விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்
யாழ்ப்பாணத்தில் விக்கி 15 கொண்டாட்டங்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வை ஏனைய பயனர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு செப்டெம்பர் 28-30 அளவில் நடாத்துவதற்கு என்னாலான முயற்சிகளைச் செய்ய முடியும். அதிகளவான பயனர்கள் இந்தியாவில் இருப்பதால், கொண்டாட்ட நிகழ்வை இந்தியாவில் நடாத்துவதன் மூலம் பல பயனர்கள் பங்கேற்க முடியும். யாராவது இந்தியாவில் முன்னின்று ஒருங்கிணைக்க முன்வந்தால் இந்தியாவில் நடாத்தலாம். இலங்கையில் என்றால் ஏறத்தாழ 20 இந்தியப் பயனர்களுக்கு உதவித்தொகை வழங்க நலகை விண்ணப்பத்தில் கோரலாம். ஏனைய செலவுகளைப் பொறுத்து இது அமையும். அனைத்துப் பயனர்களையும் தங்கள் கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:14, 11 சனவரி 2018 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதே சிறப்பாக அமையும். இலங்கைப் பயனர்கள் இந்திய பயனர்கள் ஆகியோருக்கு இடையில் நல்ல பிணைப்பை உண்டாக்க இது ஏதுவாக அமையும். ஏனைய செலவுகளை முடிந்த அளவு சிக்கனமாக நடத்தி இயன்றவரை கூடுதலான இந்தியப் பயனர்களுக்கு உதவித்தொகை வழங்க நலகை அளிக்க முயற்சித்தல் நலம்.--அருளரசன் (பேச்சு) 04:47, 16 சனவரி 2018 (UTC)
யாழ்ப்பாணத்தில் நடத்துவது சிறப்பாய் இருக்கும். இயன்ற பங்களிப்பை வழங்குவேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 17 சனவரி 2018 (UTC)
உங்கள் கருத்துக்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். நான் 2017 ஏப்ரல் மாதம் தொடங்கி என் பங்களிப்புகளைச் செய்து வருகிறேன். இலங்கைப் பயனர்கள் விக்கிப்பீடியாவிற்கு அளித்த பங்களிப்புகள் மிகவும் மதிப்பு மிக்கவை. என்னைப் போன்ற இந்தியப் பயனர்களுக்கு இந்தியாவில் தமிழகத்தில் கொண்டாடுவதே வசதியாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே. மற்ற பயனர்கள் கருத்துக்களை அறிந்த பின் தகுந்த முடிவெடுக்கவும்.--மகாலிங்கம் (பேச்சு) 16:18, 17 சனவரி 2018 (UTC)
- இந்த நிகழ்வை இலங்கையில் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை கருத்திட்டுள்ளேன். மீண்டும் வலியுறுதுக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா குறித்து இயக்க அளவில் நன்மதிப்பு உள்ளது. எனவே, இந்தியப் பயணர்கள் எவ்வளவு பேர் என்றாலும் இலங்கை வருவதற்கான பயணச் செலவு குறித்து கவலைப்பட வேண்டாம். உலகெங்கும் உள்ள பயனர்களும் இலங்கை வரவும் முயற்சிகள் எடுப்போம். எத்தனையோ இலங்கைப் பயனர்கள் சிறப்பான பங்களிப்பை நல்குகிறார்கள். ஆனால், தமிழகப் பயனர்கள் ஒரு முறையேனும் இலங்கையை வந்து பார்த்தால், இரு நாட்டுப் பயனர் பிணைப்பு இன்னும் கூடும். பத்தாண்டு கொண்டாட்டத்தின் பாடங்களின் அடிப்படையில் நிறைய பணிகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் திட்டமிட்டு எளிமையாக நடத்தலாம். --இரவி (பேச்சு) 01:14, 3 பெப்ரவரி 2018 (UTC)
இரவி மற்றும் அருளரசன் ஆகியோரின் கருத்தோடு உடன்படுகிறேன். பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சென்னையில் ஏற்கனவே நடைபெற்றதால் இம்முறை இலங்கையில் நடத்தலாம். --இரா. பாலாபேச்சு 17:17, 3 பெப்ரவரி 2018 (UTC)
பயனர் மகாலிங்கம் தவிர ஏனையோர் இலங்கையில் நடாத்த விருப்பம் தெரிவித்திருப்பதால், நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் தேவையான ஆரம்ப கட்ட வேலைகளை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:08, 16 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--Kanags (பேச்சு) 21:52, 16 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--இரா. பாலாபேச்சு 03:59, 17 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--Arulghsr (பேச்சு) 04:16, 17 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:24, 17 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--கலை (பேச்சு) 09:54, 18 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--ஹிபாயத்துல்லா16:10, 21 பெப்ரவரி 2018 (UTC)
- --த♥உழவன் (உரை) 16:10, 21 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:41, 21 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம் --நீச்சல்காரன் (பேச்சு) 15:10, 22 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 16:24, 23 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 24 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம் - யாழ்ப்பாணத்தில் நடத்துதல் சிறப்பு. நல்வாழ்த்துகள். --செல்வா (பேச்சு) 14:38, 27 பெப்ரவரி 2018 (UTC)
- விருப்பம் - மயூரநாதன் (பேச்சு) 11:42, 3 மார்ச் 2018 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:22, 16 நவம்பர் 2018 (UTC)
நல்கை விண்ணப்பம்
தொகுஇந்தப் பக்கத்தை இன்று தான் பார்த்தேன். இன்னும் இரு வாரங்களுக்குள் எமது நல்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இங்கு நல்கை விண்ணப்பத்தை ஆரம்பித்துள்ளேன். உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் இட்டு இதனைச் செம்மையாக்க வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 09:12, 18 பெப்ரவரி 2018 (UTC)
கலந்து கொள்வோர்
தொகுஇந்தியாவிலிருந்து பங்கேற்க விரும்புவோர்
தொகுஇந்தக் கூடலில் எத்தனைப் பேர் கலந்து கொள்ள விரும்புகிறார்கள், எங்கிருந்து வர இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள், இருப்பிடம் / பயணச் செலவுக்கான தேவை என்ன என்பதை உடனடியாக அறிந்தால் தான் திட்டத்தை இறுதி செய்து முன்னெடுக்க முடியும். உங்கள் தேவைகளைக் கீழே தெரிவியுங்கள்.
- //எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள்,// இலங்கை அரசு எத்தனை நாட்கள் அனுமதிக்கும் என்று தெரியாது. எனினும், கூடலுக்கு முன் பின் ஒரு நாள்=3நாட்கள், இலங்கையின் தமிழர் சார் வரலாற்று இடங்களுக்கு 3 நாட்கள், தமிழ்நாடு திரும்ப 1 நாள் என 7 நாட்கள் தங்க விருப்பம். இரவிக்கு ஏற்கனவே இதுபற்றி அனுபவம் இருக்குமென்றே எண்ணுகிறேன். எனவே, அவரின் முன்மொழிவினை எதிர்நோக்குகிறேன். அது அனைவருக்கும் பொருத்தமானதாகவே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. சென்னையில், இலங்கை நண்பர்களை சந்தித்த போது மனிதல் ஏற்பட்ட மட்டற்ற மகிழச்சிக்கு அளவே இல்லை. அதுபோல இந்நிகழ்வும் நடைபெற ஏங்குகிறேன். --த♥உழவன் (உரை) 16:19, 21 பெப்ரவரி 2018 (UTC)
- நான கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் சென்னை/பெங்களூரில் இருந்து வருவேன் மேலே தகவல் உழவன் கூற்றை ஒட்டுய கருத்தே என்னுடையது.--அருளரசன்
- நான் பங்கு பெற விரும்புகிறேன். சென்னையில் இருந்து வருவேன். தகவல் உழவன் கூறியது போல முடிந்தால் ஆறு நாட்கள் தங்க விருப்பம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:53, 23 பெப்ரவரி 2018 (UTC)
- 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற விழைகிறேன். அதிகபட்சம் நான்கு நாட்கள் தங்க இயலும். திருவனந்தபுரத்திலிருந்து வருவேன்.--இரா. பாலாபேச்சு 12:06, 23 பெப்ரவரி 2018 (UTC)
- இலங்கையில் நடைபெற இருக்கும் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற ஆர்வமாக உள்ளேன். சென்னையில் இருந்து வருவேன். --கி.மூர்த்தி (பேச்சு) 16:23, 23 பெப்ரவரி 2018 (UTC)
- இலங்கையில் நடைபெற இருக்கும் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற ஆர்வமாக உள்ளேன். சென்னை அல்லது திருச்சியில் இருந்து வருவேன். --ஹிபாயத்துல்லா 16:47, 23 பெப்ரவரி 2018 (UTC)
- பங்கு பெற விருப்பம். சென்னை/பெங்களூரில் இருந்து வருவேன். வர முடியாவிட்டாலும் இணைய வழியிலோ, ஏற்பாட்டுக் குழுவுக்கோ உதவ விரும்புகிறேன் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:36, 24 பெப்ரவரி 2018 (UTC)
- ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி. இணையவழி ஒருங்கிணைப்பில் நிச்சயம் உதவி தேவை. --சிவகோசரன் (பேச்சு) 16:06, 24 பெப்ரவரி 2018 (UTC)
- பங்கு பெற விருப்பம். --இரவி (பேச்சு) 20:34, 25 பெப்ரவரி 2018 (UTC)
- மிகத் தாமதமாகவே இப்பக்கத்தினை இன்று பார்க்க நேர்ந்தது. நானும் பங்குபெற விழைகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:19, 16 நவம்பர் 2018 (UTC)
இலங்கையிலிருந்து பங்கேற்க விரும்புவோர்
தொகு- --சிவகோசரன் (பேச்சு) 14:26, 27 பெப்ரவரி 2018 (UTC)
- --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:06, 28 பெப்ரவரி 2018 (UTC)
- --ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:17, 1 மார்ச் 2018 (UTC)
- --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:28, 2 மார்ச் 2018 (UTC)
- --மயூரநாதன் (பேச்சு) 11:45, 3 மார்ச் 2018 (UTC)
- --Maathavan Talk 08:29, 5 மார்ச் 2018 (UTC)
- --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
கருத்துகள்
