இப்போக்கிரட்டீசு உறுதிமொழி

மருத்துவர்கள் ஏற்கும் உறுதிமொழி

இப்போக்கிரட்டீசு உறுதிமொழி என்பது வரலாற்று ரீதியாக மருத்துவர்களால் ஏற்கப்பட்டுவரும் நன்னெறி உறுதிமொழியாகும். இது மிகவும் பரவலாக அறியப்பட்ட கிரேக்க மருத்துவ நூல்களில் இடம்பெற்ற ஒன்றாகும். இதன் அசல் வடிவத்தில், நோய்களைக் குணப்படுத்தக்கூடிய கடவுளர்கள் என்று கிரேக்கர்கள் நம்பிய வெவ்வேறு கடவுளர்கள், தேவதைகளின் பெயர்களால் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கத்திய உலகில் மருத்துவ நன்நெறிகளின் ஆரம்பகால வெளிப்பாடாக இந்த உறுதிமொழி உள்ளது. இது மருத்துவ நன்நெறிகளின் பல கொள்கைகளை வலியுறுத்துகிறது. அவை இன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் மருத்துவ இரகசியம் மற்றும் நோயாளிக்கு தீங்கு செய்யாமை ஆகியவை அடங்கும். மருத்துவ நன்நெறிக்கு தொடர்ந்து வழிகாட்டியாக அவற்றைத் தெரிவிக்கும் சில கொள்கைகளின் ஆரம்பகால வெளிப்பாடாக, பண்டைய இந்த உரை வரலாற்று மற்றும் குறியீட்டு விழுமியங்களை விட அதிகமாக உள்ளது. இந்த உறுதிமொழியின் மாற்றியமைக்கப்பட்ட வடிவ உறுதிமொழியை ஏற்பது பல நாடுகளில் மருத்துவ பட்டதாரிகளுக்கு ஒரு சடங்காகவே உள்ளது. அதனால் இதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தும் ஏற்பட்டிருக்கிறது. இந்த உறுதிமொழியை மீறி நடந்த மருத்துவரைத் தண்டிக்கலாம் என்று சட்டங்கள் கூறுகின்றன.

கிரேக்க மருத்துவர் இப்போக்கிரட்டீசு (கிமு 460-370) பெயரிலான உறுதிமொழி பாரம்பரியமாக ஏற்கப்படுகிறது.

அசல் உறுதிமொழி கிமு ஐந்தாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐயோனிக் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.[1] இது பாரம்பரியமாக கிரேக்க மருத்துவர் இப்போகிரட்டீசால் கூறப்பட்டது என்றாலும், இது பண்டைய நூலான ஹிப்போகிரட்டிக் கார்பசில் சேர்க்கப்பட்டாலும், பெரும்பாலான தற்கால அறிஞர்கள் அது இப்போகிரட்டீசால் எழுதப்பட்டது எனக் கருதவில்லை.

உறுதிமொழி உரை

தொகு

எஞ்சியிருக்கும் ஆரம்பகால பிரதி

தொகு
 
எகிப்தின் பாப்பிரஸ் ஆக்ஸிரிஞ்ச்சில் கண்டறியப்பட்ட 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்போகிரட்டீசு உறுதிமொழியின் ஒரு பகுதி.

தற்போதைக்கு கிடைத்துள்ள உறுதிமொழியின் மிகப் பழமையான பகுதியின் துணுக்கானது கி.பி 275 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். தற்போதுள்ள மிகப் பழமையான பதிப்பு சுமார் 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இது வாடிகன் நூலகத்தில் உள்ளது.[2] பொதுவாக மேற்கோள் காட்டப்படும் பதிப்பு, 1595 தேதியிட்டதாகும். அது கொய்னி கிரேக்க மொழியில் லத்தீன் மொழிபெயர்ப்புடன் காணப்படுகிறது.[3][4]

1923 ஆம் ஆண்டு லோப் பதிப்பில் காணப்படும் கிரேக்க மொழி இப்போகிரட்டீசு உறுதிமொழி, அதற்கடுத்து அதன் ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்புகள்:

