பயனர் பேச்சு:Sengai Podhuvan/தொகுப்பு 1
வாருங்கள், Sengai Podhuvan/தொகுப்பு 1! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
--தேனி.எம்.சுப்பிரமணி. 02:05, 19 ஜூலை 2010 (UTC)
கட்டுரையில் பயனர் பெயர் இடுவது இல்லை
தொகுSengai Podhuva! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக. வருக. பதிற்றுப்பத்து பக்கத்தில் நீங்கள் பங்களித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு விசயம். கட்டுரையில் பயனர்/பங்களிப்பாளரின் பெயர் இடுவது இல்லை. மற்றபடி உங்கள் பெயர் வரலாறு என்ற தலைப்பில் என்றென்றும் இருக்கும். நன்றி. --பரிதிமதி 01:22, 21 ஜூலை 2010 (UTC)
- செங்கை பொதுவன், பதிற்றுப் பத்து கட்டுரையை நீங்கள் விரிவாக்கி வருவது குறித்து மகிழ்ச்சி. ஆனால், கட்டுரைக்குள் உங்கள் பெயரையும் இட்டு வருகிறீர்கள். இது அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் பெயர் இக் கட்டுரையின் வரலாறு பக்கத்தில் தானாகவே பதியப்படும். இங்கே பார்க்கவும். எனவே தயவு செய்து கட்டுரைக்குள் உங்கள் பெயரைப் பதிய வேண்டாம். -- மயூரநாதன் 23:28, 23 ஜூலை 2010 (UTC)
செங்கைப் பொதுவன் அவர்களுக்கு, பயனர் பக்கத்தில் உங்கள் முயற்சிகளையும் சாதனைகளையும் பற்றிப் பார்த்தேன். உங்களைப்போன்ற படிப்பறிவும், நிரம்பிய பட்டறிவும் கொண்டவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்டுரைகளை எழுதுவதோடு நில்லாது விக்கிப்பீடியா:ஆலமரத்தடி போன்ற பக்கங்களில் தமிழ் விக்கி தொடர்பான பிற விடயங்களின் மீது நடைபெறும் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளுங்கள். இதன் மூலம் பிற பயனர்களும் பயனடைவர். -- மயூரநாதன் 04:24, 31 ஜூலை 2010 (UTC)
தமிழ் விக்கி மூலம்
தொகுவணக்கம் பொதுவன்:
உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. தமிழ் இலக்கியங்களை முழுமையாக இட பொருத்தமான இடம் தமிழ் விக்கி மூலம் ஆகும். அங்கு பதிற்றுப்பத்து நூலின் பாடல்களை முழுமையாக இட்டு, விளக்கமும் கொடுக்கலாம். நன்றி. --Natkeeran 19:06, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
பகுப்புகளை இணைத்தல்
தொகுஐயா, பகுப்பு பக்கத்தில் கட்டுரைகளை இட்டால் பகுப்பு கட்டுரையில் இணையாது. கட்டுரையின் இறுதியில் [[பகுப்பு: தமிழ்நாட்டு மலைகள்]] சேர்த்து விடுங்கள், இணைந்து விடும்--சோடாபாட்டில் 20:48, 23 ஆகஸ்ட் 2010 (UTC)
பதிகம்
தொகுபதிகம் பற்றிய உரையாடலில் (பேச்சு:பதிகம்) உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அருள்கூர்ந்து உங்கள் பதிலைப் பதிய வேண்டுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:01, 28 செப்டெம்பர் 2010 (UTC)
சில வேண்டுகோள்கள்
தொகுஐயா,
- 1) புதிய கட்டுரைகளில் முதல் ஒரிரு வரிகளில் கட்டுரை எதைப்பற்றியதென்று ஒரு சிறு அறிமுகத்தை மறவாமல் கொடுங்கள். இணையத்தில் எவ்வழியும் பயனர் அக்கட்டுரைக்கு வரக்கூடும். சட்டென்று கட்டுரை எதைப் பற்றியதென்பதை முதல் வரி சோல்ல வேண்டும்
- 2)” \” பயன்படுத்துவதுக்கு பதில் “ - ” குறியீட்டையோ, அடைப்புகளையோ பயன்படுத்துங்கள். “\” ஐ விக்கியில் மிகப்பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை
- 3) விக்கியில் தன்மையிலும் எழுதவதில்லை (எ.கா. “நாம் கருதலாம்” “நாம் கூறலாம்” என்று எழுதாமல், கருதப்படுகிறது, கூறப்படுகிறது என்றே எழுதவது மரபு)
ஊட்டியார் கட்டுரை உரையாடலின் தொடர்ச்சி
தொகுஐயா, வணக்கம். இப்போதுதான் உங்கள் பயனர் பக்கத் தகவல்களைப் படித்து மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பட்டறிவு மிகுந்தவர்கள் நம் தளத்துக்கு பெரிதும் வளம் சேர்க்க முடியும். அதிலும் உங்கள் கல்வித்துறையான தமிழர் விளையாட்டுக்களைப் பற்றி நீங்கள் நிறைய எழுத வேண்டும். நிற்க.
அருள் கூர்ந்து என்னைப் பெருந்தகை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். அகவையில் மிகச்சிறியவன் என்பதற்காக மட்டுமல்ல. இங்கு நாம் பின்பற்றும் மரபு, அனைவரும் ஒருவரையொருவர் அகவை வேறுபாடு காணாமல் பெயர் சொல்லி, அதே வேளையில் மதிப்புக் குறையாமல் விளிப்பதே. உங்களையும் பிறர் பெயர் சொல்லி அழைத்தால் மனங்கோண வேண்டாம். பிறகு ஒரு தகவல். அண்டத்தைப் பற்றிய கட்டுரையை நான் எழுதவில்லை. தொடக்க நாட்களில் இங்கு சில கட்டுரைகளே இருந்தபோது எவ்வெவ் தலைப்புகளில் எழுதலாம் என்று ஒரு பட்டியலை அமைத்திருந்தேன். மயூரநாதன் தொடங்கிய அக்கட்டுரையை மற்ற சில பயனர்கள் வளர்த்தெடுத்துள்ளனர்.
நீங்கள் விக்கிமூலத்தில் இணைவது மிக எளிது. http://ta.wikisource.org/ என்ற இணைப்பின் வழியாக அந்தத் தளத்துக்குச் செல்லவும். திரையின் மேலே வலது மூலையில் உங்கள் பயனர் கணக்கு தெரிகிறதா பாருங்கள். இல்லை எனில் புகுபதிகை செய்யும் இணைப்பின் வழியாகச் சென்று புதுக்கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள். http://ta.wikisource.org/wiki/Wikisource:சமுதாய_வலைவாசல் என்ற பக்கத்தில் புதிதாகக் கட்டுரை தொடங்குவதற்கான வசதியும் உள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் http://ta.wikisource.org/wiki/Wikisource:ஆலமரத்தடி பக்கத்தில் கேளுங்கள். நானும் என்னாலான உதவிகளைச் செய்ய அணியமாயுள்ளேன்.
மற்றுமொரு வேண்டுகோள். உங்கள் வீட்டு முகவரியை இங்கு பொதுவில் இட்டால் தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் மட்டுமல்ல இணையத்தில் உலவும் எவரும் அதைப் பார்க்க முடியும். அதனால் அதை நீக்கி விடுவது நல்லது என்றே நினைக்கிறேன். இங்குள்ள யாவரும் தேவைப்படும்போது உங்கள் பேச்சுப்பக்கத்தின் வழியாகவோ உங்கள் மின்னஞ்சல் முகவரியின் வழியாகவோ உங்களைத் தொடர்பு கொள்வர். -- சுந்தர் \பேச்சு 03:28, 8 அக்டோபர் 2010 (UTC)
- ஐயா, மேலும் ஒரு தகவல். மூல நூலை விக்கிமூலத்திலும் உங்கள் பலாச்சுளை விளக்கங்களை விக்கிநூல்களிலும் இடுவது சரியாக இருக்கும். விக்கிநூல்களை அணுக http://ta.wikibooks.org/ என்ற இணைப்பின்வழிச் செல்லவும். -- சுந்தர் \பேச்சு 10:49, 11 அக்டோபர் 2010 (UTC)
- ஐயா,உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. சங்ககாலத்தை அனைவருக்கும் அறிய தரும் தங்கள் முயற்சிக்கு நன்றி.--ஹிபாயத்துல்லா 19:02, 16 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--Kanags \உரையாடுக 13:07, 27 அக்டோபர் 2010 (UTC)
தனிக்கட்டுரைகள்
தொகுஐயா, கபிலரப்பற்றி தனித்தனியே கீழ் கண்டவாறு கட்டுரை உருவாக்குவதற்கு பதில், அந்தக் கட்டுரையிலேயே இத்தகவல்களைச் சேர்த்துவிடுங்கள். தனித்தனியே இக்கட்டுரைகள் துணுக்குகள் போன்று உள்ளன. விக்கியில் இப்படி எழுதுவது கிடையாது. முடிந்தவரை கபிலரது கட்டுரையிலேயே அவரைப்பற்றிய முழுத்தகவல்களையும் தர வேண்டும்.--சோடாபாட்டில் 13:23, 28 அக்டோபர் 2010 (UTC)
- கபிலரைப் பாராட்டிய சங்கப் பாடல்கள்
- கபிலர், பாரியிடம்
- கபிலர், பாரி மகளிருடன்
- கபிலர், பேகனிடம்
- கபிலர், சேரலாதனோடு
- கபிலரின் குறிஞ்சிப்பாட்டு
- கபிலரின் குறிஞ்சிக்கலி (கலித்தொகை)
- கபிலரின் குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு)
- கபிலரின் பிற பாடல்கள்
பேரன்பரீர், வணக்கம். தங்கள் கருத்து சரியானதே. எனினும் மொத்த சங்கப்பாடல்களின் எண்ணிக்கையில் 11% பாடல்களுக்கு மேல் கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய செய்திக் குறிப்புகளே 100 பைட்ஸ்களுக்கு மேல் விரியும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்தேன். சங்கப் புலவர்கள் பட்டியலை ஒரே பக்கத்தில் பகுத்துத் தந்தது போல் இதற்கும் பகுத்துத் தந்தால் உதவியாக இருக்கும்.--Sengai Podhuvan 13:44, 28 அக்டோபர் 2010 (UTC)
- ஐயா, கட்டுரை 80 கிலோ பைட்சை நெருங்கியவுடன் நானே அளவாகப் பிரித்து விடுகிறேன். நீங்கள் உள்ளடகங்களை வளர்த்தெடுங்கள். ஒரளவு விரிவானவுடன், அந்த வேலையைத் தொடங்குகிறேன்.--சோடாபாட்டில் 14:21, 28 அக்டோபர் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் செங்கைப் பொதுவன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செங்கைப் பொதுவன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 07:51, 18 நவம்பர் 2010 (UTC)
- நன்றிங்க. தாங்கள் இட்ட உரையைச் சற்றுத் திருத்தி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செங்கைப் பொதுவன் பக்கத்தில் இட்டுள்ளேன். --இரவி 10:25, 19 நவம்பர் 2010 (UTC)
வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நன்றி--இரவி 13:48, 30 நவம்பர் 2010 (UTC)
- வணக்கம் செங்கைப் பொதுவன்.முதற்பக்க அறிமுகம் பெறுவதற்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 17:12, 30 நவம்பர் 2010 (UTC)
தட்டச்சு பொறி
தொகுதற்போதுள்ள தட்டச்சு பொறி சோதனை ஓட்டத்தில் உள்ளதால் சில குறைபாடுகள் இருக்கலாம். இது உங்களுக்கு இடையூறாக இருந்தால், ”தமிழில் எழுத” என்று வரும் இடத்திலெல்லாம், ”டிக்” மார்க்கை எடுத்து விடுங்கள். அந்த சதுர பொத்தானின் மீது மவுசை வைத்து கிளிக்கினால் இப்பொறி செயலற்று விடும். பின் முன்போலவே நீங்கள் பங்களிக்கலாம். தற்போது மூன்று இடங்களில் இப்பொறி தென்படும் - மேல் வலது மூலையில், தொகுத்தல் பெட்டியில் கருவிப் பட்டைக்குக் கீழே, தொகுத்தல் பெட்டியில் சுருக்கம் பெட்டிக்கு மேலே. மூன்று இடங்களிலும் டிக் குறியீட்டை தூக்கி விட்டால் முன் போல் ஆகி விடும்.--சோடாபாட்டில் 18:47, 26 நவம்பர் 2010 (UTC)
விக்கிமூலத்துக்கு இணைப்பு
தொகுசெங்கை பொதுவன் ஐயா, உங்கள் கட்டுரைகளில் விக்கிமூலக் கட்டுரை ஒன்றுக்குத் தொடுப்புக் கொடுப்பதற்கு உள்ள வழிமுறையை நெய்தற் கார்க்கியார் என்ற கட்டுரையில் பாருங்கள். அதுபோல விக்கிமூலக் கட்டுரை ஒன்றின் விக்கிப்பீடியா கட்டுரையை இங்குள்ளது போல் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 04:03, 8 சனவரி 2011 (UTC)
2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்
தொகுவணக்கம் Sengai Podhuvan/தொகுப்பு 1:
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.
