விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2023

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by சத்திரத்தான் in topic பரிந்துரை

பேச்சுப் பக்கத்தில் முதற்கட்டமாக உரையாடல்களை நடத்திய பிறகு, திட்டப் பக்கம் இற்றைப்படுத்தப்படும்.

பரிந்துரை

தொகு

2023 ஆம் ஆண்டிற்கான துணைத் திட்டங்களான (1) விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023, (2) விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023 ஆகியவற்றை முடுக்கிவிட தொடர்-தொகுப்பு எனும் முதன்மைத் திட்டம் உதவும் என்பது எனது திடமான எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:45, 20 திசம்பர் 2022 (UTC)Reply

  விருப்பம், மே மாதம் வைக்கலாம். ஸ்ரீதர். ஞா (✉) 16:27, 20 திசம்பர் 2022 (UTC)Reply
  விருப்பம், மே மாதத்தில் நடத்தலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 02:22, 23 திசம்பர் 2022 (UTC)Reply
  • நல்ல முயற்சி. மாவட்டம்தோறும் புதியவர்களை அழைத்துப் பயிற்சியளிப்பது கடினம், ஆனால் மாணவர்களைத் திரட்டிப் பயிற்சியளிப்பது எளிது. தமிழ் நாட்டில் கணித்தமிழ்ப் பேரவை மூலமாக விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகள் மட்டுமே நூற்றுக் கணக்கான இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை மாணவர்களை எழுதத் தூண்டவில்லை. எனவே எத்தகைய பயிற்சியை அளிக்கலாம் என்று நமக்குள் ஒரு திட்டமும் பயிற்சியும் எடுத்துக் கொண்டு, அதைப் புதுப் பயனர்களுக்கு அளிக்கலாம். பொதுவாக முற்றிலும் புதிய மாணவர்கள் (ஒரு சிலரைத் தவிர) பயிற்சி பெற்ற போதே பங்களிப்பது அரிது. எனவே உள்ளகப் பயிற்சி போல இலக்கு வைத்துப் பயிற்சி அளிக்க முடியுமா என்றும் யோசிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:30, 26 திசம்பர் 2022 (UTC)Reply
@Neechalkaran: தங்களின் கருத்துகளுக்கு நன்றி. இந்தக் கருத்துகளையும் கவனத்திற் கொண்டு, திட்டமிடலைத் தொடர்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 15 சனவரி 2023 (UTC)Reply
வணக்கம், வேங்கைத் திட்ட நிகழ்வின் போது இது தொடர்பாக கலந்துரையாடிய போது , ஏதேனும் ஓர் ஊரில் பரிசோதனை முயற்சியாக இந்த நிகழ்வினை நடத்திப் பார்க்கலாம், அப்போது எழும் சிக்கல்களை அதற்குப் பிறகான தொடர் தொகுப்பில் களைய முற்படலாம் எனவும் அது பயிற்சியாளர்களுக்கும் நிகழ்வினை சிறப்பாக கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தனர். எனவே முதல் நிகழ்வை தஞ்சையில் நடத்தலாம் என கருதுகிறேன்.@சத்திரத்தான்: தங்களது கருத்துக்களை அறியத் தரவும். ஸ்ரீதர். ஞா (✉) 07:18, 31 சனவரி 2023 (UTC)Reply
அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் பேசியுள்ளேன், சம்மதம் தெரிவித்துள்ளனர். நாள் மற்றும் பயிற்சிக்கான தேவையினைத் தெரிவித்தால் ஆயத்தப் வேலைகளைத் தொடரலாம் சத்திரத்தான் (பேச்சு) 08:38, 31 சனவரி 2023 (UTC)Reply

ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியின் பகுதிகளாக ஓரிரு நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடுகிறோம். அதில் பெறும் கற்றல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் பல நிகழ்வுகளை நடத்த இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:09, 17 ஏப்ரல் 2023 (UTC)

நிகழ்விற்கான திட்டமிடல்

தொகு

தொடர்-தொகுப்பிற்கான வரையறையோடு தொடர்புபடுத்துதல்

தொகு
  1. சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய பெருநகரங்களில் அருகாமையில் குடியிருக்கும் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்வினை நடத்தலாம். சிறுநகரங்கள் அல்லது சிற்றூர்களிலும் நடத்தலாம் (நேரில் சந்தித்து ஒன்றிணைதல்). இணையம் வழியாக இணைந்து நிகழ்வின் போக்கு குறித்துப் பேசலாம் (இணையவழி ஒன்றிணைதல்).
  2. தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளாகட்டும், மேற்கோள்கள் ஒன்றுகூட இல்லாத கட்டுரைகள் ஆகட்டும், பெருமளவில் அறிவியற் கட்டுரைகள் இருக்கும். எனவே, அறிவியல் எனும் தலைப்பினைக் கருதலாம் (ஒரு குறிப்பிட்ட தலைப்பினைத் தேர்ந்தெடுத்து கவனக்குவியம் கொள்ளுதல்).
  3. புதிய பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகளைத் தந்து அவர்களின் மூலமாக மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய இயலும். அதற்கேற்ப பயிற்சித் திட்டத்தை தயாரிக்க வேண்டும் (விக்கிப்பீடியா இயங்குவது குறித்து பயனர்கள் புரிந்துகொள்ளல்). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 20 திசம்பர் 2022 (UTC)Reply

