வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/4
- இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.
- இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
- 2008 தவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண் அடிப்படையில் இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டது.