விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு
விக்கிபீடியாவை மேம்படுத்த, எப்படிப் பங்களிப்பது?
- இந்தத் தளத்தில் உள்ள எந்த ஒரு கட்டுரையையும் / பக்கத்தையும் நீங்கள் திருத்தி மேம்படுத்தலாம்.
- புதிய கட்டுரைகளை தொடங்கலாம்.
- குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவலாம்.
- கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய உதவலாம்.
- தமிழில் இல்லாத கட்டுரைகளைப் புதிதாக மொழிபெயர்க்கலாம்.
- கட்டுரைகளில் உள்ள இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளைக் களையலாம். அல்லது சீர் செய்யவேண்டிய கட்டுரைகளைச் சீரமைக்கலாம்.
- பொதுவகத்தில் உள்ள பல்லூடகத்தைத் தொடர்புடைய கட்டுரைகளில் இணைத்து மெருகேற்றலாம் அல்லது உங்களால் உருவாக்கப்பட்ட படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றைக் கொண்டும் உதவலாம்.
- ஒரு கட்டுரைகளுக்குள்ளே உள்ள முக்கிய தகவல்களுக்கு உள்ளிணைப்புகள் கொடுக்கலாம்
- கட்டுரைகளைப் பக்க வகைப்படுத்த உதவுவதன் மூலம், விக்கிபீடியாவில் எளிமையாக உலவ உதவலாம்.
- விக்கிப்பீடியாவில் எளிதில் எழுதவும் பங்களிக்கவும் தொழிற்நுட்பக் கருவிகள் அல்லது நீட்சிகளை உருவாக்கலாம்.
- கட்டுரைகளைப் பற்றிய கருத்துகளை உரையாடல் பக்கத்தில் பதிவு செய்வதன் மூலம் கட்டுரையின் தரத்தை மேம்படுத்த உதவலாம்.
- விக்கிபீடியாவை மேம்படுத்துவதறகான கருத்துகளை ஆலமரத்தடியில் பதியலாம்.
- விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கித் திட்டங்களைப் பற்றி அறியாதவர்களுக்குப் பரப்புரை நிகழ்த்தலாம். அல்லது பரப்புரைக்கு உதவும் வளங்களை உருவாக்கலாம்
கற்றுக்கொள்ள பயிற்சிப் பக்கத்தைப் பாருங்கள்.