பயனர் பேச்சு:HK Arun/தொகுப்பு01

வாருங்கள்!

வாருங்கள், HK Arun, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--உமாபதி \பேச்சு 19:20, 16 பெப்ரவரி 2008 (UTC)


 

தொகுப்புகள்


பேச்சு 2011 2010-2009-2008

நல்வரவு

தொகு

வணக்கம் அருண். விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் ஹொங்கொங் கட்டுரை விரிவாக்கம் நன்றாக அமைந்துள்ளது. பாராட்டுகள். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். தொகுப்பதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 21:52, 28 மார்ச் 2008 (UTC)

வாருங்கள் அருண். ஹாங்காங் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகம் ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. இருப்பினும் நீங்கள் சுட்டிய படி ஹாங்காங் பற்றிய தகவல்கள் தமிழில் இல்லை அல்லது அரிது. உங்களின் பங்களிப்பு நன்றாக அமையும். மேலும், நீங்கள் எடுத்த படங்களைச் சேர்த்தாலும் நன்று. ஹாங்காங் தமிழரின் எண்ணிக்கை, நிலை, வரலாறு போன்ற விடயங்களும் அறிய ஆவல். உங்களின் கூட்டுப் பங்களிப்பால் த.வி வளர்சி பெறும். நன்றி. --Natkeeran 20:11, 29 மார்ச் 2008 (UTC)

ஆண்டு விழாமலர்

தொகு

அருண், ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் குறித்த உரையாடலை அதன் பேச்சுப் பக்கத்தில் பார்க்கலாம்.--Kanags \பேச்சு 04:58, 6 ஏப்ரல் 2008 (UTC)

அருண், இந்தக் கட்டுரையை அப்படியே விக்கி மூலத்தில் இணைத்திருக்கிறேன். இங்குள்ள ஹொங்கொங் பற்றிய கட்டுரைகளில் விக்கி மூலத்துக்கு [[wikisource:ta:ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்]] என்றவாறு இணைப்புத் தரலாம். இக்கட்டுரையை அங்கு மேம்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 06:50, 6 ஏப்ரல் 2008 (UTC)

மீண்டும் நல்வரவு அருண்

தொகு

ஆங்கிலம் பற்றிய உங்கள் வலைப்பதிவு சிறப்பாக இருக்கிறது. இங்கும் அவ்வப்போது வந்து பங்களியுங்கள். --Natkeeran 18:09, 18 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

தொகு

வணக்கம் அருண்.

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

படிமங்களுக்கான காப்புரிமை

தொகு

அருண், மீண்டும் உங்களை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அண்மையில் நீங்கள் பதிவேற்றிய DSC01236.JPG என்ற படிமம் உங்களதா? அப்படியானால் அதனைப் பொதுவில் விடுகிறீர்களா? தகுந்த வார்ப்புரு படிமத்தில் இணைக்கப்பட வேண்டும். உதவிக்கு விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கத்தைப் பார்க்கவும். படிமப் பக்கத்தின் தொகு தொடுப்பில் தகுந்ததொரு வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 21:45, 28 டிசம்பர் 2008 (UTC)

ஆம் அது என்னுடையது தான். விக்கிபீடியா படிமக் கொள்கைகளுக்கமைய பொதுவில் விடுகின்றேன். நன்றி --HK Arun

ஐக்கிய அமெரிக்கா

தொகு

அருண், நீங்கள் உருவாக்கியிருக்கும் கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. பார்க்க: ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்.--Kanags \பேச்சு 11:25, 2 ஜனவரி 2009 (UTC)

அதனைப் பார்க்கத் தவறிவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி. அருண் 11:52, 2 ஜனவரி 2009 (UTC)

ஹொங்கொங் கட்டுரை

தொகு

ஹொங்கொங் கட்டுரை மிக அருமை. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி Daniel pandian. ஆனால் ஹொங்கொங் கட்டுரை இன்னமும் முழுமைப் பெறவில்லை. விரைவில் முடிக்க வேண்டும்.--HK Arun 01:50, 23 ஜனவரி 2009 (UTC)

சிங்கள பௌத்தம்

தொகு

உங்களுக்கு இடையூறு தருவது எனது நோக்கமல்ல. ஆனால் அக்கட்டுரை சற்று அதீதமாக பக்க சார்பாக இருந்து. விமர்சனம் என்ற பகுதியில் அவற்றின் சில பகுதிகளை தருவதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. --Natkeeran 17:19, 24 ஜனவரி 2009 (UTC)

