பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு07
விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்
தொகுவணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:10, 26 பெப்ரவரி 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:23, 6 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள்
தொகுஇனிய மகளிர் தின வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:35, 8 மார்ச் 2017 (UTC)
- நன்றி ஸ்ரீஹீரன்.--Booradleyp1 (பேச்சு) 13:24, 8 மார்ச் 2017 (UTC)
தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு
தொகுஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.
விக்கிமீடியா வியூகம் 2017
தொகுதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)
Nikolai Noskov
தொகுVanakam dear Booradleyp1! You can make an article in Tamil-language about singer (Nikolai Noskov)? If you make this article, I will be very grateful! Thank you! --178.71.204.244 18:15, 18 ஏப்ரல் 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு
தொகுஅருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:03, 26 ஏப்ரல் 2017 (UTC)
விரிவாக்கம்
தொகுவணக்கம், கணித இயல் வகைப்பாடு கட்டுரையை சற்று மேம்படுத்த முடியுமா? விடயத்தை விளக்கிக் கொள்ளமுடியாதவாறு மிகவும் சிறியதாகவுள்ளது. --AntanO 05:58, 10 மே 2017 (UTC)
- கணித மரபு எனும் கட்டுரைக்கேற்ற ஆ.வி. கட்டுரை உள்ளதா? அல்லது இருக்கும் வேறு கட்டுரையுடன் இணைக்கலாமா? --AntanO 06:01, 10 மே 2017 (UTC)
- @AntanO:கணித மரபு கட்டுரை இதன் பதிப்புரிமை மீறலாக உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 08:13, 10 மே 2017 (UTC)
- கவனித்தேன். வலைப்பதிவு 2013 இல் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கி கட்டுரை 2007 இல் உருவாக்கப்பட்டுள்ளது. --AntanO 08:18, 10 மே 2017 (UTC)
- நீங்கள் சுட்டிய பின்புதான் நானும் கவனித்தேன். இவ்விரு கட்டுரைகளுக்கும் ஆவி கட்டுரைகள் உள்ளனவா எனத் தேடிப் பார்க்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:22, 10 மே 2017 (UTC)
போட்டி
தொகுதொடர்பங்களிப்பாளர் போட்டியில் கலந்துகொள்ளலாம் அல்லவா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 13 மே 2017 (UTC)
- அழைப்புக்கு நன்றியும் உங்களது அசத்தும் ஒருங்கிணைப்புப் பணிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஹீரன். கட்டுரைகளின் பட்டியலில் இருக்கும் கணிதக் கட்டுரைகளை விரிவாக்க முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:51, 13 மே 2017 (UTC)
- நிச்சயமாக விரிவாக்குங்கள், வாழ்த்துக்கு நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:24, 13 மே 2017 (UTC)
உதவி...
தொகுவணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#கணிதம் குறித்த கட்டுரைகள் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:14, 27 மே 2017 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் சுட்டிய பகுப்பிலிருந்த 7 கணிதக் கட்டுரைகளில் ஐந்தினை சரிசெய்திருக்கிறேன். மீதமுள்ள இரண்டும் அப்பட்டமான கூகுள் மொழிபெயர்ப்பு. அவற்றை நீக்குவது நல்லது.--Booradleyp1 (பேச்சு) 15:11, 4 சூன் 2017 (UTC)
- வேண்டுகோளை ஏற்று, உரியன செய்தமைக்கு நன்றி! மீதமுள்ள 2 கட்டுரைகளை நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் இவ்விதமாக தெரிவித்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:08, 5 சூன் 2017 (UTC)
- விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 10:18, 5 சூன் 2017 (UTC)
பேச்சு:பெருக்கல் வரிசை என்பதனை கவனித்து, தங்களின் கருத்தினை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:57, 15 சூன் 2017 (UTC)
Translating Ibero-America is back! Come and join us :)
தொகுHi!
Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.
