விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்
விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்க்க இருக்கிறோம். UTC நேரத்தில் 24 மணி நேரத்தில் நாம் எந்த அளவு சிறந்த பங்களிப்புகளை நல்குகிறோம் என்று பார்க்கலாம் :)
முதல் தமிழ் விக்கி மாரத்தான்
நாள்: ஞாயிறு, நவம்பர் 14, 2010 24 மணி நேரமும் (UTC)
(குறிப்பிட்ட நாள் அன்று பங்களிக்க இயலாதவர்கள் அதற்கு முன்போ பின்போ ஓரிரு நாட்களில் பங்களிக்க முடிந்தாலும் நன்றே )
இடம்: உங்கள் கணினி இருக்கும் இடம் :) அல்லது அன்று விக்கி சந்திப்புகள் நடக்கக்கூடிய இடங்களில் இருந்து.
பங்கு கொள்வோர்
தொகு- சோடா பாட்டில் (இலக்கு : 15 புதிய கட்டுரைகள்)
- இரவி
- சுந்தர் (முன்கூட்டியே முடிவு செய்த பயணம் உள்ளதால் வெள்ளிக்கிழமையே பங்களிக்க முயல்கிறேன். :-( )
- அராபத்
- நற்கீரன்
- மயூரநாதன் (ஐ.அ.அ இல் வெள்ளி, சனிக் கிழமைகளில்தான் விடுமுறை. அதனால் வெள்ளிக்கிழமையே நான் எனது பங்களிப்பைச் செய்கிறேன்)
- செல்வா
- சிறீதரன்
- கலை (முடிந்தால், குறிப்பிட்ட அந்த நாளிலோ அல்லது அதற்கு அருகாக வரும் வேறொரு நாளிலோ, பேர்கனில் சிலரை சேர்த்து இந்த மராத்தானை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே இருதடவை தமிழ்விக்கி அறிமுகம் செய்தாயிற்று. அதற்கு ஏதாவது பலன் இருக்கிறதா என்பதை அறியவும் இது உதவலாம்).
- மணியன்
- த* உழவன் 23:30, 21 அக்டோபர் 2010 (UTC)(மாதிரிகளைத் தந்தால் அந்நாளிலும், அதற்கு முன்பும் இணைய விரும்புகிறேன்--tha.uzhavan ATgmailCOM)
- Pazha.kandasamy 23:38, 21 அக்டோபர் 2010 (UTC) (நான் கட்டுரைகளைச் சொந்தமாகத் தான் எழுதுவதில்லை. மற்றவர்களுடைய கட்டுரைகளையேனும் பதிவிடுகிறேனே! இங்கு என் முதல் கட்டுரை, என் கட்டுரையல்ல :(.
- பவுல்-Paul 01:35, 22 அக்டோபர் 2010 (UTC) ஏற்கெனவே தொடங்கியவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும்; சில புதிய கட்டுரைகள் தொடங்க வேண்டும். நவம்பர் 14இல் முக்கிய அலுவல்கள் இருப்பதால் வெள்ளியே மாரத்தானில் கலந்துகொள்ள எண்ணியிருக்கிறேன்.
- பெ.கார்த்திகேயன் - 12,13,14 ஆகிய நாட்களில் எனது அக்காவின் திருமணத்தின் பொருட்டு ஊரில் (திருமங்கலத்தில்) இருப்பேன். நவம்பர் 15 இல் பங்கு கொள்ள இருக்கிறேன். குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் துவங்க வேண்டும். ஏற்கனவே எழுதியவற்றைச் சீர்படுத்த வேண்டும்.
- மாஹிர் 16:41, 23 அக்டோபர் 2010 (UTC) நல்ல யோசனை. இதுபோன்ற தருணங்களிலாவது ஏதாவது பங்களிக்க முடியும்.
- சி. செந்தி 17:10, 23 அக்டோபர் 2010 (UTC) (இயலுமானவரையில் குறிப்பிட்ட நாளன்று பங்கேற்க முயலுகிறேன்)
- கார்த்திக் 09:57, 24 அக்டோபர் 2010 (UTC)
- தேனி.எம்.சுப்பிரமணி. 11:05, 24 அக்டோபர் 2010 (UTC) (அன்றைய தினம் எனக்கு வாய்ப்பாக அமைந்தால் ஓரளவு பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.)
- சஞ்சீவி சிவகுமார் 07:32, 25 அக்டோபர் 2010 (UTC)பங்கேற்க முயலுகிறேன்.