நிகழ்வு அமைப்பு

தொகு
  1. ஒரு ஊரில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தொடர்ந்து நிகழ்வு நடக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு ஊரில் நடத்தலாம்.
  3. ஒரு மாதத்தின் 4 வாரங்களை கருத்திற் கொள்ளலாம். ஒரு மாதத்தில் பல நிகழ்வுகளை நடத்திக்கொள்ளும் திட்டத்தை விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்கிறது.
  4. முதல் நாள் காலையில் விக்கிப்பீடியா அறிமுகம். பகலுணவிற்குப் பிறகு தொகுத்தலுக்கான பயிற்சி.
  5. இரண்டாம் நாள் முழுவதும் பயிற்சியாளர்களின் உறுதுணையோடு புதுப் பயனர்கள் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல்.

இலக்கு / குறிக்கோள்

தொகு
  1. 5 நிகழ்வுகள் (5 ஊர்கள்)
  2. ஒவ்வொரு ஊரிலும் 40 புதுப் பயனர்கள், 10 தற்போதைய பயனர்கள் (பயிற்சியாளர்கள்) கலந்துகொள்ள வேண்டும்.
  3. புதிய கட்டுரைகளை உருவாக்கும் எண்ணம் இல்லை.
  4. 40 புதுப் பயனர்கள் மூலமாக முதல் நாளில் 40 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும்.(ஒருவருக்கு 1 கட்டுரை)
  5. 40 புதுப் பயனர்கள் மூலமாக இரண்டாம் நாளில் 200 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். (ஒருவருக்கு 5 கட்டுரை)
  6. இணையம் வழியாக பங்குபெறும் பயனர்களிடம் மொத்தமாக 60 கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைக்கலாம்.
  7. (5*240)+(5*60) = 1,200+300 = 1,500 கட்டுரைகள்

தயார் நிலை

தொகு
  • 3,000 தலைப்புகளைக் கொண்ட ஒரு பட்டியல்
  1. ஒவ்வொரு ஊருக்கும் 500 தலைப்புகளைக் கொண்ட ஒரு பட்டியல். இந்தப் பட்டியலில் 240 தலைப்புகளை எடுத்து மேம்படுத்தலாம்.
  2. இணையம் வழியாக பங்குபெறுபவர்களுக்கென 500 தலைப்புகளைக் கொண்ட ஒரு பட்டியல்.

புதுப் பயனர்கள்

தொகு
  1. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள்
  2. கல்லூரி ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் என்றால் கல்லூரிகளில் நிகழ்வினை நடத்தலாம்.
  3. பள்ளி ஆசிரியர்கள் என்றால் எங்கு நடத்துவது என்பதனைப் பார்க்க வேண்டும்.
  4. ஒரு ஊரில் கல்லூரி மாணவர்களை அழைத்தால், இன்னொரு ஊரில் பள்ளி ஆசிரியர்களை அழைக்கலாம். இன்னொரு ஊரில் கல்லூரி ஆசிரியர்கள்.

கல்லூரி மாணவர்கள் எனக் கருதினால் ...

தொகு
  1. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், உயிர் தொழினுட்பம், நுண் உயிரியல், கணினி அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களை அழைக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கலாம்.

நிகழ்விடங்கள் குறித்தான முன்வரைவுத் தொகுப்பு

தொகு
எண் ஊர் ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்புகள்
1 சென்னை மா. செல்வசிவகுருநாதன்
2 மதுரை மதுரை தியாகராசர் கல்லூரியில், அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கு செல்வசிவகுருநாதன் முயற்சிகள் மேற்கோள்கிறார்.
3 திருச்சி சத்திரத்தான்
4 தஞ்சாவூர் சத்திரத்தான் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி
5 புதுக்கோட்டை சத்திரத்தான் ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
6 திருநெல்வேலி சத்திரத்தான், இரா. பாலா
7 சேலம் பாலசுப்ரமணியன் சேலம் நகரில் ஏதேனும் ஒரு பள்ளியில், சிறந்ததொரு கணினிக் கூடத்தை ஏற்பாடு செய்து தருவதாக பாலசுப்ரமணியன் உறுதி தந்துள்ளார். பள்ளி ஆசிரியர்களை புதுப் பயனர்களாக அழைக்கலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களில் ஏதேனும் 5 ஊர்களை கவனத்திற் கொள்ளலாம்.