We would love to have you on board :)
Please find the contest here
Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:35, 12 சூன் 2017 (UTC)
முக்கோணவியல்
தொகுதயவுசெய்து முக்கோணவியல் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்வையிட்டு, உங்கள் கருத்தைக் கூற முடியுமா? போட்டிக்காக மணி.கணேசன் அவர்கள் விரிவாக்கியுள்ளார். --கலை (பேச்சு) 21:01, 12 சூன் 2017 (UTC)
கலை, சரி செய்திருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:54, 14 சூன் 2017 (UTC)
- நன்றி பூங்கோதை. --கலை (பேச்சு) 19:43, 14 சூன் 2017 (UTC)
தயவுசெய்து முடியுமானால், நேரமிருந்தால், சமன்பாடு கட்டுரையையும் பார்க்க முடியுமா?--கலை (பேச்சு) 21:46, 14 சூன் 2017 (UTC)
கலை, சமன்பாடு கட்டுரை சரிபார்த்து விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 21:00, 18 சூன் 2017 (UTC)
- நன்றி பூங்கோதை. --கலை (பேச்சு) 22:51, 18 சூன் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
தொகுவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆசிரியரும் சிறப்பு மிக்க விக்கிப்பீடியருமான நீங்கள் இப்பயிற்சிகளில் கலந்து பயிற்றுவித்தால் பங்கேற்பாளர்களுக்கு மிகவும் உந்துதலாக இருக்கும். எனவே, உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:14, 20 சூன் 2017 (UTC)
- மன்னிக்கவும் இரவி, தற்சமயம் நான் இந்தியாவில் இல்லையென்பதால் இதில் பங்குகொள்ள இயலாது .--Booradleyp1 (பேச்சு) 14:47, 20 சூன் 2017 (UTC)
- ஓ! சரி. வழமை போல் புதிய பயனர்களுக்கு வழிகாட்டி உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:38, 20 சூன் 2017 (UTC)
தகவலுக்காக...
தொகுவணக்கம். சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த கட்டுரைகளில் சில மேற்கோள்களின் இணைப்புகள் வேலை செய்யவில்லை. சரி செய்யுங்கள் என தங்களை கேட்கவில்லை. ஒரு தகவலுக்காக தங்களிடன் தெரிவிக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:40, 23 சூன் 2017 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் சுட்டியது சரியே. 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. 15 ஆவது சட்டமன்றம் தொடங்கியபின்னர் முந்தைய சட்டமன்ற விவரம் காப்பகத்தில் இடப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். எவ்வாறு அனைத்து உறுப்பினர் கட்டுரைகளிலும் மாற்றுவது என்று புரியவில்லை. இதற்கு எளிதான வழி எதுவும் உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. அதிக நேரம் எடுக்கும். தற்சமயம் நான் ”தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்” என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகளைத் துணைப்பகுப்பிற்குள் வகைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு செயல்படாத அம்மேற்கோள் இணைப்புகளை இற்றைப்படுத்த முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 00:57, 23 சூன் 2017 (UTC)
பெரிய வேலை என்பதால்தான், திருத்துமாறு தங்களுக்கு வேண்டுகோள் வைக்கவில்லை. தானியங்கி மூலம் செய்ய இயலுமா என்பது குறித்து கனக்சு அவர்களை கேட்கிறேன். புதிய பயனர்களால், கருவி மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்படுவதாலேயே இவ்விதத் தவறுகள் ஏற்படுகின்றன. இதனை திட்டப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். உரிய கொள்கை மாற்று குறித்து ஆலோசிப்பார்கள் என நம்புகிறேன். தங்களின் மேம்படுத்துதல் பணிகளுக்கு எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:05, 23 சூன் 2017 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 01:07, 23 சூன் 2017 (UTC)
பேச்சுப் பக்கங்கள் குறித்து புதிய பயனர்களுக்கு இன்னமும் நன்கு கற்றுத் தர வேண்டும் எனும் கருத்தையும் திட்டப் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:10, 23 சூன் 2017 (UTC)
சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை
தொகுவணக்கம்.
குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.
அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.
வேண்டுகோள்...
