முதன்மை பட்டியைத் திறக்கவும்

தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டுள்ளார்.[1].

தராக்கி சிவராம்
Taraki Sivaram
Sivaram dharmeratnam.jpg
தர்மரத்தினம் சிவராம்
பிறப்பு தர்மரத்தினம் சிவராம்
ஆகத்து 11, 1959(1959-08-11)
மட்டக்களப்பு, இலங்கை
இறப்பு 28 ஏப்ரல் 2005(2005-04-28) (அகவை 45)
கொழும்பு, இலங்கை
தொழில் ஊடகவியலாளர், எழுத்தாளர்
துணைவர் ஹேர்லி யோகரஞ்சினி பூபாலப்பிள்ளை
பிள்ளைகள் வைஷ்ணவி, வைதேகி, சேரலாதன்
சமயம் இந்து
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கட்டுரைகள்
Official website

வாழ்க்கைக் குறிப்புதொகு

சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.

ஊடகவியலில்தொகு

சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.

நூலாக வாழ்க்கை வரலாறுதொகு

தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை சிவராம் புகட்டும் அரசியல் - ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் (Mark P. Whittaker) எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை, இலண்டனில் உள்ள Pluto Press பதிப்பகம் வெளியிட்டுள்ளது[2].

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மரத்தினம்_சிவராம்&oldid=2712719" இருந்து மீள்விக்கப்பட்டது