாக்கியமைக்கு நன்றி. உங்கள் வார்ப்புரு நன்றாக உள்ளது. ஜன்னிய இராகங்களுக்குச் சரியான எண்ணிக்கை கிடையாது. ஆயிரக்கணக்கில் இருக்கும். இவற்றையெல்லாம் ஒரே வார்ப்புருவில் சேர்ப்பது சாத்தியமாக இருக்காது. தாய் இராகங்கள் (மேளகர்த்தா) 72 உள்ளன. அவற்றுக்குக் கீழ் பல சேய் இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) உள்ளன. எனவே ஒவ்வொரு தாய் ராகத்துக்கும் தனித்தனியாகச் சேய் இராகங்களுக்கான வார்ப்புருவை உருவாக்கினால் நல்லது. இது நேரம் எடுக்கக்கூடிய வேலை தான். என்றாலும் நீண்டகால நோக்கில் வசதியாக இருக்கும். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். மயூரநாதன் 11:42, 19 பெப்ரவரி 2011 (UTC)

விட்டுப் போன கட்டுரை

தொகு

அருண்,

விக்கிப்பீடியா வரலாறு என்ற கட்டுரை உங்களால் தொடங்கப்பட்டு ஒரு வரியுடன் நின்றுள்ளது. ஒரு மாதகால விரைந்து நீக்குதல் கால அவகாசமும் முடியப்போகிறது. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 20:50, 2 மார்ச் 2011 (UTC)

முதற் பக்க அறிமுகம்

தொகு

அருண்,

முதல் பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில் இடம் பெற உங்களைப் பற்றிய குறிப்புகளை பின்வரும் பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:49, 14 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அருண்

வேண்டுகோளுக்கு நன்றி சோடாபாட்டில், அறிமுகப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு எனது பங்களிப்புகள் இன்னும் போதவில்லை என்றே நினைக்கிறேன். தவிர தமிழ் விக்கிப்பீடியாவின் நீண்ட கால பங்களிப்பாளர்களான நக்கீரன், சிறிதரன் போன்றோரே இன்னும் அறிமுகப் பக்கத்தில் இடம் பெறவில்லை. அவர்களே முதலில் இடம்பெறத் தகுந்தவர்கள். அவர்களின் பின்னர் எனது அறிமுகம் இடம்பெறட்டும். --HK Arun 15:26, 14 ஏப்ரல் 2011 (UTC)

Invite to WikiConference India 2011

தொகு

Hi HK Arun,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

சிறப்புப்படம் தெரிவு

தொகு

வணக்கம் அருண். நீங்கள் தகுதிகள் என்று சிறப்புப்படங்களுக்கு கூறுவது இதிலில்லையே. இதிலுள்ள விதிமுறைகளை வைத்து எப்படி படமெடுப்பத?. நீங்கள் கூறும் குவியம், இரைச்சல் போன்ற வார்த்தைகள் அங்கு இல்லையே?

நீங்கள் சிறப்புக்கட்டுரைகள் பற்றி கூறியிருந்தீர்கள். அங்கு முக்கியமாக மேற்கோள் உள்ளது. மேற்கோள் எப்படி தர வேண்டும் அதற்கான கருவிகள் விளக்கப்பக்கங்கள் அனைத்தும் உள்ளன. ஆனால் படங்கள் தெரிவு செய்வதில் இது போன்ற விதிமுறைகள் இல்லையே.

