பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடைய அரசியல் ஒப்பந்தம்
(பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26, 1957 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைக் குறிக்கும்.[1][2][3]

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

குடியேற்றத் திட்டம்

தொகு

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

ஒப்பந்த முறிவு

தொகு

இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் (அமுல்) படுத்தப்படவில்லை.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Peebles, Patrick (2006-08-30). The History of Sri Lanka. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33205-0.
  2. "Illankai Tamil Arasu Kadchi". Vellhi Vizha Malar (Silver Jubilee Souvenir). 1956-08-20. pp. 13–14.
  3. Rajasingham, K T. Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-08-14.{{cite book}}: CS1 maint: unfit URL (link)