விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review
பயனர்கள் தமது தொலைநோக்கை, 2009 ஆண்டுக்கான வேலைத்திட்டத்தை பரிந்துரைக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர். அப்போது பின்வரும் கேள்விகளை கவனத்தில் கொள்ளுதல் நன்று.
- தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்?
- தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த முன்னெடுக்கவேண்டிய மூன்று நடவடிக்கைகள்?
செல்வா கருத்துக்கள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்?
- செல்வாவின் பரிந்துரைகள்:
- (1) விக்கிப்பீடியா பேச்சு:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review#செல்வாவின்_கருத்துக்கள் பக்கம் பார்க்கவும்.
- (2) நான் 2007 இல் கூறிய அதே கருத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன்:தமிழ் விக்கியில் நாம் ஊன்றி கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இப்பொழுது 10-12 ஆவது வகுப்பில் தமிழில் பயிலும் மாணவர்கள் (தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), தங்கள் பாடநூல்களில் உள்ள கருத்துக்களுக்கு விரிவு தருமாறு நம் கட்டுரைகள் இருத்தல் வேண்டும். பாடநூல்களில் உள்ள குறிப்புகள் தவிர மேற்கொண்டு அறிய ஏதும் செய்திகள் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) தமிழில் இல்லாததாலோ அல்லது மிகமிகக் குறைவாகவே கிடைப்பதாலோ (பொது நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றில்), தமிழ் விக்கிப்பீடியாவில் ஓரளவிற்கேனும் தர முயலவேண்டும். தலையாய பொறுப்புகளில் ஒன்றாக இதனை நான் கருதுகின்றேன்.
- (3)அறிவியல், தொழில்நுட்பம், உயிரினங்கள் பற்றி நிறைய எழுதவேண்டும். 5400+ பாலூட்டிகளில் ஒரு 600 ஆவது இருத்தல் வேண்டும், 9600 உக்கும் மேற்பட்ட பறவைகளில் ஒரு 500 பறவைகள் பற்றியாவது இருத்தல் வேண்டும். உள்ள ஏறத்தாழ 27 பறவை வரிசைகளில் ஒவ்வொரு வரிசையிலும் இரண்டொன்றாவது இருத்தல் வேண்டும், தயிர்கடையும் பூச்சியில் 2,000 வகைகள் உள்ளன, தும்பி/தட்டாரைப் பூச்சியில் 5,000 வகைகள் உள்ளன, வெட்டுக்கிளியில் 20,000 வகைகள் உள்ளன, வண்டு இனத்தில் 360,000 வகைகள் உள்ளன, ஈ உண்ணி, எறும்பு, குளவி வகைகள் 230,000 இனங்கள் உள்ளன, பட்டாம்பூச்சியில் 170,000 வகைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு 50-100 கட்டுரைகளாவது இருத்தல் வேண்டும். அணு, தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி போன்ற அடிப்படையான கட்டுரைகள் இன்னும் பல மடங்கு நன்றாக விரிவாக, அழகாக இருத்தல் வேண்டும். பல கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை. இயற்பியல் (ஒளியியல், வெப்பவியல், ஒலியியல், மின் காந்தவியல்..), வேதியியல் அடிப்படைக் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் இல்லாமல் இருக்கின்றன. இது போல் இன்னமும் பல உள்ளன. உடலுறுப்புகள், உடலியங்கியல், உயிர்வேதியியல் எழுதுதல் வேண்டும் (நற்கீரன் கீழே கொடுத்துள்ளதையும் பார்க்கவும்). இரண்டொருநாளில் சுருக்கி வரிசைப்படுத்துகிறேன்.