தொகுகூடல் இரு நாட்களுக்கே ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநாட்டு நல்கைகள் தொடர்பான வழிகாட்டல் பக்கத்தில் உணவுகள் கூட மாநாட்டு நாட்களின் மதிய உணவுக்கும் சிற்றுண்டிகளுக்கும் மட்டுமே உள்ளடக்கப்படப் பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வளவு செலவில் தங்குமிடம் ஒழுங்கு செய்ய முடியும் என்று தெரியவில்லை. பத்தாமாண்டு கூடலில் செய்தது போலப் பல்கலைக்கழக விடுதி ஒழுங்கு செய்வது இங்கு சாத்தியமில்லை. எனவே 2, 3 நாட்கள் தங்க நல்கை பெற முடியும். மேலதிக நாட்கள் இலங்கையில் தங்க விரும்புவோர் அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்க வேண்டும். இலங்கைக்கான நுழைவிசைவை இந்தியாவிலேயே பெற்று வருவதே சிறந்தது. 1 மாதம் முதல் 3 மாதங்கள் வரையான நுழைவிசைவை இலகுவாகப் பெறலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:06, 24 பெப்ரவரி 2018 (UTC)
- ஆம், கூடல் நடைபெறும் இரு நாட்கள், ஆக அதிகம் அதற்கு முன்பு ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் தங்குவது மற்றும் உணவுக்கான செலவை நல்கை வழங்கலாம். அதற்குக் கூடுதலான நாட்கள் தங்க விரும்புவோர் போக்குவரத்து, உணவு, தங்குமிடத்துக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும். பல்கலையில் தான் தங்கும் இடம் வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதற்கு பல்கலை பொறுப்பாளர்களிடம் அனுமதி வாங்குவதும் இழுபறியான வேலையாக இருக்கக் கூடும். பொதுவாக, விக்கிமேனியா, விக்கிமீடியா மாநாடு போன்றவற்றுக்கு நான்கு நட்சத்திர விடுதிகளில் இடம் ஏற்பாடு செய்கிறார்கள். அதிகபட்சமாக, அத்தகைய வசதியைக் கோரலாம். நிகழ்வினை எங்கு நடத்தத் திட்டமிட்டு உள்ளீர்கள்? தங்குமிடம், நிகழ்வு நடத்தும் அரங்கும் ஆகியவை ஒருங்கே அமைந்த விடுதி இருந்தால் அங்கு நடத்துவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். யாழ்ப்பாணத்தில் உள்ள வசதிகள், செலவை முன்வைத்து நீங்கள் முடிவெடுக்கலாம். --இரவி (பேச்சு)
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:29, 26 பெப்ரவரி 2018 (UTC)
நல்கை தாமதம் - கூடல் பிற்போடல்
தொகுதற்போதைய விக்கி நடைமுறைகளின்படி ஒன்றுகூடல்களுக்கான நல்கை விண்ணப்பங்கள் விக்கி சமூகத்தின் கருத்துக்கணிப்புடனேயே விண்ணப்பிக்கப்பட வேண்டும். கருத்துக்கணிப்பை நடாத்தாததாலும் 2018 ஆகத்து முதல் 2019 பெப்ரவரி வரையான காலப்பகுதிக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாலும் எமக்கு நல்கை கிடைப்பது கடினம் என நல்கை மேற்பார்வையாளர் கூறியுள்ளார். கருத்துக்கணிப்பை நடாத்தி, நல்கை விண்ணப்பத்தைத் திருத்தி அடுத்த காலப்பகுதியான 2019 பெப்ரவரி முதல் 2019 ஆகத்து வரையான காலத்தில் ஒன்றுகூடலை ஒழுங்குசெய்யப் பரிந்துரைத்துள்ளார். எனவே அடுத்த சில மாதங்களில் கருத்துக்கணிப்பை நடாத்தி, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2019 பெப்ரவரியில் ஒன்றுகூடலை நடாத்த முயற்சி செய்வோம். இது குறித்த உரையாடல் பக்கம் இங்குள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:12, 9 ஏப்ரல் 2018 (UTC)
- துவண்டுவிடாமல் அனுபவமாகக் கொண்டு மீண்டும் முயல்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 13:59, 10 ஏப்ரல் 2018 (UTC)
- சிவகோசரன் ஒரு நினைவூட்டல். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:06, 13 ஆகத்து 2018 (UTC)
- விருப்பம் --அருளரசன் (பேச்சு) 08:30, 14 ஆகத்து 2018 (UTC)
- நினைவூட்டலுக்கு நன்றி. நாம் ஏற்கனவே பெற்ற நல்கைத் தொகைக்கு ஒரு புதுப்பயனர் போட்டி நடாத்த வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விக்கி கலந்துரையாடலை அடுத்த வாரம் ஆரம்பிக்கிறேன். செப்டெம்பர் மாதத்தில் இரு விக்கி அறிமுக நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடாத்த ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளிலும் புதுப்பயனர் போட்டி பற்றிக் குறிப்பிட எண்ணியுள்ளேன். அக்டோபர் 1 முதல் 2019 மார்ச் 31 வரையான ஆறு மாத காலத்திற்குப் புதுப்பயனர் போட்டி நடாத்தலாம். எனது தனிப்பட்ட காரணங்களால் 2019 ஆகத்து வரை விக்கி ஒன்றுகூடலுக்கான பணிகளைச் செய்யப் போதுமான நேரமின்மையாலும், ஏனைய உள்ளூர்ப் பயனர்களின் பரீட்சையைக் கவனத்தில் கொண்டும், 2019 செப்டெம்பரில் - 16ஆவது ஆண்டு நிறைவாக - இந்த ஒன்றுகூடலை நடாத்தத் திட்டமிட எண்ணுகிறேன். வேறு பயனர்கள் யாராவது ஒருங்கிணைக்க முன்வந்தால் 2019 ஆரம்பத்திலேயே நடாத்தலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:12, 21 ஆகத்து 2018 (UTC)
கருத்துக்கணிப்பு
தொகுவணக்கம் @Sivakosaran:, நீங்கள் கருத்துக்கணிப்பில் கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கினால் 'Sorry, unable to open the file at this time.' எனும் செய்தி வருகிறது. நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:46, 20 சனவரி 2019 (UTC)
- @Sivakosaran and Nandhinikandhasamy: இணைப்பினைச் சரி செய்துள்ளேன். --இரவி (பேச்சு) 11:54, 20 சனவரி 2019 (UTC)
- நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:09, 20 சனவரி 2019 (UTC)
தென்னிலங்கைச் சுற்றுலா
தொகுஇந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் ஏனையோருக்கும் தென்னிலங்கையில் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்தால் நல்லதென நினைக்கிறேன். திமிங்கிலம் பார்க்கச் செல்ல விரும்பினால் வெலிகமையிலிருந்து அதிகாலை 05 மணிக்கே கடலுக்குக் கிளம்ப வேண்டும். வெலிகமைக்கு மிக அருகிலேயே நீலத் திமிங்கிலம், விந்துத் திமிங்கிலம், கூன் திமிங்கிலம், உடொல்பின் எனப் பல வகைகள் வாழ்கின்றன. ஐந்தாறு மணி நேரம் கடலில் உல்லாசப் பயணம். ஆனாலும், கட்டணம் சற்று அதிகம்.--பாஹிம் (பேச்சு) 18:37, 20 சனவரி 2019 (UTC)
- விருப்பம் இயற்கை விலைமதிப்பற்றது. எவ்வளவு இந்திய உரூபாய் ஆகும்.--த♥உழவன் (உரை) 00:56, 28 சனவரி 2019 (UTC)
- படகுக் கட்டணம் ஒருவருக்கு 2000-2500 இந்திய ரூபாய் அளவில் வரும்.--பாஹிம் (பேச்சு) 03:46, 28 சனவரி 2019 (UTC)
திட்டமிடல்
தொகுஅறக்கட்டளையிடமிருந்து நிதி நல்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இனி விரைந்து திட்டமிடலாம். CIS-A2K அமைப்பு மற்றும் இதர அமைப்புகளிடம் நிதி உதவியைக் கோரலாம். தற்போதைக்கு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் பயணம் ஒருங்கிணைப்பு முதன்மையாக இருக்கலாம். முன்பு விவாதித்தது போல கல்லூரிகளிலுள்ள அமைப்புசார் சிக்கல்களைத் தவிர்க்க, தனியார் விடுதியில் நிகழ்ச்சி ஏற்பட்டைச் செய்யலாம். புதுப்பயனர் போட்டி போல இடைப்பட்ட நாளில் உள்ளூரிலோ பொதுவாகவோ இதர நிகழ்வை நடத்தலாம். முதல்நாளில் வரவேற்பு நிகழ்வு, கடந்துவந்த பாதை, எதிர்காலத் திட்டமிடல் போன்றவை இருக்கலாம். இரண்டாம் நாள் பயிற்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வைத் திட்டமிடலாம். யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்/ ஆர்வலர்கள் பங்கேற்பு இருந்தால் ஹாக்கத்தான் அல்லது நுட்பப்பயிற்சியை நடத்தலாம். நிதி ஆதாரத்தை இறுதி செய்தல், நிகழ்ச்சித் திட்டம், உதவித்தொகைப் பெறுவோரை இறுதி செய்தல், பரப்புரை என ஒவ்வொரு பணிகளுக்கும் ஒரு இறுதிநாளையும் தீர்மானிக்கவேண்டும். நிகழ்ச்சித் திட்டமிடல் தொடர்பாக மற்றவர்களின் கருத்துகளுக்கு ஏற்பக் கருத்துரைக்கிறேன். @Sivakosaran, Mayooranathan, and Ravidreams:-நீச்சல்காரன் (பேச்சு) 14:02, 26 மார்ச் 2019 (UTC)
- நிகழ்வையும் பயணத்தையும் திட்டமிட்டு அதற்கான செலவுகளை உத்தேசமாகக் கணக்கிட்டு இதர அமைப்புகளிடம் நிதி உதவி கோரலாம் என்பது எனது எண்ணம். மேலும் இரண்டு நாள் நிகழ்வுகளை மிகவும் பயனுள்ள வகையில் திட்டமிடுதல் அவசியம். புதுப்பயனர்கள் அதிகம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். நீச்சல்காரன் சொல்வது போல் ஹாக்கத்தான் அல்லது தொடர்தொகுப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யலாம். பழைய பயனர்களுக்கு நுட்பப்பயிற்சி தரலாம். இப்பொழுதிருந்தே திட்டமிட்டால் இறுதிநேரப் பதற்றத்தினைத் தவிர்க்கலாம். ஒருங்கிணைப்புப் பணிகளில் என்னால் இயன்றதைச் செய்ய அணியமாய் இருக்கிறேன். இந்தியா மற்றும் இலங்கையிலும் பிறநாடுகளிலிருந்தும் கலந்துகொள்ளும் பயனர்களைக் கருத்தில் கொண்டு பயணத்திட்டம் ஏற்பாடு செய்யலாம். மேலே கூறியது போல் ஒவ்வொரு பணிகளுக்கும் முதலில் இறுதிநாளைத் தீர்மானித்தல் மிக்க நலம்பயக்கும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:12, 26 மார்ச் 2019 (UTC)
- பயன உதவி பெறுபவர்கள் யார் என்பதை கொஞ்சம் முன்னமே தயாரித்து, வெளியிட வேண்டும். அப்படி செய்தால் விசா பெறுவதற்கு தேவையான கால அவகாசம் கிடைக்கும். மேலும் வானூர்தி கட்டணமும் குறைவாக இருக்கும். அதனால் செலவு குறையும். மேலும் பணிகளைப் பிரித்து குழுக்களை அமைத்து ஒவ்வொரு பணிக்குமான இறுதி தேதி திட்டமிடல் சிறப்பு. காலாவதியான பழைய உரையாடல்களை வேண்டுமானால் பரணுக்கு ஏற்றிவிடலாம். அதனால் குழப்பம் தவிர்க்கப்படும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:48, 26 மார்ச் 2019 (UTC)