நிதி நல்கை

தொகு

பயனர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் நிதி நல்கை பெறமுடியுமானால் சேலத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில் இதை நடத்த விருப்பம். --Balu1967 (பேச்சு) 01:09, 22 திசம்பர் 2022 (UTC)Reply

@Balu1967:நிதியுதவி இருந்தால்தான் இத்திட்டத்தை நடத்த இயலும் என்பதால், திட்ட முன்வரைவு முடிந்ததும் விண்ணப்பிக்க இருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 22 திசம்பர் 2022 (UTC)Reply

கல்லூரிகளில் பயிற்சி

தொகு
  • பயிற்சியாளர்கள் (முழு நிதியுதவி-போக்குவரத்து, தங்குதல்), உள்ளூர் பங்கேற்பாளர்கள் என்ற அடிப்படையில் பயனர்களுக்கு பயிற்சியின் போது அடிப்படை வசதிகளுக்கான (மதிய உணவு/தேநீர்) நிதியுதவி வழங்கப்படும் நிலையில் திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை ஒருங்கிணைக்க விருப்பம்.
  • கல்லூரி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா குறித்த ஒருநாள் பயிற்சியினையும் நடத்த பரிந்துரைக்கின்றேன். --சத்திரத்தான் (பேச்சு) 02:00, 22 திசம்பர் 2022 (UTC)Reply
  • நானறிந்த வரையில், திருநெல்வேலிப் பகுதிகளில் விக்கிப்பீடியாவை ஒரு திட்டமாக நாம் கொண்டு செல்லவில்லை. இதற்கு நீங்கள் உதவினால், மிகுந்த மகிழ்ச்சி.
  • நிதியுதவி இருந்தால்தான் இத்திட்டத்தை நடத்த இயலும் என்பதால், திட்ட முன்வரைவு முடிந்ததும் விண்ணப்பிக்க இருக்கிறோம்.
  • கல்லூரி ஆசிரியர்கள் 2 நாள் நிகழ்வில் கலந்துகொள்ள இயலுமானால், ஏதேனும் ஒரு ஊரில் அவர்களுக்கென்றே இந்த நிகழ்வை நடத்தலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:25, 22 திசம்பர் 2022 (UTC)Reply

விக்கிமீடியா அறக்கட்டளையில் நிதியுதவி கேட்டல்.

தொகு

விக்கிமீடியா அறக்கட்டளையில் (Rapid Grant) திட்டத்தின் மூலம் நிதியுதவி கேட்கலாம். ஐநூறு முதல் ஐந்தாயிரம் டாலர் வரை கேட்கலாம். தேவைப்படும் நிதிக்கான காரணம், இதனால் விக்கிக்கு ஏற்படும் நன்மைகளை விளக்கினால் நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிக் கோரிக்கை ஏற்கப்பட்டால் ஒரிரு மாதத்தில் நிதி கிடைக்கும். நிதியுதவி கேட்பதற்கு முன்பு, இந்த விவரங்களை ஆலமரத்தடியில் இட்டு அதற்கான இணைப்பையும் விண்ணப்பப் படிவத்தில் கொடுத்தால் நல்லது. இங்கு விண்ணப்பிக்கலாம். இங்கு ஆங்கிலத்தில் அல்லது தமிழில் விண்ணப்பிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு ஏற்கனவே நிதியளிக்கப்பட்ட இது போன்ற திட்டங்களைப் பார்க்கலாம். மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:46, 22 திசம்பர் 2022 (UTC)Reply

விக்கிமீடியா அமைப்பிடமிருந்து நிதி பெறுதல்

தொகு
  1. பயிற்சியாளர்களுக்குரிய பயணச் செலவுகள், தங்குமிடச் செலவுகள், உணவுச் செலவுகள்
  2. புதுப் பயனர்களுக்கான உணவு மற்றும் கவனிப்புச் செலவுகள்
  3. குறிப்பேடு, எழுதுகோல்கள் வழங்குதல்
  4. கலந்துகொண்டமைக்கு ஒரு நினைவுப் பரிசு
  5. சான்றிதழ் வழங்குதல்

உதவிக் குறிப்புகள்

தொகு
  1. நிதி உதவிக்கு திட்டமிடல்
  2. மாதிரிகள்
  3. மாதிரி 1
  4. மாதிரி 2

ஒருங்கிணைக்கவோ அல்லது பயிற்சியாளராக பங்களிக்கவோ விருப்பமுள்ளவர்கள்

தொகு

இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள், பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள் தங்களது பெயரினை இங்கு பதிவிடலாம்.