தொடருந்து சேவை

தொகு

ஹொங்கொங் தொடருந்து சேவைகள் பற்றிய கட்டுரைகள் நன்று. கட்டுரையில் (வார்ப்புருவில்) சில திருத்தியிருக்கிறேன். படிமம் ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கலாம். அல்லது உங்களிடம் தகுந்த படிமங்கள் இருந்தால் அதனைப் பதிவேற்றுங்கள். மற்றும், தொடருந்து, பேருந்து என்பவை சரியான சொற்கள். தொடரூந்து என்பது தவறு.--Kanags \பேச்சு 12:08, 26 ஜனவரி 2009 (UTC)

நன்றி கனக்ஸ். ஆனால் இவ்வார்புருவில் "லோகோ" படிமம் படிவதாகயில்லை. சற்று பார்க்கவும். மற்றும் நேற்று இதற்கென்றே சில நிழல்படங்களைப் பிடித்துள்ளேன்.--HK Arun 19:26, 26 ஜனவரி 2009 (UTC)

ஹொங்கொங் சார்ந்த கட்டுரைகள்

தொகு

ஹொங்கொங் மற்றும் ஹொங்கொங்கை தொடர்புடைய கட்டுரைகள் மிக அருமை. தங்கள் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள்.--கார்த்திக் 06:06, 27 ஜனவரி 2009 (UTC)

செய்யலாம்

தொகு
  • நிச்சியமாக செய்ய வேண்டும். இயன்றவரை செய்ய முயற்சி செய்கிறேன். உங்களின், பிறரின் உதவி வலுச் சேக்கும்.
  • அது மட்டுமல்ல, எதிர்ப்புப் போராட்ட நுணுக்கங்கள் (Protest Techniques) பற்றியும் விரிவாக்க முனைகிறேன்.
  • http://ta.wikipedia.org/wiki/WP:Protest
  • கனடாவில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் சில நல்ல பலங்களைத் தந்துள்ளன. ஒரு ஐந்து மணித்தியாலங்கள் அவசர விவாதம் நடைபெற்றது. அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது விடயங்களை நுணுக்கமாக அறிந்து உரையாற்றினார்கள். எ.கா காலனித்துவ வரலாறு, சிங்கள மொழிச் சட்டம், கல்வி தரப்படுத்தல், வேலைவாய்ப்பில் இனத்துவோசம் (discrimination), தொடக்க கட்ட அறப்போராட்டங்கள், தமிழர் படுகொலைகள், வெள்ளை வான், ஊடகவியலாளர்கள் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேற்றம், கிழக்கின் பெம்மை அரசு/கடத்தல்கள்/படுகொலைகள் என மிக நுணுக்கமாக. இதற்கு தொடர் போராட்டங்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், நேரடிச் சந்திப்புகள், கூட்டங்கள் மிகவும் உதவுகின்றன. யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதும் மிக முக்கியம். தற்போதைய அரசு தமிழரை பயங்கரவாதிகளாகப் பாக்கிறது. ஆனால் அது ஒரு எல்லை வரைக்கும் தான். ஆஸ்திரேலியாவில் முன்னை இருந்த அரசு மோசம், இப்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
  • ஆனால் சில தமிழர்களுக்கே இந்த நீண்ட வரலாறு தெரியாது. வீதியில் சிலர் வந்து கேப்பார்கள். ஏன் போராடுகிறீர்கள் என்று. கொலை செய்கிறார்கள். இதுதான் பதில். பாதகைகளிலும் மனித உரிமை மீறல்கள், நியாமற்ற சட்டங்கள், இனத்துவோசம் (discrimination) அவ்வளவு முதன்மைப்படுத்தப்படுவதில்லை. இந்த அணுகுமுறை எடுத்தால் மேற்குநாட்டினருக்கு இலகுவாக புரியும்.
  • அதனாலேயே இவை தொடர்பான ஆவணப்படுத்தல்கள் முக்கியம். ஒருசிலராவது தமிழ் விக்கியைப் இதற்கு பயன்படுத்துகின்றார்கள் என அறிவேன்.