இந்தியாவிலிருந்து 20 பேருக்குப் பயணச்செலவுக்கு நல்கை கிடைக்கிறது. ஏற்கனவே அமிர்தசரசில் CIS-A2K இன் சுனில் அவர்களிடம் இந்தியர்களின் பயணச்செலவுக்கு உதவி கேட்டோம். அவர்களிடம் முறையாக விண்ணப்பித்தால் மேலும் பலர் பங்கேற்க வாய்ப்புக்கிடைக்கும். மேலே குறிப்பிட்ட திட்டமிடல் வேலைகளை ஏப்பிரல் மாத முடிவிற்குள் இறுதி செய்வோம். --சிவகோசரன் (பேச்சு) 15:05, 27 மார்ச் 2019 (UTC)
நிகழ்வு நாட்கள் தெரிவு
தொகுநிகழ்வு இரு நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 14-15 அல்லது 21-22 இல் நடாத்தலாம். உங்கள் விருப்பத்தேர்வை இங்கு தெரிவிக்கவும். https://doodle.com/poll/9mci5ew65aynzbut --சிவகோசரன் (பேச்சு) 15:43, 7 ஏப்ரல் 2019 (UTC)
கருத்துக்கணிப்பில் கிடைத்த தெரிவின் அடிப்படையில் நிகழ்வை செப்டம்பர் 14-15 இல் நடாத்தலாம் என எதிர்பார்த்திருக்கும் அதேவேளை, இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக, நிகழ்வைப் பிற்போடவேண்டிய தேவை எழலாம். இதனால் தங்குமிட முற்பதிவு போன்ற வேலைகளை ஆரம்பிக்க முடியாதுள்ளது. விக்கிமீடியா அறக்கட்டளைப் பிரதிநிதியுடன் நானும் மயூரநாதனும் உரையாடினோம். நிகழ்வுக்கான பங்கேற்பு நல்கை பெறுபவர்களைத் தெரிவு செய்யும் வேலை, நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் ஆகிய பணிகளை ஆரம்பிக்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார். --சிவகோசரன் (பேச்சு) 16:00, 9 மே 2019 (UTC)
- முன்னெடுக்கும் இருவருக்கும் நன்றி. ஆமாம். அசாதரணச் சூழல் நிலவுவதால் நிகழ்ச்சியைப் பிற்போடலாம் என்றும் எண்ணினேன். தற்போதைக்கு வெளிநாட்டிலிருந்து பங்கேற்பவர்களை இறுதிசெய்தல், இதர திட்டமிடலைச் செய்யலாம். நிகழ்ச்சி ஒருங்கிணைக்க தேவைப்படும் உதவிகளையும் இங்கே குறிப்பிடலாம் தொலைநிலை இயன்ற ஒருங்கிணைப்பை மற்றவர்கள் செய்ய இயலும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:29, 10 மே 2019 (UTC)
பங்கேற்க ஆர்வமுடையோர் பட்டியல்
தொகுவிக்கிமீடியா அறக்கட்டளையிடமிருந்து 20 பேருக்கு தமிழ்நாட்டிலிருந்து வருவதற்கு நல்கை கிடைத்துள்ளது. அத்துடன் இந்தியர்கள் சிலரது பயணத்தொகைக்கு உதவ முடியும் என சிஐஎஸ் தெரிவித்துள்ளது. இதற்கு எத்தனை பேருக்கு உதவி தேவை என அறிய வேண்டும். எனவே தமிழ்நாட்டில் இருந்து நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுடையோர் தங்கள் பெயர்களைக் கீழே சேர்க்கவும். பன்னாட்டுப் பங்கேற்பாளர்களுடன் நடைபெறும் விக்கிமீடியா நல்கை வழங்கும் நிகழ்வுகள் பன்னாட்டு விமான நிலையமொன்றிலிருந்து சில மணி நேரப்பயணத்தில் அடையக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்றொரு விதி உள்ளது. எனினும் இந்நிகழ்வு யாழ்ப்பாணத்திலேயே நடைபெற வேண்டும் என்றும் அதற்கு 8 மணி நேரம் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றும் எடுத்துக்கூறி, விதிவிலக்காக இந்நிகழ்வுக்கு நல்கை வழங்கப்பட்டது. பங்கேற்க விரும்புவோர் இதனை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என விக்கிமீடியா பிரதிநிதி தெரிவித்தார். எனவே பதிவுகளை மேற்கொள்பவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவும். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 16:00, 9 மே 2019 (UTC)
பட்டியல்
தொகுஇந்தியாவிலிருந்து கலந்துகொள்ள விரும்புவோர்
தொகு- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--தீபா அருள் (பேச்சு) 01:09, 10 மே 2019 (UTC)
- கலந்து கொள்ள விரும்புகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 09:36, 10 மே 2019 (UTC)
- கலந்து கொள்ள விரும்புகிறேன்--அருளரசன் (பேச்சு) 10:14, 10 மே 2019 (UTC)
- கலந்து கொள்ள விரும்புகிறேன்-- ஸ்ரீ (talk) 11:11, 10 மே 2019 (UTC)
- கலந்து கொள்ள விரும்புகிறேன்- ஹிபாயத்துல்லா (பேச்சு) 14:21, 10 மே 2019 (UTC)
- விருப்பம் // 8 மணி நேரம் தரைவழிப் பயணம் ... எடுத்துக்கூறி, // வாழ்த்துக்கள்--த♥உழவன் (உரை) 19:53, 10 மே 2019 (UTC)
- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--காந்திமதி 01:40, 11 மே 2019 (UTC)
- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--TVA ARUN (பேச்சு) 08:19, 11 மே 2019 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 03:24, 12 மே 2019 (UTC)
- விருப்பம்----தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 01:48, 13 மே 2019 (UTC)
- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் த.சீனிவாசன் (பேச்சு) 08:25, 13 மே 2019 (UTC)
- விருப்பம்-இரா. பாலாபேச்சு 15:10, 13 மே 2019 (UTC)
விருப்பம் --சிவக்குமார் (பேச்சு) 13:21, 14 மே 2019 (UTC)தனிப்பட்ட காரணத்தினால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.--சிவக்குமார் (பேச்சு) 09:02, 19 செப்டம்பர் 2019 (UTC)- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:06, 14 மே 2019 (UTC)
நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--அபிராமி (பேச்சு) 16:09, 14 மே 2019 (UTC)தனிப்பட்ட சில காரணங்களால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதெனத் தெரிவித்துள்ளார்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:24, 9 செப்டம்பர் 2019 (UTC)- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:11, 14 மே 2019 (UTC)
- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்--வசந்தலட்சுமி (பேச்சு) 16:14, 14 மே 2019 (UTC)
- நான் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்----TNSE Mahalingam VNR (பேச்சு) 16:38, 14 மே 2019 (UTC)
- விருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:02, 14 மே 2019 (UTC)
- விருப்பம் --பயனர்:j.shobia (பயனர் பேச்சு:j.shobia)
- விருப்பம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:30, 14 மே 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன். உதவித் தொகை தேவை :) --இரவி (பேச்சு) 13:22, 15 மே 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன். உதவித் தொகை தேவை :)--Yercaud-elango (பேச்சு) 16:33, 24 மே 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.--RUPA MANGALA R (பேச்சு) 07:21, 28 மே 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன். உதவித் தொகை தேவை --Joshua-timothy-J (பேச்சு) 07:10, 29 மே 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்துகொள்ள விரும்புகிறேன். உதவித் தொகை தேவை.--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:39, 7 சூன் 2019 (UTC)
- கலந்துகொள்ள விரும்புகிறேன். உதவித்தொகை தேவை. - Mohammed Ammar (பேச்சு) 14:07, 7 சூன் 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்.--Abinaya Murthy (பேச்சு) 17:45, 15 சூன் 2019 (UTC)
- விருப்பம்நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்.--divya_kaniyam(பேச்சு)21:16, 17 சூன் 2019(UTC)
- விருப்பம்நான் கலந்துகொள்ள விரும்புகிறேன். உதவித்தொகை தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.உதவித் தொகை தேவை :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:50, 20 சூன் 2019 (UTC)
- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.உதவித் தொகை தேவை. --மணியன் (பேச்சு) 05:34, 20 சூன் 2019 (UTC)
நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.உதவித் தொகை தேவை. --ஷந்தோஷ் ராஜா யுவராஜ் (பேச்சு) 03:49, 23 சூன் 2019தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது, மன்னிக்கவும்.- விருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.உதவித் தொகை தேவை.அன்புமுனுசாமிᗔ
உரையாடுக! : 06:14, 24 சூன் 2019
- விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:07, 28 சூன் 2019 (UTC)
இலங்கையிலிருந்து கலந்துகொள்ள விரும்புவோர்
தொகுஇலங்கையில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோருக்கு இரு வகையான நல்கைத் தெரிவுகள் உள்ளன. போக்குவரத்து, தங்குமிடம் ஆகிய இரண்டில் எது/எவை தேவை எனக்குறிப்பிடவும். உதவித்தொகையேதும் தேவையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறவேண்டிய அவசியம் இல்லை.--சிவகோசரன் (பேச்சு) 15:07, 23 மே 2019 (UTC)
- . தங்குமிடம் தேவை. கல்முனையிலிருந்து போக்குவரத்து நல்கையை எதிர்பார்க்கின்றேன்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:12, 26 மே 2019 (UTC)
- . தங்குமிடம் தேவை . பெரியகல்லாற்றில் (மட்டக்களப்பு) இருந்து போக்குவரத்து நல்கையை எதிர்பார்க்கின்றேன். பயனர்: ஜெ.ஜெயகிரிசாந் (புதுப்பயனர் போட்டி வெற்றியாளர்.)