தொகுவணக்கம். உங்களின் அனுபவங்களையும், நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் உதவிக் குறிப்புகளையும் விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல் எனும் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:24, 4 சூலை 2017 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டிப் பதக்கம் | |
தமிழக ஆசிரியர்களுக்குக் கனிவுடன் வழிகாட்டி அவர்களை மேலும் சிறந்த விக்கிப்பீடியர்களாக உருவாக்க தாங்கள் செலுத்தும் உழைப்பும் கவனமும் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:49, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள்...
தொகுவணக்கம். இந்தப் பகுப்பினை அவ்வப்போது கவனித்து, நீக்கி உதவுகிறேன்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:43, 8 சூலை 2017 (UTC)
நன்றி மா. செல்வசிவகுருநாதன்.--Booradleyp1 (பேச்சு) 16:45, 8 சூலை 2017 (UTC)
கவனியுங்கள்
தொகுதிட்டபிழை என்ற இந்தக் கட்டுரையைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:20, 14 ஆகத்து 2017 (UTC)
சரிபார்க்க இயலுமா?
தொகுஸ்டோன் இயற்கணிதம் கட்டுரையை சரிபார்க்க இயலுமா?. நன்றி--இரா. பாலாபேச்சு 13:19, 31 ஆகத்து 2017 (UTC)
@Balurbala:, இந்தத் தலைப்பு எனக்குப் பழக்கமானதாக இல்லை. அதனால் என்னால் இக்கட்டுரையைச் சரிபார்த்தல் இயலாது. மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:28, 1 செப்டம்பர் 2017 (UTC)
- ஆங்கில விக்கிக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சரியானவை என்ற நம்பிக்கையில், இக்கட்டுரையை உரை திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 01:10, 2 செப்டம்பர் 2017 (UTC)
- @Kanags: அக்கட்டுரையைச் சரிபார்த்து உதவியதற்கு நன்றி. distributive lattices என்பதை பங்கீட்டுப் பின்னல்கள் என மாற்றியிருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 17:32, 2 செப்டம்பர் 2017 (UTC)
கணிதவியல் கட்டுரைகளை துப்புரவு செய்ய இயலுமா
தொகுகிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் பெரும்பகுதி கட்டுரைகளை துப்புரவு செய்துவிட்டேன் மீதமுள்ளவைகளில் பெரும்பகுதி கணிதம் குறித்த கட்டுரைகள் ஆகும். இக்கட்டுரைகளில் தங்களுக்கு பழக்கமான தலைப்புகள் கொண்ட கட்டுரைகள் இருந்தால் அவற்றை துப்புரவு செய்து உதவ இயலுமா நன்றி--அருளரசன் (பேச்சு) 14:31, 16 அக்டோபர் 2017 (UTC)
உதவி
தொகுசீசியம் எக்சாபுளோரோகுப்ரேட்டு என்ற கட்டுரையை சீசியம் எக்சாபுளோரோகுப்ரேட்டு(IV) என்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டும் உதவுங்கள் --கி.மூர்த்தி (பேச்சு) 08:35, 12 திசம்பர் 2017 (UTC)
கி.மூர்த்தி நகர்த்த முடியவில்லை. புதிய தலைப்பின் உருவாக்கம் தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வருகிறது. அதன் பொருள் புரியவில்லை--Booradleyp1 (பேச்சு) 08:47, 12 திசம்பர் 2017 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:52, 12 திசம்பர் 2017 (UTC)
aatharavu
தொகுதங்கள் ஆதரவு இங்கே தரவும். நன்றி. --UKSharma3 உரையாடல் 14:12, 1 பெப்ரவரி 2018 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:35, 18 பெப்ரவரி 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள பூராட்லி,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது தான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படு்ம் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாக்கச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேச்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில் நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன் மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியில் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழ வாய்ப்பாகவும் அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமைய போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:43, 10 மார்ச் 2018 (UTC)
- கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:14, 13 மார்ச் 2018 (UTC)
:::Yay! வருக வருக. உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வேண்டுகோளை ஏற்றமைக்கு மிக்க நன்றி. -- 14:16, 2 மே 2018 (UTC)
மாறி கட்டுரையை விரிவாக்கியதற்கு நன்றிகள் ! போட்டிக்கு சிவப்பு இணைப்புக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவதால் சில சிறு மாற்றங்களை செய்துள்ளேன். பின்னர்தான் உங்கள் திட்டம் தெரியாமல் அத்து மீறிவிட்டேனோ என அஞ்சினேன். தவறிருந்தால் பொறுத்தருள்க ! --மணியன் (பேச்சு) 03:31, 15 மே 2018 (UTC)
நீங்கள் செய்த மாற்றங்களுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். குறிப்பாக "argument" of a function -தருமதிப்பு என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 03:38, 15 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
தொகுவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
தொகுவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
நிருவாக அணுக்கம்
தொகுதங்களின் பெயரை நிருவாக அணுக்கத்திற்கு பரிந்துரைத்தால் ஏற்பீர்களா?--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:21, 6 சனவரி 2019 (UTC)
@TNSE Mahalingam VNR: கடந்த ஓராண்டு காலமாக என்னால் விக்கியில் பங்களிக்க இயலவில்லை. இந்நிலையே மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் எனக்கு நிர்வாக அணுக்கத்தில் விருப்பமும் இல்லை. இதனால் உங்கள் பரிந்துரையை மறுக்க வேண்டியுள்ளது. மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:28, 6 சனவரி 2019 (UTC)
@Booradleyp1: நிருவாக அணுக்கமின்றியே தாங்கள் மிகச்சிறப்பாக பங்களித்துக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் தங்கள் பணியை மேலும் சிறப்பாக்க நிருவாக அணுக்கம் வசதியாக இருக்குமே என்று என் மனதில் தோன்றியதால் கேட்டேன். மற்றபடி உங்களுக்கு விருப்பமின்றி பரிந்துரைக்கப் போவதில்லை. தங்கள் பணியை, இயல்பாக தாங்கள் விரும்பும் நேரத்தில் தொடரவும். --TNSE Mahalingam VNR (பேச்சு) 16:38, 6 சனவரி 2019 (UTC)
@TNSE Mahalingam VNR: தங்களது புரிதலுக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:43, 6 சனவரி 2019 (UTC)
எதற்காக நீக்கினீர்கள்?
தொகுமண்டாேதரி என்னும் கட்டுரையில் நான் செய்த கூடுதல் உள்ளடக்கங்களை ஏன் நீக்கினீர்கள்? Sivansakthi (பேச்சு) 05:14, 16 சனவரி 2019 (UTC)
Sivansakthi, இதற்கான விளக்கத்தை பேச்சு:மண்டோதரி பக்கத்தில் காணவும். மேலும் இது குறித்த உரையாடலுக்கு அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:26, 16 சனவரி 2019 (UTC)
உப்பு கருவாடு (திரைப்படம்)
தொகுவணக்கம். இந்தக் கட்டுரையில் உள்ள மேற்கோள் இணைப்பு அறுபட்டுள்ளது. வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் பல கட்டுரைகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:28, 19 சனவரி 2019 (UTC)
- ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 08:28, 19 சனவரி 2019 (UTC)
தகவலுக்காக...
தொகுபடிமம்:Aavarampoo.jpg என்பதனை படிமம்:Aavaram poo.jpg என்பதாக நகர்த்தியுள்ளேன். படத்தின் பெயர் ஆவாரம் பூ என்பது தெள்ளத் தெளிவு என்பதால் இவ்விதம் செய்துள்ளேன். —மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:04, 21 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:11, 21 சனவரி 2019 (UTC)
பரிந்துரை
தொகுவணக்கம். இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில்...
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பையும் (தற்போது பகுப்பின் தலைப்பு பிழையாக இருக்கிறது!)