அவரவரின் வசதிக்கேற்ப சொந்த ஊர், அருகிலுள்ள ஊர் அல்லது தொலைவிலுள்ள ஊர் (தமிழ்நாட்டிற்குள்) இவற்றில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம். இப்போதைக்கு, ஏற்க விருப்பமுள்ள பொறுப்பு குறித்து குறிப்பிட்டால் போதுமானது. திட்ட வரைவு ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும், விரிவாகத் திட்டமிடலாம்.

  1. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 23 திசம்பர் 2022 (UTC)Reply
  2. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் ---சத்திரத்தான் (பேச்சு) 12:24, 26 திசம்பர் 2022 (UTC)Reply
  3. வாய்ப்பிருந்தால் பயிற்சியாளராக ஈடுபட விரும்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:32, 26 திசம்பர் 2022 (UTC)Reply
  4. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 07:47, 27 திசம்பர் 2022 (UTC)Reply
  5. வாய்ப்பிருந்தால் பயிற்சியாளராக ஈடுபட விரும்புகிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:01, 27 திசம்பர் 2022 (UTC)Reply
  6. பயிற்சியாளர். பல துறைகளில் பற்பல சிறப்பான கட்டுரைகளை s:பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள் என்ற விக்கிமூலப் பகுப்பில் காணலாம். குறிப்பாக அறிவியல் கலைக்களஞ்சியங்கள். அதிலுள்ள கட்டுரைகளின் வடிவம், விக்கிப்பீடிய கட்டுரை வடிவத்திற்கு ஏற்ற வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னமே, பல்துறை அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு கொண்டு வருவதால் நமது தரம் அதிகமாகும். தரமே நிரந்தரம், அல்லவா? அங்கிருந்து கட்டுரைகளை எப்படி இங்கு கொணர்வது என்பதற்கான பயிற்சியை யாருக்கு விருப்பம் உள்ளதோ, அவர்களுக்கு தர அணியமாக உள்ளேன். புதியவர்களுக்கு படத்தை பார்த்து கட்டுரைகளை உருவாக்குவது எளிது. புதியவர்களை நாம் நிலைநிறுத்திக் கொள்ள இதுவே சிறந்த வழி. இப்படிதான் பெண்களின் பங்கு விக்கிமூலத்தில் அதிகமாக உள்ளது. இங்கு? இதற்கு முன் பல கட்டுரைகளை, பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள் என்ற பகுப்பில் உருவாக்கியுள்ளேன். s:அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf என்ற 800 பக்கங்கள் உள்ள நூல், எழுத்தாவணமாக உள்ளது. எனினும், இதனை விட அறிவியல் களஞ்சியம் சிறப்பாகும். இந்நோக்கத்தின் படிநிலைகளை ஆயந்தறிய, நாம் கலந்துரையாடுவது நலமென்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 04:10, 28 திசம்பர் 2022 (UTC)Reply
  7. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் (திருச்சி, திருநெல்வேலி, கோவை ) ஸ்ரீதர். ஞா (✉) 17:17, 28 திசம்பர் 2022 (UTC)Reply
  8. பயிற்சியாளர்.--இரா. பாலாபேச்சு 01:46, 29 திசம்பர் 2022 (UTC)Reply
  9. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் ThIyAGU 06:47, 4 சனவரி 2023 (UTC)
  10. என்னால் வெளியில் வரவியலவில்லை. எனவே இதில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:37, 4 சனவரி 2023 (UTC)Reply
  11. ஒருங்கிணைபாளர், பயிற்சியாளர் --அபிராமி (பேச்சு) 17:16, 26 பெப்ரவரி 2023 (UTC)

திட்டத்தின் தற்போதைய நிலை

தொகு

திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கு கூடுதல் காலம் தேவைப்படுகிறது. மேலும், சொந்த வேலைகள் காரணமாக இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. வாய்ப்பு அமையும்போது மீண்டும் முன்னெடுக்கிறேன். ஆர்வமிருப்பின், மற்ற பயனர்கள் தொடரலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:57, 14 பெப்ரவரி 2023 (UTC)

முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மிகக் கூடுதலான உழைப்பும், தீவிர திட்டமிடலும் அவசியமாகிறது. இன்றைய சூழலில், தன்னார்வலர்களுக்கு இவை சாத்தியமன்று. அவரவருக்கு தொழில்முறை பணி / சொந்த வேலைகள் என இருக்கின்றன. எனவே சிறிய அளவில் பயிலரங்குகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, பயிலரங்குகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்-தொகுப்பு நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் எடுப்போம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 20 ஏப்ரல் 2023 (UTC)

Return to the project page "தொடர்-தொகுப்பு 2023".