வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்

பயன்பாடு‎ தொகு

சிறப்புப் பட துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/வடிவமைப்பு.

சிறப்புப் படம் தொகு

வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/1

 
சங்கிலித்தோப்பு மாளிகை
படிம உதவி: en:User:Wikramadithya

சங்கிலித்தோப்பு இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம். யாழ்ப்பாண நகரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/2

 
முள்வேலி முகாம்களில் ஈழத்தமிழர்
படிம உதவி: User:Natkeeran

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிரப் போரில் இறுதியில் சுமார் 250 000 மேற்பட்டோர் முள்வேலி முகாம்களில் சிறைவைக்கப்பட்டு உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/3

 
இலங்கைத் தமிழர் இனவழிப்பு எதிர்ப்புப் போராட்டம்
படிம உதவி: User:Natkeeran

இலங்கைத் தமிழர் இனவழிப்பைக் கண்டித்து உலகத் தமிழர்கள் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். படத்தில் நோர்வேத் தமிழர் பெப்ரவரி 5, 2009 அன்று நடத்திய எதிர்ப்புப் போராட்டம்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/4

 
கருப்பு யூலை கலவரம்
படிம உதவி: User:Kalanithe

கருப்பு யூலை கலவரங்களின் போது, இந்தத் தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்கு சற்றுமுன்னர் சிங்கள ஒளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க எடுத்த ஒளிப்படம்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/5

 
காத்தான்குடித் தாக்குதல்
படிம உதவி: User:Arafath.riyath

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/6

 
ஆனையிறவு
படிம உதவி:

ஆனையிறவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. 1760 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். 1952 இல் இலங்கை இராணுவம் இங்கே தமது தளத்தை அமைத்ததுக் கொண்டது. இதன் அமைவுக் காரணமாக ஈழப் போரில் பல கடுமையான சண்டைகள் இங்கே நடைப்பெற்றுள்ளன.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/7

 
சிவனொளிபாத மலை
படிம உதவி: en:User:Bourgeois

சிவனொளிபாத மலை கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இசுலாமியர்கள் இதை ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/8

 
யாழ் பொது நூலகம். எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம்.
படிம உதவி: User:Kanags

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இந்நூலகம் எரிக்கப்பட்டது.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/9

 
இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலைச் செய்யும் இந்தியத் தமிழர்கள்
படிம உதவி: User:Trengarasu

இலங்கையின் இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர் எனப்படுவோர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து இலட்சக் கணக்கில் கொண்டுவரப்பட்டு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழிவரும் மக்களாவர்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/10

 
ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்
படிம உதவி: User:Stahlkocher

இலங்கை இனப்பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் பரவலாக உலகம் முழுவதும் இந்து கோவில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவைகளில் யேர்மனியில் அமையப்பெற்ற ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது.



முன்மொழிதல் தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.