திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன் ஆவர்.[1]
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு
தொகு- புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
- செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
- பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
- வருநசை பார்க்கும்என் நெஞ்சு.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "திணைமொழி ஐம்பது". tamilvu.org. Retrieved 24 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)