விட்டகுதிரையார்

விட்டகுதிரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுதியில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 74 எண் கொண்ட பாடல் ஆகும்.
இவர் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர் ஆவார். தமது பாடலில் 'விட்ட குதிரை' என்னும் அருமையான தொடரைக் கையாண்டுள்ளதால் இவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

படம்: ஏறிச் செல்வோன் கடிவாளத்தை விடாத குதிரை \ விட்டகுதிரையார் பாடலில் உள்ளது: ஏறிச் செல்வோன் கடிவாளத்தை விட்டுவிட்ட குதிரை

பாடல் சொல்லும் செய்தி தொகு

தோழி தலைவன் நிலையைக் கூறித் தலைவியை தலைவனுக்கு உடன்படுமாறு கூறும் செய்தியைக் கொண்டது இந்தப் பாடல்.

வளைத்த பிடியிலிருந்து விடுபட்ட மூங்கில் நிமிர்வது போல விட்ட குதிரை பாய்ந்தது. மூங்கிலை உடைய குன்ற நாடன் தலைவன். இந்தக் கருப்பொருள்களைக் கொண்டு படிப்போர் உணர்ந்துகொள்ளும் பொருள் தலைவனுக்குக் கட்டுப்பாடு இல்லை என்பது. (தலைவிக்குக் கட்டுப்பாடு உண்டு) இந்த நாடன்மேல் தலைவியாகிய கொடி படர்ந்தது. கட்டுக்காவலை உடைய தலைவி தன்மேல் படர்ந்ததை அறியாமல், கட்டுக்காவல் இல்லாத தலைவன் தலைவியின்மேல் சாய்ந்தான். (இது பண்டு நிகழ்ந்த ஒரு செயல். அந்தச் செயலை எண்ணி இன்று தலைவனுக்கு உடன்படு, என்று தலைவியை வற்புறுத்துகிறாள், தோழி.

விட்ட குதிரை

கடிவாளத்தைக் கைவிட்ட குதிரை போலத் தலைவன் தலைவியின்பால் ஓடிவருகிறானாம். — இது பாடலைப் படிப்போர் புரிந்துகொள்ளும் உள்ளுறை

விசும்பு தோய் பசுங்கழை

(யானை) மூங்கிலை வளைத்துத் தின்றுவிட்டு அதனைக் கைவிட்டால் அது எப்படி விசும்பி நிமிருமோ அதுபோல விட்ட குதிரை பாய்ந்ததாம்.

வேனில் ஆனேறு

வேனில் காலத்தில் பொலிகடா பசுவின்மீது ஏறுவது போல அவன் என்மீது ஏறினான்.

யான் தற் படர்ந்தமை அறியான்

தலைவி என்னும் கொடி தலைவன் என்னும் கொம்பின்மீது ஏறிப் படர்ந்திருந்தது. (கொம்பு என்பது இங்கு ஆனேற்றுக் கொம்புக்கும் பொருந்தும்) கொம்பில் படர ஆடிக்கொண்டிருந்த கொடி ஆனேற்றுக்குத் தெரியவில்லை.

சாயினன்

அந்தக் கொடியின்மீது புரண்டு படுத்து இன்பம் கண்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டகுதிரையார்&oldid=2718228" இலிருந்து மீள்விக்கப்பட்டது