தமிழ்ச் சங்கம்
தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன.
சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.[1][2][3] பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியபுராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன.[4] இவை அனைத்தும் சங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 400 முதல் பொ.ஊ. 200 வரை இருந்துள்ளது.[5][6] இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது.[7]
பல்வேறு கால-கட்டங்களில் தமிழ்ச்சங்கம்
தொகு- சங்கம் (முச்சங்கம்)
- நான்காம் தமிழ்ச்சங்கம் - பாண்டித்துரைத் தேவர் தலைமையில் 1901-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது. நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத் தேவர், தலைவராக வீற்றிருக்க 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்தது.[8][9]
- ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் இணைய இதழ் ஒன்று இயங்கி வருகிறது. அது பண்டைய தமிழர்களைப் பற்றியும் மலர்களைப் பற்றியும் பதிவேற்றி வருகிறது.[10]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Devi, Leela (1986). History of Kerala. Vidyarthi Mithram Press & Book Depot. p. 73.
- ↑ Raghavan, Srinivasa (1974). Chronology of Ancient Bharat.
- ↑ Pillai, V.J. Tamby (1911). Dravidian kingdoms and list of Pandiyan coins. Asian Educational Services. p. 15.
- ↑ நம்மாழ்வார் காலத்துச் சங்கம் - "நம்மாழ்வார் திருவாய்மொழி" முன்னூறு புலவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது.Studies in Tamil Literature and History Vol 5 by Ramachandra Dikshitar
- ↑ Kamil Veith Zvelebil, Companion Studies to the History of Tamil Literature, pp12
- ↑ See K.A. Nilakanta Sastry, A History of South India, OUP (1955) pp 105
- ↑ பல்சாலை முதுகுடுமித் தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்" - மதுரைக்காஞ்சி
- ↑ "நான்காம் தமிழ்ச்சங்கம்". Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 2015-09-17.
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=212
- ↑ ஐந்தாம் தமிழ்ச்சங்கம்