வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா
பயன்பாடு
தொகுஉங்களுக்குத் தெரியுமா துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/வடிவமைப்பு.
உங்களுக்குத் தெரியுமா
தொகுவலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/1
- தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் நடேசன் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.
- ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் கிருஷ்ணா வைகுந்தவாசன் (படம்).
- மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் பங்கேற்றுப் பட்டம் வென்ற முதல் இலங்கைத் தமிழர் யாழ் நூல் இயற்றிய சுவாமி விபுலாநந்தர் ஆவார்.
வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/2
- மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.
- சங்கிலியன் (படம்) அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.
- இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.
வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/3
- 1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி நீடித்தது.
- சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
- ஆழிக்குமரன் ஆனந்தன் ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.
வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/4
- இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.
- இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
- 2008 தவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண் அடிப்படையில் இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டது.
வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/5
- தமிழீழத்திற்கு எதிரான நிலை கொண்ட த இந்து இதழாசிரியர் என். ராம் இலங்கை அரசின் உயர்குடிமை விருதான லங்காரத்னா பெற்றவர்.
- இலங்கை அரசின் சிறப்பு ஆதரவைப் பெற்று இலங்கையின் அரச சமயமாக அமைவது பெளத்தம் ஆகும்.
- 1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பது தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினம் ஆகும்.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தகவல்களை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.