- சூர்ய பிரகாசு.ச.அ. 12:27, 25 அக்டோபர் 2010 (UTC)நானும் வருகிறேன். எனக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. இன்றிலிருந்து எழுதத் தொடங்கித் தரமான ஒன்றை உறுதியாகத் தருவேன்.
- ஸ்ரீகாந்த் 02:59, 27 அக்டோபர் 2010 (UTC) ஆ.விக்கியில் உள்ள படிமங்களை இங்கும் சேர்க்க வேண்டும்.இலக்கு ஐம்பது படிமங்கள்.கல்பாக்கம் விரிவு படுத்தவேண்டும்
- பாலாஜி 10:51, 27 அக்டோபர் 2010 (UTC)
- கலாநிதி (அன்றைய தினம் எனக்கு வாய்ப்பாக அமைந்தால் ஓரளவு பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.--கலாநிதி 16:04, 27 அக்டோபர் 2010 (UTC))
- இராஜ்குமார் 13:00, 27 அக்டோபர் 2010 (UTC)
- --பரிதிமதி 03:04, 28 அக்டோபர் 2010 (UTC)
- ♠புதுவை சிவா♠ - நேரம் சரியாக அமைந்தால் உங்களுடன் இனைகிறேன் - தகவலுக்கு நன்றி !
- இரா. செல்வராசு - அந்த நாள் அலுவல் பயணத்தில் வெளியூரில் இருப்பேன் என்றாலும் கலந்து கொள்ள முயல்வேன்.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:38, 30 அக்டோபர் 2010 (UTC)
- --Vakeeswaran 03:10, 31 அக்டோபர் 2010 (UTC)
- -- Vatsan34 16:07, 31 அக்டோபர் 2010 (UTC)
- முத்துகுமார்
- சுவடி எண்மிய நூலகம் எண்மிய நூலக மென்பொருள்கள் தொடர்பான புதிய கட்டுரைகளைத் தொடங்க நினைக்கிறோம்
- --Subabala 01:01, 8 நவம்பர் 2010 (UTC)
- கி. கார்த்திகேயன்(என்னிடம் மடிக்கணிணி இல்லை, நான் குறைந்தது 4 கட்டுரைகளாவது என்னுடைய நினைவுக்குச்சியில்[pendrive] கொண்டுவருகிறேன் அல்லது எங்கேனும் இணையமையத்திலிருந்து இருந்து பதிவேற்றுகிறேன்.)
- Chandravathanaa 12:20, 11 நவம்பர் 2010 (UTC)என்னால் இயன்ற பங்களிப்பைத் தருகிறேன்.
- செங்கைப் பொதுவன் --117.193.206.152 21:25, 14 ஆகத்து 2011 (UTC) அவ்வப்போது தோன்றும் இலக்குகள் - தொடங்கியதை முழுமை ஆக்குவேன்.
இலக்குகள் / தலைப்புகள்
தொகு- வார்ப்புரு:சென்னை சுற்றுப் பகுதிகள் விடுபட்ட கட்டுரைகள் உருவாக்க வேண்டும்
- வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் சிகப்பு இணைப்புகளுக்கு கட்டுரைகள் உருவாக்குதல்
குறிப்பிட்ட இலக்குகள் என்று முன்முடிவாக ஏதும் இல்லை. பயனர்கள் அவரவருக்கு விருப்பமான விக்கிப்பணிகளை மேற்கொள்ளலாம். அதே வேளை, பயனர்கள் சில இலக்குகளை முன்வைத்து உழைக்க விரும்பினால் இங்கே குறிப்பிடலாம்.
- விக்கித் திட்டம்:விக்கி மாரத்தான் உருவாக்கலாமா? ஒரு கை பார்க்கலாம் ;)--அராபத்* عرفات 10:55, 19 அக்டோபர் 2010 (UTC)
- உருவாக்கியாச்சு. ஒரு கை பார்க்கலாம் :)--இரவி 11:45, 19 அக்டோபர் 2010 (UTC)
- வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி - 200 கட்டுரைகள்
- கட்டுரைகளைத் தகுந்த பகுப்புகளினுள் இடுதல், புதிய பகுப்புகளை உருவாக்குதல், தேவையற்ற பகுப்புகளை நீக்கல்
- எழுத்து, இலக்கணப் பிழைகளைத் திருத்துதல்
- குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்துதல்
- விக்கியிடை இணைப்புகள் இல்லாத கட்டுரைகளுக்கு தகுந்த இணைப்புகளை இடுதல்
- தமிழாக்கம் செய்ய வேண்டிய 93 கட்டுரைகளையும் மொழிபெயர்த்தல்