நீங்கள் அண்டன் போன்ற துறை வல்லுநர்கள் பொருப்பில் இதை விட வேண்டும் என்று கூறுவதை ஆதரிக்கிறேன். ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் விரைவு தேவையென தோன்றுகிறது. குவியம், இரைச்சல் போன்ற வார்த்தைகளுக்கு விளக்கப்ப்க்கமும் உருவாக்கி அவற்றை பரிந்துரைப்பக்கத்தோடு இணப்பிட்டால் என்ன? நீங்கள் புகைப்படத்தில் இரைச்சல் என்று கூறுகிறீர்கள் அப்ப்டி எனில் என்ன்வென்று இன்னும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:56, 10 திசம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன். நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்புப் படத் தேர்வு சரியான முறையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. விதிமுறைகள் இற்றைப் படுத்தபட வேண்டும். தமிழ் விக்கிப்பீடியரான நாம் 10ம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையாக்கத்தில் மட்டுமன்றி சான்றுசேர்த்தல், சிறப்புக்கட்டுரைகளை உருவாக்குதல்/தெரிவுசெய்தல் என பல்வேறு மட்டத்திலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். அவற்றில் தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்புப் படங்களாக தெரிவு செய்யப்படும் படங்கள், சிறப்புப் படத்திற்கான தகுதிகளுடனேயே முன் பக்கத்தில் காட்சிப்படுத்தப்ப்ட வேண்டும் என்பதும் ஒன்றாக கொள்ள வேண்டும். எனவே சிறப்புப் படங்களை சரியான முறையில் தெரிவு செய்வதும், தெரிவு செய்யும் முறைகளை அறிந்துகொள்ளலும் பின்பற்றலும் கூட முக்கியமானது. அதற்கான உதவி பக்கங்களை உருவாக்குவதும் அவசியம் என்பதை உணர்கிறேன். குறித்த பக்கங்களை எதிர்வரும் நாட்களில் நான் இற்றைப்படுத்தி தருகின்றேன். நன்றி. --HK Arun (பேச்சு) 17:31, 11 திசம்பர் 2012 (UTC)Reply
பி.கு: நான் நிழப்படத் துறையில் வல்லுநர் அல்ல. செல்லும் இடங்களில் காணும் காட்சிகளை படமாக எடுப்பது மனதுக்கு மகிழ்வைத் தருவதால் ஒரு ஆர்வம்; அவ்வளவு தான். --HK Arun (பேச்சு) 17:42, 11 திசம்பர் 2012 (UTC)Reply

இரைச்சல், குவியம் விளக்கம்

தொகு
இரைச்சல் மிகுந்த படிமம் (பெரிதாக்கிப் பார்க்கவும்
இரைச்சலற்ற தெளிவான படிமம் (பெரிதாக்கிப் பார்க்கவும்

இரைச்சல்: நாம் வானொலியில் ஒரு செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள், அப்போது செய்தியை கேட்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்து எமது செவிகளை கூர்மையாக்கிக்கொண்டு கேட்போம்; ஆனாலும் செய்திகளுடனே தேவையற்ற ஓ..ஓ... எனும் இரைச்சலும் கேட்டவண்ணமே இருக்கும். சிலநேரங்களில் இந்த இரைச்சல் வானொலி செய்தியை சரியாக கேட்க முடியாதப் படியும் செய்துவிடும். இது கேட்பதில் உள்ள இரைச்சல் (noise). இதே இரைச்சல் (noise) பார்ப்பதிலும் உள்ளது. அதாவது ஒரு படிமத்தை பெரிதாக பார்க்கும் போது படத்தில் தூசிகள் படர்ந்திருப்பது போன்றதான தோற்றம் தென்படும்; அதுவே இரைச்சலாகும். இது நான் இரவில் எடுத்த ஒரு படிமம்; சிறப்பாகவே உள்ளது. ஆனால் சிறப்புப் படத்திற்கான தகுயிண்மைக்கு படத்தின் அதிகளவிலான இரைச்சலே காரணம்.

குவியம்:நாம் ஒன்றை பார்க்கும் போது எமது கண்களின் பார்வை குவிந்து ஓரிடத்தையோ/ஒருபொருளையோ பார்ப்போமே, அதேபோன்றே எடுக்கப்படும் ஒரு படிமத்தில் அதனை பார்ப்போரின் பார்வை எந்தவிடத்தை குவிந்து பார்க்கவேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு பார்க்கப்பட வேண்டிய இடத்தை நோக்கி நிழப்படக் கருவியின் குவியம் அமையவேண்டும். நன்றி! --HK Arun (பேச்சு) 09:23, 15 திசம்பர் 2012 (UTC)Reply

நல்லதிரு தெளிவான விளக்கங்கள். அடுத்து எடுக்கும் ஆவணங்களில் முயற்சிக்கிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:01, 2 சனவரி 2013 (UTC)Reply

நன்றி தென்காசி சுப்பிரமணியன், சிறப்புப் படத் தகமைகளை இங்கே பார்க்கலாம். Featured picture criteria இருப்பினும் இரைச்சலற்ற படங்களை சிறந்த படக்கருவிகளால் மட்டுமே எடுக்கமுடியும். --HK Arun (பேச்சு) 19:23, 2 சனவரி 2013 (UTC)Reply