ὄμνυμι Ἀπόλλωνα ἰητρὸν καὶ Ἀσκληπιὸν καὶ Ὑγείαν καὶ Πανάκειαν καὶ θεοὺς πάντας τε καὶ πάσας, ἵστορας ποιεύμενος, ἐπιτελέα ποιήσειν κατὰ δύναμιν καὶ κρίσιν ἐμὴν ὅρκον τόνδε καὶ συγγραφὴν τήνδε:

ἡγήσεσθαι μὲν τὸν διδάξαντά με τὴν τέχνην ταύτην ἴσα γενέτῃσιν ἐμοῖς, καὶ βίου κοινώσεσθαι, καὶ χρεῶν χρηΐζοντι μετάδοσιν ποιήσεσθαι, καὶ γένος τὸ ἐξ αὐτοῦ ἀδελφοῖς ἴσον ἐπικρινεῖν ἄρρεσι, καὶ διδάξειν τὴν τέχνην ταύτην, ἢν χρηΐζωσι μανθάνειν, ἄνευ μισθοῦ καὶ συγγραφῆς, παραγγελίης τε καὶ ἀκροήσιος καὶ τῆς λοίπης ἁπάσης μαθήσιος μετάδοσιν ποιήσεσθαι υἱοῖς τε ἐμοῖς καὶ τοῖς τοῦ ἐμὲ διδάξαντος, καὶ μαθητῇσι συγγεγραμμένοις τε καὶ ὡρκισμένοις νόμῳ ἰητρικῷ, ἄλλῳ δὲ οὐδενί.

διαιτήμασί τε χρήσομαι ἐπ᾽ ὠφελείῃ καμνόντων κατὰ δύναμιν καὶ κρίσιν ἐμήν, ἐπὶ δηλήσει δὲ καὶ ἀδικίῃ εἴρξειν.

οὐ δώσω δὲ οὐδὲ φάρμακον οὐδενὶ αἰτηθεὶς θανάσιμον, οὐδὲ ὑφηγήσομαι συμβουλίην τοιήνδε: ὁμοίως δὲ οὐδὲ γυναικὶ πεσσὸν φθόριον δώσω.

ἁγνῶς δὲ καὶ ὁσίως διατηρήσω βίον τὸν ἐμὸν καὶ τέχνην τὴν ἐμήν.

οὐ τεμέω δὲ οὐδὲ μὴν λιθιῶντας, ἐκχωρήσω δὲ ἐργάτῃσιν ἀνδράσι πρήξιος τῆσδε.

ἐς οἰκίας δὲ ὁκόσας ἂν ἐσίω, ἐσελεύσομαι ἐπ᾽ ὠφελείῃ καμνόντων, ἐκτὸς ἐὼν πάσης ἀδικίης ἑκουσίης καὶ φθορίης, τῆς τε ἄλλης καὶ ἀφροδισίων ἔργων ἐπί τε γυναικείων σωμάτων καὶ ἀνδρῴων, ἐλευθέρων τε καὶ δούλων.

ἃ δ᾽ ἂν ἐνθεραπείῃ ἴδω ἢ ἀκούσω, ἢ καὶ ἄνευ θεραπείης κατὰ βίον ἀνθρώπων, ἃ μὴ χρή ποτε ἐκλαλεῖσθαι ἔξω, σιγήσομαι, ἄρρητα ἡγεύμενος εἶναι τὰ τοιαῦτα.

ὅρκον μὲν οὖν μοι τόνδε ἐπιτελέα ποιέοντι, καὶ μὴ συγχέοντι, εἴη ἐπαύρασθαι καὶ βίου καὶ τέχνης δοξαζομένῳ παρὰ πᾶσιν ἀνθρώποις ἐς τὸν αἰεὶ χρόνον: παραβαίνοντι δὲ καὶ ἐπιορκέοντι, τἀναντία τούτων.[5]

I swear by Apollo Healer, by Asclepius, by Hygieia, by Panacea, and by all the gods and goddesses, making them my witnesses, that I will carry out, according to my ability and judgment, this oath and this indenture.