உங்களால் தொடங்கப்பட்டக் கட்டுரைகள்
தொகுநீங்கள் எண்ணிக்கையுடன் கட்டுரைப் பெயர்கள் வேண்டும் என்றதன் பேரில் தஙக்ளது பயனர்ப் பக்கத்தில் அதற்கான இணைப்பைத் தந்துள்ளேன். மேலும் இங்கு சொடுக்கியும் எண்ணிக்கையைப் பார்த்துக் கொள்ளலாம். (இதில் இறுதியாக உருவாக்கிய கட்டுரை முதலாவதாக இருக்கும்.)
http://toolserver.org/~soxred93/pages/index.php?name=Sengai_Podhuvan&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1
- அன்புள்ள சூரிய பிரகாஷ், எண்ணிக்கையுடன் கட்டுரைகளைக் காட்டும் 'இணைய-உரு' ஒன்றைக் கண்டறிந்து என் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னைப் பற்றிய பக்கத்தில் இணைத்துக்கொண்டேன். தெரிகிறது. என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு தங்களின் திறமையையும், கடப்பாட்டு உணர்வையும் பாராட்டி மகிழ்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 12:06, 21 பெப்ரவரி 2011 (UTC)
--சூர்ய பிரகாசு.ச.அ. 11:16, 21 பெப்ரவரி 2011 (UTC)
- அன்புள்ள சூரிய பிரகாசு, இப்போது என்கட்டுரைகளின் எண்ணிக்கை 700-ஐத் தாண்டிவிட்டதால் எனது கட்டுரைகளைக் காட்டும் வார்ப்புரு சரியாக இயங்கவில்லை. என்ன செய்யலாம்? உதவுங்கள். --Sengai Podhuvan 22:33, 4 ஆகத்து 2011 (UTC)
விக்கிபாசாவிற்கு உதவ அழைப்பிதழ்
தொகுவணக்கம் ஐயா, பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை நாங்கள் வெளியிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தற்பொழுது, இக்கருவி மீடியாவிக்கியிலும் ஒரு திறந்த வெளி கருவியாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கருவியினைப் பற்றிய மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும்.
தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக ஈடுபாடுள்ள தாங்கள், இக்கருவியை பயன்படுத்தி இதனை மேலும் பயனுள்ளதாக்க எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம். இக்கருவியை தங்களுக்கு விளக்கி, தாங்கள் இக்கருவியை பயன்படுத்த உதவி செய்து, நேரடியாக தங்களின் கருத்துக்களை பெற ஏதாவதொரு நிகழ் பேச்சுவார்த்தைக் கூடத்தில் (skype or live meeting) பங்குகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதற்கு, தாங்கள் MSRIWB@microsoft.com என்ற முகவரிக்கு தங்களின் விருப்ப நேரத்தை அனுப்பவும். தாங்களோடு தொடர்புகொள்ள ஆவலாக உள்ளோம். --WikiBhasha.MSR 13:06, 1 மார்ச் 2011 (UTC)
குழப்பும் விளக்கம்
தொகுபொதுவன் நீங்கள் புலவர்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருவது மகிழ்ச்சியே! ஆனால் அவற்றுள் சில கட்டுரைகளில் மேற்கோள் பாடல்களுக்குத் தாங்கள் தரும் விளக்கம் அனைத்துப் பிரிவினர்க்கும் புரியா வண்ணமாக உள்ளது, எ.கா. விட்டகுதிரையார் கட்டுரை. அதிலுள்ள பாடல் கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே பாடல் விளக்கங்கள் தருகையில் பொருள் அனைவர்க்கும் புரியும் வண்ணம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 10:30, 7 மார்ச் 2011 (UTC)
இயன்றவரை விளக்கியுள்ளேன். நல்வழியில் ஆற்றுப்படுத்துகின்றமைக்கு நன்றி.--Sengai Podhuvan 11:33, 7 மார்ச் 2011 (UTC)
நன்றி. நீங்கள் எழுதியிருந்த உள்ளடக்கம் சரியே! வடிவமைப்பு காரணமாக அது புரியாமை போலத் தோன்றிற்று. --சூர்ய பிரகாசு.ச.அ. 12:04, 7 மார்ச் 2011 (UTC)
குறுந்தொடுப்புகள்
தொகுபேச்சு:மதுரைக் கூத்தனார் பக்கத்தில் நீங்கள் http://tawp.in/r/26h0 எதற்காக என்று கேட்டிருந்தீர்கள். இது தமிழ் விக்கி பக்கங்களின் இணைப்புகளை குறுக்கு வதற்காக. எ.கா மதுரைக் கூத்தனார் என்ற பக்கத்துக்கான இணைப்பை மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் போதோ, பிற இணைய தளங்களில் இடும் போதோ தற்போது நீளமான பின்வரும் இணைபைத் தருகிறோம்
இது நீளமாக உள்ளதால், எங்கேனும் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைக் குறுக்கி ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு சிறிய முகவரியை ஏற்படுத்தும் திட்டம் குறுந்தொடுப்புகள் திட்டம். இதன் மூலம் ஒவ்வொரு பக்கத்தின் மேற்பக்கத்திலும் அதன் குறுந்தொடுப்பு சிறிய எழுத்துகளில் தோன்றும். அதனை பயன்படுத்தி அதற்கு இணைப்பாக சுட்டலாம்.
மேற்சொன்ன அதே பக்கத்துக்கு சிறியதாக http://tawp.in/r/26h0 என்று சுட்டினால் போதுமானது.--சோடாபாட்டில்உரையாடுக 04:10, 25 மார்ச் 2011 (UTC)
நன்கு விளக்கியுள்ளீர்கள். புரிந்துகொண்டேன். நன்றி. --Sengai Podhuvan 09:52, 25 மார்ச் 2011 (UTC)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | ||
சங்க காலம் தொடர்பான தலைப்புகளில் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய பொதுவன் ஐயாவை வியந்து பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:49, 16 ஏப்ரல் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சோடாபாட்டிலுடன் சேர்ந்து நானும் இப்பதக்கத்தை வழங்குகிறேன் ஐயா!
- சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 12:54, 16 ஏப்ரல் 2011 (UTC)
பதக்கம் வழங்கியுள்ள பண்பாளர்களுக்கும், விக்கியன்புக்கும் கடப்பாடு. பணி தொடரும். --Sengai Podhuvan 21:07, 16 ஏப்ரல் 2011 (UTC)
- ஐயா, நீங்கள் அண்மையில் பல கருவான தலைப்புகளில்ல் நல்ல கட்டுரைகளை ஆக்கி வருவதைக் கண்டு களித்தேன். உங்கள் நற்பணி தொடர வேண்டுகிறேன். மிக்க நன்றி, ஐயா. -- சுந்தர் \பேச்சு 02:48, 9 மே 2011 (UTC)
- படித்துப் பாராட்டிய பண்பாளர் சுந்தர் அவர்களுக்கு நன்றி. இதனைத் தூண்டுகோலாக ஏற்று விக்கிப்பீடியாவைச் சுடரச்செய்வேன். அன்புள்ள --Sengai Podhuvan 02:58, 9 மே 2011 (UTC)
வரிகள்
தொகுஐயா கட்டுரைகளில் நீண்ட உரைகளாக எழுத வேண்டுகிறேன். <br> இனை அதிகம் பயன்படுத்த வேண்டாமெனவும் வேண்டிக்கொள்கிறேன். விக்கிப்பீடியா நடையில் முடிந்தவரை புள்ளிகளாக (points) எழுதுவதைத் தவிர்த்து உரையாக எழுத வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:56, 9 மே 2011 (UTC)
அன்புள்ள சோடாபாட்டில், தங்கள் அறிவுரை நன்று. பின்பற்றுகிறேன். --59.92.93.142 03:21, 10 மே 2011 (UTC)
கட்டுரைகளைப் பிரிக்கும் போது
தொகுஐயா, கட்டுரைகளைப் பிரிக்கும் போது, உருவாகும் துணைக்க் கட்டுரைகளிலும் தொடக்கத்தில் ஒரு சிறு அறிமுகக் குறிப்பினை தர வேண்டுகிறேன். எ.கா. தொடர்மொழி - மயங்கா மகரத்தொடர்மொழி என்ற கட்டுரை தொடர்மொழி கட்டுரையிலிருந்து பிரித்து உருவாக்கப்படும் போது, அதிலும் தொடர்மொழி குறித்து ஒரு சிறு இரண்டு-மூன்று வரி அறிமுகக்குறிப்பினை இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:16, 16 மே 2011 (UTC)
- அன்புள்ள சோடாபாட்டில்! நல்ல அறிவுரை. பின்பற்றுவேன். அன்புள்ள --Sengai Podhuvan 19:14, 16 மே 2011 (UTC)
நன்றிகள்
தொகு- எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:14, 17 சூன் 2011 (UTC)
- நம்மாலான பணிகளைச் செய்வோம் --Sengai Podhuvan 04:17, 17 சூன் 2011 (UTC)
சார்பெழுத்து தலைப்பு
தொகுஐயா,
”சார்பெழுத்து” என்ற தலைப்பு கட்டுரைக்கு பொருத்தமாகத்தானே உள்ளது. அதற்கு விளக்கம் என்று மேலதிகமாக ஒரு சொல் இணைக்க வேண்டுமா?. அல்லது சார்பெழுத்தின் பிற விசயங்கள் குறித்து பிற கட்டுரைகளும் எழுதத் திட்டமிட்டுள்ளீர்களா?. ஒரே கட்டுரையில் அனைத்தும் இடம் பெற்றுவிடுமென்றால் “சார்பெழுத்து” என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. --சோடாபாட்டில்உரையாடுக 03:55, 19 சூன் 2011 (UTC)
- அன்புள்ள சோடாபாட்டில்! சார்பெழுத்துத் தொடர்பான கட்டுரைகளில் தரப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள். சார்பெழுத்து:விளக்கம் கட்டுரை - பேச்சு - பகுதியையும் பாருங்கள். இட்ட தலைப்பிற்கான விளக்கம் புரியும். தாங்கள் என்மீது அருளைக் கொட்டி என் கட்டுரையில் இணைப்புகளை இட்டுள்ளீர்கள். தங்களின் கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டுக்கு என்ன கைம்மாறு செய்வேன்! --Sengai Podhuvan 07:23, 19 சூன் 2011 (UTC)
அடிக்குறிப்பிடல்
தொகுஐயா,
அடிக்குறிப்பு இட வேண்டிய இடத்தில் <ref>தொல்காப்பியம் சொல்லதிகாரம் / அடிகுறிப்பு</ref> என்று இட்டு விடுங்கள். கட்டுரையின் இறுதியில் அடிக்குறிப்பு/மேற்கோள்/கருவிநூல் பகுதியில் {{reflist}} என்று சேர்த்து விடுங்கள்.
