விக்கிப்பீடியா:பயிற்சி (கவனிக்க)

வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

விக்கிப்பீடியாவில் தொகுக்கும்போது கவனம் கொள்ள வேண்டியவை சிலவற்றை இங்கு காண்போம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள்

தொகு

உள்ளடக்கம்

தொகு

விக்கிப்பீடியா ஓர் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம். எனவே, கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில், (வலைப்பதிவுகள், உரையாடல் மற்றும் வழக்குதமிழ் நடைகளில் அல்லாது) எழுதப்படுதல் தேவை. கட்டுரையின் பொருள் எவற்றைப் பற்றி இருக்க வேண்டும் என விக்கிப்பீடியாவில் எப்போதும் விவாதங்கள் நடைபெறும். நம்மில் சிலர் உலகின் அனைத்து நபர்களைப்பற்றியும், இடங்களைப்பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் எழுத விரும்புவோம். சில கலைக்களஞ்சியத்திற்கில்லாத ஆக்கங்கள் விக்கிப்பீடியாவின் பிற திட்டங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம்.

எந்த ஓர் கட்டுரை ஓர் சொல்லையோ, சிறு சொற்றொடரையோ விளக்குவதுடன் நிற்குமானால், அவற்றை கலைக்களஞ்சிய கட்டுரையாக விரிவுபடுத்த இயலாதென்றால், அவற்றை விக்சனரி திட்டத்திற்கு அனுப்பலாம்.

ஓர் பொதுபரப்பில் கிடைக்கும் புத்தகத்தின் மூல உரையை அனைவரும் அணுக்கம் பெறுமாறு பதிப்பிக்க விரும்பினால் உங்கள் பங்களிப்பை மற்றொரு விக்கி திட்டம் விக்கி மூலத்திற்கு அனுப்பலாம்.

விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு


விக்கிப்பீடியா புதிய ஆய்வுகள் நடத்தும் இடமல்ல — சக ஆய்வாளர்கள் உடன்படாத எந்த கொள்கையையும் பதிப்பிக்க இயலாது. மேலும் இக்கையேடுகளையும் காண்க:

பயனர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் சாதனைகளையும் எழுதுவதை தவிர்க்க வேண்டுகிறோம்.(உங்கள் சாதனைகள் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தால் யாரேனும் ஒருவர் அதனைப் பற்றி எழுதுவார்.)

நடுநிலை நோக்கு

தொகு

நடுநிலைமை விக்கிபீடியா தளம் மற்றும் தமிழ் விக்கிபீடியாவின் ஆணிவேர் கொள்கைகளில் ஒன்று. "நடுநிலை நோக்கு" அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அனைத்து பார்வைகளையும் எழுதுபவர் நோக்கில் மட்டும் காணாது எந்தவொரு பக்கச்சார்வுமின்றி கொடுக்கப்படவேண்டும். தகவல் களஞ்சியகாக இருக்க வேண்டுமேயன்றி நியாயப்படுத்தும் நடை கூடாது. இதனால் அனைத்து கட்டுரைகளும் 100% "முன்சாய்வு" இல்லாதவை எனக் கூறவியலாது; ஏனெனில் எந்தவொரு விவாதத்திலும் அனைவரும் தங்கள் கூற்றே சரியானது என எண்ணுவர்.

கட்டுரைகளில் சான்றில்லா கருத்துகளை இடலாம், ஆனால் அவற்றை உண்மைத்தரவுகளாக கருத இடமின்றி கூற்றுகள் என அழுத்தமாக குறிப்பிட வேண்டும்.அக்கூற்றினை சொன்னவர்களுக்கு அவற்றை உரிமையாக்குவது நல்ல வழக்கம். காட்டாக, "இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு நம்புகின்றனர்..." அல்லது "இன்னார் கூற்றுப்படி.."

நீங்கள் சர்ச்சைகள் மிக்க சமயம் மற்றும் அரசியல் போன்ற தளங்களில் கட்டுரை ஆக்கவிருந்தால் நடுநிலை பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தை முதலில் படியுங்கள்.

சான்றுகள் தேவை

தொகு

எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. அனைத்து ஆதாரங்களும் "மேற்கோள்கள்" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். கட்டுரையின் தகவல்களுக்கு தொடர்புடைய, படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இணையதளங்களுக்கு "வெளியிணைப்புகள்" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். இதேபோல பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொடர்புடைய புத்தகங்கள் "மேலும் படிக்க"என்ற பத்தியில்,அவை ஏற்கெனவே மேற்கோள்களில் இடம் பெறாவிட்டால் மட்டுமே, பட்டியலிடலாம். நீங்கள் எழுதிவற்றை வாசகர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் மேலதிக தகவல்களைப் பெறவும் சான்றுகள் உதவுகின்றன.

காப்புரிமை

தொகு

அனுமதி பெறாத காப்புரிமை உள்ள ஆக்கங்களை சேர்க்க வேண்டாம். கட்டுரைகளில் தகவல்களை சேர்க்கும்போது, அவை உங்கள் சொற்களால் ஆனவையாக இருக்கட்டும். இணையத்தில் காணக்கிடைக்கும் அனைத்து தகவல்களும், குறிப்பிட்ட இணையதளம் தனியாக இதனை அறிவிக்காதவரை, காப்புரிமை உடையவை என்பதை மறக்காதீர்கள். ஆகையால் எந்த உரையையும் வெட்டி ஒட்டாதீர்கள். படிமங்களையும் பிற ஊடக கோப்புகளையும் எழுத்தில் அனுமதி பெற்றே பாவியுங்கள்..

மேலும் தகவல் அறிய, காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை.

தமிழ் பயன்பாடு

தொகு
1.சமசுகிருத சொற்களை எழுதவும், சில வேற்று மொழி ஒலிப்புக்களைச் தமிழில் குறிக்கவும் சில கிரந்த எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் , , , ஆகும். இவை தவிர கூட்டெழுத்துகளாகிய ஸ்ரீ எழுத்தும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி எழுத பரிந்துரைக்கப்படுகிறது.
2. பிற மொழி சொற்களையும் ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்யும்போது கவனம் கொள்ள வேண்டியவற்றை கீழ்வரும் கையேடுகள் விவரிக்கின்றன:
3.தமிழ் எழுத்து வழக்கில் பெரும்பாலும் ஒரு சீர்தரம் உண்டு. எனினும் உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கிடையே உச்சரிப்பில் வட்டார வழக்கு வேறுபாடுகள் உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் அனைத்து தமிழர்களுக்கும் புரியும் எழுத்து வழக்கே பிற்பற்றப்படுகிறது. இருப்பினும் வட்டார வழக்குகள் சில சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆள், இடம் பெயர்கள் வட்டார எழுத்துக்கூட்டலை பெரும்பாலும் தழுவுகிறது.
  • வட்டார மொழி வழங்கும் கட்டுரைச் சூழலில் வட்டார எழுத்துக்கூட்டல்கள் பயன்படலாம்.
4. புதுப்பக்கங்களை உருவாக்கும்போது அவற்றிற்கு பெயரிடல் மரபினை ஒட்டி தலைப்பிடுக
தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு தமிழ் உரையும் நடையும் பயில வேண்டும் என காண்க:நடைக் கையேடு.

நடத்தை

தொகு

விக்கிப்பீடியாவில் நட்பும் திறந்த மனப்பாங்கும் கொண்ட சூழல் விரும்பப்படுகிறது. அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; சூடான விவாதங்களும் நடைபெறலாம்; ஆனால் பங்களிப்பாளர்கள் பொதுவான குடித்தன்மையை பேணுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு பக்கத்திலோ பயனர் செயல்பாட்டிலோ பிழை கண்டால், அது எளிதில் உங்களால் திருத்தி அமைக்கக் கூடியதாய் இருந்தால், நீங்களே அதை முதலில் திருத்தி விடுங்கள். அதை திருத்துமாறு ஒரு குறிப்பை பதிப்பதை விட இது பயனுள்ளதும் பிற பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுமாகும். இப்பிழை ஓரிரு முறை மட்டுமே ஒரு பயனரால் கவனக் குறைவாகச் செய்திருப்பின் அதை சுட்டிக் காட்டத் தேவையில்லை. பலரும் இப்பிழையை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் தகுந்த உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள். ஒரே பயனர் அதே பிழையை பல முறை அறியாமல் செய்து வந்தால், அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்குங்கள்.

மேலும் தகவல்களுக்கு, பார்க்க விக்கி நற்பழக்கவழக்கங்கள்.

ஆக்கங்கள் உருவாக்கம்

தொகு

நீங்கள் இதுவரை பயின்றவற்றை கவனத்தில் இருத்தி விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்கத் துவங்குங்கள்.

எவ்வாறு கட்டுரை உருவாக்குவது என்பதற்கு, பார்க்க விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்.

கட்டுரைகளுக்கு மறுபெயரிடல்

தொகு

ஓர் கட்டுரையின் பெயர் சரியாக கொடுக்கப்படாதிருந்தால், அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை நகல் எடுத்து ஒட்டி புதிய கட்டுரையை உருவாக்காதீர்கள் — அது முந்தைய தொகுத்தல் வரலாற்றினை புதிய கட்டுரையிலிருந்து பிரித்து விடுகிறது ( காப்புரிமை காரணங்களுக்காக அவற்றை பாதுகாப்பது தேவையாகும்). இதனால் ஓர் பக்கத்தை வேறு பெயருக்கு நகர்த்துதல் விரும்பப்படுகிறது. இதனை உள்பதிகை செய்துள்ள பயனர்களே செய்ய இயலும். உங்கள் முதல் முயற்சியின்போது, நகர்த்துவதற்கான உதவிப்பக்கத்திலுள்ள எச்சரிக்கைகளை கவனமாக படியுங்கள். ஓர் பக்கத்தை நக்த்தும் முன் கவனம் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. ஏதேனும் "பக்கவழி நெறிப்படுத்தல்" பக்கம் நகர்த்தவேண்டியிருந்தால் கூடுதல் கவனம் தேவை. பார்க்க: பக்கவழி நெறிப்படுத்தல்.

மேலும் தகவல்களுக்கு, பார்க்க எவ்வாறு பக்கத்தை நகர்த்துவது (மறுபெயரிடல்).
மணல்தொட்டியில் தொகுத்தலை முயற்சிக்கவும்
பயிற்சியை தொடர்க: பதிகை