To hold my teacher in this art equal to my own parents; to make him partner in my livelihood; when he is in need of money to share mine with him; to consider his family as my own brothers, and to teach them this art, if they want to learn it, without fee or indenture; to impart precept, oral instruction, and all other instruction to my own sons, the sons of my teacher, and to indentured pupils who have taken the Healer’s oath, but to nobody else.

I will use those dietary regimens which will benefit my patients according to my greatest ability and judgment, and I will do no harm or injustice to them.[6] Neither will I administer a poison to anybody when asked to do so, nor will I suggest such a course. Similarly I will not give to a woman a pessary to cause abortion. But I will keep pure and holy both my life and my art. I will not use the knife, not even, verily, on sufferers from stone, but I will give place to such as are craftsmen therein.

Into whatsoever houses I enter, I will enter to help the sick, and I will abstain from all intentional wrong-doing and harm, especially from abusing the bodies of man or woman, bond or free. And whatsoever I shall see or hear in the course of my profession, as well as outside my profession in my intercourse with men, if it be what should not be published abroad, I will never divulge, holding such things to be holy secrets.

Now if I carry out this oath, and break it not, may I gain for ever reputation among all men for my life and for my art; but if I break it and forswear myself, may the opposite befall me.[5] – Translation by W.H.S. Jones.

அப்பல்லோ ஹீலர் மூலமாகவும், அஸ்கிலிபியஸ் மூலமாகவும், ஹைஜியா மூலமாகவும், பனேசியாமூலமாகவும், மற்றும் அனைத்து தெய்வங்கள் மூலமாகவும் அவர்களை என் சாட்சியங்களா கொண்டு, என்னுடைய திறமை, மருத்துவக் கூராய்வுக்கேற்ப சிகிச்சை அளிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

எனக்கு இந்தக் கலையைக் கற்றுத்தந்த ஆசிரியரை என்னுடைய பெற்றோருக்குச் சமமாகக் கருதுவேன்; என்னுடைய வாழ்வாதாரங்களை அவர்களுடன் பகிர்வேன்; அவருக்கு தேவைப்பபட்டால் என்னுடைய பணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன்; அவருடைய குடும்பத்தினரை என் சொந்த சகோதரர்களாக நடத்துவேன். அவர்கள் விரும்பினால் இந்த மருத்துவகை கலையை எவ்வித கட்டணமோ நிபந்தனையோ இல்லாமல் அவர்களுக்குக் கற்பிப்பேன்; என் சொந்த மகன்களுக்கும், எனது ஆசிரியரின் மகன்களுக்கும், ஹீலர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கும் கட்டளை மற்றும் பிற அனைத்து அறிவுரைகளையும் வழங்குவேன்.

எனது சிறந்த திறன் மற்றும் முடிவுக்கு ஏற்ப என்னுடைய நோயாளிகளுக்கு நலன் பயக்கக் கூடிய உணவுகளை மட்டுமே பரிந்துரைப்பேன். மேலும் நான் அவர்களுக்கு தீங்கோ, அநீதியோ இழைக்க மாட்டேன். யார் கேட்டுக் சொன்னாலும் என் நோயாளிகளுக்கு நஞ்சைக் கொடுக்க மாட்டேன். அதேபோல கருவைச் சிதைக்கும் மருந்துகளை எந்தப் பெண்ணுக்கும் தர மாட்டேன். நான் என் சொந்த வாழ்க்கையையும் மருத்துவக் கலையையும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்வேன். சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நான் கத்தியைப் பயன்படுத்த மாட்டேன், ஆனால் கைவினைஞர்களுக்கு அதில் இடம் கொடுப்பேன்.

