யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.[1] இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது[2]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது[3][4]. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

யாழ் பொது நூலகம் எரிப்பு
யாழ் பொது நூலகம் சூன் 1, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம்
இடம்யாழ்ப்பாணம், இலங்கை
நாள்சூன் 1 - சூன் 2 1981
தாக்குதலுக்கு
உள்ளானோர்
முக்கியமாக இலங்கைத் தமிழர்
தாக்குதல்
வகை
எரிப்பு, சூடு
ஆயுதம்நெருப்பு, துப்பாக்கிகள்
இறப்பு(கள்)4
காயமடைந்தோர்தெரியவில்லை
தாக்கியோர்காவல்துறை, இராணுவம் மற்றும் குண்டர்கள்

பின்னணிதொகு

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[5][6]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[5][6].

கலவரமும் எரிப்பும்தொகு

ஆவணங்கள்தொகு

 • யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த "The Jaffna Public Library rises from its ashes" என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்[7]
 • எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்தொகு


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

 1. நீலவண்ணன். "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது". பார்த்த நாள் 31 மே 2016.
 2. "Destroying a symbol". IFLA. பார்த்த நாள் 2007-02-14.
 3. "Fire at Kandy public library". BBC. பார்த்த நாள் 2006-03-14.
 4. Wilson, A.J. Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries, p.125
 5. 5.0 5.1 "History of the Public Librray". Dailynews. பார்த்த நாள் 2007-04-13.
 6. 6.0 6.1 "The reconstruction of the Jaffna library by Dr. Jayantha Seneviratne". PRIU. பார்த்த நாள் 2006-04-17.
 7. Thurairajah, V.S., The Jaffna Public Library rises from its ashes, மித்ர பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2007

மேலதிக வாசிப்பிற்குதொகு

 • Libricide: The Regime-Sponsored Destruction of Books and Libraries in the Twentieth Century (Hardcover), by Rebecca Knuth, Publisher: Praeger Publishers (ஜூலை 30, 2003) (ISBN 0-275-9808-8X)
 • Burning Books and Leveling Libraries: Extremist Violence and Cultural Destruction (Hardcover), by Rebecca Knuth, Publisher: Praeger Publishers (மே 30, 2006) (ISBN 0-275-9900-79)
 • A Splendor of Letters: The Permanence of Books in an Impermanent World (Hardcover), by Nicholas A. Basbanes, Publisher: HarperCollins (நவம்பர் 25, 2003) (ISBN 0-060-0828-79)

வெளி இணைப்புகள்தொகு