- . தங்குமிடம் தேவை. ஆரையம்பதியில் இருந்து போக்குவரத்து நல்கையை எதிர்பார்க்கின்றேன்.பிரசாத் சொக்கலிங்கம் (பேச்சு)
- . தங்குமிடம் தேவை. மட்டக்களப்பில் இருந்து போக்குவரத்து நல்கையை எதிர்பார்க்கின்றேன்.செல்வநாயகம் திவாகரன் (பேச்சு)
இந்தோனேசியாவிலிருந்து கலந்துகொள்ள விரும்புவோர்
தொகுநான் கொண்டாட்ட வேளையில் இந்தோனேசியாவில் இருப்பதற்கான சாத்தியம் அதிகம். இலங்கையிலிருக்கும் நேரமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் தங்குமிட வசதி தந்தால் போதும். இந்தோனேசியாவில் இருந்தால் போக்குவரத்து வசதியும் தர முடியுமாக இருந்தால் நல்லது. இவ்வாண்டு ஹஜ்ஜுக் கடமைக்காக மக்காவுக்குச் செல்லவும் ஏற்பாடாகியுள்ளது. சரியான திகதி முடிவான பின்னர் உறுதிப்படுத்தலாம்.--பாஹிம் (பேச்சு) 15:39, 23 மே 2019 (UTC)
- முடிந்தவரை செப்டெம்பர் 14,15 இல் நடாத்த முயற்சி செய்வோம். இலங்கை/இந்தியா தவிர ஏனைய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கென்று நல்கை விண்ணப்பிக்கவோ வழங்கப்படவோ இல்லை. எனவே, இலங்கையில் இருந்து நீங்கள் வருவதற்கும் தங்குமிடத்திற்கும் மட்டுமே உதவித்தொகை நல்க முடியும். --சிவகோசரன் (பேச்சு) 15:23, 26 மே 2019 (UTC)
இணைய சந்திப்பு
தொகுவணக்கம், இந்த ஒன்றுகூடல் தொடர்பாக உரையாடுவதற்காக கூகுள் ஹாங் அவுட் சந்திப்பு ஒன்றை எதிர்வரும் ஜூன் 2 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் 10.30 வரையும் பிற்பகல் 2 மணிமுதல் 2.30 வரையும் உரையாடுவோம். வசதியானவர்கள் இந்த இணைப்பில் இணைந்து கொள்ளவும். நன்றி.
இணைப்பு: https://hangouts.google.com/group/xQqLBgDAuJMeMRvYA
--சிவகோசரன் (பேச்சு) 16:18, 29 மே 2019 (UTC)
- சந்திப்பு எவ்வாறு நிகழ்ந்தது. நான் தற்போது டிடிடி 2019 நிகழ்வில் இருந்ததால் கலந்து கொள்ள இயலாமல் போனது. கலந்து கொண்ட யாரேனும் விவாதிக்கப்பட்ட/திட்டமிட்ட பணிகளைப் பகிரலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:54, 2 சூன் 2019 (UTC)
- கலந்துரையாடக் காலையில் எவரும் வரவில்லை. பிற்பகலில் பாலாஜி மட்டுமே இருந்தார். களப்பணிகளை நானும் மயூரநாதனுமே ஆற்றவேண்டியுள்ளது. நிகழ்வுகள் தொடர்பான திட்டமிடலை இந்தியத் தமிழ் விக்கிப்பீடியர்கள் உரையாடி இறுதி செய்ய வேண்டும். பொதுவாகப் பின்வரும் ஒழுங்கில் நிகழ்வுகள் அமையும்.
நாள் 1: யாழ்ப்பாணத்திற்குள் கலாச்சாரச் சுற்றுலா. இது அரை நாள் மட்டுமே நடைபெற முடியும் என விக்கிமீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. எனவே, நாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு எங்காவது சென்று அங்கு சில நிகழ்வுகளை நடாத்தலாம். குறிப்பாகக் கொள்கை உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எட்டப்பட வேண்டும். இது முதல் நாளில் செய்யலாம். நாள் 2: காலை - விக்கிப்பீடியர்களுக்கான நிகழ்வுகள். என்னென்ன நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்பதை இங்கு உரையாடி முடிவெடுக்க வேண்டும். நாள் 2: பிற்பகல் - பொது அரங்கில் விக்கிப்பீடியா நிகழ்வு. இதற்குக் கல்வியாளர்கள், மாணவர்கள் அழைக்கப்படுவதுடன் பத்திரிகை விளம்பரமும் கொடுக்கப்படும். இந்நிகழ்வில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்படும். உத்தியோகபூர்வமான ஒரு விழாவாக அமையும்.
மேற்படி நிகழ்ச்சி நிரலில் செய்யக்கூடிய விடயங்கள் தொடர்பில் உரையாடி முடிவெடுக்க வேண்டும். பங்கேற்க விரும்பும் அனைவரும் தங்கள் கருத்துகளை இட்டு நிகழ்வுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:15, 2 சூன் 2019 (UTC)
ஜூலை 22 இற்றை
தொகுதற்போதைய செய்தியின் அடிப்படையில் இலங்கையில் அவசரக்காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அடுத்த நிலவரம் ஆகஸ்ட் 22 இல் தான் தெரியவரும். நமது திட்டமிடலையும் நிகழ்வையும் அதற்கேற்ப ஒத்திப் போடுவதைத் தவிர வேறு வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:37, 23 சூலை 2019 (UTC)
- ஆம், நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அறிவித்துள்ளோம். அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் வரை திகதியைத் தீர்மானிக்க முடியாது. நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வில் எம்முடன் இணைந்து பணியாற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலரும் அதில் இருப்பதால் இங்குள்ள துறைசார் கல்வியாளர்கள் பலர் கலந்துகொள்வர். நிகழ்ச்சியில் செய்யவேண்டியவை குறித்த முன்மொழிவுகளை வரவேற்கிறேன்.--சிவகோசரன் (பேச்சு) 15:20, 2 ஆகத்து 2019 (UTC)
சிவகோசரன் தோராயமாக மாதத்தை சொல்ல முடியுமா? அக்டோபர், நவம்பர் ஒத்தி வைக்கப்படுமா? அல்லது செப்டம்பரிலேயா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:03, 14 ஆகத்து 2019 (UTC)
- @தென்காசி சுப்பிரமணியன்: குறைந்தபட்சம் இரு மாதமாவது இடைவெளி இருக்கும். ஆகஸ்ட் 22க்குப் பிறகு நிலைமையைப் பொறுத்து ஒரு இணையவழிச்சந்திப்பில் தேதியை இறுதி செய்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:13, 14 ஆகத்து 2019 (UTC)
தற்போது தேர்தல் பற்றிய செய்தி வந்து கொண்டிருப்பதால் அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படுமென எதிர்பார்க்க முடியவில்லை. அது விரைவில் நீக்கப்படவும் கூடும் அல்லது நீடிக்கப்படவும் கூடும். அது நீக்கப்படும் வரை எத்திகதியெனத் தீர்மானப்பது சாத்தியமில்லையென்றே நினைக்கிறேன். அதன் பின்னரே குறிப்பிட்ட இடைவெளி விட்டுத் தீர்மானிக்கப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 10:20, 14 ஆகத்து 2019 (UTC)
ஓகத்து 23 இற்றை
தொகுஇலங்கையில் அவசரகாலச் சட்டம் நேற்று நீடிக்கப்படவில்லை. அதன் வர்த்தமானி அறிவித்தல் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. மீண்டும் புதிய அறிவித்தல் விடுக்கப்படுமா என்பது சரியாகத் தெரியவில்லை. எதிர்பார்த்து போன்று செத்தெம்பரில் கொண்டாட்டத்தை நடத்த முடியுமா?--பாஹிம் (பேச்சு) 12:32, 23 ஆகத்து 2019 (UTC)