- (அ) உடலுறுப்புகள், உடலியங்கியல், உயிர்வேதியியல், வேதியியல் தனிமங்கள், கனிமங்கள் (500 கட்டுரைகள்)
- (ஆ) மின்னியல், இயங்கியல் அடிப்படைகள், அலகுகள் (அறிவியல்-பொறியியல்-மருத்துவம்), கதிரவன் குடும்பம்-கோள்கள்-விண்மீன்-வானியல் கட்டுரைகள் (500 கட்டுரைகள்),
- (இ) உயிரினங்கள் (700 கட்டுரைகள்)
- (ஈ) நோபல் பரிசாளர்கள், நோபல்பரிசு கண்டுபிடிப்புகள், அவற்றின் பின்னணி அறிவியல் கருத்துகள்(300 கட்டுரைகள்).
- இவை மொத்தம் 2,000. போன ஆண்டு நாம் 4,000 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளோம். எனவே, ஆறுகள், மலைகள், எரிமலைகள், ஏரிகள், நகரங்கள், பொருளியல் கருத்துகள், குமுகவியல் கருத்துகள், தனிமனித வரலாறுகள் என பற்பல தலைப்புகளில் 2000 உக்கும் அதிகமாக எழுதலாம்.
- தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த முன்னெடுக்கவேண்டிய மூன்று நடவடிக்கைகள்?
- செல்வாவின் பரிந்துரைகள்:
- நாளிதழ், கிழைமை ஏடுகள், மாதிகைகளில் கட்டுரைகள் எழுதுதல். தொலைக்காட்சி, வானொலி, இணையத்தில் பேசுதல், எழுதுதல். நண்பர்களை நேரடியாக வேண்டி ஈடுபடுத்துதல், நூல்கள் எழுதுதல், பட்டறைகள் நடத்துதல். நாம் எழுதும் கட்டுரைகள் அழகாகவும், நேர்த்தியாகவும், அறிவைத்தூண்டும் விதமாகவும் இருப்பதே ஒரு சந்தையேற்ற, சந்தையில் செல்லுபடியாகும் கூறு என்று கூறலாம். கண்ணைக் கவரும் அருமையான படங்கள், நேர்த்தியான கட்டமைப்பு, கட்டுரை நடையின் ஒழுங்கு, கருத்துகளின் துல்லியம், எழுத்து, சொற்றொடர் பிழைகள் இல்லாமல் இருத்தல், தகுந்த சான்றுகோள்களுடன் இருத்தல் போன்றவை தன்னொளிர்வுதரும் சந்தையில் தேறும் கூறுகள்.
--செல்வா 05:03, 24 டிசம்பர் 2008 (UTC)
நற்கீரன் கருத்துக்கள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்?
எனது கணிப்பில், ஒப்பீட்டளவில் கட்டிடக்கலை, கணிதம், பொருளியல், தமிழர், நாடுகள் ஆகிய பகுப்புகள் நன்றாக வளர்ந்து உள்ளன. ஒரு பல்துறைக் கலைக்களஞ்சியத்தில் கீழே கூறப்பட்ட மூன்று துறைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். மேலும், நிரலாக்கம், கணினியியல் துறைகள் சாந்த பயனர்கள் இங்கு அதிகம் இருப்பதால் அவையும் இலகுவாக மேம்படுத்தப்படாலாம்.
- தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த முன்னெடுக்கவேண்டிய மூன்று நடவடிக்கைகள்?
- அணுகப்படவேணிடியவர்களை (வலைப்பதிவர்கள், இதழ்கள், அமைப்புகள்) பட்டியலிட்டு, கூட்டாக நாம் அவர்களை அணுகி பங்களிக்க அல்லது இணைப்பு தர அழைக்க வேண்டும். பதில் கிடைக்கவில்லை, இயலாது, நுட்ப சிக்கல், அல்லது விரைவில் பங்களிப்பார் என்று மறுமொழி பெற்று சேக்கவேண்டும்.