அருண் இந்த இரண்டுமே நல்ல தெளிவான விளக்கங்கள் அல்லவா. அத்னால் இதை விக்சனரியில் சேருங்களேன். நாம் இதைப் பற்றி இனி வருவோருக்கு விளக்க அந்த இணைப்பை கொடுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:06, 4 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கப் பரிந்துரை

தொகு
வணக்கம் அருண், நீங்கள் தரவேற்றிய படங்களை இப்போது தான் கண்டேன். இவற்றில் எந்தப் படிமங்கள் தமிழ் விக்கிக் கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தால் அவற்றை முதற்பக்கப் படிமங்களுக்குப் பரிந்துரைக்கலாம். அல்லது நீங்களே பரிந்துரைக்கலாம். கட்டுரைகள் இல்லாவிட்டால் அடிப்படைத் தகவல்களுடன் குறுங்கட்டுரைகளை உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 01:24, 15 திசம்பர் 2012 (UTC)Reply
வணக்கம் சிறிதரன், எனது படிமங்களில் பல குறைபாடுகள் இருப்பதை என்னாலேயே காணக்கூடியதாக உள்ளது. அநேகமாக எனது படிமங்கள் பார்ப்பதற்கு அழகானதாக தென்பட்டாலும் அவற்றில் பல அதிக "இரைச்சல்" கொண்டவை. கிம்ப் மென்பொருள் கொண்டு மெருகேற்ற முயன்றதில் சில படிமங்கள் "வண்ணப் பிறழ்ச்சி"யுடன் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு எனது படிமங்கள் என்றாலும் அவை சிறப்புத் தகுதிகளுடன் இருந்தால் மட்டுமே தேர்ந்தெடுத்து காட்சிப்படுத்தவும். எனது படிமங்கள் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதில் மகிழ்வோ, காட்சிப்படுத்தப்படவில்லை என்பதில் கவலையோ எனக்கில்லை. ஆனால் தமிழ் விக்கியில் சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்படும் படிமங்கள் பிறவிக்கிகளிலும் சிறப்புப் படமாக கருதும் நிலையில் எமது தேர்ந்தெடுப்புகள் அமைய வேண்டும் என்பதில் அக்கறை உண்டு. சிறப்புப் படத்திற்கான அடிப்படை வரையறைகளை இங்கே பார்க்கவும். அத்துடன் ("a picture is worth a thousand words," the images featured on Wikipedia:Featured pictures should illustrate a Wikipedia article in such a way as to add significantly to that article) தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்புப் படமாக தேர்ந்தெடுப்பதற்கு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில்/களில் இடம்பெற்ற படிமமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் நடைமுறையில் கொண்டுவருதல் நல்லது. நன்றி! --HK Arun (பேச்சு) 08:39, 15 திசம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு

தொகு


புலம்பெயர் வாழ்வில் தமிழ்

தொகு

புலம்பெயர்ந்து வாழ்வோர்க்கு தமிழின் தேவை அதிகம் இல்லை என்று வலைப்பதிவர் ஒருவர் கூறக் கேட்டேன் படித்தறிந்தேன். ஹொங் கொங்கில் மாண்டரின், கண்டோனியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தாலும் தமிழின் தேவை இன்மையாலும், தமிழ்க் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்பிருக்காதோ? உங்கள் அனுபவத்தில், அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழில் எழுத இயலாவிடினும், தமிழில் பேசியாவது கேட்டிருக்கிறீர்களா? குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், தமிழ்ப் பயன்பாடு எப்படி உள்ளது? சீன வானொலியில் தமிழ்ப் பிரிவு உள்ளதாகவும் அறிந்துள்ளேன். நீங்கள் வாழும் பகுதியில், நீங்கள் அறிந்த தமிழ்க் குடும்பம் ஏதாவதொன்றில் தமிழ் பயன்படுத்துகின்றனரா? பதிலறிய ஆவலாய் உள்ளேன். அன்புடன் :)