அக்டோபர் 12, 13 இல் நடாத்தலாம் என முன்மொழிகிறேன். நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை காலம் என்பதால் ஒழுங்கமைப்புச் சற்றுக் கடினமாக இருக்கும். மழை பெய்தால் வெளியே செல்லும் நாள் நன்றாக அமையாது. அரச அதிபர் தேர்தல் வரவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும். எனினும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள இவ்வேளையில் நிகழ்வை நடாத்தி முடித்துவிடுவதே நல்லது என எண்ணுகிறேன். ஏனையோரின் கருத்துகளைச் செப்டம்பர் 5ஆம் திகதிக்கு முன் தெரிவித்தால் நாட்களை இறுதி செய்யலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:10, 26 ஆகத்து 2019 (UTC)
- இந்தியப் பயனர்கள் அணுமதிச் சீட்டு பெறுவதற்கு என்று காலதாமதம் எதுவுமில்லை. விரைவாக சி.ஐ.எஸ். உதவிக்கு அனுகினால் அதுவும் கிடைக்க வாய்ப்புள்ளது (கவனிக்க @Balajijagadesh:). பல முறை தள்ளித்தள்ளி போய்விட்டதால் இந்த நாளையும் தள்ளிப் போடாமல் நிகழ்ச்சியை நடத்தலாம். தேதி இறுதி ஆனவுடன் இலங்கைக்குச் செல்பவர்கள் பட்டியலை இறுதி செய்ய வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:14, 26 ஆகத்து 2019 (UTC)
- இலங்கைப் பயனர்களுக்கு இந்த திகதிகள் சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். தமிழ்நாட்டு பயனர்கள் தம் பயண ஒழுங்கு பற்றித் தெரிவித்தால் நல்லது.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:37, 2 செப்டம்பர் 2019 (UTC)
மற்றொரு விடயம் சிவகோசரன், இலங்கையிலிருந்து பங்குபற்றுபவர்களை அதிகரிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டது. இது குறித்து ஏதும் ஒழுங்குகள் உள்ளனவா? மலையகம் மற்றும் கிழக்கில் இருந்து பயனர்களை அதிகரிப்பதாயின் தங்குமிடம், போக்குவரத்து வழங்க வேண்டும். அதற்கு நிதி ஒழுங்குகள் இருக்காது என்று நினைக்கின்றேன். அவ்வாறாயின் யாழ்ப்பாணத்தில் இருந்து பங்குபற்றுபவர்களை அதிகரிக்க வேண்டும்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:42, 2 செப்டம்பர் 2019 (UTC)
வேறொரு விக்கிமீடிய நிகழ்வு நடைபெற இருப்பதால் இந்நாட்களைத் தவிர்க்குமாறு விக்கிமீடியா அறக்கட்டளை வேண்டுகிறது. எனவே, நிகழ்வை அக்டோபர் 19, 20 இல் நடாத்த முன்மொழிகிறேன். இலங்கையில் இருந்து 20 பேருக்குப் போக்குவரத்து வசதியும் 10 பேருக்குத் தங்குமிட வசதியும் வேண்டி நல்கை பெறப்பட்டது. இதுவரை 3 பேர் மட்டுமே உதவி தேவைப்படுவதாகக் கேட்டிருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து மேலும் சிலர் கலந்துகொள்வதில் சிக்கலேதுமில்லை. --சிவகோசரன் (பேச்சு) 15:28, 4 செப்டம்பர் 2019 (UTC)
- 19/20 தேதியை ஏற்கிறேன். இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதிச் சீட்டு(visa) ஒரே நாளில் வாங்கிவிடலாம். கடவுச் சீட்டு(passport) இல்லாதவர்கள் தட்கல்முறையில் விண்ணப்பிக்கவேண்டிவரும். @Balajijagadesh: சி.ஐ.எஸ்.இன் உதவிக் கோரிக்கை ஏதேனும் வைக்க முடிந்ததா? இதனை இப்போது விரைவுபடுத்த வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:45, 5 செப்டம்பர் 2019 (UTC)
மீள்பரிசீலனை
தொகுநிகழ்ச்சிக்கான திகதிகளை மீள்பரிசீலனை செய்ய இயலுமா??
செப்டம்பர் எட்டு இற்றை
தொகுஅக்டோபர் 19/20 ஆம் தேதிகளில் நிகழ்ச்சி நடத்த இதுவரை மாற்றுக் கருத்தில்லை. உரிய நேரத்தில் இத்தேதியை @Sivakosaran: இறுதி செய்வார். பாலாஜி சிஐஎஸுடன் உரையாடி வருகிறார். @Dineshkumar Ponnusamy, Kalaiarasy, and சஞ்சீவி சிவகுமார்: உதவித்தொகை குழுவினர்க்கு உதவும் பொருட்டு பயண உதவித்தொகைக்குப் பயனர்களைத் தேர்வு செய்ய வேண்டிய தகவல்களைச் சேகரித்துவருகிறோம். இதனடிப்படையில் செப் 11க்குள் முதல்பட்டியலை இறுதி செய்வோம் அதில் அதிகபட்ச பயனர்களின்(CIS தரும் ஆதரவு அடிப்படையில்) உதவியை CIS கணக்கில் கொள்வோம். மீதியுள்ள நபர்களின் உதவியை விக்கிமீடியா அறக்கட்டளை கணக்கில் கொள்ளுவோம். கடைசி ஐந்து காத்திருப்பு பட்டியலில் மீதிப் பயனர்களை வைத்துக் கொண்டு அக்டோபர் முதல்வாரம் இரண்டாவது பட்டியலை இறுதி செய்வோம். தேவைப்படும் தகவல்கள்
- அருகே உள்ள விமான நிலையம் எது?
- இதர விக்கிப்பீடியர்களுடன் கொழும்பிலிருந்து ஒரே நேரத்தில் யாழ்பாணத்திற்குப் பயணம் செய்ய விருப்பமா?
- சாலைவழியில் செல்ல இயலுமா?
- இருப்புப்பாதையில் செல்ல இயலுமா?
- நிகழ்வில் ஏதேனும் திட்ட அறிக்கை/வகுப்பு எடுக்கும் திட்டமுள்ளதா? (இருந்தால் விளக்குக)
- முழு நிதி நல்கை வழங்க இயலாவிட்டால் பகுதியளவு நிதி நல்கை வழங்கினால் கலந்து கொள்ள இயலுமா ?
- வேறு யாரேனும் யோசனையிருந்தால் கூறலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:49, 8 செப்டம்பர் 2019 (UTC)
நன்றி நீச்சல்காரன். மிக அவசியமான முன்னெடுப்பு. திகதியை இறுதிசெய்வதற்கு விக்கிமீடியா அறக்கட்டளையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். இது ஒரு பன்னாட்டு நிகழ்வு என்பதால் அவர்களது உத்தியோகப்பூர்வப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இங்குள்ள நிலைமை குறித்து அறக்கட்டளைக்கு அறிவிப்பர். இன்னும் சில நாட்களில் அவர்களது முடிவு தமக்குத் தெரியவரும் என அறக்கட்டளை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது அனுமதி கிடைத்ததும் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம். சிஐஎஸ்/ஏ2கே இன் உதவி குறித்த தகவல் தெரிந்தால் உதவித்தொகை பெறும் இறுதிப்பட்டியலை அறக்கட்டளையின் அனுமதிக்குச் சமர்ப்பிக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 14:59, 8 செப்டம்பர் 2019 (UTC)
- தேதி இறுதியானால் பதாகைகள் தயாரிக்கவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அவர்கள் செலவில் யாரேனும் வந்து சென்றால் நிர்வாகரீதியிலான அழைப்பையும், நிகழ்விற்கான அனுமதியும் வழங்க இயலுமா? அப்படியெனில் நிதியுதவி இன்றி பொதுவான அழைப்பாகத் தமிழகத்தில் பரப்புரை செய்யலாம். விரும்புபவர்கள் முன்பதிவுசெய்து நமது கூடலுக்கு வந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறக்கும் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 20:56, 8 செப்டம்பர் 2019 (UTC)
- நீச்சல்காரனும், நானும் நேற்று உரையாடிய படி, உரியவர்களுக்கு பகிர்ந்த கூகுள் ஆவணமொன்றில் வேண்டிய விவரங்களைப் பெற்று வருகிறேன். கீழ்வரும் பயனர்களைத் தவிர மற்றவரிடம் தகவல் பெறப்பட்டுள்ளது.