அட்ட வாயில் கட்டுரையில் நீங்கள் பயன்படுத்திய வழிமுறைகள் சரியானவையே. ஒரே ஒரு மாற்றம் செய்ய வேண்டும். ref /ref துணுக்குகளுக்கு இடையே “1” என இட்டுள்ளீர்கள். அதற்கு பதிலாக அவ்விடத்தில் முழு அடிக்குறிப்பினையும் இட்டு விட்டால், அது கட்டுரையின் அடியில் தோன்றும். இப்போது சரி செய்துள்ளேன். ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். ஐயம் இருப்பின் கேளுங்கள், மீண்டும் உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:22, 22 சூன் 2011 (UTC)
--சோடாபாட்டில்உரையாடுக 03:22, 22 சூன் 2011 (UTC)
- சங்கச் சேரர்கள் கட்டுரையில் அடிக்குறிப்பிடலை சரி செய்துள்ளேன் ஐயா. ஒரே ஒரு துண்டு மட்டும் சேர்த்து விட்டால் இந்த சிக்கல் எழாது. அடிக்குறிப்பு என்ற பகுதியில் {{reflist}} என்ற வார்த்தையை மட்டும் இணைத்த் விடுங்கள், சரியாகிவிடும். மீண்டும் சிக்கலிருப்பின் உங்களுக்கு உகந்த நேரம் எது என்று சொல்லுங்கள் தொலைபேசியில் அழைத்து உதவுகின்றேன். --சோடாபாட்டில்உரையாடுக 14:47, 24 சூன் 2011 (UTC)
- அன்புள்ள சோடாபாட்டில்! இப்போது அடிக்குறிப்பு சரியாக அமைகிறது. அவ்வப்போது கைகொடுக்கும் தங்கள் உதவியால்தான் விக்கியில் உலாவிவருகிறேன். நன்றி. --Sengai Podhuvan 12:20, 29 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:57, 28 சூன் 2011 (UTC)
- அன்புள்ள சுப்பிரமணி! தங்களின் நற்பணிக்கு உறுதுணை புரிவது என் பேறு. --Sengai Podhuvan 12:14, 29 சூன் 2011 (UTC)
விக்கியில் படப்பதிவேற்றம் குறித்து..
தொகுபேச்சு:தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) இப்பக்கத்தில் தந்துள்ள படப்பதிவேற்றக் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ≈00:31, 11 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
மேலும் சில குறிப்புகள்;-
அப்படம் பார்த்தேன்.மகிழ்ச்சி. நாம் முதல்நிலையைக் கடந்து விட்டோம். அடுத்து பலருக்கும் உங்கள் படம் கிடைக்க சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன்.பார்க்கவும்.இனி அடுத்து வரும் படங்களுக்கு கீழ்கண்டவற்றைத் தவறாமல் செய்யுங்கள்.அப்பொழுது தேடுபொறிமூலம் அவர்களுக்கு இப்படம் கிடைக்க ஏதுவாகும்.
- படகோப்பின் அளவை முடிந்தவரை அதிக அளவு வைத்துக்கொள்ளவும்.பல திட்டங்களில் அப்பொழுது தான்நன்றாக தெரியுமென்பர்.
- படத்தின் கோப்புப் பெயரை V 7.tif என்று இனி கொடுக்க வேண்டாம்.படத்தை வர்ணிக்கக் கூடிய பெயராக இருந்தல் நலம்.(எ.கா)The seven Tamil kings(2-3A.D)
- பட விவரத்தை Description பகுதியில் மட்டும் இடவும். இப்பொழுது படத்தில் உள்ளபடி (7வள்ளல்கள் ஆண்ட ..) இட வேண்டாம்.ஏனெனில், 150க்கும் மேற்பட்ட மொழிகளில் உங்கள் படம் தெரிய நாம் வழிவகை செய்கிறோம். தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் படம் ஏற்றினால் அது தமிழ் விக்சனரிக்கும், பிற தமிழ் திட்டங்களுக்கும் தெரியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.
- முதலில் Description = ஆங்கில படச் சுருக்கம்.அடுத்து {{ta| என்று எழுதிய பிறகு தமிழ் படவிளக்கம். இறுதியாக }}என்ற குறிகளை இடவும்.
- உங்களது அனைத்து படகோப்புகளும் உங்களின் முயற்சி என்பதால், கீழ்கண்டவாறு இனி வரப்போகும் படங்களில் அப்படியே கீழ்கண்டவாறு இடவும்.
|Source ={{own}} |Author =[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]]
- |Permission = என்பதனை அப்படியே விட்டு விடுங்கள். ஏனெனில், உங்களின் சொந்த படம் என்பதால். மற்றவரின் அனுமதியோடு வாங்கும் படத்திற்கே இது பயன்படும். இதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு. நமக்கு அது தேவையில்லை.
- other_versions = என்பதில் இது போல வேறோரு படம் உருவாக்கப்பட்டால் அதனை குறிப்பிட வேண்டிய இடம்.அதையும் அப்படியே விட்டுவிடலாம்.
- Category:Tamil language]], {{PD-self}} இரண்டும் அனைத்து படங்களுக்கும் பொருந்தும். எனவே இதனை தவறாமல் இடுங்கள். வேறேதும் ஐயம் இருப்பின் இப்பக்கத்திலேய கூறவும். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.ஒருசிலநாளில் உங்களுடன் கலந்து கொள்கிறேன். ஒரு notepad-ல் படிவம் போல உருவாக்கி வைத்துக் கொண்டு பதிவேற்றும் போது பயன்படுத்தினால் நமக்கு எளிமையாக இருக்கும். அல்லது வாரம் ஒரு நாள் படங்களுக்கு என ஒதுக்குங்கள் அன்று உங்களுடன் இணைகிறேன். உரையாடிக் கொண்டே பதிவேற்றலாம். என்றும் நட்புடன்.≈13:22, 11 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
சங்ககால மயன்
தொகுஐயா, நீங்கள் சங்ககால ஆய்வுகள் நடத்தியவர் என்று Kanags கூறினார். நான் எழுதிய மயன் கட்டுரையை நீங்கள் பார்த்து உங்கள் கருத்துகளை கூற விரும்புகிறேன்.தென்காசி சுப்பிரமணியன்
- தென்காசி சுப்பிரமணியன் தமிழ்வெளிக்குக் கிடைத்த பேறு. இவர் பொறியியலாளராக இருந்துகொண்டு தமிழில் இத்துணை அளவு பரந்துபட்ட அறிவைப் பெற்றிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது.
- கம்பன் 'தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்' என அகத்தியரைப் பாராட்டுவது போன்ற பெருமை மயன் வரலாற்றுக்கும் உண்டு.
- இறையனா களவியல் உரையில் வரும் முச்சங்க வரலாற்றில் சிவபெருமான், முருகவேள் ஆகிய கடவுளர் உடனிருந்து தமிழாய்ந்தனர் என்னும் செய்தியை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு 'மயன்' பற்றிய செய்தியையும் ஏற்றுக்கொள்ளலாம்.
- மயன் பற்றிய செய்தி சிலப்பதிகாரம் 2-12, 5-105, மணிமேகலை 3-79, 6-201, 21-132 ஆகியவற்றில் உள்ளது. பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியங்களில் இல்லை.
- தென்காசி சுப்பிரமணியன் கட்டடம், பொறியியல் கலைநுட்பங்களை தமிழில் படங்களுடன் எழுதும் மிகச் சிறந்த வல்லமை பெற்றவர் என்பதனை அவரது கட்டுரைகளும், தற்குறிப்புச் செய்திகளும் தெளிவுபடுத்துகின்றன. இந்த வழியில் இவரது நாட்டம் திரும்பினால் அது தமிழ்வெளிக்குப் புதிய அறிமுகமாக அமையும்.
- அன்புள்ள --Sengai Podhuvan 22:11, 30 சூலை 2011 (UTC)
உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்களை போன்றவர்களாலேயே எங்களை போன்றவர்கள் இவ்வாறு எழுத முடிகிறது.தென்காசி சுப்பிரமணியன்
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Sengai Podhuvan,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Invite to WikiConference India 2011
தொகுHi Sengai Podhuvan,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
Wiki Mumbai Conference கட்டுரை
தொகுIssues affecting knowledge availability for editing Wikipedia
First of all I like to express my thanks to the conference committee for making me to discuss with you.
I have 6 daughters and one son. They are my issues. Tamil Wikipedia has more than 30 thousand issues of records created by volunteers. Everybody has his own limit. There are scholars and scholars. They can edit the issues of Wiki records internally and externally.
While editing the subject (internal editing), (1) where the sources of existing issues are affecting (2) and how to approach to solve, is the point, I am going to touch within my limit.
I am happy to share my experience with some case study.
I like articles of real world than that of ideal world.
My approach is limited to Tamil with some extend to English on Tamil.
I am so young gaining only 15 months of experience in the Endeavour of Wiki-world in my age of 76.
I feel some comfort in bringing your notice that some of my articles among (800 and add) have been adopted by some eminent networks vs. fitml.com WIKIPEDIA A, B and getmusi.com C
- 1
- Once I start an article to develop the history of the villages of ancient period. First I pick up the names of all the villages available in Sangam literature and then to develop one by one. The history of the villages is real but unknown to our experience. When I searched to denote the geographical position of the villages I can catch information from Wikipedia regarding the present villages and towns. They are helpful to compare with, for which I am indebted. There I share my knowledge with the existing articles. This is one way of editing.
- 2
- I intend to create an article on ‘Sangam’. Sangam is a controversial word both in etymology and its reality of existence.
Sangam संगम in Sanskrit means "joining, union, confluence, association"
There is no usage of the word ‘Sangam’ in the meaning of ‘poets-meet’ or ‘Union of People’ in so called ‘Sangam Literature’.
A poem in an anthology called ‘Paripaadal’ (2-13) a lyric collection of adjacent latter Sangam period use this word as a name of an infinitive number along with other five.
Tolkaapiyam points out three names of infinitive numbers (1-8-98)
It points out mere suffixes of the three. They are ‘ai’, ‘am’ and ‘pal’.
Commanders belongs to 12th century onwards, give examples for the above three as ‘thaamarai’, ‘vellam’, and ‘aambal’ (தாமரை, வெள்ளம், ஆம்பல்).
The said poem of anthology atoned, counts the names of infinitive numbers as ‘neythal’, ‘kuvalai’, ‘aambal’, ‘sangam’, ‘kamalam’ and ‘vellam’
Here the meaning of the word ‘sangam’ is not the ‘poets’-meet’ or ‘Poets-Union’.
Next, the word comes in the twin-epics, (Silappathikaram and Manimekalai).
Here the word ‘sangam’ is used in two senses of meanings denoting conch and meet.
Seats for the poets in court-hall were arranged in expanding spire as conch-spiraling.
One word to denote the conch is val’ai வளை, in ancient Tamil. The root of the word is a verb meaning spire. வளைதல்
Another word to denote the conch in Tamil is ‘mural’ முரள், used in ‘Tolkappiyam’ (3-9-29).
‘val’ai’ is an inorganic material while ‘mural’ is an organic life. According to ‘Tolkappiyam’ the word ‘mural’ denotes an animal in life having only two senses namely touch and taste. The meaning of the root is to make sound.
We know Murali, name of a God, having ‘mural’ (conch) in his hand. This information is given to compare merely for pondering. புறவின் செங்கால் சேவல் --- முரல்குரல் – நற்றிணை 71
‘Punarkuuttu’ புணர்க்கூட்டு is a verb denotes the arrangement of seats in spiral form with the chairman in the middle. This is the word, was used in ancient Tamil literatures instead of ‘Sangam’.
Aandaal of 7th century uses the word ‘sangam’ as verbal metonym (synecdoche)
The word ‘sangam’ begins with the phoneme ‘sa’. According to Tolkappiyam no word begins with the phoneme [sa] in its time. (1-2-29) Hence it is clear that word ‘sangam’ entered into Tamil after Sangam period.
It does not mean that ‘poets-meet’ or ‘Poets-Union’ does not exist on or before Sangam period.
Poets met together then and there in royal-courtyard and enrich Tamil language even before the Age of ‘Ten Poems’ and ‘Eight Anthologies’ of Sangam Period.