- xxxx தமிழ்த் திரைப்படங்கள் (உதாரணமாக 2016 தமிழ்த் திரைப்படங்கள்) எனும் பகுப்பையும் இட்டால் போதுமானது என நினைக்கிறேன். இது குறித்து உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். உங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பயனர்களுக்கும் தெரிவிப்பேன்.
இந்தியத் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள், 2016 திரைப்படங்கள் என சீராக இல்லாமல் பலரும் பலவிதமாக பகுப்பு இட்டு வருகின்றனர். இதனை நெறிப்படுத்த வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:03, 25 சனவரி 2019 (UTC)
@Selvasivagurunathan m: நானும் இது குறித்து உரையாட நினைத்திருந்தேன்.
- "இந்தியத் தமிழ் திரைப்படங்கள்" பகுப்பின் கீழ் 320 கட்டுரைகள் உள்ளன. இதற்கும் துணைப் பகுப்புகள் தேவை.
- "ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்" என்ற பகுப்புக்குத் துணைப்பகுப்பாக "ஆண்டுகள் வாரியாக இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்" உருவாக்கினால்,
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் , xxxx தமிழ்த் திரைப்படங்கள் என்ற இரு பகுப்புகள் கூடத் தேவைப்படாது.
- xxxx இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற ஒரு பகுப்பே போதுமானதாக இருக்கும்.
- ஆனால் இதனைத் தானியிங்கி மூலம் செய்வதுதான் எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் குறிப்பிட்ட பகுப்புகளின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி முடிவெடுக்கலாம் எனக் கருதுகிறேன்.
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:09, 26 சனவரி 2019 (UTC)
அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருக்கிறேன். 2 வாரங்களுக்குப் பிறகு இதனை கவனிக்கிறேன். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:14, 14 பெப்ரவரி 2019 (UTC)
உதவி
தொகுஅசிட்டோனைடு, அசிட்டோனைடு வினைசெயல் தொகுதி இரண்டும் ஒரே கட்டுரை. இரண்டாவது கட்டுரையில் கூடுதலாக மேலும் காண்க சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிணைக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 15:16, 30 சனவரி 2019 (UTC)
- \\அசிட்டோனைடு வினைசெயல் தொகுதி\\ என்ற தலைப்பும் அக்கட்டுரைக்கு ஏற்புடையது என நீங்கள் கருதினால் கட்டுரை உள்ளடங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு தலைப்பை மட்டும் வழிமாற்றாக வைத்துக்கொள்ளலாம். இல்லையெனில்,
- நிர்வாகிகள் மட்டுமே கட்டுரைகளை ஒன்றிணைக்க முடியும். என்னால் இயலாது.--Booradleyp1 (பேச்சு) 15:39, 30 சனவரி 2019 (UTC)
பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்
தொகுவணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:51, 19 சூன் 2019 (UTC)
Project Tiger 2.0
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:48, 17 சனவரி 2020 (UTC)
பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி.
தொகுபதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி. ராம்குமார் கல்யாணி 11:23, 22 ஏப்ரல் 2020 (UTC)
- @Ramkumar Kalyani:உங்கள் பங்களிப்புகள் தொடர்ந்து சிறப்புற எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 14:58, 22 ஏப்ரல் 2020 (UTC)
நன்றி🙏 -- ராம்குமார் கல்யாணி 🌿 08:06, 23 ஏப்ரல் 2020 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
கணித மொழிபெயர்ப்புக்கு உங்கள் உதவி தேவை
தொகுஎன் மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தர இயலுமா? c dot r dot selvakumar at gmail dot com ? --செல்வா (பேச்சு) 18:21, 18 மே 2021 (UTC)
தமிழக விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சிக்கு உங்கள் உதவி தேவை