- பயனர்:SivakumarPP
- பயனர்:j.shobia
- பயனர்:Balajijagadesh
- பயனர்:Ravidreams
- பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை
- பயனர்:Mohammed Ammar
- பயனர்:Kaliru
- பயனர்:Anbumunusamy
தொடர்ந்து மற்றவரிடம் தகவல் பெற முயல்கிறேன். ஏற்காடு இளங்கோவுக்கு அலுவலகத்தில் அனுமதி பெற, விக்கிசார்பாக கடிதமொன்று தேவை. அப்பொழுதே, அவர் உயர் அதிகாரி அனுமதி தரும் சூழல் உள்ளது. என்ன செய்யவேண்டும் என்று சீனியிடம் ஆலோசித்துள்ளார். எனவே, அவரிடம் விவரம் தருக.--த♥உழவன் (உரை) 05:31, 9 செப்டம்பர் 2019 (UTC)
- தாமதத்திற்கு மன்னிக்கவும். தனிப்பட்ட காரணங்களால் (அக்டோபர், நவம்பர்) என்னால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது. :(. நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்.--சிவக்குமார் (பேச்சு) 06:26, 9 செப்டம்பர் 2019 (UTC)
உதவித் தொகை பெறும் பயனர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை என்ன? இதை வெளிப்படையாக அறிவித்து விண்ணபங்களை விக்கியிலேயே பதியுமாறு செய்ய வேண்டும். செல்பேசி, முகவரி போன்ற தனிப்பட்டதகவலை வேண்டுமானால் தனிப்பட நாடி சேகரித்துக் கொள்ளலாம். பயண நல்கைகளை வெளிப்படையாக நல்குவது விக்கி நடைமுறை. இதைப் பின்பற்ற வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 06:45, 9 செப்டம்பர் 2019 (UTC)
@Sivakosaran and Neechalkaran: //இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அவர்கள் செலவில் யாரேனும் வந்து சென்றால் நிர்வாகரீதியிலான அழைப்பையும், நிகழ்விற்கான அனுமதியும் வழங்க இயலுமா?// இது சற்று riskஆனது. இந்தியாவில் இருந்து இலங்கை செல்பவர்கள் சும்மா சுற்றுலா விசாவில் செல்வது, சுற்றிப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்வதே நல்லது. விக்கி நிகழ்வு பற்றிக் கூறுவதைத் தவிர்க்கலாம். கருத்தரங்கு, பயிற்சிக்குச் செல்கிறோம் என்று சொன்னால் அதற்கு conference visa கேட்கக்கூடும். இதை ஏற்பாடு செய்வதற்கு நேரம் இருக்கிறதா தெரியவில்லை. இலங்கை ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். --இரவி (பேச்சு) 06:50, 9 செப்டம்பர் 2019 (UTC)
@Ravidreams:, இலங்கையில் Conference Visa என்று எதுவும் கிடையாது. எதற்கும் சும்மா சுற்றிப் பார்க்கச் செல்வதாகக் கூறுவதே நல்லது. தங்குமிடம் எதுவென்று கேட்கக்கூடும். தனிப்பட்ட தங்குமிடங்களாகக் கூறினால் பிரச்சினையில்லை.--பாஹிம் (பேச்சு) 04:25, 10 செப்டம்பர் 2019 (UTC)
பயண நல்கைக் குழு
தொகுஎத்தனைப் பேருக்கு நல்கை தருவது என்று தான் WMF, CIS முடிவு செய்வார்கள். யார் பெறுவது, அதற்கான தகுதி வரையறை என்ன என்று தமிழ் விக்கிப்பீடியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கான நல்கைக் குழு உருவாக்கி இலகுவான விதிகளை வரையறுக்க வேண்டும். பயண நல்கை வேண்டாதவர்கள், நிகழ்வுக்கு வர இயலாதவர்கள், இலங்கைப் பயனர்கள் இந்தக் குழுவில் பங்கு வகிக்கலாம். வேங்கைத் திட்டம் அம்ரித்சர் பயிற்சிக்குச் செல்ல குறைந்தது சில தொகுப்புகள் இருந்தால் போதும் என்று வரையறைத்தோம். அது போல் ஏதாவது ஒரு குறைந்தபட்ச தகுதியை வைத்து, சிக்கலான விதிமுறைகள் இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக, உடனடியாக முடிவெடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். பிற்காலத்தில் யாரும் தனக்கு பயண நல்கை கிடைக்கவில்லை என்று வருந்தாமல் இருக்கவும், அதற்கு உள்நோக்கம் உண்டா என்ற ஐயமுறாமல் இருக்கவும் இத்தகயை நடைமுறை தேவை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 07:00, 9 செப்டம்பர் 2019 (UTC)
- குறுகிய நாட்களும், குறைந்த தன்னார்வலப் பணிநேரமும் இருப்பதால் விரைந்து தரவுகளைச் சேகரிக்க, பயனர்களின் பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்தவில்லை. சேகரிக்கப்படும் தரவுகள் இங்கே உள்ளன முன்னர் விவாதித்ததன் அடிப்படையில் நல்கைக்குழுவினரான மூவருக்கும்(மேலும் பங்கெடுக்காத பயனர்களும் இதில் இணைந்துகொள்ளலாம்) பயன்பட 500 தொகுப்புகள் உள்ளதா(விக்கிப்பீடியாவில் மற்றும் விக்கித்திட்டத்தில்) உட்பட இதர வேண்டிய தரவுகள் இதில் உள்ளன. -நீச்சல்காரன் (பேச்சு) 08:33, 9 செப்டம்பர் 2019 (UTC)
இரவி, நல்கை வழங்குதல் குறித்த தகவல் இங்குள்ளது. பங்கேற்கும் அனைவருக்கும் நல்கை வழங்கமுடியாது என்பது விக்கிமீடியா அறக்கட்டளையின் நல்கை விண்ணப்ப விதியாகும். 10 பேருக்கு சிஐஏஸ் நல்கை வழங்கினால் 30 இந்தியப் பயனர்களுக்கு நல்கை கிடைக்கும் என்ற நோக்கில் 500 தொகுப்புகள் என்று கலந்துரையாடி விதியை நிர்ணயித்தோம். இப்போது சிஐஎஸ் நல்கை வழங்குமா என்பது சந்தேகமாக உள்ளதால், விண்ணப்பித்துள்ள 30+ பேரில் 20 பேரைத் தெரிவு செய்வது சற்றுச் சிக்கலாக இருக்கும். அண்மைக்காலங்களில் அதிக பங்களிப்புகளை வழங்கிவரும் பயனர்களைத் தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இது விக்கியின் நீண்டகாலப் பயனர்கள் சிலருக்கு எதிராக அமையலாம். சிஐஎஸ் இடமிருந்து உதவி பெற உங்களால் முயற்சிக்க முடியுமா? வேறு என்ன விதிகளைப் பயன்படுத்தலாம் என அனைவரும் கருத்திட வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:56, 10 செப்டம்பர் 2019 (UTC)
- @Sivakosaran:, CIS இடம் நாம் ஒரு சமூகமாக முன்வைத்திருக்கும் வேண்டுகோளே உரிய வகையில் கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன். இதில் தனிப்பட்ட முறையில் நானோ யாருமோ அணுகுவது முறையாக இருக்காது. அது நல்கை வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தைத் தருவதாகப் பார்க்கப்படும். விக்கிமீடியா தொடர்பான அனைத்துப் பயண நல்கைகளுமே தற்போது (அதாவது கடந்த ஒரு ஆண்டில்) முனைப்பாக உள்ள பயனர்களுக்கு வழங்குவதே வழக்கம். அப்போது தான் அவர்கள் பயணம் முடித்துத் திரும்பி வந்து தாங்கள் கற்றதைச் சமூகத்துக்குத் திருப்பித் தருவர். எனவே, வந்துள்ள விண்ணப்பங்களில் தற்போது முனைப்பாகப் பங்களிப்பவர்களுக்கு முன்னுரிமை தரலாம். இது போக, விக்சனரி, விக்கிமூலம் போன்று அனைத்துச் சமூகங்களில் இருந்து பங்கெடுக்கும் வகையிலும், ஆண் - பெண் போதிய பிரதிநிதித்துவம் உள்ள வகையிலும் முன்னுரிமை தரலாம். விக்கித் திட்டங்களில் 10% பெண்கள் பங்களித்து வருவதால் 20% அவர்களுக்கு என்று வேங்கைத் திட்டம் போன்றவற்றில் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இது குறைந்த பட்ச அளவே, இதற்கு மேலும் தகுதியான பெண்கள் விண்ணப்பித்தால் நிராகரித்தல் கூடாது. அது போல, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் வர விரும்பும் போதும் அவர்களை விட்டுக் கொடுக்கச் சொல்லிக் கோரலாம். இவை என் தனிப்பட்ட பரிந்துரைகளே. பயண நல்கைக் குழு இது போல் பல்வேறு வகைகளில் முன்னுரிமையை முடிவு செய்து அறிவிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 14:16, 15 செப்டம்பர் 2019 (UTC)
- முன்பு ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்யாது இருந்தபோதிலும் எனது பரிந்துரைகளாகப் பின்வருவனவற்றைக் கூறுகிறேன்.