Let us consider some of the primary sources for the existence of poets-meet. (Annexure 1 in English and 2 Quotations in Tamil)
I like to conclude my word saying that such a profound study in semantics is necessary in deciding the period, etc. of an ancient work as primary sources and then other conclusions of learned as secondary sources.
3
Tolkappiyam is the earliest available work in Tamil. I intend to give its contents in prose order. When I started editing, the introductory words in the existing article in Tamil, affected my mind in various corners. (1) It has been translated from English article. (It is unavoidable in the beginning) (2) It mentions Tolkaappiyam was compiled by many authors. (The layers, which are floating as oil on the water of Tolkaapiyam has taken into consideration) (3) It notes Tolkappiyar the poet’s name is derived from his work Tolkappiyam. (4) The work belongs to single digital numbers of the centuries in A.D. (5) The Tolkāppiyam classifies the Tamil language into sentamil and koduntamil. There is no classification in the original text. Dr. Zvelebil’s concludes on the basis of commentators on Tholkaappiyam. How to edit the portion is the point. (6) On what basis the date of Tolkqppiyam is fixed? Their approaches are in various angles. I like to appreciate the copilation. But I want to raise some doubts. (1) Many of them are based on secondary sources of scholar’s view not on the core of the original work but on some layers of oil on the water core. Even today I am in confusion how to approach editing. It is in need of information from the primary sources. Now I started to give the original sources in English. Then some critical notes are to be added in English. I hope that experts will edit accordingly.
4
I started creating an article in Tamil on the poet Nakkeerar, belongs to Sangam period, I saw an article already existing based on a cinema story. This portion affected me in editing. The creator of the article is to be appreciated because he knew the important of the poet. But it is the duty of others to edit properly. The story was built in a latter period on the basis of Appar Devaram on God Shiva. The poet Nakkeerar of Sangam period has written 37 verses including a poem on God Muruga and a poem on a Pandia king. He would have written so many. But only 37 are available in Sangam literature. There were two others in the same name Nakkeerar. One is a commentator belongs to some 5th century who comment on 3 Sangam and the other is a worshipper belongs to some 9th century whose hymns have been added in the 11th collection, that worship God Shiva.
Annexure 1
- A Pandiya king, named ‘Nedunjezian’ pointes his Poets-Court. The chairman of the court was ‘Maangudi Maruthan’. (Puranaanuuru 72)
- Poet ‘Maangudi Maruthan’ blesses the said King Pandiya, to live as his ancestors, patronizing poets. (ancestors 1 Vazuthi did food-yaga to the learned, 2 Nediyon gathered poets, scattered after an ancient Tsunami ) (Madurai-kaanchi – 753 onwards) (ancestors – 1 Palsaalai Muthukudumi Peruvazuthi and 2 Nlantharu Thirvin Nediyon)
- ‘Maruthan Ila Naaganaar’, the son of ‘Maangudi Maruthan’ points metaphorically, ‘the poets ploughed their knowledge-tongue’in Madurai. (Kalitthogai 68)
- The earning members in distant places will return home (Madurai) in spring season to enjoy the poets-meet or poet-festive. (Kalitthogai 35)
- Chola king Karikalan hoisted the poets in order to cherish the Tamil language, in his capital Puhar. (Pattinappaalai 42-45)
- Selvak-kadunko, a Chera king spent his wealth earned in other country to strengthen Tamil (Pathitrup-pattu 63)
- Manimegalai, an epic (3rd century) points the poets-meet as ‘pulam puri sangam’ (knowledge wheeling union) - (7-114)
- Nackeeran commentary (may be of 5th century) to ‘Iraiyanar Kayviyal’ (3rd century) describes three layers of ‘Sangam’ with some artificial exaggeration.
- Adiyaarkku-Nallar, (13th century) a commentator of ‘Silappathikaaram’ (2nd century) gives an elobrate description following Nackeeran.
- Appar a poet of 7th century says the Sangam-story dealings between God Shiva and poet ‘Tharumi’
- Andal (8th century) says that she with her girl-friends worship God Kanna one by one and also in total sitting as that of poets-meet (Sangam).
Annexure 2
- “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்” பாடல் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் - புறம் 72
- “களந்தோறும் கள் அரிப்ப, மரந்தோறும் மை வீழ்ப்ப, நிணவூன் சூட்டு உருக்கு அமைய, நெய் கனிந்து வறை அர்ப்ப, குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின், பரந்து தோன்றா வியன் நகரால், பல்சாலை முதுகுடுமியின், நல்வேள்வித் துறை போகிய, தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல – இனிது உறைமதி பெரும” – மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 753 முதல்.
- “மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!” (மாங்குடி) மருதன் இளநாகனர் - கலித்தொகை 68
- “நிலன் நாவில் திரிதரூஉம் நீன்மாடக் கூடலார் புலன்நாவிற் பிறந்தசொல் புதிது உண்ணும்பொழுது அன்றோ --- சுடரிழாய் --- வருதும் என்று உரைத்ததை” – பாலைபாடிய பெருங்கடுங்கோ -கலித்தொகை 35
- “புகழ் நிலைய மொழிவளர --- சோறு வாக்கிய பெருங்கஞ்சி” – பட்டினப்பாலை – 42-44
- “கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63
- “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” – (மணிமேகலை 7-113&114).
- இறையனார் களவியல் – நக்கீரர் உரை
- சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை
- நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண் – திருநாவுக்கரசர் தேவாரம் திருப்புத்துர் பதிகம் 3
- “சங்கம் இருப்பார்போல் வந்து உன்னைச் சேவித்தோம்” – ஆண்டாள் - திருப்பாவை (22)
References
- எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும். ‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ தொல்காப்பியம் 1-2-28, 29 ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98). தாமரை, வெள்ளம், ஆம்பல்
- தொன்முறை பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட்டது. பின்னர்த் தோன்றிய 6 ஊழிக்காலங்கள் இவை. 1 விசும்பின் ஊழி - நெய்தல் ஆண்டு, 2 வளி ஊழி – குவளை ஆண்டு, 3 தீ ஊழி – ஆம்பல் ஆண்டு, 4 பெயல் ஊழி – சங்கம் ஆண்டு, 5 பனி ஊழி – கமலம் ஆண்டு, 6 வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின. – பரிபாடல் 2
சங்க கால வானியல்
தொகுஐயா, நீங்கள் துர்தேவதை கட்டுரையில் கூறிய விளக்கத்துக்கு நன்றி. அப்பாடல் வரிக்கு விளக்கம் தெரியாமல் சங்க கால வானியல் என்னும் கட்டுரையில் மற்ற பாடல்கள் என்னும் உட்தொகுப்பில் பாடல் வரியை மட்டும் குறிப்பிட்டிருந்தேன். தற்போது நீங்கள் கூறிய விளக்கத்தையும் சேர்த்துள்ளேன். இதை போன்றே திருப்பாவை 13, புறம்:25:1-3, 26:1-2; பதிற்றுப்பத்து 13:25-26, போன்ற வரிகளுக்கும் உங்களுக்கு விளக்கம் தெரிந்திருந்தால் சங்க கால வானியல் என்னும் கட்டுரையில் மற்ற பாடல்கள் என்னும் உட்தொகுப்பில் கூற வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 06:08, 28 ஆகத்து 2011 (UTC)
- அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். விரைவில் ஒவ்வொன்றாகத் தெரிவிப்பேன். அன்புள்ள --Sengai Podhuvan 09:37, 28 ஆகத்து 2011 (UTC)--Sengai Podhuvan 09:37, 28 ஆகத்து 2011 (UTC)
நன்றி--தென்காசி சுப்பிரமணியன் 15:29, 28 ஆகத்து 2011 (UTC)
திரிலோசனன்
தொகுஐயா, கலிங்கத்துப்பரணியில், கரிகால சோழன் அழைத்த விருந்துக்கு திரிலோசனன் என்ற பாண்டிய மன்னன் வராததால், அப்பாண்டியனின் சின்னமான முக்கண்களை வரைந்து அதன் நெற்றிக்கண்னை கரிகாலன் காலால் உதைத்தான் என்று நான் சிறுவயதில் படித்ததுண்டு. ஆனால் அப்பாண்டியனை சங்கநூற்களில் நான் அறிந்த வரை காணவில்லை. அந்த திரிலோசனனை பற்றி நீங்கள் வேறெங்கும் படித்ததுண்டா? அந்த வரி கலிங்கத்துப்பரணியில் எந்த பாடலில் வரும் என்று தெரியுமா? உங்கள் உதவி தேவை.--தென்காசி சுப்பிரமணியன் 17:07, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- அன்புள்ள சுப்பிரமணியன் அவர்களுக்கு வணக்கம்.
நமது பிற்காலப் புலவர்கள் கற்பனை வளத்தோடு கதை புனைவதிலும் விஞ்சி நின்று சங்ககால வரலாற்றுச் செய்திகளைச் சிக்கலாக்கிவிடுகின்றனர்.
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண்" - என்று அப்பர் பாடுகிறார். சிவனும் தருமியும் பற்றிய கதையில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும்?
சங்ககாலக் கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பனர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததாக்ப் புறநானூற்றுக்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட கொளுக்குறிப்பு கூறுகிறது (236). பாடலில் இதுபற்றிய குறிப்பு இல்லை இருங்கோ வேளையும் விச்சிக்கோவையும் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்ட அவர்கள் மூவேந்தர்களுக்குப் பகையாகிவிடுவொம் என அஞ்சி மறுத்துவிடுகின்றனர். தனிப்பாடலில் பாரிமகளிர் கதை வேறாக இருக்கிறது.
இப்படிப்பட்ட செய்திதான் தாங்கள் கூறும் பாண்டியன் முக்கண்-சின்னக் கதையும்.
தங்கள் செய்தியோடு எனது செய்திதையும் சேர்த்துக் -கரிகாலன் பற்றிய செய்திகள்- என்னும் தலைப்பில் தங்கள் பெயரில் ஒரு கட்டுரை விக்கியில் இணைத்துவிடுங்கள். --Sengai Podhuvan 20:15, 7 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி ஐயா.--தென்காசி சுப்பிரமணியன் 06:27, 8 செப்டெம்பர் 2011 (UTC)
பெரிப்ளஸ்
தொகுஐயா, எரித்திரியக் கடல் பெரிப்ளஸ் எழுதிய புத்தகம் தமிழில் உள்ளதா? அல்லது இந்த புத்தகத்திலுள்ள பகுதி ஏதாவது தமிழில் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 04:52, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- அன்புள்ள தென்காசியாருக்கு, வணக்கம். இருப்பதாக்கத் தெரியவில்லை. எனது குறிப்புகள் இணையதளத்திலுள்ள ஆங்கில நூலைத் தழுவியவை. அன்புள்ள, --Sengai Podhuvan 07:07, 12 செப்டெம்பர் 2011 (UTC)
கணியர்
தொகுஐயா, கணியர் என்ற பிரிவினர் அரசவையில் இருந்ததாக சிலம்பு கூறுவதாக ஒரு செய்தியை கண்டேன். அது என்ன பாடல் என்று அறிவீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் 14:00, 21 செப்டெம்பர் 2011 (UTC)
- அன்புள்ள தென்காசியாருக்கு, வணக்கம். அரசவையில் கணியர் இருந்த செய்தி 3 இடங்களில் வருகிறது.
