ராஜன் ஆனந்தன்

ராஜன் ஆனந்தன் (Rajan Anandan) கூகுள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் இந்தப் பணியை பெப்ரவரி 2011 முதல் பொறுப்பேற்றார்[1]. ராஜன் ஆனந்தன் முன்னர் 2006 முதல் 2008 வரையில் டெல் (இந்தியா) நிறுவனத்திலும்[2], பின்னர் ஆகத்து 2008 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளையின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் ஆகத்து 2008 முதல் பணியாற்றியவர்[3]. டெல், மைக்குரோசாஃப்ட் நிறுவனக்களின் பணியாற்றும் முன்னர் இவர் ஐக்கிய அமெரிக்காவில் சிக்காகோவில் உள்ள மாக்கின்சி கம்பனியில் பணியாற்றினார்[4].

ராஜன் ஆனந்தன்
பணிமுகாமைத்துவ இயக்குநர்

ராஜன் ஆனந்தனின் தந்தை வி. எஸ். குமார் ஆனந்தன் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்தவர்.

ராஜன் ஆனந்தன் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் இளமாணிப் பட்டமும் பின்னர் கலிபோர்னியா, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். சிக்காகோவில் உள்ள மக்கின்சி கம்பனியில் 1992 முதல் 2003 வரை பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவின் டெல் கம்பனியில் இணைந்து அதன் உதவித் தலைவராகவும், பின்னர் டெல் நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உதவித் தலைவர், மற்றும் பொது முகாமையாளர் பதவிகளையும் வகித்தார்[5]. செப்டம்பர் 2008 இல் இவர் இந்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து அதன் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்தல் பகுதியின் தலைவரானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜன்_ஆனந்தன்&oldid=4165777" இலிருந்து மீள்விக்கப்பட்டது