விக்கிப்பீடியா:பயிற்சி (பேச்சுப்பக்கம்)
வரவேற்பு | தொகுத்தல் | வடிவமைப்பு | உள்ளிணைப்புகள் | வெளியிணைப்புகள் | பேச்சுப்பக்கம் | கவனம் கொள்க | பதிகை | மறுஆய்வு |
பேச்சுப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் ஓர் சிறப்பியல்பாகும் - விக்கிப்பீடியர்கள் தங்களுக்குள் கட்டுரைகளைப் பற்றியும் மற்ற விடயங்களையும் குறித்து உரையாட ஓர் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. அவற்றை உரையாடிகளாகவோ அரட்டைக்களமாகவோ விவாத மேடையாகவோ பயன்படுத்தக்கூடாது.
கட்டுரையினைக் குறித்த ஐயங்கள், குறைகள் மற்றும் தரமுயர்த்தும் கருத்துகளை கட்டுரையிலேயே இடாமல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்புகள் எழுதி வெளியிடலாம். பக்கத்தின் மேலேயுள்ள கீற்றுகளில் "உரையாடல்" கீற்றை சொடுக்குவதன் மூலம் அடையலாம். இந்தத் தொடுப்பு சிவப்பாக இருப்பினும் கவலைப்படாதீர்கள்; முன்னரே இந்தப் பக்கம் இல்லையாயினும் நீங்கள் உருவாக்கலாம்.
நீங்கள் ஓர் புதிய கருத்தினை இடும்போது, பேச்சுப்பக்கத்தின் இறுதியில் இடவும். விலக்காக, நீங்கள் யாருடைய கருத்துக்காவது எதிர்வினை ஆற்ற விரும்பினால், அவரது கருத்துக்கு அடுத்து இடவும். அவ்வாறு இடும்போது உங்கள் கருத்தினை சற்றே தள்ளி இட, முக்கால் புள்ளியை(:) வரியின் துவக்கத்தில் இடவும்.
உங்கள் கருத்துகளுக்கு அடியில் உங்கள் கையொப்பம் இடுங்கள்: பெயர் மட்டும் இட ~~~ என்றும், அல்லது பெயருடன் நேர முத்திரையும் பதிக்க ~~~~ என்றும் தட்டச்சிடுங்கள் (கீழுள்ள மாதிரி விவாதத்தைப் பார்க்கவும்). இல்லையெனில் உங்கள் கருத்துகள் உங்கள் பெயரின்றி வெளியாகும். விவாதங்களை தொடர்புபடுத்தி படிக்க உதவுவதால்,பெரும்பாலானவர்கள் நேரமுத்திரையுடன் ஒப்பமிடுகிறார்கள். உங்கள் வசதிக்காக தொகுப்பு பெட்டியின் மேல் இதற்கான பொத்தான் ஒன்று தானாகவே "--~~~~" இட கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் பயனர் பெயரை இங்கு பெறலாம்.(இது 100% இலவசம்). உங்களுக்கு கணக்கு இல்லையெனில், அல்லது கணக்கிருந்து உள்பதிகை செய்யாதிருப்பின், உங்கள் கணினியின் இணைய முகவரி (IP address) பயன்படுத்தப்படும்.
பயனர் பேச்சுப் பக்கங்கள்
தொகுஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் மற்ற பங்களிப்பாளர்கள் செய்திகளிட ஓர் பேச்சுப் பக்கம் உள்ளது. இது கணக்கு ஏற்படுத்திக்கொள்ளாத பங்களிப்பாளரையும் உள்ளிட்டது. யாரேனும் உங்களுக்கு செய்தி இட்டிருந்தால், "உங்களுக்கு ஓர் புதிய செய்தி" என்ற குறிப்பினையும் உங்கள் பேச்சுப் பக்கத்திற்குதொடுப்பையும் காணலாம்.
நீங்கள் இருவிதமாக பதிலளிக்கலாம். முதலாவது, நீங்கள் பதிலளிக்கும் பயனரின் பேச்சுப்பக்கத்தில் பதில் செய்தி கொடுக்கலாம். மற்றது, உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே மூலச் செய்திக்கு கீழே இடலாம். இரண்டுமே விக்கிப்பீடியாவில் வழக்கத்தில் உள்ளன. உங்கள் பக்கத்தில் இடும் செய்தியினை, அந்த பயனர் மீண்டும் உங்கள் பக்கத்திற்கு வரவில்லை எனில், பார்க்காதிருக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்காக உங்கள் பேச்சுப் பக்க முகப்பில் ஓர் அறிவிப்பு இடுவது நல்லது.
தள்ளல்
தொகுவரி துவக்கத்தை தள்ளி எடுப்பது வடிவமைப்பினை பல்மடங்கு மேம்படுத்தும். படிப்பவர்களுக்கும் கருத்தோட்டத்தை பின்தொடர எளிதாக இருக்கும். நீங்கள் பதிலளிக்கும் நபரின் இடுகையை விட அடுத்த மட்டத்தில் துவக்குவது பொதுவான வழக்கமாக உள்ளது.
