வலைவாசல்:தமிழீழம்



தொகு  

தமிழீழ வலைவாசல்


தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.

தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.

தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

தமிழீழம் பற்றி மேலும் அறிய...
தொகு  

சிறப்புக் கட்டுரை


விடுதலைப் புலிகளின் சின்னம்
விடுதலைப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள, அரசுக்கு எதிரான ஒரு முக்கிய தமிழர் அமைப்பாகும். 1976 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இலங்கையின் வட கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில், இலங்கைத் தமிழருக்கு என தனி நாடு அமைக்கக்கோரி செயல்படும் ஒர் அமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 2009 வரை இயங்கினார். இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
தொகு  

இதே மாதத்தில்


நினைவுச்சின்னம்

தொகு  

செய்திகளில் தமிழீழம்


விக்கிசெய்திகளில் தமிழீழ வலைவாசல்
தொகு  

தமிழீழ நபர்கள்


முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன் பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • தமிழீழம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|தமிழீழம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழீழம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழீழம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

சிறப்புப் படம்


காத்தான்குடித் தாக்குதல்
காத்தான்குடித் தாக்குதல்
படிம உதவி: User:Arafath.riyath

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

தொகு  

தமிழீழம் தொடர்பானவை



தொகு  

பகுப்புகள்


தமிழீழ பகுப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ்நாடு தமிழ் வரலாறு இலங்கை தமிழர்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழீழம்&oldid=3998277" இலிருந்து மீள்விக்கப்பட்டது