நோயால் அவதிப்படும் எவருடைய வீடுகளுக்குள்ளும் பேதம் பாராமல் நுழைந்து சிகிச்சை அளிப்பேன். மேலும் வேண்டுமென்றே செய்யும் தவறுகளிலிருந்தும் தீங்கு விளைவிப்பதையும் தவிற்பேன். குறிப்பாக சிகிச்சைக்கு வரும் ஆண், பெண் அல்லது சுதந்திரமானவர்கள் – அடிமைகள் என்று எவருடைய உடல்களையும் அவமதிக்கமாட்டேன். சிகிச்சையின்போதோ, மருத்துவத் தொழில் தொடர்பான பயணங்களின்போதோ நான் அறியும் மருத்துவ ரகசியங்களை அதிலும் குறிப்பாக வெளியில் சொல்லக்கூடாதவற்றை புனித ரகசியங்களாகக் கருதி, நான் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.

இந்த உறுதிமொழிகளை மீறாமல், நிறைவேற்றினால், என் வாழ்க்கைக்காகவும், என் மருத்துவக் கலைக்காகவும் பேரும் புகழும் பெருவேன். ஆனால் நான் இந்த உறுதி மொழிக்கு மாறாக நடந்தால், அதற்குண்டான கெடுபலன்கள் எனக்கு நேரட்டும்.

"முதலில் தீங்கு செய்யாதே"

தொகு

"முதலில் எந்தத் தீங்கும் செய்யாதே" என்பது அசல் இப்போகிராட்டிக் உறுதிமொழியின் ஒரு பகுதி என்று அடிக்கடி கூறபடுகிறது. உறுதிமொழியின் கி.பி 245 பதிப்பில் இந்த சொற்றொடர் காணப்படவில்லை என்றாலும், "நான் வேண்டுமென்றே செய்யும் தவறு மற்றும் தீங்கு விளைவிப்பதில் இருந்து விலகி இருப்பேன்" என்று சபதம் செய்தன. Primum non nocere என்ற சொற்றொடர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

மற்றொரு இணையான சொற்றொடர் எபிடெமிக்ஸ், புக் I, ஆப் ஹிப்போக்ராட்டிக் ஸ்கூல் புத்தகத்தில் காணப்படுகிறது: "நோயை கையாளுதலில் இரண்டு விஷயங்களைப் முயற்சி செய்யுங்கள்: முடிந்தால் நோயாளிக்கு உதவி செய்யுங்கள் இல்லாவிட்டால் தீமை செய்யாமலாவது இருங்கள்". சரியான சொற்றொடர் 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில அறுவை சிகிச்சை நிபுணரான தாமஸ் இன்மானிடம் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[7]

நவீன பதிப்புகள் மற்றும் பொருத்தம்

தொகு
 
பீட்டர் பவுல் ரூபென்ஸ் வரைந்த இப்போகிரட்டீசின் வேலைப்பாடு, 1638 [8]

ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி இன்னும் விரிவான முறையில் தொழில்சார் நன்னெறிகளின் ஆவணமாக உருமறிவிட்டது, எஎம்எம் மருத்துவ நெறிமுறைகள் (முதன்முதலில் 1847 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது) மற்றும் பிரித்தானிய ஜெனரல் மெடிக்கல் கவுன்சிலின் நன் மருத்துவ நடைமுறை போன்றவை தேசிய மருத்துவ சங்கங்களால் வழங்கப்பட்ட நன்னெறிகளுக்கான குறியீடுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் ஒரு மருத்துவரின் கடமைகள் மற்றும் அவர்கள் நோயாளிகளிடமும், பரந்த சமுதாயத்திடம் நடத்துகொள்ள வேண்டிய தொழில்முறை நடத்தை பற்றிய விரிவான பார்வையை வழங்குகின்றன. இந்த உறுதிமொழியை மீறி நடந்த மருத்துவர் மருத்துவப் பயிற்சிக்கான உரிமத்தை இழப்பது உட்பட, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம். ஆயினும்கூட, இந்த பண்டைய உறுதிமொழியின் வசகங்களை வடிகட்டி அவற்றின் நீளத்தை குறைத்து குறுகிய உறுதிமொழிகளாக காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளன. இதன் சாராம்சத்தில், சமய சார்பற்ற உறுதிமொழியின் பல புதுப்பிப்புகள் நவீன காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.[9][10][11]