விக்கிப்பீடியாவில் தள்ளல் வகைகள்:
சாதாரண தள்ளல்கள்
தொகுவரித்துவக்க தள்ளலுக்கு மிக எளிதான வழி முக்காற்புள்ளியுடன் (:) துவங்குவது தான். எத்தனை முக்காற்புள்ளிகள் இடுகிறீர்களோ அத்தனை அளவு தள்ளி வரி துவங்கும். நீங்கள் Enter அல்லது Returnஅழுத்தும்வரை அந்த பத்தி தள்ளியே இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்:
- இது இடது புறம் துவங்குகிறது.
- : இது சற்று தள்ளி உள்ளது.
- :: இது மேலும் தள்ளி உள்ளது.
இவ்வாறு காட்டப்படும்:
- இது இடது புறம் துவங்குகிறது.
- இது சற்று தள்ளி உள்ளது.
- இது மேலும் தள்ளி உள்ளது.
- இது சற்று தள்ளி உள்ளது.
புள்ளியிட்ட உரைகள்
தொகுஇவ்வகை சாதாரணமாக பட்டியல்களுக்கு பயன்படுத்தினாலும் தள்ளலுக்கும் பயன்படுத்தலாம். ஓர் புள்ளியிட, உடுக்குறியை (*) பயன்படுத்தவும். தள்ளலைப் போலவே, கூடுதல் உடுக்குறிகள் கூடுதல் தள்ளலுக்கு வழிவகுக்கும். ஓர் சிறிய எடுத்துக்காட்டு:
- * முதல் பட்டியல் உருப்படி
- * இரண்டாம் பட்டியல் உருப்படி
- ** இரண்டாவதன் கீழ் துணை-பட்டியல் உருப்படி
- * மூன்றாம் பட்டியல் உருப்படி
இவ்வாறு காட்டப்படும்:
- முதல் பட்டியல் உருப்படி
- இரண்டாம் பட்டியல் உருப்படி
- இரண்டாவதன் கீழ் துணை-பட்டியல் உருப்படி
- மூன்றாம் பட்டியல் உருப்படி
இலக்கமிடப்பட்ட உரைகள்
தொகுஇலக்கமிடப்பட்ட பட்டியல்களையும் உருவாக்கலாம். இதற்கு, எண் சின்னம் (#) பயனாகிறது. இதனை பொதுவாக வாக்கெடுப்புகளுக்கு பயன்படுத்தலாம். மேலும், இங்கும் எத்தனை #கள் இடுகிறீர்களோ அவ்வளவு தள்ளல் கிடைக்கும். காட்டு:
- # முதல் உருப்படி
- # இரண்டாம் உருப்படி
- ## இரண்டின் கீழ் துணை உருப்படி
- # மூன்றாம் உருப்படி
காட்டப்படுவது:
- முதல் உருப்படி
- இரண்டாம் உருப்படி
- இரண்டின் கீழ் துணை உருப்படி
- மூன்றாம் உருப்படி
மாதிரி உரையாடல்
தொகுமேற்கூறிய வடிவமைப்புகளைக் கொண்ட ஓர் எடுத்துக்காட்டு உரையாடல்:
வணக்கம். இந்த ஆக்கத்தினைப் பற்றி நான் ஓர் கருத்து கூற விரும்புகிறேன். சிவப்பு யானைகள் தேக்கடியில் மட்டுமே காணக்கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.யாரோவிக்கிபயனர் 02:49, 10 சூன் 2003 (UTC)
- நன்று, கடந்த முறை நான் தேக்கடி சென்றிருந்தபோது அங்கிருந்த யானைகள் பச்சை வண்ணத்தில் இருந்தன. — உதவும்பயனர் 17:28, 11 சூன் 2003 (UTC)
- நீங்கள் கூறுவனவற்றிற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். சந்தேகப்பிராணி 20:53, 11 சூன் 2003 (UTC)
- ஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:
- கசகேசரி திங்களிதழ்
- யானைகள் உலகம்
- — உதவும்பயனர் 19:09, 12 சூன் 2003 (UTC)
- ஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:
- நீங்கள் கூறுவனவற்றிற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். சந்தேகப்பிராணி 20:53, 11 சூன் 2003 (UTC)
- நான் அசாமில் வசிக்கிறேன், இங்குள்ள யானைகள் காண்டாமிருகத்தை ஒத்திருக்கின்றன! பின்வரும் பயனர்கள் என்னுடன் உடன்படுகின்றனர்: -நாடோடி 17:28, 14 சூன் 2003 (UTC)
- யானைவிரும்பி 01:22, 15 சூன் 2003 (UTC)
- தலையாட்டிபொம்மை 05:41, 15 சூன் 2003 (UTC)
- பழமைவாதி 18:39, 27 சூன் 2004 (UTC)
கவனிக்க நீங்கள் ஏதேனும் பட்டியலை உங்கள் மறுமொழியில் இட விரும்பினால், ஒவ்வொரு உருப்படியின் முன்னரும் முக்காற்புள்ளி இடவும், காட்டாக:
- ::: ஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:
- ::: * ''கசகேசரி திங்களிதழ்''
- ::: * ''யானைகள் உலகம்''
- ::: ~~~~
தவிர, உங்கள் செய்தியை கையொப்பிட்டு முடிக்க :
- பெயரை மட்டும் ~~~ எழுதலாம் (உதவும்பயனர்), அல்லது
- பெயருடன் நாளையும் இணைத்து குறிப்பிட்டு ~~~~ எழுதலாம் (உதவும்பயனர் 19:09, 12 சூன் 2003 (UTC)), அல்லது
- நாளை மட்டும் ~~~~~ எழுதலாம் (19:09, 12 சூன் 2003 (UTC)).