- Chennai Wikipedia Academy, விக்கிப்பீடியாவின் இந்தியா பிரிவு, தமிழ்ச் சங்கங்கள், தமிழியல் மாநாடுகள், நூல் கண்காட்சி, பட்டறைகள் போன்றவற்றில் நிகழ்துதல் செய்ய வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியா நூல் ஆக்கப்படவேண்டும். நிகழ்த்துதல் இறுதிசெய்யப்படவேண்டு. பல தரப்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பக் கூடிய அறிமுகக் கட்டுரை எழுதப்படவேண்டும். வலைப்பதிவு தொடர்ந்து இன்றைப்படுத்தப்படல் வேண்டும்.
--Natkeeran 13:47, 24 டிசம்பர் 2008 (UTC)
வாசு கருத்துக்கள்
தொகுதற்போது சிறு நேரம் கிடைக்கிறது. ஆதலால் ஆங்கிலத்திலும் தமிழிலும் சில தொகுப்புகள் செய்ய முயல்கிறது. 2009இல் கருநாடக இசை சார்ந்த பக்கங்களை எழுத ஆசை. அதற்கு மேலாக இப்பொழுது ஒன்றும் மனதில் தோன்றவில்லை. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 17:06, 24 டிசம்பர் 2008 (UTC)
நிசாருதீன் கருத்துக்கள்
தொகுஎதிர்கால வேலைத்திட்டத்தில் என்னிடம் கருத்துக் கோரியதற்காக முதலில் நன்றிகள். என்னுடய பங்களிப்புகள் வருடக்கணக்கில் இருப்பது சந்தேகமே. இருந்தாலும் ஒன்றை என் ஆழ் மனதிலிருந்து கூற கடமைப்பட்டுள்ளேன். தமிழ் பேசும் வருங்கால சந்ததியினருக்காக உழைக்கும், விரல் வைத்து எண்ணக்கூடிய உங்களனைவரையும் நிச்சயமாக நாளைய வரலாறு போற்றும் கௌரவிக்கும் என்பதே என் கணிப்பு. இன்றைய இணையத்தின் வளர்ச்சியும் விக்கிபீடியாவின் எழுச்சியும் இதை உறுதி செய்கின்றன.என்னிடமிருந்து முன் கூட்டிய வாழ்த்துகள் உங்களனைவருக்கும்.
விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கான எனது கருத்தாக முன் வைக்க விரும்புவது- தமிழில் தட்டச்சு செய்வதும் , விக்கிப்பீடியாவிற்கு பதிவேற்றுவதுமே பலருக்கு சிக்கலாக இருக்கலாம். முக்கிய தகவல்களை (அறிவியல் துறை தகவல்களையேனும்) ஒலி வடிவிலோ அல்லது வேறு முறைகளில் பெறுவது பற்றி சிந்திக்கலாம். அதனை நாம் திகுத்து விக்கிப்பீடியாவில் தரவேற்றலாம். அதற்கான வழியை முதற் பக்கத்திலேயே செய்து கொடுக்கும் போது இன்னும் விக்கிப்பீடியா சிறப்பு நிலையை அடையும். --Mohamed S. Nisardeen 08:57, 25 டிசம்பர் 2008 (UTC)
குறும்பன் கருத்துக்கள்
தொகுகுமுதம், ஆனந்த விகடன் போன்ற வணிக இதழ்களிலும் வானொலிகளிலும் விக்கிப்பீடியா பற்றி செய்தி வந்தால் பலர் அறிந்து கொள்ள வாய்ப்பு அமையும். மருத்துவம் மற்றும் கணினி பகுப்புகளில் பல விரிவான கட்டுரைகள் தேவை. --குறும்பன் 03:11, 26 டிசம்பர் 2008 (UTC)
மயூரநாதன் கருத்துக்கள்
தொகுமேம்படுத்த வேண்டிய துறைகள் என்று பொதுவாகப் பார்த்தால் எல்லாப் துறைகளிலுமே மேம்படுத்த வேண்டிய தேவை உண்டு. சில துறைகளில் பல கட்டுரைகள் இருந்தாலும் விரிவு, ஆழம், தரம் போன்ற விடயங்களில் மேம்பாடு தேவை. அத்துடன் பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளைக் கொண்டுள்ள துறைகளிலும் சில முக்கியமான பிரிவுகளில் வரட்சி நிலவுகிறது. எடுத்துக் காட்டாக, திரைப்படத்துறை தொடர்பில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை, தனித்தனித் திரைப்படங்கள், நடிக நடிகைகள் பற்றிய குறுங்கட்டுரைகளே. திரைப்படத் துறையின் தொழில்நுட்பம், கலைத்துவம், வரலாறு போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் மிகமிகக் குறைவு. இது போலவே, வரலாறு, கட்டிடக்கலை போன்றவற்றிலும் சில முக்கியமான பிரிவுகள் கவனிக்கப்படாமலேயே உள்ளன.