இப்போக்கிரட்டீசு உறுதிமொழிக்குப் பதிலாக சரகா உறுதிமொழி சர்ச்சை

தொகு

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில், இந்தியத் தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவக் கல்லூரிகளில் பெற்றோர்களுடன் மருத்துவ உடை அணியும் விழாவை நடத்தும் போது, இப்போக்கிரட்டீசு உறுதிமொழியை ஏற்பதற்கு பதிலாக "மகரிஷி சரகர் உறுதிமொழி" என்ற திட்டத்தை முன்வைத்தது.[12][13] இதற்கு பல மருத்துவர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.[14]

குறிப்புகள்

தொகு
  1. Edelstein, Ludwig (1943). The Hippocratic Oath: Text, Translation and Interpretation. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-0184-6.
  2. "Codices urbinates graeci Bibliothecae Vaticanae: Folio 64(Urb.gr.64)". Vatican Library: DigiVatLib. 900–1100. p. folio:116 microfilm: 121.
  3. North, Michael (2002). "Greek Medicine: "I Swear by Apollo Physician...": Green Medicine from the Gods to Galen". National Institute of Health; National Library of Medicine; History of Medicine Division.
  4. Wecheli, Andreae (1595). "Hippocrates. Τα ενρισκομενα Opera omnia". Frankfurt: National Institute of Health; National Library of Medicine; History of Medicine Division).
  5. 5.0 5.1 Hippocrates of Cos (1923). "The Oath". Loeb Classical Library 147: 298–299. doi:10.4159/DLCL.hippocrates_cos-oath.1923. http://www.loebclassics.com/view/hippocrates_cos-oath/1923/pb_LCL147.299.xml. பார்த்த நாள்: 6 October 2015. 
  6. "Greek Medicine – The Hippocratic Oath". www.nlm.nih.gov. National Library of Medicine – NIH. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020.
  7. Sokol, Daniel K. (2013). "'First do no harm' revisited". BMJ 347: f6426. doi:10.1136/bmj.f6426. பப்மெட்:24163087. http://www.bmj.com/content/347/bmj.f6426. பார்த்த நாள்: 20 September 2014. 
  8. National Library of Medicine 2006
  9. Buchholz B, et al. Prohibición de la litotomía y derivación a expertos en los juramentos médicos de la genealogía hipocrática. Actas Urologicas Espanolas. Volume 40, Issue 10, December 2016, Pages 640–645.
  10. Oswald, H.; Phelan, P. D.; Lanigan, A.; Hibbert, M.; Bowes, G.; Olinsky, A. (1994). "Outcome of childhood asthma in mid-adult life". BMJ (Clinical Research Ed.) 309 (6947): 95–96. doi:10.1136/bmj.309.6947.95. பப்மெட்:8038676. 
  11. Schiedermayer, D. L. (1986). "The Hippocratic Oath — Corporate Version". New England Journal of Medicine 314 (1): 62. doi:10.1056/NEJM198601023140122. பப்மெட்:3940324. 
  12. The Wire staff. "Medical Commission Board Proposes To Replace Hippocratic Oath With 'Charak Shapath'". Science : The Wire. The Wire. Archived from the original on 2022-03-14. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
  13. FP Staff. "Explained: What the Hippocratic Oath is and proposal of replacing it with Charak Shapath". Firstpost. Firstpost. Archived from the original on 2022-03-14. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
  14. Bobins Abraham (11 February 2022). "Doctors Angry Over Alleged Proposal To Replace Hippocratic Oath With 'Charak Shapath'". India Times. https://www.indiatimes.com/news/india/doctors-hippocratic-oath-with-charak-shapath-561828.html. பார்த்த நாள்: 14 February 2022.