பொதுவாக பெயருடன் நாளையும் குறிப்பிடுதல் வழக்கம். வாக்களிக்கும்போது பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
மாதிரி உரையாடல் தள்ளல் இன்றி நான்கு கிடைகோடுகள் கொண்டு
தொகுஒவ்வொரு உரையாடலையும் கிடைக்கோடு ---- கொண்டு பிரிக்கும் முறைக்கான முன்மாதிரி. இது பெரும்பான்மையினர் விரும்புவதில்லை.
வணக்கம். இந்த ஆக்கத்தினைப் பற்றி நான் ஓர் கருத்து கூற விரும்புகிறேன். சிவப்பு யானைகள் தேக்கடியில் மட்டுமே காணக்கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.யாரோவிக்கிபயனர் 02:49, 10 சூன் 2003 (UTC)
நன்று, கடந்த முறை நான் தேக்கடி சென்றிருந்தபோது அங்கிருந்த யானைகள் பச்சை வண்ணத்தில் இருந்தன. — உதவும்பயனர் 17:28, 11 சூன் 2003 (UTC)
நீங்கள் கூறுவனவற்றிற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். சந்தேகப்பிராணி 20:53, 11 சூன் 2003 (UTC)
ஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:
- கசகேசரி திங்களிதழ்
- யானைகள் உலகம்
— உதவும்பயனர் 19:09, 12 சூன் 2003 (UTC)
நான் அசாமில் வசிக்கிறேன், இங்குள்ள யானைகள் காண்டாமிருகத்தை ஒத்திருக்கின்றன! பின்வரும் பயனர்கள் என்னுடன் உடன்படுகின்றனர்: -நாடோடி 17:28, 14 சூன் 2003 (UTC)
- யானைவிரும்பி 01:22, 15 சூன் 2003 (UTC)
- தலையாட்டிபொம்மை 05:41, 15 சூன் 2003 (UTC)
- பழமைவாதி 18:39, 27 சூன் 2004 (UTC)
கவனிக்க இத்தகைய வடிவமைப்பில் பட்டியல்களில் முக்காற்புள்ளிகள் ஒவ்வொரு உருப்படியின் முன்னும் பின்னும் இட தேவையில்லை.
சோதனைகள்
தொகுசோதித்துப் பாருங்கள்! இம்முறை, மணல்தொட்டியில் தொகுப்பதற்கு மாற்றாக, உரையாடல் பக்கம்" அல்லது "உரையாடல்" கீற்றை சொடுக்கி உங்கள் செய்தியை இடுங்கள். ஒப்பிடுகையில் உங்கள் பயனர் பெயரை மறக்காதீர்கள். வேறு யாருடைய செய்திக்கும் எதிர்வினை ஆற்றலாம். மறக்காது "முன்தோற்றம் காட்டு" பாவித்து வடிவமைப்பு வேண்டியவண்ணம் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
மற்ற திட்டப் பக்கங்கள்
தொகுவிக்கிப்பீடியா கட்டுமானத்தில் பேச்சுப் பக்கங்களைத் தவிர, வேறு சில திரைக்குபின் பக்க வகைகள் விக்கிப்பீடியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், பிற செயல்பாடுகளுக்காகவும் பயனாகின்றன. இந்த பல்வேறு பகுதிகள் பெயர்வெளி எனக் குறிப்பிடப்படுகின்றன — காட்டாக, " பேச்சு பெயர்வெளி".
விக்கிப்பீடியா பெயர்வெளியில் உள்ள பக்கங்கள் (also known as the "திட்ட பெயர்வெளி") விக்கிப்பீடியா குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தகவல்களை வெளியிடுகின்றன. வார்ப்புரு பக்கதில் உள்ளிட்ட உரை அந்த வார்ப்புரு எந்தக் கட்டுரையில் இடப்பட்டுள்ளதோ அக்கட்டுரையில் வெளியாகும். காட்டாக, வார்ப்புரு:துப்புரவுவில் உள்ள உரை (மீயுரை வடிவமைப்பில்) எந்தக் கட்டுரைகளில் {{துப்புரவு}} என இடப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இடப்படும். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள வார்ப்புருக்களைக் காண விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் பார்க்கவும்.
இந்த திட்டப்பக்கங்கள் அனைத்திற்கும் அவற்றிற்கேயான பேச்சுப் பக்கங்கள் உள்ளன.