- வஞ்சியில் தன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தைச் செங்குட்டுவன் காணச் சென்றபோது அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர் ஆகியோரை உடன் அழைத்துச் செல்கிறான். - நடுகற்காதை
- செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லைக் கங்கையில் நீராட்டியபின்னர் பாடி வீட்டில் தங்கியிருந்தபோது மாடலன் மாதவி துறவு, பாண்டிநாட்டில் வெற்றிவேற் செழியன் ஆட்சி முதலான செய்திகளைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கிறான். அப்போது செங்குட்டுவன் வானத்துப் பிறையைப் பார்க்கிறான். அப்போது அங்கிருந்த கணியன் வஞ்சி நீங்கி எண்ணான்கு மதியம் சென்றது எனக் கூறுகிறான். -நீர்ப்படைக்காதை
- வேட்டுவர் கரந்தைப் போரில் வென்று கவர்ந்து வந்த ஆனிரைகளை முனபு தனக்குக் கடனாகக் கள்விற்ற மூதாட்டின் முற்றமும், புள் பார்த்துச் சொன்ன கணியின் முற்றமும் நிறையும்படி நிறுத்தினார்களாம் - வேட்டுவ வரி
செய்திகளை வேண்டிய இடத்தில் தக்க குறிப்புகளுடன் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 18:05, 21 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி ஐயா.--தென்காசி சுப்பிரமணியன் 17:20, 22 செப்டெம்பர் 2011 (UTC)
வேண்டுகோள்
தொகுநான் விரைவில் பணியில் சேர இடம் மாற்றி போக உள்ளதால் இனி வரும் நாட்களில், நான் வேறு ஒருவர் கணினி மூலம் செய்து வ்ந்த விக்கி பணிகள் அறவே குறைந்து விடும். நானும் சில கட்டுரைகள் சங்ககாலம் பற்றி எழுதியுள்ளேன் என்பதால் என்னுடைய சில கட்டுரைகளை, உங்கள் கட்டுரையுடன் இணைக்க வேண்டி வரலாம். அப்படி ஏதேனும் சங்ககாலம் பற்றி கட்டுரைகளில் மாற்றம் இருப்பின் என்னிடம் கருத்துக் கேளாமல் தாங்களே மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறேன். இதுவரை என்னுடைய பங்களிப்புகள் மேம்பட உதவிய உங்களுக்கு என் நன்றிகள்.--தென்காசி சுப்பிரமணியன் 19:35, 25 செப்டெம்பர் 2011 (UTC)
- தங்களின் சீரிய பண்பு சிறக்கும். சிறியேன் உதவியும் சேரும். அன்புள்ள --Sengai Podhuvan 20:30, 25 செப்டெம்பர் 2011 (UTC)
பெயர் வேண்டி....
தொகுமதிப்பிற்குரிய ஐயா செங்கைப் பொதுவன் அவர்களுக்கு,
- முதலில் எனது ஐயமான உங்கள் பெயரில் உள்ள செங்கை என்பது தமிழ்ப்பெயராய் இருந்தால் Chenkai என்பதையேச் சாறும் என நினைக்கிறேன். ஐயா இது எனக்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஐயம். இதை எனக்கு தாங்கள் விளங்கும்படி உரைக்க வேண்டும். அது எங்ஙனம் S என்னும் உச்சரிப்பை ஏற்கும் பொழுது ச என்னும் எழுத்து பிற வார்த்தைகளுடன் இணையும் போது ஒற்றை ஏற்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் பெயரை ஆங்கிலப்படுத்தும் போது தமிழ் சற்றும் ஏற்காத ஸ, g, d இவைகளை எல்லாம் பயன்படுத்தியுள்ளீர்கள். ஐயா நான் குறிப்பிட்டதில் தவறேதினும் இருந்தால் என்னை தயைக்கூர்ந்து மன்னித்தருள வேண்டும்.
- முதலில் குறிப்பிட்டதை தவறெனப் பொருட்படுத்தாமல் எனது இரண்டாவது வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் படி பணிக்கிறேன். நான் ஆங்கிலத்தில் உள்ள gelatinous என்னும் வார்த்தைக்கு இரண்டு அல்லது மூன்றெழுத்தில் பொருள் கொள்ளத்தக்க வார்த்தையைத் தேடி வருகிறேன். இதற்கு நீங்கள் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். gelatinous என்னும் வார்த்தை ”ஊன்பசை” என்னும் தமிழ்ப்பொருளையுணர்த்தும். ஆனால் இங்கு அவ்வார்த்தை உறுதியற்ற என்னும் பொருளையுணர்த்த வல்லது.
- குறிப்பாக இது ஒரு வகை நீர்வாழ் உயிர்களுக்கு வழங்கும் பொதுவானப் பெயர்.
- இதன் உடலில் உள்ள கலங்களில் நீர்த்தன்மை மற்ற உயிரினங்களைவிட கூடுதலாகவும் அதன் உடல் வழவழப்புடனும் காணப்படும்.
- இவைக் குறிப்பாக கடல்பகுதிகளிலும் இவை ஒரு அலைவிலங்கு வகையறாவுமாகும்.
- இத்தசைகள் வலிமைக் குறைவானதாகவும், அதில் சில உயிரினவகைகள் கையில் எடுக்கும்போது உடையக்கூடியதாகவும் சிதையக்கூடியதாகவும் காணப்படுகிறது.
- இவைகளில் குறிப்பிடத்தக்க உயிரினமாக நாம் சொறிமுட்டை (செல்லி மீன்கள் - Jelly fish) என விளிக்கும் அழகான உயிரினம் இப்பிரிவுக்குள் அடங்கும்.
- பிற உயிரினங்களும் இதன் பண்பையொத்தேக் காணப்படுகிறது.
- மேலேக் குறிப்பிட்ட பண்புகளையுடைய உயிரினங்களின் பிரிவை ஆங்கிலத்தில் “Gelatinous zooplankton" என அழைக்கிறார்கள். நான் இதற்கு கலைச்சொல் உருவாக்க உங்களின் உதவியை நாடியுள்ளேன். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 17:41, 14 அக்டோபர் 2011 (UTC)
- அன்புள்ள சிங்கமுகன் அவர்களுக்கு வணக்கம்.
- தங்களின் இராப்பியணிப்பாசி கட்டுரை படித்தேன்
- தங்கள் தமிழ்த்தொண்டு தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளது.
- ஊன்தசை = ஊன்வழும்பு
- 'ஊன்பசை' எனத் தாங்கள் உருவாக்கியுள்ள கலைச்சொல்லே பொருத்தமானதுதான். எனினும் அதன் வழுவழுப்புத் தன்மையையும் (நழுவு-தன்மையையும்) சேர்த்து உணர்த்தும் வகையில் அமையின் நலம்
- 'ஊன்வழும்பு' என்னும் கலைச்சொல் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். எண்ணிப் பாருங்கள். பொருத்தமானதைக் கையாண்டு கட்டுரையை உருவாக்குங்கள். மூன்றெழுத்து - கணக்குப்படி பார்த்தால் ஊன்வழும்பு என்னும் சொல்லிலுள்ள 'பு' குற்றியலுகரம் ஆகையால் இச்சொல்லும் மூன்றெழுத்துச் சொல்லே.
- திருச்சி மாவட்டத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி என்பதை என் பெயரிலுள்ள செங்கை குறிக்கும்.
- அங்கே சென்றான் என்று சொல்லிப் பாருங்கள். senr'aan என்றுதானே ஒலிக்கிறோம்.
- மொழியின் முதலில் வரும் 'ச' எழுத்தை இப்படி ஒலிப்பதே இயல்பு. இடையில் வரின் அச்சம் accham என்பது போல் ஒலிக்கும்.
- வேறு வகையில் ஒலிப்பது அவரவர் விருப்பம்
- Tolkappiam chapter 1-1 தலைப்பில் உள்ள என் கட்டுரையைப் பாருங்கள்
- புரியும்
- அன்புள்ள--Sengai Podhuvan 21:53, 14 அக்டோபர் 2011 (UTC)
ஐயா, சிலக் கருத்துக்கள் நான் தனிப்பட்ட முறையில் பகிர்ந்தாள வேண்டும். தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் அல்லது இம்முகவரிக்கு (augustusleo13@gmail.com) மின்னஞ்சல் அனுப்பினாலும் சிறப்பு. இது பொது ஊடகம் என்பதால் சில கருத்தக்கள் என்னால் கையாள இயலாது. அது மட்டம் அல்லாது அங்கே சென்றேன் (அங்கே சென்றேன்) என உச்சரித்தாலும் அவை மெய்யெழுத்தை ஏற்காது என நினைக்கிறேன். ஐயா எனக்கு இலக்கணத்தில் அந்த அளவுக்கு புலமை இல்லை ஆயினும் ஒரு அவாவே. மேலும் நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் ச முதலில் வரும்பொழுது இங்ஙனம் உச்சரிக்கும் என்பது. அவ்வாறு முதலில் வரும்பொழுது உச்சரித்தால் அவை மெய்யெழுத்தை எக்காலத்தும் தழுவாது என்பது என் கருத்து. மேலும், எழுத்துக்கள் மாத்திரை அளவை மாற்றினாலும் அதன் உச்சரிப்பு என்றுமே ஒன்றுதான் என்பதும் என் கருத்து. மேலும் இவ்வொலிகளை ஏற்கும் பொழுது இவை வடமொழியை ஏற்கின்றன. தமிழுக்கு என்று இருக்கும் பிறப்பொலிகளை இழக்கின்றன. பொதுவன் என்பதை pothuvan என எழுதுவதே உசித்தம். மேலும், செங்கைப் பொதுவன் என்பதை chenkaip pothuvan என்பதே என் கருத்து. ஐயா, என் பணிவானக் கருத்து தமிழைச் சிதைத்தது Tamilஏ என்பது.
- மேலும், தாங்கள் கொடுத்த வற்றில் நான் வழும்பை மட்டும் எடுத்து வழும்பலை விலங்குகள் என இட்டால் பொருத்துமானப் பொருளைத்தருமா என்பதையும் நோக்கியுரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஐயா, gelatinous என்பதற்கு உறுதியற்ற, உடையக்கூடிய என்னும் பொருளும் கொள்ளும் மாதிரி வேண்டும் ஐயா. நான் விக்கிப்பீடியாவில் கையாண்ட சில வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது. ஆகையால், நான் இச்சொல்லை கையாண்டப் பின் எக்காலத்தும் இது வழுவாய் தோன்றிடக் கூடாதென்பதே என் விருப்பம். ஆகையால், உங்களை இந்தளவுக்கு சிரமிக்கிறேன். தயைக்கூர்ந்து இம்மாணவனை மன்னித்தருளுங்கள். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 00:39, 15 அக்டோபர் 2011 (UTC)
அன்புள்ள சிங்கமுகன்
தாங்கள் விரும்பியவண்ணம் தொடர்பு கொள்கிறேன்.
தமிழ் நம்முடையது
எப்படி வேண்டுமானாலும் உச்சரியுங்கள்
பொருள் புரிந்தால் சரி
எனக்கு அளித்த பட்டங்களில், என் பதிவுகளில் என் பெயர் Sengai Podhuvan என உள்ளது. அதனை யாராலும் மாற்ற முடியாது
நீங்கள் உங்கள் விருப்பம் போல் சொல்லிக்கொள்ளுங்கள். தடை ஏதும் இல்லை.
உங்கள் அறிவு தமிழில் வெளிப்படுவதே பேறு.
சொல் இருக்கட்டும்
பொருளுக்கு வாருங்கள்
அன்புள்ள --Sengai Podhuvan 06:40, 15 அக்டோபர் 2011 (UTC)
அகநாடுகள்
தொகுவணக்கம் ஐயா, நீங்கள் அகநாடுகள் பற்றி கூறியது சரியெனவே கருதுகிறேன். தற்போது என்னிடம் இணைய வசதியில்லை.
அந்த கட்டுரையில் நீல இணைப்பில் உள்ளது சங்ககாலத்தில் உள்ளதாக அதிலுள்ள உசாத்துணை புத்தகத்தில் இருந்தது. ஆனால் பிற அகநாடுகள் பகுதியில் உள்ளது வேறு புத்தகதில் எழுதியிருந்ததாக நினைவு.(அதில் தவறிருக்கலாம்) தற்போது நான் சென்னையில் உள்ளதால் அந்த(மேலகர நூலகம்) புத்தகத்தை பார்க்க முடியாத நிலைமை உள்ளது. அதனால் என்னிடம் கருத்துக் கேட்காமல் மாற்றம் செய்ய வேண்டுகிறேன். தற்போது அகநாடுகள் என்னும் தலைப்பில் அதை மாற்றி விட்டேன்.