குறிப்பாக மூன்று துறைகளை தெரிய வேண்டுமாயின், பின்வரும் மூன்று துறைகளில் கவனம் செலுத்தவேண்டும்:
- நவீன தொழில்நுட்பம்
- சூழலியல்
- தமிழர் பண்பாடு
விக்கிப்பீடியாவைப் பரவலாக அறிமுகம் செய்வதற்காகக் கவனம் செலுத்தவேண்டிய மூன்று விடயங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- ஊடகங்களுக்குக் கட்டுரைகள் எழுதுதல்.
- கல்லூரிகளில் அறிமுகம் செய்தல்.
- தமிழில் உள்ளீடு செய்யும் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும், தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்வதிலும் இணைய மையங்களின் (Internet Cafe) உதவியைப் பெற முயற்சி செய்யலாம். இத்தகைய மையங்களூடாக அறிமுகத் துண்டுப் பிரசுரங்களை வழங்குதல், போஸ்டர்களைக் காட்சிக்கு வைத்தல் போன்றவை பயன்படக்கூடும்.
இவற்றை விட நடப்பு விடயங்களின் பின்னணிகளோடு தொடர்புடைய விளக்கமான தரமான கட்டுரைகளை தவியில் உடனுக்குடன் இடம்பெறச் செய்தல் மூலமும் மக்களைக் கவரலாம். எடுத்துக்காட்டாகத் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்பாக உலகம் முழுதும் பரபரப்பு உள்ளது. ஆகவே இவ்விடயத்துடன் தொடர்புடைய நல்ல கட்டுரைகளை இடம்பெறச் செய்வது பயனுள்ளதாக அமையும். மயூரநாதன் 19:52, 27 டிசம்பர் 2008 (UTC)
அருநாடன் கருத்துக்கள்
தொகு- Wikispecies-ஐ தமிழில் தொடங்க வேண்டும்
- கணினி மற்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சொற்களின் நேர் தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்படல் வேண்டும்
- நாம் ஒவ்வொருவரும் குறைந்த்து 500 கட்டுரைகளை இவ்வாண்டு (2009) இறுதிக்குள் விக்கியில் படைக்க வேண்டும்
தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த
- ஏதாவது 2 பத்திரிக்கையில் விக்கிப்பீடியாவை பற்றிய அறிமுக செய்தி வர முயற்சி எடுக்க வேண்டும்
- தமிழ் விக்கிப்பீடியா மன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த கட்டுரை எழுதும் பள்ளி | கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கலாம்
- இணைய மையங்களில் விக்கி குறித்த விளம்பரப்பலகைகள் வைக்கலாம்
ரவியின் கருத்து
தொகு2009 ஆண்டு செயல்திட்டம் குறித்த எண்ணங்கள்:
மேம்பட வேண்டிய இரண்டு
தொகு- எல்லா கட்டுரைகளையும் ஒரு முறையேனும் உரை திருத்த வேண்டும்.
- ஒவ்வொரு கட்டுரைக்கும் தகுந்த படங்கள், ஒலி, ஒளிக்கோப்புகள் சேர்த்தல்.
கூடுதல் கட்டுரைகள் வேண்டிய துறைகள்
தொகு- நடப்பு நிகழ்வுகள்.
- குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகள்.
- தமிழர் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள், உள்ளூர் துறைகள், ஆளுமைகள்.
