பேச்சு:தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)
பிரிப்பும் குறிப்பும் நிகழ்கிறது என்ற உட்பிரிவில், 3. இளவட்டக்கல் 39 4. ஈசல் பிடித்தல் 39 5. உப்பு மூட்டு... இப்படியாக உள்ளது. இந்த தகவல்கள் என்னவென்று புரியவில்லை. எதனைக் கூறுகிறது? அழிந்துவரும் விளையாட்டுகளை, வரலாற்றில் காக்க, அவசியமான இப்பதிவுக்கு நன்றி.≈00:00, 9 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
- அன்புள்ள தகவலுழவன் அவர்களுக்கு வணக்கம். பாராட்டுக்கு நன்றி. தொகுப்பில் உள்ள 200 விளையாட்டுகளையும் வகைப்பாட்டுடன் இக்கட்டுரையில் இணைக்கும் பணி தொடர்கிறது. --Sengai Podhuvan 11:16, 9 சூலை 2011 (UTC)
அவசரப்பட்டு எழுதி, உங்கள் மனைதை வருத்தியிருந்தால் மன்னிக்கவும். உங்களைப் போன்று விளையாட்டுப் பற்றிய பெருங்கட்டுரை எழுதாவிடினும், ஒரு குறுங்கட்டுரையொன்றை, விளையாட்டில் எழுதுவேன்.அதை எழுதத் தூண்டியமைக்கு எனது வணக்கங்கள்.≈07:42, 10 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
- அன்புள்ள தகவல் உழவன் அவர்களுக்கு வணக்கம் தங்களின் குறிப்பு என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. தாங்களும் எழுதுங்கள். எனக்கும் உதவும். --Sengai Podhuvan 21:42, 10 சூலை 2011 (UTC)
- அன்புள்ள சோடாபாட்டில், என்னிடம் விளையாட்டுத் தொடர்பான பல படங்கள் உள்ள. அவை ஓவியரைக் கொண்டு நான் வரைந்தவை. சில அரசுடைமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து எடுத்து என் படைப்பு நூல்களில் வெளியிடப்பட்டவை. அவற்றை scan செய்து பதிவேற்ற இயலும். விக்கி-காமன்ஸ் பகுதியில் பதிவேற்றிய பின்னர்தானே கட்டுரையில் பொருத்தமான இடங்களில் இணைக்க முடியும்? Vikimedia Commons பகுதியில் பதிவேற்றுவது எப்படி? விளக்கினால் முயல்வேன். அன்புள்ள --Sengai Podhuvan 22:04, 10 சூலை 2011 (UTC)
படப் பதிவேற்றத்தினை குறித்து மகிழ்ச்சி.விக்கி ஊடக நடுவத்தில்(wiki commons) பதிவேற்றிட இப்பக்கத்தினை ஒரு முறை பார்க்கவும்.தயக்கம் வேண்டாம். பின் இப்படிவத்திலுள்ள விவரங்களை இட்டு, பதிவேற்றவும்.ஐயம் இருப்பின் இங்கேயே தெரிவிக்கவும்.மாதிரி விவரங்களுக்கு இந்த படத்தின் விவரங்களைப் பார்க்கவும்.பகுப்பில் (Category) என்பதில், அங்குள்ள பகுப்பினை இடாமல், Tamil language என்பதனை இடவும். மற்றவை பிறகு..≈00:28, 11 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
- அன்புள்ள தமவலுழவன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு சங்ககால வள்ளல்கள் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவேற்றியுள்ளேன். பாருங்கள். இதுபோல் விளையாட்டிலும் பொருத்தமான படங்களை ஆங்காங்கே பதிவேற்றுவேன். காலத்தினால் செய்த நன்றி. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு. மறவேன். அன்புள்ள --Sengai Podhuvan 12:29, 11 சூலை 2011 (UTC)
த.உழவன் என்றே என்னை அழைக்கவும்.உங்களின் உரையாடற் பக்கத்தில் தொடர்ந்துள்ளேன்.நன்றி.வணக்கம்≈12:46, 11 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..