வி. எஸ். குமார் ஆனந்தன்

(ஆழிக்குமரன் ஆனந்தன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (25 மே 1943 - 6 ஆகத்து 1984) இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.[1]

வி. எஸ். குமார் ஆனந்தன்
பிறப்புகுமார் ஆனந்தன்
மே 25, 1943(1943-05-25)
வல்வெட்டித்துறை, இலங்கை
இறப்புஆகத்து 6, 1984(1984-08-06) (அகவை 41)
ஆங்கிலக் கால்வாய், இங்கிலாந்து
மற்ற பெயர்கள்ஆழிக்குமரன்
பணிவழக்கறிஞர், கின்னஸ் சாதனையாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
மானெல் ஆனந்தன்
பிள்ளைகள்ராஜன் ஆனந்தன், ராஜேஸ் ஆனந்தன்

1954-ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975-இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.

மறைவுதொகு

இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார்.[1] குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசிச் சொற்கள்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு