தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8


முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகு

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்புதொகு

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டுதொகு

வணக்கம். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியை எளிதாக்குவதற்காக துணைப் பகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதம், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியல், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியலாளர்கள் ஆகியனவும் அடங்கும். இந்தக் கட்டுரைகளில் தங்களின் பங்களிப்பினை வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 2 சனவரி 2023 (UTC)

'பதிவு செய்தல்' பகுதியில் உங்களின் பதிவில் திருத்தம் செய்துள்ளேன். எனது புரிதல் சரியென நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 2 சனவரி 2023 (UTC)

வணக்கம். ஈருறுப்புப் பரவல் கட்டுரையை நிறைவு செய்தமைக்கு நன்றி. செம்மைப்படுத்துதல் முடிந்ததால், {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வார்ப்புருவினை இடுவதன் மூலமாக, செம்மைப்படுத்தியது யார் என்ற விவரம் பதிவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 7 சனவரி 2023 (UTC)

 Y ஆயிற்று

மிக்க நன்றி. இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:30, 7 சனவரி 2023 (UTC)

உதவிதொகு

வணக்கம். இந்தக் கட்டுரையைப் படித்தால், ஒன்றுமே புரியவில்லை. உங்களின் கருத்தினை பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தானியங்கித் தமிழாக்கமாக இருந்தால், நீக்கலாம் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 15 சனவரி 2023 (UTC)

@Selvasivagurunathan m: தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையைச் சரிசெய்ய முடியுமாவெனப் பார்க்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:16, 17 சனவரி 2023 (UTC)
 Y ஆயிற்று

தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 19 சனவரி 2023 (UTC)

வகை நுண்கணிதம்தொகு

வகை நுண்கணிதம் கட்டுரையை செம்மைப்படுத்தியமைக்கு நன்றிகள்.

  • தகவல்: வகையீட்டு நுண்கணிதம் எனும் மிகத் துல்லியமான சேய்ப் பகுப்பு ஏற்கனவே இருப்பதால், நுண்கணிதம் எனும் தாய்ப் பகுப்பை கட்டுரையிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
  • ஐயம்: வகையீட்டு, வகை இவற்றிற்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதா? பகுப்பிற்கு வகையீட்டு நுண்கணிதம் என்பதாக ஏன் தலைப்பிட்டார்கள் என்பதனை அறிந்துகொள்ளவே இந்த வினா.
  • வேண்டுகோள்: செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் அறிவித்து உதவுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 25 சனவரி 2023 (UTC)

வணக்கம். செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் அறிவித்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 28 சனவரி 2023 (UTC) @Selvasivagurunathan m:

  • நுண்கணிதம் என்ற தாய்ப் பகுப்புக்குள்ளும் இக்கட்டுரை அடங்கும். உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் என்ற கட்டுரையானது, தூத்துக்குடி மாவட்டம் என்ற சேய் பகுப்பு, தமிழ்நாட்டின் மாவட்டங்கள் என்ற இரு பகுப்புக்குள்ளும் அடங்குவதைப் போல.
  • சில இடங்களில் வகை நுண்கணிதம் என்றும் வேறுசில இடங்களில் வகையீட்டு நுண்கணிதம் என்றும் வழங்கப்படுகிறது. " differential" என்பது "வகையீடு" என அழைக்கப்படும்.
  • இனிமேல் செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் குறித்துவிடுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:19, 30 சனவரி 2023 (UTC)

உதவிதொகு

வணக்கம். இந்தப் பக்கத்தில் காணப்படும் பெரும்பாலான கணிதக் கட்டுரைகள் தானியங்கித் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்டவை போன்று தெரிகின்றன. அவற்றை குறைந்தபட்சம் குறுங்கட்டுரைகளாக மாற்ற இயலுமா? புதிதாக எழுதுவது எளிது எனக் கருதினால் நீக்குவதற்கு பரிந்துரை செய்யலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இவற்றை கவனித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 26 சனவரி 2023 (UTC)

கவனிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:22, 30 சனவரி 2023 (UTC)

வணக்கம். வளர்த்தெடுக்க இயன்றவற்றை வளர்த்து, மற்றக் கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைத்ததை அறிந்துகொண்டேன். தங்களின் பேருதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 4 பெப்ரவரி 2023 (UTC)

@Selvasivagurunathan m: உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் முன்னெடுக்கும் கிடப்பில் கிடக்கும் கட்டுரைகளின் துப்புரவு பணிகளில் நானும் சிறிதளவு பங்களிக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் தரமற்றக் கட்டுரைகள் களையப்படவேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்படும் உங்கள் முயற்சி நிறைவுபெற வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 04:58, 5 பெப்ரவரி 2023 (UTC)

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 05:11, 5 பெப்ரவரி 2023 (UTC)

உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது, தமிழ் விக்கியின் பலமாகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சிறிய குழுவே தீவிரமாக இயங்கினாலும், சிறப்பான முறையில் பங்களிப்பினைத் தருவது நமது கூடுதல் பலம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:05, 5 பெப்ரவரி 2023 (UTC)

  விருப்பம் Booradleyp1 (பேச்சு) 03:44, 6 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp1&oldid=3651918" இருந்து மீள்விக்கப்பட்டது