வீரமுனைப் படுகொலைகள், 1990

வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

வீரமுனைப் படுகொலைகள்
இடம்வீரமுனை, அம்பாறை மாவட்டம்
நாள்ஆகத்து 12, 1990 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
தாக்குதல்
வகை
சுடப்படல்
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
முஸ்லிம் ஊர்காவல்படை

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.[1][2]

உசாத்துணை

தொகு
  1. "State and Muslims Desecrate Ancient Tamil Village". Northeastern Herald. http://tamilnation.org/tamileelam/muslims/0305desecrate.htm. பார்த்த நாள்: 15 ஆகத்து 2012. 
  2. Ranjan Hoole (16 அக்டோபர் 1990). "War and its consequence in Amparai Districti". UTHR. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2012.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமுனைப்_படுகொலைகள்,_1990&oldid=4055442" இலிருந்து மீள்விக்கப்பட்டது