- கடந்த ஒரு ஆண்டுகளில் முனைப்பாக பங்களிப்பவர்கள். (50 %) (காரணம்: மற்ற பயனர்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் தற்போது முனைப்பாகபங்களிப்பவர்களைச் சோர்வடையச் செய்யலாம்)
- நீண்டநாள் பங்களிப்பாளர்கள் (தற்போது அவர்களால் பல காரணங்களால் பங்களிக்க இயலாமல் போகியிருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களைப் போன்ற புது விக்கிபீடியர்கள் நேரில் பார்க்கும் போது பல விசயங்களைக் கற்றுகொள்ள உதவியாக இருக்கும்.) (20%)
- //தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவையொட்டி இந்தப் போட்டி நடைபெறுகிறது. புதுப்பயனர் போட்டி என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி புதுப்பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் ஒரு கட்டுரைப் போட்டி ஆகும்.// என நாம் ஏற்கனவே கூறியுள்ளதால் இதற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும். (20%)
- குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு. (மேலே கூறியவற்றியிலும் பெண்கள் அடங்குவதனால் 10%) ஸ்ரீ (✉) 15:18, 15 செப்டம்பர் 2019 (UTC)
- இது விக்கிமேனியா போன்ற பொதுத்திட்ட நிகழ்வு இல்லை விக்கிப்பீடியா நிகழ்வு என்பதால் இதில் நேரடித் தொடர்புள்ள பொதுவகம் மற்றும் விக்கிப்பீடியா திட்டம் தொடர்பான பங்களிப்பாளர்களைத் தேர்வு செய்வது இந்தத் திட்டம் வளர்வதற்கு உதவும். விக்கிமீடியாவின் மற்ற தேர்வு நடைமுறையை அப்படியே பின்பற்றலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:21, 16 செப்டம்பர் 2019 (UTC)
- விருப்பம் தெள்ளிய அணுகுமுறை--த♥உழவன் (உரை) 09:49, 20 செப்டம்பர் 2019 (UTC)
- விருப்பம் ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:59, 20 செப்டம்பர் 2019 (UTC)
இரவி, இந்நிகழ்வுக்கு உதவி பெறுவது குறித்த நடைமுறை என்ன என்று கேட்டு CIS இற்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை. பின்னர் பாலாஜி CIS ஐத் தொடர்பு கொண்டு 8 பேருக்கு உதவி கிடைக்கும் என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக இப்போதும் பேசிவருகிறார். இதற்கான உத்தியோகபூர்வ நடைமுறை தெரிந்தால் நாம் அவ்வழியில் முயற்சிக்கலாம். இந்த வார இறுதிக்குள் பதில் கிடைக்காதவிடத்து, நாம் மேலுள்ள கருத்துக்களை உள்ளடக்கிப் பொருத்தமான விதிகளைப் பயன்படுத்தி 20 பேரைத் தேர்ந்தெடுப்போம். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:46, 18 செப்டம்பர் 2019 (UTC)
@Sivakosaran: CIS பதிலுக்காக காத்திருக்க வேண்டாம். 20 பேருக்குத் தான் உதவ முடியும் என்ற அடிப்படையிலேயே விதிகளை வகுத்து உதவித் தொகை கேட்டுள்ளவர்களை வரிசைப்படுத்தலாம். பிறகு கூடுதல் உதவி கிடைத்தால், அடுத்தடுத்து வரிசையில் இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்டப் பட்டியலை அறிவிக்கலாம். நாட்கள் மிகக் குறைவாக இருப்பதால், முதற்கட்டப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள இது உதவியாக இருக்கும். --இரவி (பேச்சு) 21:16, 18 செப்டம்பர் 2019 (UTC)
அனுமதி கடிதம்
தொகுவணக்கம் @Sivakosaran: நான் உட்பட சில அரசுப் பணியாளர்கள் இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளோம். நாங்கள் எங்கள் அலுவலகங்களில் NOC பெற வேண்டியுள்ளது. தங்களால், நாங்கள் அங்கு வருவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் எனத் தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்ப இயலுமா? அல்லது வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் வேறு ஏதேனும் நடைமுறைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 15:39, 9 செப்டம்பர் 2019 (UTC)
தமிழ்ச் சங்கத்துடன் இணைந்த நிகழ்வு
தொகுஎமது கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான பொதுமக்கள் பங்கேற்கத்தக்க அரங்க நிகழ்வை எம்முடன் இணைந்து நடாத்த யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்வந்துள்ளது. தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று நானும் மயூரநாதனும் கலந்துரையாடினோம். அக்டோபர் 20இல் தமிழ்ச்சங்கம் ஏற்கனவே வேறொரு நிகழ்வை நடாத்துவதால், எம்முடன் இணைந்த நிகழ்வை 19ஆம் திகதி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான மண்டப ஒழுங்கு/செலவினங்களையும் தமிழ்ச்சங்கம் பொறுப்பேற்கிறது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் முதல் நாள் நிகழ்வுகள் இரண்டாம் நாளிலும் இரண்டாம் நிகழ்வுகள் முதல் நாளிலும் நடைபெறும். நிகழ்ச்சிநிரல் இன்னும் சில நாட்களில் பகிரப்படும். --சிவகோசரன் (பேச்சு) 15:39, 18 செப்டம்பர் 2019 (UTC)
நல்கை பெறுவோர் பட்டியல்
தொகுநிகழ்வுக்கு நல்கை பெறுவோர் பட்டியல் கீழே உள்ளது. நல்கை வழங்கும் குழு கலந்துரையாடி, தமிழ் விக்கிமீடியத் திட்டங்களில் 2019 மே 1 வரை குறைந்தது 500 தொகுப்புகள் உள்ளவர்களில் கடந்த ஓராண்டில் தமிழ் விக்கிப்பீடியாவிலும் பொதுவகத்திலும் சேர்த்துக் குறைந்தது 200 தொகுப்பு உள்ளவர்கள் நல்கை பெறத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிகழ்வுக்கான பாதீடு மீள் பரிசீலனை செய்யப்பட்டு விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அடிப்படையில் அவர்களது அனுமதி கிடைத்தால் 4 பேர் வரை மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படுவர். கீழுள்ள பட்டியல் விக்கிமீடியா அறக்கட்டளையின் அனுமதிக்காக அனுப்பப்படுகிறது. அவர்களது அனுமதி கிடைத்ததும் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்வர்.
இந்நல்கையானது, பயனர்களது இருப்பிடங்களிலிருந்து இருவழிப் போக்குவரத்து, இரு நாட்களுக்கான தங்குமிடம், உணவு (அக்டோபர் 18 மாலை முதல் அக்டோபர் 20 மாலை வரை) என்பவற்றை உள்ளடக்குகிறது. CIS இன் உதவி கிடைக்காததால் முடிந்தளவு அதிக பயனர்களை உள்ளீர்க்கும் விதத்தில் 4 பேரை அதிகமாகச் சேர்க்க முயற்சிப்பதால் பயண நேரத்திலான உணவு முதலிய செலவினங்களைப் பொறுப்பேற்க முடியாதுள்ளது. மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றை உள்ளடக்கி 20 பேருக்கு மட்டும் நல்கை வழங்கலாம். முதல் 20 இடங்களில் இருப்போர் கீழே கருத்துகளைத் தெரிவித்து விரைந்து முடிவெடுக்க உதவவும். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:02, 21 செப்டம்பர் 2019 (UTC)
பட்டியல்
தொகுAnbumunusamy- Arularasan. G
- Balajijagadesh
- Balu1967
- Balurbala
- Deepa_arul
- Hibayathullah
- Info-farmer
j.shobia- Neechalkaran
- Ravidreams
- Sridhar G
- Thamizhpparithi Maari
- Tshrinivasan
- Vasantha Lakshmi V
- Yercaud-elango
- காந்திமதி
- கி.மூர்த்தி
- தமிழ்க்குரிசில்
- தென்காசி சுப்பிரமணியன்
- Mohammed Ammar
இந்த 19 பேர் வருகிறார்களா? பயனர்: Anbumunusamy பயனரின் [[பயனர்_பேச்சு:Anbumunusamy#இலங்கை-2019-அக்டோபர்_19,_20|பேச்சுப்பக்கத்தில்] ] வரவில்லை என்பது போல் குறித்துள்ளார். முடிவை மாற்றிக்கொண்டார் என்றால் அவரின் பேச்சுப்பக்கத்திலும் வர உள்ளதாக தெரிவித்தால் குழப்பங்கள் குறையும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:24, 23 செப்டம்பர் 2019 (UTC)
காத்திருப்போர் பட்டியல்
தொகு- தனிப்பட்ட சில காரணங்களால் என்னால் கலந்து கொள்ள இயலாது.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:04, 22 செப்டம்பர் 2019 (UTC)
- உலோ.செந்தமிழ்க்கோதை * வரவில்லை.
- Abinaya Murthy*வாய்ப்பு கொடுக்கப்பட்டால் வருகிறேன்
- Rsmn * வர இயலாது என்று கூறியுள்ளார்
- Joshua-timothy-J * வர இயலாது என்று கூறியுள்ளார்
- TVA ARUN
- RUPA MANGALA R
- திவ்யாகுணசேகரன்
கருத்துகள்
தொகு- சென்னை- கொழும்பு விமான கட்டணங்கள் குறைவாக உள்ளது. திருச்சி போன்ற ஊர்களின் வழியாக கொழும்பு செல்லும் விமான கட்டணங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே அனைவரும் சென்னை வழியாக செல்ல முயற்சிக்கலாம் இதில் மீதும் பணத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
ஹிபாயத்துல்லா (பேச்சு) 10:54, 22 செப்டம்பர் 2019 (UTC)
- திருவனந்தபுரத்திலிருந்து வருவதாகச் சொல்லியிருந்தேன். விமானக் கட்டணம் குறையுமென்றால் நானும் சென்னையிலிருந்தே வருகிறேன். எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. கவனிக்க:சிவகோசரன். நன்றி.-இரா. பாலாபேச்சு 12:23, 22 செப்டம்பர் 2019 (UTC)
- செலவை அறக்கட்டளை குறைக்க விரும்புமாயின், நானும் சென்னையில் இருந்து பயணிக்க விரும்புகிறேன். அப்படி பயணிக்க, சென்னை வரை பேருந்து பயணக்கட்டணத்திற்கான நிதிவுதவியை எதிர்பார்க்கிறேன்.--த♥உழவன் (உரை) 00:11, 23 செப்டம்பர் 2019 (UTC)
- பெங்களூரிலிருந்து வருவதாகச் சொல்லியிருந்தேன். விமானக் கட்டணம் குறையுமென்றால் நானும் சென்னையிலிருந்தே வருகிறேன்.--அருளரசன் (பேச்சு) 01:05, 23 செப்டம்பர் 2019 (UTC)
- எனக்கு இதில் கேள்விகள் உள்ளன. கோவை விமாநிலையத்திலிருந்து சென்னை விமானநிலையம் சென்று அங்கிருந்து கொழும்பு செல்வதாக சொன்னதாக நினைவு. திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானம் இருக்கா? இல்லை எனில் அனைவரும் சொந்த செலவில் சென்னைக்கு வந்து அங்கிருந்து மொத்தமாக கொழும்பு விமாநிலையம் செல்வதாக உத்தேசமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:02, 23 செப்டம்பர் 2019 (UTC)
- பாதீடு தயாரிக்கும்போது, சென்னை தவிர்ந்த இந்தியாவின் ஏனைய விமானநிலையங்களிலிருந்தும் பயனர்கள் வரலாம் என்பதைக் கருத்திலெடுக்கத் தவறியமைக்கு மன்னிக்கவும். தங்கள் ஊர்களிலிருந்து பேருந்து/தொடருந்து மூலம் சென்னையை அடைந்து அங்கிருந்து விமானம் மூலம் வரக்கூடியவர்கள் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கவும். பேருந்து/தொடருந்துப் பயணச் செலவுகள் பொறுப்பேற்கப்படும். நன்றி --சிவகோசரன் (பேச்சு) 16:16, 23 செப்டம்பர் 2019 (UTC)
ஓ. நல்லது. எனில் நானும் கோவையில் இருந்து தொடருந்தில் சென்னை வருகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:27, 24 செப்டம்பர் 2019 (UTC)
- வணக்கம். என்னைத் தேர்தெடுத்தற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி. தற்பொழுது என்னுடைய சூழலில் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாத நிலை. அதனால் இலங்கை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை என்பதை உறுதி செய்கிறேன். :( -- சோபியா (பேச்சு) 16:33, 25 செப்டம்பர் 2019 (UTC)
நல்கை பெறுவோர் இற்றை
தொகுசிஐஎஸ் அமைப்பு, இந்தியர்கள் 8 பேரின் விமானச்சீட்டுக்கு உதவ முன்வந்ததை அடுத்து, நல்கை பெற விண்ணப்பித்து வருகையை உறுதிசெய்த அனைவருக்கும் நல்க வழங்குவது சாத்தியமாகியுள்ளது. அனைவரது பெயர்களும் விக்கிமீடியா அறக்கட்டளையால் அனுமதியளிக்கப்பட்டுவிட்டன. அடுத்துவரும் நாட்களில் விமானச்சீட்டு முற்பதிவுகளை மேற்கொள்ள ஒழுங்கு செய்யப்படும். தயவுசெய்து அனைவரும் கூகிள் விரிதாளில் நீங்கள் பயணம் செய்ய உத்தேசிக்கும் நாட்களை இற்றைப்படுத்தவும். ஒருங்கிணைப்பளர்களுக்கு இது உதவியாக இருக்கும். --சிவகோசரன் (பேச்சு) 16:01, 2 அக்டோபர் 2019 (UTC)
பரப்புரை திட்டமிடல்
தொகுஇந்தியப் பயனர்களின் பயண ஒருங்கிணைப்பு தனியான வாட்சப் குழுவில்(பொரும்பாலானோர் உகந்த சமூகத்தளம் இதுவென்பதால்) இயங்குகிறது. குழப்பங்களைத் தவிர்த்து, விரைவாக செயல்பட நிகழ்ச்சியின் இதர ஏற்பட்டையும் உபசரிப்பு முடிவுகளையும் உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அவர்களின் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யட்டும். வேறுவகையில் இங்கிருந்து ஏதேனும் உதவி தேவைப்படும் என்றால் அதைச் செய்கிறோம். முன்னர் திட்டமிட்டபடி அக் 18 - நிரல்திருவிழா, உள்ளூர் நிகழ்வுகளை அங்குள்ள சூழலுக்குத் தோதாக இருந்தால் செய்யலாம் இல்லாவிட்டால் விடலாம். திகதி இறுதி ஆனதால் பரப்புரைக்குப் பதாகைகள் தயாரிக்கலாம் என நினைக்கிறேன். மாத இதழ்களுக்குத் தகவல் கொடுக்க இப்போதே முயலலாம்.