மேலும் சொழாந்தியம் என்ற கப்பல் பற்றியுள்ள கட்டுரையையும் நீங்கள் பார்வையிட வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 08:11, 21 அக்டோபர் 2011 (UTC)
ஐயா மயனும் மயாசுரனும் ஒருவர் என சிலர் கூறுகின்றனர். மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் இருவரின் தகவல்களும் மாற்றி மாற்றி தரப்பட்டுள்ளன. உங்களுடைய கருத்து தேவை.--தென்காசி சுப்பிரமணியன் 08:46, 1 நவம்பர் 2011 (UTC)
- இருவருமே கற்பனைப் பாத்திரங்கள். கற்பனைக்கு அளவில்லை. --Sengai Podhuvan 18:29, 2 நவம்பர் 2011 (UTC)
விக்கி மூலம்
தொகுநன்றி ஐயா.
நான் மூலத்தில் ஔவையார் பாடலை படித்துக்கொண்டிருந்த போது கந்தன் கருனை படத்தில் வரும் வரிகள் அனைத்தும் அதில் இல்லை என அறிந்தேன். ஒருவேளை புதியது என்று வரும் வரிகள் திரைப்படத்திற்காக சேர்த்ததோ? இல்லை பின்வரும் வேறு பாடல்களில் வருமா.--தென்காசி சுப்பிரமணியன் 09:20, 3 நவம்பர் 2011 (UTC)
- புதியது என வரும் பாடல் திரையிசைக் கவிஞர் இயற்றியது, --Sengai Podhuvan 21:38, 3 நவம்பர் 2011 (UTC)
இனவெழுத்துக்கள்
தொகுஐயா, சில பாடல்களில் முருகனின் ஆறு சிரங்களும் ஆறு தமிழ் இனயெழுத்துக்களை குறிப்பதாக படித்துள்ளேன். அது என்ன இனயெழுத்துக்கள். வன், மென், இடை என 3 தானே உண்டு. இல்லை இது வேறு ஏதேனும் வகைப்படுத்தலா?--தென்காசி சுப்பிரமணியன் 10:50, 11 நவம்பர் 2011 (UTC)
- மு - மெல்லினம் - இதில் 6 எழுத்து
- ரு - இடையினம் - இதில் 6 எழுத்து
- கு - வல்லினம் - இதில் 6 எழுத்து --Sengai Podhuvan 19:41, 11 நவம்பர் 2011 (UTC)
சிற்றரசர் கொடிகள்
தொகுஐயா, சம்புவரையர் கொடி பனைமரம் என படித்ததாக ஞாபகம். ஆனால் ஒருவர் பனைக்கொடி முத்தரையர் கொடி என்கிறார். மேலும் இடை மற்றும் கடைக்கால சிற்றரசர் கொடி ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் கொடுத்துதவவும்.
மேலும் சம்புவரைய தலைநகர் படைவீடு மருவி பாடி(ஆவடி பக்கத்தில்) என்றானது என்கிறார் ஒருவர்.--தென்காசி சுப்பிரமணியன் 08:02, 15 நவம்பர் 2011 (UTC)
- சம்புவராயர் கொடிபற்றி என்னால் உறுதிசெய்ய முடியவில்லை
- சம்பு என்னும் சொல் மூங்கிலையும், பிரம்பையும் குறிக்கும். திருமழிசை ஆழ்வார் திருமழிசைநில் பிறந்து வளர்ந்தவர். அவ்வூர்ப் பிறம்புப் புதரில் கண்டெடுக்கப்பட்டவர். இந்த ஊர் திருமழிசையும், பாடியும் சார்நிலப் பகுதிகள். இவற்றை எண்ணிப் பார்க்கும்போது சம்பில் தோன்றிய மகனின் கால்வயினர் சம்புவராயர் என்பதுகூடப் பொருத்தமான வரலாறாக அமையும்.
- நீங்கள் கருதுவதுபோல் பாடி என்னும் இக்கால ஊர் அக்காலச் சம்புவராயரின் பாடிவீடு என்பதன் கடைக்குறையாக இருக்கலாம்
- இதனைச் சம்புவராயர் வரலாற்றில் தங்கள் பதிவாகச் சேர்த்துவிடுங்கள்.
- அன்புள்ள --Sengai Podhuvan 22:43, 15 நவம்பர் 2011 (UTC)
- பாடி வேறு. ஆவடி வேறு. ஆனிரை மேய்ந்த அடிநிலம் ஆவடி. --Sengai Podhuvan 22:46, 15 நவம்பர் 2011 (UTC)
விழாக்களில் பெயர் குழப்பம்
தொகுஐயா, தமிழக அரசர் விழா இக்கட்டுரையையும் பேச்சுப் பக்கத்தையும் பார்க்கவும். உங்கள் உதவி தேவை--தென்காசி சுப்பிரமணியன் 12:06, 22 நவம்பர் 2011 (UTC)
- கட்டுரையில் சரியான செய்திகளைத் தரத் தூண்டிய தங்களுக்கு என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். கட்டுரையைப் பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 11:32, 25 நவம்பர் 2011 (UTC)
வாழ்த்துகள்
தொகுஐயா, மும்பையில் நடைபெற்ற இந்திய விக்கிமீடியா மாநாட்டில் தாங்கள் சிறப்பிக்கப்பட்டதாக அறிகிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தங்களின் ஆர்வமும் பங்களிப்பும் சக விக்கிப்பீடியர்களுக்கு ஓர் உந்துதலாக உள்ளது. தங்கள் பணி தொடர வாழ்த்துகள் !!--மணியன் 07:19, 24 நவம்பர் 2011 (UTC)
- அன்புள்ள மணியன்
- மும்பையில் நான் பாராட்டப்பட்டதை எண்ணி மகிழும் நல்லுள்ளம் கொண்ட தங்களின் காலடிகளில் எனக்குக் கிடைத்த பாராட்டை வைத்து மகிழ்கிறேன்.
- நற்றாம ரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
- கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
- என்பது ஔவை வாக்கு --Sengai Podhuvan 11:16, 25 நவம்பர் 2011 (UTC)
இந்திய விக்கிமீடியர்களின் மாநாட்டில் தாங்கள் ஜூரர்களினால் சிறப்பிக்கப்பட்டது அறிந்து மகிழ்ச்சி ஐயா. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 12:44, 25 நவம்பர் 2011 (UTC)
- அன்புள்ள கனகசீர் அவர்களுக்கு வணக்கம்
- ஈராயிரம் கட்டரைகள் எழுதியுள்ள தாங்கள் என்னைத் பாராட்டுவது மாநாட்டில் பெற்ற பாராட்டினும் மேலானது.
- நல்லினத்தின் ஊங்குத் துணையில்லை என வள்ளுவர் கூறிய வாக்கைத் தங்கள் செயலால் உணர்ந்துகொள்கிறேன்.
- என் கட்டுரைகளை வடிவமைக்க அவ்வப்போது தாங்கள் உதவிவந்துள்ளதை எண்ணி எண்ணி உள்ளம் பூரிக்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 20:27, 25 நவம்பர் 2011 (UTC)
சேரரும் நேரியும்
தொகுஐயா, கலிங்கத்துப்பரணியில் ஒரு சேரனை வர்ணிக்கின்றனர். ஆனால் சேர வரலாறு அதுக்கு முன்பே முடிந்து விட்டதாக கூகுள் தேடல் காட்டுகிறது.
மேலும் நேரி சேரரின் ஊர் என நீங்கள் அக்கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ஆனால் ஒட்டக்கூத்தரோ,
ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
என பாண்டிய அரசவையில் பாட அதற்கு புகழேந்தி
ஒரு முனிவன் நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே?
எனக்கூறி ஒட்டக்கூத்தரின் மூக்கறுத்த கதையில் நேரியை புகழேந்தி சோழரதாக குறிக்கிறார். இரண்டும் ஒன்றா? இல்லை சேரர் அக்காலத்தில் அடையாளம் தெரியாத அளவு குறுநில மன்னனாக இருந்தனரா? நேரி அக்காலத்தில் எவராண்டார்? மேலும் கலிங்கத்துப்பரணி சேரன் யார்?--தென்காசி சுப்பிரமணியன் 12:16, 25 நவம்பர் 2011 (UTC)
அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்
கட்டுரைகளைப் பாருங்கள்--Sengai Podhuvan 18:53, 25 நவம்பர் 2011 (UTC)
நன்றி ஐயா. ஆனால் அக்காலத்தில் சேரர்கள் என்ன ஆனார்கள்? க.பரணியில் சேர கரிப்படை வருவது மலைகளே வருவ்து போல் உள்ளதாக உவமை கூறப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் 01:00, 26 நவம்பர் 2011 (UTC)
- கலிங்கத்துப் பரணி சுவையூட்டப்பட்ட தமிழ் இலக்கியம். கலிங்க வெற்றி வரலாறு. கடைத்திறப்பு, பேய் என்பன கற்பனை. சங்ககால வரலாறு எழுதும் எனக்கு இப்போது அது பற்றிய ஆய்வு நேரவில்லை. --Sengai Podhuvan 03:20, 26 நவம்பர் 2011 (UTC)
பொற்றேர்
தொகுபொன்னேர் உழுதல் ஐயா இக்கட்டுரையை பார்க்கவும். இப்பழக்கம் பல நாட்டாரிடம் வழக்கில் இருப்பதாக கூறுகின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் 16:50, 27 நவம்பர் 2011 (UTC)
தலைதாழ் வணக்கங்கள்!
தொகுஉங்களின் தொண்டு என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் ஒரு பெருமை வாய்ந்த முன்மாதிரி. உங்களின் பணிகள் எங்களை ஊக்குவிக்கும் ஒரு காரணி. --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக
- தமிழ்த்தொண்டு எனக் கருதி இயன்றதைத் தெரிந்தவரை செய்கிறேன். எறும்பும் தன் கையால் எண் சாண். Together we fit. அன்புள்ள --Sengai Podhuvan 19:48, 28 நவம்பர் 2011 (UTC)
பதக்கம்
தொகுஉங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததை பாராட்டி இப்பதக்கத்தை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறோம். அக்கட்டுரைகள் அனைத்தும் தமிழ் அல்லது தமிழ் சொல் விளக்கம் சார்ந்தவை என்பது உங்களது தனிச்சிறப்பு. தென்காசி சுப்பிரமணியன் 05:25, 30 நவம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- முல்லைக்குத் தேர் தந்த பாரி போல், சொல்லுக்குப் பதக்கம் தந்த தோழர்களுக்கு என் கடப்பாடு. --Sengai Podhuvan 12:30, 30 நவம்பர் 2011 (UTC)
A picture is worth a thousand words
தொகுஐயா, இவ்வாக்கியத்தை போல் தமிழ் பாடல்களில் ஏதேனும் பாடல்கள் உண்டா? எனக்கென்னவோ இதை முன்பே தமிழில் கூறியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 11:16, 7 திசம்பர் 2011 (UTC)
- எண்ணிப்பார்க்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 12:04, 7 திசம்பர் 2011 (UTC)
நன்கொடை வேண்டலில் உங்கள் பங்களிப்பு
தொகுவணக்கம் செங்கைப் பொதுவன். விக்கிமீடியா நன்கொடை வேண்டலில் நீங்கள் விடுத்துள்ள செய்தி நெகிழ வைக்கிறது. தமிழ் விக்கிப்பீடியருக்கு மட்டுமல்லாது பல நாட்டு, பல மொழி விக்கிப்பீடியர்களுக்கும் உங்கள் சீரிய பங்களிப்பு உந்துதலாக உள்ளதை அறிய முடிகிறது. உங்கள் அளப்பரிய பணி தொடரவும், உங்கள் நலம் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.--இரவி 14:42, 19 திசம்பர் 2011 (UTC)
- அன்புள்ள ரவி! நம்மை உந்தியது விக்கி. நட்பால் நாட்டுக்கு உதவுவோம். --Sengai Podhuvan 16:33, 19 திசம்பர் 2011 (UTC)
தமிழர் விளையாட்டுக்கள் - பட்டியல்கள்
தொகுதமிழர் விளையாட்டுக்கள் தொடர்பாக நீங்கள் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. தொலைநோக்கி சிந்தித்து தலைப்பைத் தேர்ந்து எடுத்துக்கிறீர்கள். இவற்றை விக்கியில் பட்டியல் இடுவது தொடர்பாக சில கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன். ஒரு முழுமையான அகரவரிசைப் பட்டியல். அடுத்தது விளையாடுவோர் சிறுவர், மகளிர், காளையர், முதியோர் என்று வகைப்பாட்டு வாரியாக ஒரு பட்டியல். பின்னர் வகைவாரியாக தமிழர் விளையாட்டுக்கள், எ.கா உடற்திறன் விளையாட்டுக்கள், பலகை விளையாட்டுக்கள்; உள்ளக விளையாட்டுக்கள், வெளிக்கள விளையாட்டுக்கள் என்று ஒரு பட்டியலை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) பட்டியலை தமிழர் விளையாட்டுகள் (அகரவரிசை) இணைக்கலாம் என்று நினைக்கிறேன். இரண்டும் அகரவரிசை.
