வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜனவரி
- சனவரி 1, 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
- சனவரி 1, 1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
- சனவரி 5, 2000 – இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
- சனவரி 10, 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).
- சனவரி 28, 1987 – மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/பெப்ரவரி
- பெப்ரவரி 3, 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. (படம்: யாழ்ப்பாண மாவட்டம்)
- பெப்ரவரி 8, 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் அறிவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 11, 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 17, 1990 - இலங்கையின் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- பெப்ரவரி 19, 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மார்ச்
- மார்ச் 2, 1815 - கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாகியது. சிறைப் பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
- மார்ச் 11, 1902 - யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டது.
- மார்ச் 19, 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி மட்டக்களப்பில் தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
- மார்ச் 24, 1965 - இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- மார்ச் 31, 1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஏப்ரல்
- ஏப்ரல் 2, 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- ஏப்ரல் 18, 1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
- ஏப்ரல் 19, 1988 - மட்டக்களப்பில் அன்னை பூபதி (படம்) ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
- ஏப்ரல் 19, 1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் ரணசுரு, வீரயா என்னும் பெயருடைய இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
- ஏப்ரல் 28, 2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே
- மே 1, 1993 - இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா (படம்) மே நாள் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
- மே 14, 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
- மே 15, 1985 - குமுதினிப் படுகொலைகள்: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
- மே 22, 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
- மே 28, 1915 - சிங்கள-முஸ்லிம் கலவரம்: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்தது.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜூன்
- சூன் 1, 1981 - தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் (படம்) மே 31 நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
- சூன் 4, 1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
- சூன் 5, 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- சூன் 6, 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- சூன் 23, 1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜூலை
- சூலை 5, 1987 - கரும்புலிகள் நாள்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
- சூலை 8, 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- சூலை 9, 1995 - நவாலி தேவாலயத் தாக்குதல்:யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- சூலை 18, 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
- சூலை 23, 1983 - கறுப்பு யூலை (படம்): இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஆகஸ்ட்
- ஆகசுடு 2, 1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகசுடு 3, 1990 - கிழக்கிலங்கையில் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகசுடு 12, 1990 - வீரமுனைப் படுகொலைகள்: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- ஆகசுடு 14, 2006 - முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
- ஆகசுடு 20, 1948 - இலங்கை நாடாளுமன்றத்தில் "இலங்கை குடியுரிமை சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் (படம்) நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/செப்டெம்பர்
- செப்டம்பர் 5, 1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- செப்டம்பர் 9, 1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- செப்டம்பர் 21, 1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- செப்டம்பர் 26, 1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திலீபன் (படம்) இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
- செப்டம்பர் 27, 1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர்
- அக்டோபர் 11, 1987 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது.
- அக்டோபர் 19, 2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
- அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
- அக்டோபர் 27, 1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
- அக்டோபர் 30, 1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்தும் சட்டமாக சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர்
- நவம்பர் 1, 1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
- நவம்பர் 2, 2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் (படம்) உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 3, 1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
- நவம்பர் 15, 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
- நவம்பர் 23, 1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/டிசம்பர்
- டிசம்பர் 2, 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
- டிசம்பர் 12, 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 14, 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் (படம்) மறைவு.
- டிசம்பர் 18, 1999 - கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் தனது வலது கண்ணை இழந்தார்.
- டிசம்பர் 24, 1690 - யாழ்ப்பாணத்தில் நத்தார் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.