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 19 திசம்பர் 2012 (UTC)Reply
//புலம்பெயர்ந்து வாழ்வோர்க்கு தமிழின் தேவை அதிகம் இல்லை என்று வலைப்பதிவர் ஒருவர் கூறக் கேட்டேன் படித்தறிந்தேன்.//இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இந்த தலைமுறையினராக புலம்பெயர்ந்தோர் எந்த நாட்டில், எந்த மொழியைக் கற்றாலும் தமிழுடன் உறவும் பற்றும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அடுத்ததடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை போக்கு (தமிழ்ப் பற்றிருந்தாலும்) அவர்களுக்கு தமிழின் தேவையை இல்லாமல் செய்துவிடும். அவர்களின் தேடலும் ஆங்கில வழியாகவே இருக்கும். வளரும் குழந்தைகளின் கல்வி, பாடசாலை நண்பர்கள், அவர்கள் பழகும் சமுதாயம், வெளியுலகத் தொடர்பாடல், நட்புவட்டம் என எல்லாமே தமிழல்லாமல் இருப்பதனால், அவர்களின் முழுநேர உரையாடல், சிந்தனை மொழி ஆங்கிலமாகவோ, வாழும் நாட்டில் புழங்கும் மொழியாகவோ மாறிவிடுகிறது. அநேகமாக வளரும் ஒரு குழந்தையின் உலகமே அக்குழந்தையின் பாடசாலையும் அவர்கள் நட்பு வட்டமும் அல்லவா? அதில் பெற்றோருடனான உரையாடல் ஒருசில மணித்துளிகள் மட்டும் தான். பெற்றோர் தம் குழந்தைகளுடன் தமிழில் உரையாடினால் ஓரளவு தமிழில் பேசும் வாய்ப்பாவது குழந்தைகளுக்கு கிட்டும், ஆனால் ஹொங்கொங் போன்ற நாட்டில் அதிகமான பெற்றோர் குழந்தைகளுடன் தாமும் ஆங்கிலத்தில் பேசுவதையே ஒரு நாகரிகமாக கருதுகின்றனர்; சிலர் தமது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆங்கிலமே முக்கியம் என கருதுவதும் ஒரு காரணம். பல பேற்றோரின் நோக்கமே குழந்தைகளின் முன்னேற்றம், வாய்ப்பு, வசதி, பொருளாதாரம் என்றிருக்கும் போது தாய்மொழி பற்றிய அக்கரை எல்லோருக்கும் இருப்பதில்லை. (இதில் ஹொங்கொங்கில் தொழில் நிலைக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டு, தம் குடும்பத்தை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தமிழரின் நிலை வேறுபட்டது.) எமது அடையாளம் எனும் வகையில் தாய்மொழி தமிழைக் கற்றுக்கொடுப்பதில் பலர் ஆர்வம் கொள்கின்றனர். ஹொங்கொங்கிலும் அவ்வாறு பார்க்க: தமிழ் மொழியை அடுத்தத் தலைமுறையினரும் பயில வேண்டும் எனும் நோக்கில் ஒரு தன்னார்வக் குழு கிழமையில் ஒருநாள் வகுப்பை நடாத்திவருகிறது. இதற்கும் எல்லா பெற்றோரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே ஹொங்கொங்கில் மட்டுமல்ல தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எந்த நாடானாலும் அந்தந்த நாட்டு, அச்சச் சமூகப் பின்னணி, வழிக் கல்வி, நட்புவட்டம் என்பதற்கு ஏற்பவே அவர் தம் மொழியும் சிந்தனைப் போக்கும் மாறும். இது வருந்தத்தக்கது என்றாலும் அதுதான் இயல்பு நிலை.--HK Arun (பேச்சு) 18:06, 19 திசம்பர் 2012 (UTC)Reply
மகிழ்ச்சி அருண். தங்களின் மறுமொழிக்கு நன்றி!. ஹொங்கொங் வலைவாசலைக் கண்டேன். தமிழ் விக்கியின் சிறந்த வலைவாசலின் வடிவமைப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மொழியின் வளர்ச்சி பேச்சு வழக்கில் அதிகளவில் தங்கியிருப்பதால், ஹொங் கொங் தொடர்பான பல தகவல்களைத் தமிழ் ஒலிக்கோப்புகளாக்கித் தருவீர்களேயானால், தமிழ்க் குழந்தைகள் படிக்க இயலாவிடிலும் கேட்டுப் பயன்பெற உதவியாயிருக்கும். :) ஐயம் இருப்பின் கேட்டுத் தெளிவு பெறுகிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 20 திசம்பர் 2012 (UTC)Reply
அன்புடன் தமிழ்குரிசில், ஒலியுரையை எழுத்துரையாகவும், எழுத்துரையை ஒலியுரையாகவும் மாற்றும் செயலிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்றும் அவை விரைவில் புழக்கத்திற்கு வரும் என்றும் அறிகிறேன். எனவே அப்போது உங்கள் தேவையை எளிதாக செய்துக்கொள்ளலாம். நன்றி!--HK Arun (பேச்சு) 15:29, 27 திசம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:35, 26 திசம்பர் 2012 (UTC)Reply