- இயற்பியல், புவியியல் போன்ற அடிப்படை தலைப்புகள் குறித்த கட்டுரைகள்.
- விக்கிப்பீடியா உதவிக் கட்டுரைகள்.
பரப்புரை முனைகள்
தொகு- இருக்கிற எல்லா தமிழ் இணையத்தளங்கள், குழுமங்கள், மன்றங்களிலும் முதற்கட்ட பரப்புரை. ஏற்கனவே இணையத்தில் இருக்கிறவர்களை ஈர்ப்பது இலகு.
- வலைப்பதிவர்களில் இருந்து கூடுதலான பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்து அலட்ட வேண்டாம் என்பது 3 ஆண்டு அனுபவம். வலைப்பதிவதற்கான உந்துதல் விக்கியில் எழுதுவதில் இருந்து முற்றிலும் மாறானது.
- பரிசளிப்பு போன்றவை கவனம் ஈர்க்கலாம். ஆனால், இது சரியான வழிமுறையாகத் தெரியவில்லை. விக்கி கொள்கை புரிந்து வருபவர்களே நீண்ட நாள் நோக்கில் நல்ல பங்களிப்பாளர்களாக இருப்பார்கள்.
- நேரடியாக கல்லூரி போன்ற இடங்களில் களத்தில் இறங்கிச் செயற்பட தற்போது தமிழ்நாட்டில் ஆள், அமைப்பு பலம் இல்லை என்று தோன்றுகிறது.
- அச்சு, ஒலி, ஒளி ஊடகத் துறையில் உள்ளோரிடம் தொடர்புகள் பெற முயல்வோம்.
கார்த்திக் கருத்து
தொகு- ஊடகத் துறையில் தமிழ் விக்கியை பற்றிய கட்டுரைகள் வரவேண்டும்
- தமிழில் உள்ளீடு செய்யும் வசதிகளை பரப்புதல் (முதல் கட்டுரை எழுதி முடிக்கும் வரை இது மிகப்பெரிய தடங்கல்)
- Wikispecies-ஐ தமிழில் தொடங்க வேண்டும்
- தமிழ் விக்கிப்பீடியா மன்றம் நிறுவுதல். இம்மன்றம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்களிப்பை அதிகரிக்க முனையும். மேலும் தமிழ் விக்கியின் பல்வேறு செயல்பாடுகளை செயல்வடிவம் கொடுக்கும் (குறிப்பு: பல்வேறு ஆர்குட் குழுமங்கள் இன்று பெரும் குழுக்களாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது)
- ஆங்கில விக்கிக்கு நிகராக படங்கள்,ஒலி, மற்றும் ஒளிக்கோப்புகள் சேர்க்கப்படவேண்டும்.
- தாவரவியல், விலங்கியல், புவியியல், மற்றும் சூழியல் தொடர்பாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும்.
- தற்போதுள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகளை நீக்குதல் மற்றும் கட்டுரையின் தரத்தை உயர்த்துதல்
- ஒரு/இரண்டு வரி கட்டுரைகளை விரிவாக்குதல்
உமாபதியின் கருத்துக்கள்
தொகுவரும் ஆண்டில் அதாவது 20009 இல் மைக்ரோசாப்ட் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்கவும் ஏற்கனவே தமிழில் எழுதப்படாதவற்றை எழுதவும் இருக்கின்றேன். தமிழ் கம்பியூட்டர் அல்லது வேறு ஓர் இதழில் அறிமுகக் கட்டுரையைக் கொடுக்க இயலுமா எனப் பார்க்கின்றேன். ஏற்கனவே இலங்கையில் வெளியாகி நின்றுபோன பிஸிடைம்ஸ் பத்திரிகையில் தமிழ் விக்கிபீடியாக் கட்டுரை வந்ததை சிலர் அறிந்திருப்பார்கள்.--உமாபதி \பேச்சு 17:08, 31 டிசம்பர் 2008 (UTC)