விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செங்கைப் பொதுவன்
செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.