பகிர்வுக்கு நன்றி நற்கீரன். --HK Arun (பேச்சு) 15:13, 27 திசம்பர் 2012 (UTC)Reply


முதற்பக்கக் கட்டுரை

தொகு



உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு



கைப்பாவை பயன்பாடு பற்றி விளக்கம் வேண்டல்

தொகு

அருண், ஆலமரத்தடியில் கைப்பாவை நிலை அறிய என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளதையும் அடுத்தப் பகுதியாக நடவடிக்கை என்னும் பகுதியில் குறிப்பிட்டதையும் பார்க்கவும். பயனர் கணக்குகள் 786haja, Vaarana18 ஆகியவை உங்கள் கைப்பாவை (|Sockpuppet) ]கணக்குகள் என்பது உறுதியாகியுள்ளது. இது பற்றிய உங்கள் விளக்கங்கள் வேண்டப்படுகின்றன. இந்தக் கைப்பாவை கணக்குகளில் இருந்து எழுதப்பட்ட கருத்துகளில் பல தனிமாந்தர்கள் பற்றிய தவறான குற்றவுரைகள் உள்ளன. இவற்றுக்கும் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இவற்றை விரைவில் நீங்கள் செய்தல் வேண்டும். --செல்வா (பேச்சு) 04:25, 21 அக்டோபர் 2013 (UTC)Reply

அருண், விளக்கம் கேட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பதில் அளிக்கவில்லையெனில், நீங்கள் விளக்கமளிக்க விரும்பவில்லை எனக்கொண்டு நமது கைப்பாவை விதிகளின்படி ஒரு வார காலம் உங்கள் கணக்கைத் தடை செய்ய வேண்டிவரும் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:58, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒரு வாரம் தடை

தொகு

மேலே குறிப்பிட்டது போல உங்களை ஒரு வார காலம் தடை செய்துள்ளேன். உங்கள் பேச்சுப் பக்கத்தை மட்டும் உங்களால் தொகுக்க இயலும். இப்பக்கத்தை என் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளேன். இத்தடை குறித்து என்னுடன் உரையாட விரும்பினால், இங்கேயே செய்தி இடலாம். இத்தடை உங்கள் கணக்கின் தடை பதிகைகளில் பதியப்பட்டுள்ளது. பின் வரும் காலங்களில் நீங்கள் இது போன்ற கைப்பாவை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் முடிவிலியாகத் தடைசெய்யபபடுவீர்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:10, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

எனது கண்டனங்கள்

தொகு

வணக்கம், அருண்! மனத்தாங்கல்களாக மட்டுமே இருந்த ஒரு பிரச்சினை., 786haja, Vaarana18 எனும் கைப்பாவை கணக்குகளின் விசமத்தனமான தொகுப்புகளாலேயே மிகவும் சிக்கலான ஒன்றாகிவிட்டது. உங்களிடம் உரிய முறையில் விளக்கம் கேட்டும் நீங்கள் பதிலளிக்கவில்லை. உங்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு ஒரு பயனர் எனும் முறையிலும், பொறுப்பான நிர்வாகி எனும் முறையிலும் எனது கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:38, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

நல்வாழ்த்துதல்

தொகு

உங்களின் பணி மிகச்சிறப்பு வாய்ந்தவை இணைய உலகில் ; நன்றிகளும் நல்வாழ்த்துதலும் சுப்ரமணியம் வேலுச்சாமி (பேச்சு) 20:42, 24 நவம்பர் 2018 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:HK_Arun&oldid=3908944" இலிருந்து மீள்விக்கப்பட்டது