விக்கிப்பீடியா பேச்சு:2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2010 Tamil Wikipedia Annual Review

வணக்கம் நக்கீரன் தங்கள் கருத்துக்கு நன்றி. 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கையை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. ஆனாலும், அறிக்கை பற்றி முழுமையான கருத்தினைத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில், சுமார் இரண்டு மாதங்களுக்குள் தான் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி தெரிந்து, பங்களிப்பு செய்து வருகின்றேன். நிச்சயமாக எதிர்காலத்தில் இதுபோன்ற விடயத்தில் பூரண பங்களிப்பைத் தருவேன்.

2011ம் ஆண்டு திட்டம் பற்றி வினவி இருந்தீர்கள். இலங்கையை மையமாகக் கொண்டு கருத்துத் தெரிவிப்பதாயின் இலங்கையின் விக்கிப்பீடியா பற்றி தெளிவு குறைவு. விக்கிப்பீடியாவைப் பற்றி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இலங்கையில் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குறிப்பாக 2007 - 2008ம் ஆண்டுகளிலேயே இலங்கையில் புரோட்பேன்ட் இணையத்தள சேவை அறிமுகமானது. இதற்கு முன்னைய காலங்களில் தரவிறக்கம் செய்யப்படும் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததினால் இலங்கையில் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. தற்போது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கிலும் புரோட்பேன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இணையப் பாவனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணையத்தை அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 28ம் திகதி சிவக்குமார் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விக்கி பற்றி மேற்கொள்ளப்பட்ட அறிமுகப் பட்டறையே முதல் பட்டறையாக இருக்கின்றது.

விக்கியைப் பற்றி ஊடகங்களிலும்ää குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்திலும் அறிமுகப்படுத்துவதுடன்ää விக்கியின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறி இலங்கையர்கள் மத்தியில் இதனை 2011ம் ஆண்டில் பிரபலப்படுத்தலாம் எனக் கருதுகின்றேன். இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அச்சு ஊடகங்களில் சில கட்டுரைகளை எழுதவுள்ளதுடன், தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணியுள்ளேன். இது தவிர, இலங்கையில் விக்கி அறிமுகம் தொடர்பாக இலங்கையில் வேறு வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டால் சிறப்புடையதாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டு மாத அனுபவத்தில் விக்கியில் எனக்கு குறையாகபட்ட ஒரு விடயத்தையும் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். அதாவது நாளொன்றுக்கு குறைந்தது பத்து புதிய ஆக்கங்களாவது தமிழ் விக்கியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. ஒரு புதிய பயனருக்கு இக்கட்டுரைகளை இனம்கண்டு கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். எனவே, மாதத்தில் பதிவாக்கக்கூடிய புதிய கட்டுரைகளை குறைந்தது தலைப்புகளை மட்டுமாவது ஒரே பார்வையில் பார்த்துக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும்ää தினம்தோறும் பதிவேற்றம் செய்யப்படக்கூடிய பத்து அல்லது பதினைந்து கட்டுரைகளின் தலைப்புகளை முகப்புப் பக்கத்தில் சேர்த்தால் அது கூடிய பயனுள்ளதாக இருக்குமென கருதுகின்றேன். இதற்கு விக்கி வழிமுறைகளில் இடம் உள்ளதோ யான் அறியேன். அவ்வாறிருக்குமிடத்து 2011ம் ஆண்டில் ஒரு அறிமுக நிகழ்வாக இதனை மேற்கொள்ளலாமே.

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் விக்கிக்கான என் பங்களிப்பு நிச்சயம் தொடரும். அதேநேரம், இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்வதில் என்னால் ஆன பங்களிப்பினை நல்குவேன். மிக்கநன்றி

--P.M.Puniyameen 06:18, 9 சனவரி 2011 (UTC)Reply

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி புன்னியாமீன். தமிழ் வழிக் கல்வி இன்னும் இலங்கையில் பலமாக இருப்பதால் இலங்கை மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா கூடிய பயன்பெறும் என்று நம்புகிறேன். கல்விக்கு உதவும் தலைப்புகளில் நாம் கட்டுரைகளை உருவாக்கித் தர வேண்டும். நூலகத் திட்டத்தை] அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்களோடும் இணைந்து நாம் மேலும் பட்டறைகளை செய்ய திட்டம் உள்ளது. ஊடகங்கள் ஊடாக அறிமுகப்படுத்த உங்களின் உதவி மிகவும் பயனுடையதாக இருக்கும். முதற்பக்கத்தில் புதியன என்ற ஒரு இணைப்பு உள்ளது. அதனூடாகச் சென்றால், நாம் புதிய கட்டுரைகளைப் பார்க்கலாம். பின் தள ஆதரவு இருந்தால், இலங்கை மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றையும் ஒழுங்கு செய்ய முடியும். இணைய பயன்பாடு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்பதை அறிவோம். அதற்காகவே குறுந்தட்டு வெளியிடுதல் அவசிமாகிறது. மீண்டும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 16:30, 9 சனவரி 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி

தொகு

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்துவது தொடர்பான நக்கீரன் முன்வைத்த யோசனை ஆரோக்கியமானது.