--Natkeeran 15:25, 8 பெப்ரவரி 2009 (UTC)

கருத்து

தொகு

வணக்கம் அருண். இப்போது சுருக்கமாக ஒரு வேண்டுகோள். 2009 உலகளாவிய ஈழத்தமிழர் இனவழிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியதாக எழுத வேண்டுகிறேன். கடைசிப் பந்தி நன்று. முதல் 2 பந்திகளும் வேறு ஒரு கட்டுரைக்கு நகர்த்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர் இனவழிப்பு அல்லது இதை ஒத்த கட்டுரைகளில் இனவழிப்பை பற்றி விரிவாக எழுதலாம். அத்தோடு இயன்றவரை புள்ளிவிபரங்களைத் சுட்டினால், அதுவும் ஐநா, Amnesty போன்ற உலக நிறுவனங்கள் போன்றவற்றின் தரவுகள் வலுச்சேக்கும். இவை உண்டு என்பது தெரியும்.

நானும் உங்களைப் போலவே சற்று ஒரு பக்க சார்பாகத்தான் எழுதி வருகிறேன். நிச்சியம் விமர்சனம் வரும். எனவே வரும் காப்பது நன்று. எ.கா "இலங்கையில் ஊடகம் என்பது தமிழரின் நிலைப்பாட்டைப் பொருத்தவரை உண்மைகளை" என்று முதல் வரியியில் எழுதுவது அவசியமில்லை. இலங்கையில் ஊடக முடக்கம் என்றே தலைப்பு அமையலாம். அதற்கு நிறைய தரவுகள் உண்டு.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதலாம்.

மனித உரிமை மீறல்கள் பற்றி..

அகதிகள் பற்றி...

கடத்தல்கள் பற்றி....

கைது, சித்தரவதை பற்றி....

இயன்றவரை விமர்சனங்களை மனிதல் கொண்டு எழுத வேண்டும். மிகமும் கடினமானது. ஆனால் இயன்றவரை முயற்சி செய்யுங்கள். நன்றி.--Natkeeran 19:31, 9 பெப்ரவரி 2009 (UTC)

வணக்கம் நற்கீரன். தகுந்த மாற்றங்களைச் செய்துவிடுங்கள். பின் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எழுதுவோம். மேற்குறிப்பிட்டுள்ள விடயங்கள் சிலவற்றில் நேரடி பார்வையும், யாழ், வன்னி, கொழும்பு வாழ் அனுபவமும் உண்டு. எழுதலாம். நன்றி --HK Arun 21:23, 9 பெப்ரவரி 2009 (UTC)

பலதரப்பட்டோரின் போராட்டங்கள்

தொகு

"அது இலங்கைத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு தமிழீழத் தனியரசே என்றும் அதற்கு ஆதரவான நிலையில் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்." என்று கூறுவது தற்போது நடைபெற்றுவரும் பல போராட்டங்களுக்கு பொருந்தாது. பல அரசியல் நிலைப்பாடுகள் உடையோர் தமிழர் இனவழிப்பை எதிர்கிறார்கள். எனவே அவ்வாறன கருத்தக்களை முன்வைப்பது பொருந்தாது. --Natkeeran 22:53, 9 பெப்ரவரி 2009 (UTC)

முடிந்தால் மொழிபெயர்க்கவும் அல்லது விரிவாக்கம், நன்றி

தொகு

--Natkeeran 18:54, 10 பெப்ரவரி 2009 (UTC)

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் நன்றி அருண். நடுநிலமையோடு எழுதி உள்ளீர்கள். துல்லியமான புள்ளி விபரங்கள் இருந்தால் இன்னும் பலம் சேக்கும். --Natkeeran 22:05, 10 பெப்ரவரி 2009 (UTC)

இலங்கை அரச பயங்கரவாதம்

தொகு

ஆமாம்...இலங்கை அரச பயங்கரவாதம் என்ற கட்டுரை Allegations of State terrorism by Sri Lanka என்ற கட்டுரைக்கு இணையானதே. அரச பயங்கரவாதம் என்று கூறுவதே பொருத்தம் என்று படுகிறது. விரிவுபடுத்த வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்...விரிபுபடுத்த வேண்டும். ... en:Sri Lankan state sponsored colonisation schemes --Natkeeran 00:46, 11 பெப்ரவரி 2009 (UTC)