- சங்ககால விளையாட்டுகள்
- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)
- தமிழர் விளையாட்டுகள் (அகரவரிசை)
- தமிழர் விளையாட்டுகள்
--Natkeeran 04:00, 24 திசம்பர் 2011 (UTC)
- அன்புள்ள நற்கீரன் அவர்களுக்கு வணக்கம்
- உங்களுடைய பகுப்பு-முறைத் தலைப்புகள் மிகவும் சிறந்தவை. பயனுள்ளவை.
- படங்களுடன் தொகுத்துக் காட்டிய தங்களின் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.
- ஒன்று
- Age, place, gender, techniques etc. should not be mingled under one head.
- விளக்கப்படாத விளையாடுகளை விளக்கி முடித்துவிடுகிறேன்
- விளக்கும்போது உடல்திறன்-விளையாட்டுகள், பலகை-விளையாட்டுகள், உள்ளக-விளையாட்டுகள் எனத் தாங்கள் பாகுபடுத்திக் காட்டியிருப்பது எனது உட்பகுப்புக்குப் பெரிதும் பயனுடையதாக உள்ளது. எனது ஆய்வேடு அப்படித்தான் அமைந்திருந்தது. எனக்குப் பின்னர் விளையாட்டு பற்றிய ஆய்வினைப் பட்டம் பெறத் தெரிவு செய்துகொண்டவர்கள் பால்-நோக்கிலும், பருவ-நோக்கிலும் பகுத்துக்கொண்டு என்னை அணுகினர். எனவே அவர்கள் விருப்பத்தை எண்ணி இவ்வாறு பகுத்துக்கொண்டேன்.
- நான்கைந்து வரிகளில் எழுதவேண்டிய விளையாட்டுகளைத் தனிக் கட்டுரையாக்கத் தயங்கிக்கொண்டு, என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த வேளையில் உங்களது பாகுபாடு ஒரே பெருங்கட்டுரையில் பைட்சைக் குறைக்க வழிவாட்டியாக அமைந்துள்ளது. பின்பற்றுவேன்.
- 1.தமிழர் விளையாட்டுகள் (அகர வரிசை), 2. தமிழர் விளையாட்டுகள் (தொகுப்பு-நோக்கு) ஆகிய கட்டுரைகளைப் பின்னர் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
- விரிவான பதிலுக்கு நன்றி. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பெரும் பட்டியல்கள் வரும் என நினைக்கிறேன்.
- தமிழர் விளையாட்டுகள் (அகரவரிசை) (தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) இதோடு பெரும்பாலும் இணைக்கப்படலாம்!)
- தமிழர் விளையாட்டுக்கள் (உள்ளக, வெளிக்கள வகையாக)
- தமிழர் விளையாட்டுக்கள் (உடற்திறன், மனத்திறன் வகையாக) (பலகை விளையாட்டுக்கள் மனத்திறன் விளையாட்டுக்களுக்கும் அடங்கும்
- தமிழர் விளையாட்டுகள் (பருவ, பால் வகையாக) (சிறுவன்கள், சிறுமிகள், மகளிர், காளையர், முதியோர்)
- சங்ககால விளையாட்டுகள் ஆயிற்று
- தமிழர் விளையாட்டுகள் - பொது அறிமுக கட்டுரையாக பத்தி வடிவில் மாற்றப்பட வேண்டும்
2,4 வசனங்கள் கொண்டிருந்தாலும் தயங்காமல் தனிக் கட்டுரையாக ஆக்கித் தாருங்கள். பட்டியலிட, வகைப்படுத்த அவ்வாறு செய்வது உதவும். பிறர் அக் கட்டுரைகளை மேலும் வளர்க்க வாய்ப்புக்கள் நிறைய உள்ளன. --Natkeeran 23:13, 24 திசம்பர் 2011 (UTC)
- அன்புள்ள நற்கீரன்
- தாங்கள் குறிப்பிட்டவாறு எல்லா விளையாட்டுகளைப் பற்றிய செய்திகளையும் எழுதி முழுமை செய்துவிடுகிறேன். பின்னர் அவை வளரட்டும். --Sengai Podhuvan 20:48, 25 திசம்பர் 2011 (UTC)
Greetings
தொகுThe Tamil Wikipedia has reached 1,000,000 page edits... Congrats --Naveenpf 05:41, 26 திசம்பர் 2011 (UTC)
- We are proud of the achievement. --Sengai Podhuvan 11:05, 26 திசம்பர் 2011 (UTC)
தமிழர் விளையாட்டுக்கள் - பாராட்டு
தொகுஇன்றைய உலகில் தமிழர்கள் விளையாடிய பல்வேறு விளையாட்டுக்கள் காணாமல் போய் விட்டாலும் அவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டுக்கள் குறித்த தகவல்களைக் கொண்ட கட்டுரைகளை ஒவ்வொன்றாகப் பதிவேற்றம் செய்து வரும் தங்களுக்கு என் இனிய பாராட்டுக்கள். இவையெல்லாம் தமிழரை அடையாளப்படுத்தக் கூடிய கட்டுரைகள். தொடரட்டும் உங்கள் விளையாட்டுக்கள்... தொடரும் எங்கள் பாராட்டுக்கள்...!--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:58, 31 திசம்பர் 2011 (UTC)
- அன்புள்ள தேனியாருக்கு, வணக்கம். உங்களைப் போன்றவர்களின் அன்புதான் எளியேனை ஆளாக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்வோம். --Sengai Podhuvan 21:03, 31 திசம்பர் 2011 (UTC)
தமிழர் விளையாட்டுகள் குறித்த தங்களது ஆழ்ந்த அறிவைப் பதிவு செய்து வருவதற்கு என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் ஒரு சிலவற்றையாவது நான் விளையாண்டிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த விளையாட்டுகள் இன்றளவும் விளையாடப்படும் ஊர்கள், இடங்கள் குறித்து அறிவீர்களா? இவற்றை விக்கிப்பீடியா சார்பாக நேரடியாகச் சென்று நிகழ்படம், ஒளிப்படமாகப் படம் பிடித்துப் பதிவேற்றினால் மிகவும் நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியாவுக்கு வலு சேர்ப்பதுடன் இந்த விளையாட்டுகளின் மீதான ஆர்வம் மீண்டு வரவும் உதவலாம். உங்கள் மறுமொழியை அடுத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்று சிந்திப்போம்--இரவி 06:53, 2 சனவரி 2012 (UTC)
- அன்புள்ள ரவி, விளையாடோரைக் காண்டல் அரிது. பயிற்சி தந்து விளையாச் சொல்லி, வேண்டுமானால் படம் எடுக்கலாம். இதனைப் புரவலர் யாராவது செய்யவேண்டும். --Sengai Podhuvan 21:46, 2 சனவரி 2012 (UTC)
பல விளையாட்டுகளும் விளையாடப்படுவது அரிதே என்பதை உணர்கிறேன் :( சொல்லிக் கொடுத்து விளையாட வைத்துப் படம் பிடிப்பதை விட இயல்பாகவே விளையாடுவோரைப் படம் பிடித்தால் வரலாற்றுப் பதிவாக இருக்கும். பார்ப்போம்.--இரவி 12:09, 3 சனவரி 2012 (UTC)
- சரியான முடிவு. --Sengai Podhuvan 12:30, 3 சனவரி 2012 (UTC)
வழும்பலைவிலங்குகள்
தொகுமதிப்பிற்குரிய ஐயா,
- வழும்பலைவிலங்கு என்னும் கட்டுரையை ஓரளவுக்கு உருவாக்கிவிட்டேன். உதவியமைக்கு நன்றிகள். ஐயாவிற்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்புடன். --சிங்கமுகன் 07:34, 1 சனவரி 2012 (UTC)
- அன்புள்ள சிங்கமுகன், மிகச்சிறந்த கட்டுரை ஒன்றை உருவாக்கியுள்ளதோடு அதனைக் கண்டு பாராட்டும் வாய்ப்பினை அளித்தமைக்குப் நன்றி. எனக்குத் தெரிந்தவகையில் தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன். நீ அறிவு சேர்க்கும் கட்டுரைகளை எழுதிவருகிறாய். உன் தொலைநோக்கு மேலானது. தொடர்க. அன்புள்ள --Sengai Podhuvan 11:16, 1 சனவரி 2012 (UTC)
தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது - வாழ்த்துகள்
தொகு2012 ஆம் ஆண்டிற்கான தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது பெறுவது அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:21, 19 சனவரி 2012 (UTC)
- தேனியாருக்கு நன்றி--Sengai Podhuvan 01:53, 19 சனவரி 2012 (UTC)
இலக்குவனார் விருது பெறும் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 01:56, 19 சனவரி 2012 (UTC)
- கனகசீர் வாழ்த்துக்களுடன் கடினமாக உழைப்பேன். --Sengai Podhuvan 02:45, 19 சனவரி 2012 (UTC)
இலக்குவனார் விருது பெறுவது கண்டு அகமகிழ்ந்தேன். தகுதி பெற்றோருக்கு வழங்கப்படும் விருதுகள் அவற்றிற்கு பெருமை சேர்க்கின்றன. வாழ்த்துகள் !!--மணியன் 05:17, 19 சனவரி 2012 (UTC)
- வலைப்பதிவுகளின் வளம் கண்ட மணியன் பாராட்டுகளால் வளம் பெறுவேனாகுக. --Sengai Podhuvan 21:14, 19 சனவரி 2012 (UTC)
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா! பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களின் முகநூல் செய்திவழி அறிந்தேன்! இனிய செய்தி! --செல்வா 21:17, 19 சனவரி 2012 (UTC)
- அன்புள்ள ஓவியர் செல்வா அவர்களுக்கு வணக்கம். விலங்கினம், பறவையினம், எத்தேன் மெத்தேன் போன்ற இயற்பியல், மரூஉ வினைத்தொகை போன்ற இலக்கணக் குறிப்புகள், மறைமலையடிகள் பாவாணர் போன்ற பெருமக்களுக்குப் பெருமை சேர்க்கும் கட்டுரைகள், பை எண்கோணம் அறுகோணம் போன்ற கணக்கியல், காடர் தோடர் போன்ற பழங்குடியினர் முதலான பல்வேறு கோணங்களில் நல்ல கட்டுரைகளை உருவாக்கியுள்ள பெருமகனாரின் வாழ்த்து எனக்கு வழிகாட்டியாக அமையட்டும். அன்புள்ள --Sengai Podhuvan 21:51, 19 சனவரி 2012 (UTC)
- அன்புள்ள ஐயா, வணக்கம். நான் பொறியியலாளன் (ஓவியமும் சிறிது வரைவேன், தீட்டுவேன் எனினும்). உங்கள் நன்மொழிக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் அயராத உழைப்புதான் என்போன்றவர்களுக்கு அடியூக்கம் தருவது. நன்றி.--செல்வா 22:52, 19 சனவரி 2012 (UTC)
ஐயா! விருது பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் பலப்பல விருதுகள் காண்பீர். --பரிதிமதி 02:47, 2 பெப்ரவரி 2012 (UTC)
- ஊக்கம் உந்துகிறது. உழைப்பேன். நன்றி. --Sengai Podhuvan 06:04, 2 பெப்ரவரி 2012 (UTC)
ஆயிரம் கட்டுரைகள்!!
