விக்கிப்பீடியா:பயிற்சி (உள் இணைப்புகள்)
வரவேற்பு | தொகுத்தல் | வடிவமைப்பு | உள்ளிணைப்புகள் | வெளியிணைப்புகள் | பேச்சுப்பக்கம் | கவனம் கொள்க | பதிகை | மறுஆய்வு |
விக்கிப்பீடியா பக்கங்களை இணைப்பது மிகவும் தேவையானதாகும். எளிதாக உருவாக்கப்படும் இவ்விணைப்புகள் பயனர்கள் ஓர் கட்டுரையை படிக்கும்போது அதனுடன் தொடர்புள்ள தகவல்களை பெற பெரிதும் உதவுகிறது. விக்கிப்பீடியாவின் பயனை முழுமையாக்குகிறது.
எப்போது இணைப்புகள் வேண்டும் (வேண்டாம்)
தொகுஓர் கட்டுரைக்கு இணைப்புகள் கொடுப்பது பயனுள்ளது ; அதேநேரம் மிகக்கூடுதலான இணைப்புகள் கவனத்தை திருப்புவதாக அமையும். அதனால் ஓர் கட்டுரையில் இணைக்கப்படும் சொல்லின் முதல் நிகழ்வில் இணைப்பு கொடுக்க வேண்டும். பாயிர பத்திகளில் கூடுதல் இணைப்புகள் இருக்கலாம்.
மற்ற விக்கிப்பீடியா பக்கங்களைக் கண்டு எப்போது இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என அறியுங்கள். சிறப்பாகவும், முழுமையாகவும் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை காண்பீர்களாக.
எப்படி இணைப்பது
தொகுVisual Edit
தொகுஇணைப்பு கொடுக்க வேண்டிய வார்த்தையைத் தேர்வு செய்து ctrl+k கொடுக்கவும்.
Source edit
தொகுமற்றொரு விக்கிப் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்க (உள்ளக இணைப்பு), அப்பக்கத் தலைப்பை இவ்வாறாக இரு சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடவும்:
- [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி]] = விக்கிப்பீடியா:மணல்தொட்டி
அவ்வாறு இணைப்பு கொடுக்கும்போது, பக்கத்தின் தலைப்பிற்கு பதிலாக வேறு உரை இடவேண்டியிருந்தால் பக்கத்தலைப்பினை அடுத்து "|" (SHIFT + பின்சரிவு) குறியினை இட்டு பின் மாற்று உரையை இடலாம். காட்டாக கீழ்வருமாறு செய்யலாம்:
- [[இணைப்பு பக்கம்|காட்டவேண்டிய உரை]] = காட்டவேண்டிய உரை
- எ.கா:[[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]= மணல்தொட்டி
உங்கள் இணைப்புப் பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட பத்திக்கும் இணைப்பு கொடுக்கலாம்:
- [[இணைப்பு பக்கம்#இணைப்பு பத்தி|காட்டவேண்டிய உரை]] = காட்டவேண்டிய உரை
காட்டவேண்டிய உரை தடித்தோ சாய்வெழுத்திலோ காட்டவேண்டியிருந்தால் இணைப்பிற்கான இரட்டை சதுர அடுப்புக்குறிகளை வேண்டிய ஒற்றை மேற்கோள்குறிகளுக்குள் உள்ளடக்கவும். காட்டாக:
- ''[[தமிழ்நாடு]]'' = தமிழ்நாடு
இணைப்புகள் கொடுத்த பிறகு அவை சரியான பக்கங்களுக்கு செல்கின்றனவா என உறுதி செய்து கொள்ளுங்கள். காட்டாக, விடுதலை தன்னுரிமையை குறிக்கும் பக்கத்திற்கு இட்டுச்செல்லும்; நீங்கள் விடுதலை நாளிதழ் அல்லது திரைப்படத்தை எண்ணியிருந்தீர்கள் என்றால் விடுதலை (இதழ்) அல்லது விடுதலை (திரைப்படம்) எனக் கொடுக்க வேண்டும். தவிர "பக்கவழி நெறிப்படுத்தல்" பக்கங்கள் -- ஒரே தலைப்பில் அமையும் பக்கங்களுக்கு அவற்றின் பின்புலத்தை விளக்கி, பயனர்களை நெறிப்படுத்தும் பக்கங்கள் -- இங்கு ஒரே தலைப்பிலுள்ள பக்கங்களின் இணைப்புகள் மட்டுமே இருக்கும்.தவிர பிறமொழி பக்கங்களின் தமிழாக்கம் நீங்கள் எண்ணியதிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.
பகுப்புகள்
தொகுகட்டுரைகளை அவற்றின் பின்புலத்தையொட்டி தொடர்புடைய பகுப்புகளில் இடலாம். [[பகுப்பு:]] என்று தட்டச்சி, முக்கால் நிறுத்தக்குறிக்கும் அடைப்புக்குறிக்கும் இடையில் பகுப்பின் பெயரை இடவும்.
சரியான பகுப்புகளில் இடுவது பயனர்கள் எளிதாக விரும்பிய பக்கங்களைச் சென்றடைய மிகத் தேவையானது. எது சரியான பகுப்பு என அறிய சிறந்த வழி உங்கள் கட்டுரைப்பொருளை ஒத்த கட்டுரைகளை பார்வையிட்டு அவை எந்த பகுப்புகளில் இடப்பட்டுள்ளன என அறிவதே. காட்டாக நீங்கள் ஒரு தாவரம் பற்றிய கட்டுரை எழுதினால் அதனைப்போன்ற மற்றொரு தாவரத்தைப் பற்றிய கட்டுரை எந்த பகுப்பில் உள்ளதோ அதில் இடுவது சரியானதாக இருக்கும்.