வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/7
சிவனொளிபாத மலை கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இசுலாமியர்கள் இதை ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.