பயனர்பெட்டிகள்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 6 மாதங்கள்,  13 நாட்கள் ஆகின்றன.
கு. அருளரசன்

என் பெயர் கு. அருளரசன். நான் தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த தமிழன். அரசியல் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இளம் வயதிலிருந்தே தமிழ் மீது பற்றுகொண்டவன். உலகின் எந்த மூலையிலாவது தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு உருவாகவேண்டும் என்பது என் ஆசை. நான் முதன் முதலில் தமி்ழ் விக்கிபீடியா குறித்து எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரை வழியாக அறிந்துகொண்டேன். தமிழுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்று புரிந்துகொண்டேன். 2014 முதல் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதிவருகிறேன். தமிழிலேயே ஒருவர் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் தமிழ் வளர்ச்சியடையவேண்டும் என்பதே என் நோக்கமாக உள்ளது. எனக்கு பிடித்தத் துறையாக தமிழ், தமிழர், தமிழர் வரலாறு போன்றவை உள்ளன. என் மின்னஞ்சல் முகவரி arulghsr@gmail.com

முதல் பக்கத்தில் இடம்பெற்ற நான் உருவாக்கிய கட்டுரைகள்






























உங்களுக்குத் தெரியுமா திட்டத்தில் இடம்பெற்ற என் பங்களிப்புகள்











பங்களிப்பாளர்

வணக்கம், Arularasan. G!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:57, 31 சனவரி 2015 (UTC)

  ஆயிரவர் பதக்கம்
1000+ கட்டுரைகள் உருவாக்கி தமிழ் விக்கி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளீர்கள். என் வாழ்த்துக்கள்! உங்கள் முனைப்பான பணி தொடர வாழ்த்துக்கள்! --AntanO 02:24, 2 திசம்பர் 2016 (UTC)
  ஈராயிரவர் பதக்கம்
வணக்கம் அருளரசன் தாங்கள் பல்வேறு தலைப்புகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
  1. ஸ்ரீ (talk) 05:46, 13 மே 2019 (UTC)
 
அருளரசன், தொடர்ந்த உங்கள் பங்களிப்பின் மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் 3000 கட்டுரைகள் என்ற இலக்கினைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக இப்பதக்கம் வழங்கப்பட்டாலும் உங்கள் சாதனைப் பயணத்தில் இந்தப் படிநிலை குறிப்பிடப்பட்டே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதக்கத்தினை அன்புடனும், நன்றியுடனும் வழங்குகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 01:59, 11 சனவரி 2021 (UTC)
  நான்காயிரவர்
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்த உழைப்பால் 4000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கி இணையத் தமிழுக்கு இடையறா சேவை செய்து வரும் இனியவருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள். TNSE Mahalingam VNR (பேச்சு) 09:48, 20 சூன் 2021 (UTC)
  ஐந்தாயிரவர் பதக்கம்
அன்பிற்குரிய அருளரசன், நீடித்த உழைப்பாலும் தொடர் ஈடுபாட்டாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஐந்தாயிரம் கட்டுரைகளைத் தொடங்கி வளம் சேர்த்துள்ளீர்கள். உங்களின் உழைப்பைப் பாராட்டி இந்தப் பதக்கத்தை அன்புடன் அளிக்கிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 11:36, 9 ஆகத்து 2022 (UTC)
பெற்ற பதக்கங்கள்
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம்! பாராட்டுகளும், நன்றிகளும்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 21 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 05:55, 25 சூலை 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறப்புப் பதக்கம்
பறவைகள் பற்றிய கட்டுரைகளை தமிழில் உருவாக்கி வருவதை பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:06, 20 ஆகத்து 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 17:28, 2 சூன் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:09, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  மெய்வாழ்வுப் பதக்கம்
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
2017 விக்கிக்கோப்பையின் வெற்றியாளர்களில் ஐந்தாவதாக உள்ள தாங்கள் தமிழ்நாடு, இந்தியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி அசத்தினீர்கள் என்பதை யான் அறிவேன். மெம்மேலும் தங்கள் அளப்பெரிய பணி தொடர வாழ்த்துகள். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் ([[பயனர்

பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:26, 3 சூன் 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
தர்மபுரி, கிருசுணகிரி மாவட்டங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து நெறிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாட்சாப்பு மூலமும் அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழி காட்ட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 06:22, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 07:23, 11 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:17, 8 சூலை 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 
 

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

  சிறப்புப் பதக்கம்
எனக்குத் தெரிந்து தற்போது விக்கிப்பீடியா மட்டுமல்லாது விக்கிமேற்கோள்கள், விக்கிமூலம் போன்ற திட்டங்களிலும் தங்களால் இயன்ற அளவு பங்களித்துவரும் நபர்களில் நீங்களும் ஒருவர். அதுமட்டுமல்லாது அவ்வாறு மற்ற திட்டங்களில் கானும் தகவல்களை தொடர்புடைய திட்டங்களிலும் சேர்த்து வரும் தங்களது பங்களிப்பிற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 14:45, 20 அக்டோபர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு


  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)
  • 👌 - மாநகரம்கட்டுரை தொடக்கம் யாங்சி ஆறு வரைக்கும் சிறப்பாக 30 கட்டுரைகளை விரிவாக்கி, முதல் மூன்று பரிசுகளை வெல்வதற்கான தகுதியினை அடைந்துள்ளீர்கள்.
  • 👍 - ஆனாலும், 30 உடன் நின்றுவிடாது 60, 70, 80, 100 என தொடர்ந்து பல கட்டுரைகளையும் விரிவாக்குங்கள். அது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தொடர்ந்து அசத்தலாகப் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!...


  இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.


 
இந்தப் பயனர் புரூவு இட்டைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் மேற்கோள்களைச் சுலபமாக்குகிறார்.
தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

 இந்தப் பயனர் தமிழக வரலாற்றில் பயிற்சி பெற்றவர்


 இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
 இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arularasan._G&oldid=3908535" இலிருந்து மீள்விக்கப்பட்டது