தொகுஐயா வணக்கம். நீங்கள் 1000 கட்டுரைகள் எழுதி முடித்ததற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்! --செல்வா 02:52, 29 சனவரி 2012 (UTC)
- தொடு விளையாட்டோடு 1000 தொட்டுவிட்டீர்கள்! :) --செல்வா 02:55, 29 சனவரி 2012 (UTC)
- செங்கைப் பொதுவன் ஐயா, இன்றளவில் 1000 கட்டுரைகளை தமிழ் விக்கியில் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். தங்களுக்கு
ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நற்பணி! அன்புடன்--Kanags \உரையாடுக 04:21, 29 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கியில் சங்ககால இலக்கியங்கள் மற்றும் தமிழர் பண்பாடு/விளையாட்டுக்கள் குறித்தான தங்கள் பங்களிப்பு முதன்மையானது. உங்களைப் போன்றவர்களின் அயராத உழைப்பும் கருமமே கண்ணான முனைப்பும் இளம் பயனர்களுக்கு ஓர் காட்டாக அமைந்துள்ளது. ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் எனது மனம்திறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். வளர்க உம்தம் நற்பணி !!--மணியன் 04:37, 29 சனவரி 2012 (UTC)
ஐயா, வணக்கம். தங்கள் அயராத உழைப்பின் காரணமாக தமிழுக்கு 1000 கட்டுரைகள் கிடைத்துள்ளன. உங்கள் முயற்சி என்னைப் போன்றோருக்கு மிகப் பெரும் ஊக்கம் தருகிறது. தங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து சிறக்க உளமாற வேண்டுகிறேன்.--Parvathisri 04:57, 29 சனவரி 2012 (UTC)
இவ்வினிய வேளையில் தங்களை வணங்கி மகிழ்வதோடு தங்களுக்கு நீடித்த நலமும் நிறைந்த உள அமைதியும் தர இறைவனை இறைஞ்சுகிறேன்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 05:01, 29 சனவரி 2012 (UTC)
- செங்கைப் பொதுவன் ஐயா, தமிழுக்கும் உலகுக்கும் தாங்கள் ஆற்றிவரும் பணி மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்திட வாழ்த்துகின்றேன். --பவுல்-Paul 05:21, 29 சனவரி 2012 (UTC)
சங்ககால ஊர்கள், சங்ககால மன்னர்கள், சங்ககால புலவர்கள், சங்கக்கால இலக்கியங்கள், தமிழர் விளையாட்டுகள் அப்பப்பா தமிழர் வரலாற்றில் பாதி கட்டுரைகள் தங்களுடையது என்றென்னும் அளவுக்கு உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் 06:05, 29 சனவரி 2012 (UTC)
விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கை என்றாலும் சரி, தனிப்பட்ட பயனர்களின் கட்டுரை எண்ணிகை என்றாலும் சரி, பொதுவாக இனி எண்ணிக்கை அடிப்படையில் எங்குமே பாராட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் :) தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையுமே பெறுமதி மிக்கது. தாங்கள் வாழ்நாள் அறிவை ஒவ்வொரு கட்டுரையிலும் இடுவது விக்கிப்பீடியாவுக்கு வாய்த்த நற்பேறு. குறிப்பாக, விளையாட்டுகள் தொடர்பான ஒளிப்படங்களை ஏற்றி வருவது மிக அருமை. தொடர்ந்து நல்ல உடல்நலத்துடனும் உற்சாகத்துடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி--இரவி 08:27, 29 சனவரி 2012 (UTC)
- விக்கித் தூண்களின் அன்பும் அரவணைப்பும் எளியேன் எழுச்சியை ஏணியில் ஏற்றுகிறது. உந்தி ஊக்குகிறது. கடப்பாடுடையேன்.
- என்கடன் பணிசெய்து கிடப்பதே
- நின்கடன் அடியேனையும் தாங்குதல் - (அப்பர் வாக்கு) நினைவுபடுத்திக்கொள்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 20:55, 29 சனவரி 2012 (UTC)
நிகண்டு
தொகுஐயா, தமிழ் விக்சனரியில் நிகண்டு என்னும் சொல் வடமொழி சொல் என கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள கண்டு என்னும் சொல் தமிழ்ச்சொல் தான் என்பது எனக்கு திண்ணம். சான்றாக நூற்கண்டு என்னும் வார்த்தை தமிழில் உள்ளது. ஐயா, பின் எங்ஙனம் நிகண்டு மட்டும் வடமொழியென்பதை விளக்கவேண்டுகிறேன். நன்றியுடன் - --சிங்கமுகன் 11:37, 7 பெப்ரவரி 2012 (UTC)
- அன்புள்ள சிங்கமுகன், உன் தூண்டுதல் என் நெஞ்சைத் தொட்டது. விளக்கம் தந்துள்ளேன். நிகண்டு என்னும் தலைப்பிலுள்ள கட்டுரையைப் பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 19:56, 7 பெப்ரவரி 2012 (UTC)
ஐயா, மிக்க நன்று ஆனால், நீங்கள் நிகண்டு கட்டுரையில் முதல் பத்தியில் நீங்கள் கருத்து உள்ளது என மாற்றம் கொடுத்துள்ளனர். ஆனால், அதற்கான மேற்கொள், மேற்கூறிய கருத்தையே மொழிவது போல கீழும் அதே சொற்றொடரையே முன்வைக்கின்றன. அதை கவனக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், சாயம் என்னும் வார்த்தை தமிழில் கறையேற்றி என்பதற்கு மாற்றாக பயன்படுத்தி வருகிறோம். இதற்கு வேர்ச்சொல்லாக அல்லது சொல்லின் கிளைகளாக பல வார்த்தைகள், சாயல், சாயுங்காலம், சார்ந்து, சாரம், சார்பு போன்ற பல வார்த்தைகள் தமிழில் புழங்கி வருகின்றன. இவ்வாறு இருக்கையில் சாயை என்பது வடமொழியாகவும் அதற்கு இணை வார்த்தை நிழல் எனவும் ஒரு வடமொழி தமிழ்மாற்று நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சார்பு, சாயுங்காலம் என்னும் வார்த்தைகளெல்லாம் தமிழென அதேப்பனுவலில் கொடுத்துள்ளனர். இது எவ்வாறு ஏற்புடையதாகும். பின்பு சிகை என்பதுவும் தமிழில்லை என கொடுத்துள்ளனர். இக்கூற்றும் உண்மையா என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --சிங்கமுகன் 02:12, 8 பெப்ரவரி 2012 (UTC)
- அன்புள்ள சிங்கமுகன், பிறர் கருத்தை அழிப்பது என் தகுதிக்குப் பொருந்தாது. மாற்றலாம். செய்துள்ளேன். படிப்பவர் எது சரி எனத் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
- பொழுது சாய்வதால் தோன்றுவது சாயல். இவ்வளவு தெளிவாகத் தெரியும் தமிழ்சொல்லைச் சிலர் வடசொல் என்பது அவர்களது அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.
- என் செய்வோம் --Sengai Podhuvan 20:04, 9 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி ஐயா. சிகை என்பதுவும் கூறிவிட்டால் ஐயம் தெளிவாகும். தொந்தரவிற்கு மன்னிக்கவும். --சிங்கமுகன் 13:53, 10 பெப்ரவரி 2012 (UTC)
- சிக்கு < சிக்கை > சிகை - முனிவர்களின் சடைமுடி போல் சிக்கு விழுந்தால் அவிழ்க்கமுடியாத முடியாதது சிகை. எளிதில் விளங்கும் இனிய தமிழ்ச்சொல். --Sengai Podhuvan 17:21, 10 பெப்ரவரி 2012 (UTC)
அருமையான விளக்கம் ஐயா. காலத்திற்கும் மறவா விளக்கம். நன்றிகள். --சிங்கமுகன் 18:15, 10 பெப்ரவரி 2012 (UTC)
சங்ககாலத் தமிழக நாணயவியல்
தொகுசங்ககாலத் தமிழக நாணயவியல் ஐயா இக்கட்டுரை பற்றி உங்கள் கருத்துகளை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடவும்.
- வேண்டுகோள்
உங்கள் பேச்சுப்பக்கம் பெரிதாக உள்ளதால் எளிதாக உரையாடுவதற்கு பேச்சுப்பக்கத்தை நகற்றி உதவுங்கள். இயலாவிடில் எங்களிடம் இங்கேயே கூறிவிடுங்கள். நாங்கள் யாராவது நகற்றி விடுகிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:22, 18 மார்ச் 2012 (UTC)
கடம்பு, சுள்ளி மலர்கள்
தொகு- அன்புள்ள சண்முகம், உங்கள் தொண்டையும், துடிப்பையும் பாராட்டுகிறேன். கடம்பு என்னும் மலரைச் சுள்ளி மலரோடு இணைத்துள்ளீர்கள். சான்று இருந்தால் தெரிவிக்கவும். இன்றேல் கடம்ப மலர் கட்டுரையை முன்பு இருந்தது போல் பிரித்துவிடவும். கடம்பு மலர் பற்றிய சங்ககாலச் செய்திகளை விரிவாக இணைக்கவேண்டியுள்ளது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 18 மார்ச் 2012 (UTC)
- சுள்ளிமலர் என்பது கடப்பம்பூ. கடம்பு என்னும் மரத்தில் பூக்கும் பூ....
- வணக்கம் ஐயா.. தாங்கள் மேற்கண்ட வரியை சுள்ளிமலர் கட்டுரையில் கொடுத்திருந்ததால் அவ்வாறு செய்தேன்... இவ்விரண்டும் வெவ்வேறேனில் கடப்பம்பூ என்ற கட்டுரையை சொடுக்குங்கள்.. அதில் (கடப்பம்பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது) என வரும்.. அதில் கடப்பம்பூ என்பதை சொடுக்கி தொகுவை அழுத்தி redirect[[சுள்ளி மலர்]] என இருப்பதை நீக்கிவிட்டு புது உள்ளடக்கத்தை சேர்த்துவிடுங்கள்...நன்றி...(ஒரு சிறு வேண்டுகோள் என்னுடன் உரையாட என் உரையாடல் பக்கத்தை உபயோகப்படுத்துங்கள்.. தவறுதலாக பயனர் பக்கத்தை உபயோகப்படுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்..என்னுடைய பேச்சுப் பக்கத்திலும் பதிலளித்திருக்கிறேன்..) --shanmugam (பேச்சு) 13:28, 18 மார்ச் 2012 (UTC)
- சுள்ளிமலர் என்பது கடப்பம்பூ. கடம்பு என்னும் மரத்தில் பூக்கும் பூ....
- கடம்பு மரம் சுள்ளி மலர் பாருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 00:23, 19 மார்ச் 2012 (UTC)
- வணக்கம் ஐயா.. சுள்ளிமலர் என்பது கடப்பம்பூ. கடம்பு என்னும் மரத்தில் பூக்கும் பூ...இதை மாற்றியுள்ளதால் கடப்பம்பூ என்பதற்கு இப்போது கடம்ப மரம் என்ற பக்கத்திற்கு திருப்பிவிடலாமா??...அல்லது வழிமாற்றையே நீக்கிவிடலாமா?..தாங்கள் கடம்ப பூ பற்றி தனியாக எழுதுகிறீர்கள் எனில் அந்த வழிமாற்றை நீக்கி விடுகிறேன்...நன்றி--shanmugam (பேச்சு) 03:57, 19 மார்ச் 2012 (UTC)
- அன்புள்ள சண்முகம், தங்களது எழுச்சியும், துடிப்பும் என்னை இன்பக்கடலில் ஆழ்த்துகின்றன. விரும்பிய வழிமாற்றம் செய்துவிட்டேன். தங்கள் பணியைத் தொடரலாம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:56, 19 மார்ச் 2012 (UTC)
பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்
தொகுவணக்கம், Sengai Podhuvan/தொகுப்பு 1! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 18:58, 21 மார்ச் 2012 (UTC)
- அன்புப் பெருமக்களுக்கு வணக்கம். என் பேச்சுப்பகுதி எனது தடுமாற்றங்களையும், தங்களது உதவிகளையும், எளியேன் கண்ட சிற்சில
தெளிவுகளையும் விளக்கும் வரலாறாக உள்ளது. எனவே எல்லாவற்றையும் பரண்மேல் ஏற்றி உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:50, 21 மார்ச் 2012 (UTC)