தொகுஅம்மா, நான் உங்களால் வழிநடத்தப்பட்ட விக்கிப்பீடியர் மகாலிங்கம். தற்போது விக்கியில் உள்ளகப் பயிற்சி திட்டம் தமிழகத்தின் வெவ்வேறு கல்லூரிகளைச் சார்ந்த அறுபதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நடந்து வருகிறது. தங்களால் இயலும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் அவர்களால் தொடங்கப்படும் புதிய முயற்சிகள் மேம்பட ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தற்போது Smiling Saranya, MEENA PANCHAVARNAM என்ற பயனர் பெயருடைய மாணவியர் தங்கள் கட்டுரைகளைப் பதிவிடத் தொடங்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் வழிநடத்த வேண்டுகிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:23, 18 சூன் 2021 (UTC)
பயனர்:TNSE Mahalingam VNR: மேலே குறிப்பிட்ட பயனர்களின் கட்டுரைகளைக் கவனித்து ஆலோசனை வழங்குகிறேன். தொடர்பு கொண்டதற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:29, 18 சூன் 2021 (UTC) ்
- மிக்க நன்றி அம்மா.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:44, 18 சூன் 2021 (UTC)
- இது உள்ளகப்பயிற்சி திட்டத்தின் பக்கம் அம்மா. இங்குள்ள பயனர்களின் (https://ta.wikipedia.org/s/9aqq) கட்டுரை எழுதும் முயற்சிகள் உங்கள் பார்வையில் படும் போது அவர்களை வழிநடத்துங்கள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 03:03, 22 சூன் 2021 (UTC)
வணக்கம், என்னுடைய கட்டுரையில் நீங்கள் செய்துள்ள மாற்றங்களைக் கண்டேன். உங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. மேலும் இது போன்ற வழிகாட்டுதலைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.--MEENA PANCHAVARNAM (பேச்சு) 12:54, 22 சூன் 2021 (UTC)
பறப்பனங்காடி
தொகுஅம்மா வணக்கம். எனக்கும் சரியாகத் தெரியவில்லை. கேரளாவில் "ர" என்பதை வல்லின "ற" வாக பயன்படுத்துவதால் இவ்வாறு தலைப்பிட்டேன். சரியில்லையென்றால் மாற்றலாம். தமிழ்குரிசலிடமும் கேட்டுள்ளேன்.--Balu1967 (பேச்சு) 04:10, 26 சூன் 2021 (UTC)
நன்றி Balu1967. [1] இந்த இணையபக்கம் உங்களுக்கு உதவியாய் இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:14, 26 சூன் 2021 (UTC)
- பரப்பு என்பது வேரின் அடிப்படையாக இருக்கலாம் என்பதால் தலைப்பை மாற்றிவிட்டேன் அம்மா. இராஜன் குருக்கள் கட்டுரையிலும் தலைப்பை மாற்றிவிட்டேன். அம்மா. நன்றி--Balu1967 (பேச்சு) 04:29, 26 சூன் 2021 (UTC)
- விருப்பம். --Booradleyp1 (பேச்சு) 13:25, 26 சூன் 2021 (UTC)
வென்னிமலை தலைப்பு
தொகுஅம்மா வணக்கம். வென்னிமலை தலைப்பை மாற்றிவிட்டேன். நன்றி.--Balu1967 (பேச்சு) 16:12, 28 சூன் 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
வல்சலா மேனன்
தொகுநான் வல்சலா மேனன் என்ற மலையாள நடிகையின் கட்டுரையை பொழிபெயர்த்துள்ளேன். நாம் தமிழகத்தில் "வத்சலா" என அழைக்கிறோம். "வல்சலா" என்பது சரியா அம்மா?. தலைப்பை மாற்ற வேண்டுமா, கூறுங்கள். நன்றி--Balu1967 (பேச்சு) 10:06, 4 சூலை 2021 (UTC)
Balu1967 "வத்சலா மேனன்" என்பதுதான் சரி. நான் முன்னமே குறிப்பிடப்படி மொழிமாற்றத்திற்கு இந்த இணையபக்கம் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 13:33, 4 சூலை 2021 (UTC)
சம்சாமா கட்டுரை
தொகுசம்சானா கட்டுரையின் தலைப்பை சம்சாமா என மாற்றிவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி அம்மா.--Balu1967 (பேச்சு) 14:22, 7 சூலை 2021 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:26, 7 சூலை 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Booradleyp1/தொகுப்பு07,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)