யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது.

அரசர் பெயர் ஞான இராச
கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி கி.பி 1242 கி.பி 1210
குலசேகர சிங்கையாரியன் கி.பி 1246
குலோத்துங்க சிங்கையாரியன் கி.பி 1256
விக்கிரம சிங்கையாரியன் கி.பி 1279
வரோதய சிங்கையாரியன் கி.பி 1302
மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325
குணபூஷண சிங்கையாரியன் கி.பி 1348
வீரோதய சிங்கையாரியன் கி.பி 1344 கி.பி 1371
சயவீர சிங்கையாரியன் கி.பி 1380 கி.பி 1394
குணவீர சிங்கையாரியன் கி.பி 1414 கி.பி 1417
கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1440


1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்

சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450

1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது

கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1467
சிங்கை பரராசசேகரன் கி.பி 1478
சங்கிலி கி.பி 1519 கி.பி 1519

1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்

புவிராஜ பண்டாரம் கி.பி 1561
காசி நயினார் கி.பி 1565
பெரியபிள்ளை கி.பி 1570
புவிராஜ பண்டாரம் கி.பி 1572
எதிர்மன்னசிங்கம் கி.பி 1591
அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1615
சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1617

1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது

உசாத்துணைகள்

தொகு
  • ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)