நான் பயனர் சிவகுமாருடன் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதுடன், இலங்கையில் முன்னணி தமிழ் தேசிய பத்திரிகையொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். அச்சமயம் கட்டுரைப் போட்டி நடத்துவது தொடர்பாக பூரண ஊடக அனுசரணை வழங்குவதற்கு அப்பத்திரிகை முன்வரும் என உத்தியோகப்பற்றற்ற முறையில் என்னிடம் தெரிவித்தார். மேலும், இலங்கையிலுள்ள விக்கி பயனர்களை ஒன்றிணைத்து இது தொடர்பான திட்டங்களை வகுக்க முடியுமென கருதுகின்றேன்.

அவ்வாறான ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்படுமிடத்து அதனை மூன்று மட்டங்களில் நடத்துவது கூடிய பயன்மிக்கதாக இருக்குமென கருதுகின்றேன்.

1. பாடசாலை மாணவர்கள் மத்தியில் 2. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் 3. திறந்த போட்டி

இவ்வாறான ஒரு போட்டி நடத்தப்படுமிடத்து அதனை முன்நின்று சகல ஏற்பாடுகளையும் தற்போதைக்கு என்னாலும் சிவக்குமாராலும் மேற்கொள்ள முடியும். அதேநேரம்ää போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அறிய விரும்புகின்றேன். இது தொடர்பாக விக்கியின் நிர்வாகத்துடன் தொடர்புபட்ட பயனர்கள் கருத்துக்களை தெரிவித்தால் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும்.

--P.M.Puniyameen 04:22, 11 சனவரி 2011 (UTC)Reply


சஞ்சீவி சிவகுமாரின் கருத்துக்கள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை சிறப்பாகவுள்ளது.என்னளவில் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் போதுமானவை எனக் கருதுகிறேன்.அடுத்த ஆண்டுக்கான திட்டமாக ஒன்றைக் கூறலாம். தமிழ் விக்கி அதன் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையிலும் திடமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஆயினும் தொகுத்தல் செயற்பாட்டில் முழுப் பரிமானத்தையும் செயற்படுத்தக்கூடிய நுட்ப அறிவின் போதாமை பல பயனர்களுக்கு உள்ளது. இதற்கான யாதேனும் பயில்வுத் திட்டங்களை செயற்படுத்தினால் பயனுடையது.

மற்றும் இலங்கையில் மாணவர் மத்தியில் ஏதும் போட்டிகள் நடாத்த திட்டமிருப்பின் எனது இயலுமைக்குள்ளான முழு ஆதரவை தர முடியும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:03, 9 சனவரி 2011 (UTC)Reply

சூர்ய பிராகாசின் கருத்துகள்

தொகு
அனைத்து விக்கித் திட்டங்களுக்கும் பொதுவான கருத்துகள் (மொழி வேறுபாடின்றி)
தொகு

விக்கிப்பீடியா(மீடியா) பார்வையாளர்களைப் பயனர்களாக்குவது. வெறும் பயனர் என்ற நிலை கடந்து சீரிய பங்களிப்பாளர் என்ற தகுதிக்கு உயர்த்துவது. இவற்றைத்தான் நாம் பல பட்டறைகள் மூலம் செய்து வருகிறோம் என்பதில் ஐயமேதுமில்லை! இதனால் நமக்குப் பல சிறந்த பங்களிப்பாளர்களும் கிடைத்துள்ளனர். ஆனால், விக்கிப்பீடியாவை மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் என்னை போன்ற மாணவச் சமூகத்திலிருந்து கிடைத்திருக்கும் பங்களிப்பாளர்கள் வெகு சிலரே! (என்னையும் சேர்த்து...) எனவே நமது குறிக்கோள் மாணவர்களை நோக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் மாணவர் சமூகம் இது போன்ற பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஒரு தூண்டுகோல் கட்டாயம் தேவை. எனவே ஒரு மன்றம் (club) தேவையானதாக இருக்கிறது. (இங்கு பார்க்கவும்!) எனவே இதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்திருப்பீர் என்று கருதுகிறேன். நான் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறேன். இங்கு மன்றம் தொடங்கும் பொருட்டு நிர்வாகத்துடன் பேச வேண்டும். இதற்கு விக்கிமீடியா நிறுவனத்திடம் இருந்து தேவையான ஆதரவுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இதைப் பல்வேறு நாடுகளிலும் தமிழ் மாணவர்கள் மூலம் செய்வதால் நமக்கும் சிறந்த பங்களிப்பாளர்கள் கிடைப்பார்கள்.

 --சூர்ய பிரகாசு.ச.அ. 11:43, 20 சனவரி 2011 (UTC)Reply

Return to the project page "2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2010 Tamil Wikipedia Annual Review".