பகுப்பு

தொகு

இலங்கைத் தமிழர் இனவழிப்பு பகுப்பு பற்றி பிற பயனரிடமும் கருத்துக் கோக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் பலர் இதை இனவழிப்பு என்று கருதினாலும், ஐநா போன்றவை அப்படிக் குறிப்பிட்டால்தான் அது அதிகார பூர்வமாக அமையும். கனடாவில் நடைபெற்ற அவசர விவாதத்தில் சில பாராழுமன்ற உறுப்பினர்கள் இன்வழிப்பு என்று குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் நடுநிலைமயுடன் எழுதியிருந்தீர்கள். அதே போன்றி இதர கட்டுரைகளையும் எழுத வேண்டுகிறேன். நானும் நீங்களும் புரிந்து கொள்வது போவாது. ஒருவர் வாதம் செய்ய வந்தால் அதைச் சந்தித்து பேண தகுந்த முறையில் நாம் எழுத வேண்டும். எ.கா "இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்." என்பது உங்களுக்கும் எனக்கும் பலருக்கும் மிகவும் எளிமையான ஒரு உண்மை. ஆனால் ஒரு எதிர்தரப்பு வாத்தில் எடுபடாது...ஆனால் "குற்றச்சாட்டு" என்பதை நாமே குறிப்பிட்டு விட்டால் அந்த வாத விவாதங்களில் இருந்து விடுபடலாம். அதன் பின் பல தரப்பட்ட நடவடிக்கைகளையும் இயன்றவரை மைய ஊடக ஆதாரங்களோடு சேக்கலாம். இதை நாம் பொறுமையாக, பொறுப்பாக செய்தால்...பின்னர் வரக்கூடிய பல தடைகளைச் சமாளிக்கலாம்.

இயன்றவரை புள்ளி விபரங்கள், துல்லியமான தகவல்களைச் சேபது எமது பணி என நினைக்கிறேன். பலர் ஏற்கனவே இந்த வேலைகளை வேறு தளங்களில் செய்துள்ளார்கள். அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தோடு....நீங்கள் ஹொங்கொங்கில் பயிற்சி தர முடிந்தால் (ஒரு சிலரக்காவது) உங்கள் பெயரை WP:tawiki workshop இங்கு இணையுங்கள். நன்றி. --Natkeeran 19:56, 15 பெப்ரவரி 2009 (UTC)

குற்றச்சாட்டு என்பது ஒருவர் இன்னொருவர் மீதோ அல்லது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீதோ சாட்டப் படும் குற்றமாகவே பார்க்கப்படுகின்றது. அவ்வாறு சுமத்தப்படும் குற்றங்கள் உண்மையானதாகவும் இருக்கலாம் வேண்டுமென்றே சாட்டப்படும் குற்றச்சாட்டாகவும் இருக்கலாம் என்பது அறிந்தது தான்.

ஆனால் இலங்கையில் நடப்பது குற்றச்சாட்டாக மட்டுமே பார்க்க முடியாது. இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றால் தமது அரசு மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களாகக் கூறிக்கொள்ளலாம். இவை சாதாரணக் குற்றங்களுக்கு அப்பால் பட்ட அரச பயங்கரவாத நடவடிக்கைகளாகும். இதனை நிரூப்பிக்க போதிய ஆதாரங்களே தேவைப்படுகின்றன.

ஜே.வி.பி யினரை கடத்தி கொலைச் செய்து டயர் போட்டு கொலுத்தியச் சம்பவங்கள் போன்றனவைகள் வெறும் குற்றச்சாட்டாக எவ்வாறு பார்க்க முடியும்? இலங்கையில் சிங்கள தொலைக்காட்சியில் ஒரு தொடராகவும் இதனைக் காட்டி வருகின்றனர். பல சிங்கள ஊடகங்களும் இதனை வெளிப்படுத்தியே உள்ளன. ஆனால் அரசு முடிந்தவரை அதனை மூடி மறைத்துவிட முயற்சி செய்கின்றது. அதற்காக ஊடகவியலாளர் கொலைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மறுப்புறம் தமக்கு சாதகமாக செய்தி வெளியிடுவோரை வளர்த்து ஊக்குவித்து, தாம் விரும்பும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது தான் உண்மை.

அதனால் தமிழர் தரப்பு நியாயங்களும் தமிழர் மீது மேற்கொள்ளப்படும் அரசப் பயங்கரவாத நிகழ்வுகளும் வெளிவருவதில்லை. இங்கே உண்மைகளை நிரூபிக்க //துல்லியமான தகவல்களைச் சேர்ப்பது எமது பணி என நினைக்கிறேன்.// இதனை நானும் முழுமையாக ஏற்கின்றேன். அவசியமும் கூட. நன்றி --HK Arun 05:27, 16 பெப்ரவரி 2009 (UTC)

ஹொங்கொங் தமிழ் இலக்கிய வட்டம்

தொகு

--Natkeeran 21:35, 15 பெப்ரவரி 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 00:02, 19 பெப்ரவரி 2010 (UTC)

Return to the user page of "HK Arun/தொகுப்பு01".