- இந்திய & சர்வதேச செய்தி நிறுவனங்களுக்குச் செய்தி அறிக்கை(பிற மொழிகள் உட்பட)
- 16 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வு, சுவையானவற்றை வலைப்பதிவில்/ஆவணமாக்கல்
- ஊடகங்களுக்குச் சிறப்புக் கட்டுரைகள் எழுதுதல் (தமிழுலகில் தமிழ் விக்கிப்பீடியாவின் தாக்கம் குறித்து)
- தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினையை ஒருவாரத்திற்கு மாற்றுதல், தமிழ் விக்கிப்பீடியாவின் சமூகத்தளங்களில் எல்லாம் தலைப்புப் பதாகை மாற்றுதல்
மேலும் இந்தியாவிலிருந்து வேறு என்ன என்ன பரப்புரைகள் செய்யலாம் என மற்றவர்களும் கருத்திடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:43, 25 செப்டம்பர் 2019 (UTC)
தொடர் பங்களிப்பாளர் போட்டிக்கான (2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது) பரிசுகள் இதுவரை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை நல்குவதற்கான வாய்ப்பு இருந்தால் விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இது குறித்து நினைவுபடுத்தலாம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 09:28, 3 அக்டோபர் 2019 (UTC)
- TNSE Mahalingam VNR, ஆம் நிச்சயமாக வழங்கப்படும். நீங்கள் பங்கேற்க முடியாதிருப்பதால் உங்களுக்கான பரிசை வேறு யாரிடமாவது கொடுத்துவிட முடியும். --சிவகோசரன் (பேச்சு) 16:13, 12 அக்டோபர் 2019 (UTC)
@சிவகோசரன். நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:20, 12 அக்டோபர் 2019 (UTC)
- குறுகிய காலமே இருந்தாலும் கேட்டவுடன் 16 ஆவது ஆண்டுவிழா இலச்சினை ஒன்றை உருவாக்கித் தரவுள்ளார் @AntanO:--நீச்சல்காரன் (பேச்சு) 09:45, 14 அக்டோபர் 2019 (UTC)
- https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Wikipedia_logo_variants புதிய இலச்சினைகள் தயார். மற்றவர்கள் கருத்திற்கேற்ப இதனை ஒரு வாரத்திற்கு முகப்புப் பக்கத்தில் இடுவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:08, 16 அக்டோபர் 2019 (UTC)
- இரு வாரங்கள் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கும். இந்த வார சனிக்கிழமையோடு சிறப்பு லச்சினையை மீளமைக்கலாம் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 18:58, 29 அக்டோபர் 2019 (UTC)
இலங்கை நிகழ்ச்சி நிரல்
தொகு- இங்கு பலவித வழிகாட்டல் நிகழ்படங்கள் / காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை இரவி, பாலாஜி, நான், இன்னும் சிலர் உருவாக்கியுள்ளோம். https://commons.wikimedia.org/wiki/Category:Instructional_videos_on_using_Tamil_Wikipedia அதுபற்றிய அறிமுகத்தினை அவரவர் தர கேட்டுக் கொள்ளலாம். சீனி போன்றவர்களை கட்டற்ற மென்பொருள் குறித்தும், நீச்சல்காரனின் படைப்புகள் விக்கிக்கு எப்படி உதவுவது குறித்தும் விளக்கம் அளிக்க கோரலாம்.அனைவருக்கும் அதனை பதிவிறக்கி கொடுத்தல், பலருக்கும் இணைய இணைப்பு அற்ற நிலையிலும் உதவும். அவற்றை அனைத்தையும் பதிவிறக்கி வருகிறேன்.
- வேங்கைத்திட்டம் குறித்த கலந்துரையாடல்.--த♥உழவன் (உரை) 05:17, 9 அக்டோபர் 2019 (UTC)
- இலங்கை நிகழ்வில்,
- காப்புரிமை, பதிப்புரிமை உரிமம் பற்றியவை
- . விக்கிப்பீடியாவின் பிற திட்டங்கள், விக்கி டேட்டா, விக்கி மூலம்,விக்சனரி பொதுவகம் போன்றவை பற்றிய அறிமுகம்+பயிற்சி
- . விக்கியில் தொகுத்தல் கருவிகள் பற்றி பயிற்சி.
- . புதுப்பயனர்களை ஈர்க்கும் திட்டங்கள்(WWWW) (Wiki loves- food, birds, travels, butterflies) போன்றவை பற்றிய அறிமுகம்.
- . ஒரு குறிப்பிட்ட தலைப்புகளில் எடிட்டதான்.
- . ஒரு புகைப்பட நடை சென்று அதனை பொதுவகத்தில் பதிவேற்றச்செய்தல்
- .விக்கிமீடியா, CIS இவர்களிடமிருந்து நல்கையை எந்தெந்த நிகழ்வுகளுக்கு, எவ்வாறு அனுகிப்பெறலாம் என்ற தகவல் ஆகியவை எனது பரிந்துரைகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:20, 9 அக்டோபர் 2019 (UTC)
- பயிற்றுனரை பயிற்றுவிப்போம் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அது தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
- பதிப்புரிமை தொடர்பாக ஶ்ரீநிவாசன் சென்னை கலந்துரையாடலில் ஒரு நிகழ்வினை நடத்தினார். அதுபோல அவரே நடத்தினால் பதிப்புரிமைச் சிக்கல் பற்றி அறியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
- பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் தமிழ் விக்கிப்பீடியாவினை ஒப்பிட்டு புள்ளிவிவரங்களுடன் இரவி ஒரு நிகழ்வினை நடத்தலாம். நாம் சாதித்த இடங்களையும் சறுக்கிய இடங்களையும் தெரிந்து கொள்ள உதவும்.
--இரா. பாலாபேச்சு 08:12, 9 அக்டோபர் 2019 (UTC)
- நல்கையில் குறிப்பிட்டது போல Strategic discussions முதன்மையான நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம், மாநாட்டின் பொழுது பயிற்சிகளோ, பட்டறைகளோ முக்கியத்துவமற்றவை என நினைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள், விக்கிப்பீடியாவில் மேம்படுத்த வேண்டியவை, இலங்கைத் தமிழ்ப் பங்களிப்பை உயர்த்துதல் போன்ற பொருண்மைகளில் கலந்துரையாடி முன்மொழிவுகளை ஏற்படுத்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:21, 9 அக்டோபர் 2019 (UTC)
பயணத்துக்கு தேவையானவை பட்டியல் தேவை
தொகுபயணம் தொடர்பான ஐயங்கள் சில உள்ளன.
- கடவுச்சீட்டு மட்டும் தானே Original வேண்டும்?
- பயணச்சீட்டுகளும், விசாவும் நகல் போதும் தானே?
- இந்திய ரூபாயை எங்கே இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும்?
- 10K இந்திய ரூபாய் போதுமானதாக இருக்குமா?
- தனிப்பட்ட முறையில் சுற்றுலா செல்லாதவர்களுக்கு இந்திய ரூபா 10,000 போதுமானது.
- தற்போதைய இந்திய ரூபாய் இலங்கை ரூபாய்க்கு இடையான மடங்கு எத்தனை?
- அண்ணளவாக 2.5 மடங்கு
- கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் குறிப்பிட்ட தனியார் பேருந்துகள் உள்ளனவா? இருந்தால் தொடர்பெண் தரவும்.
- உள்ளன. www.busseat.lk இணையத்தளத்தில் பார்வையிடலாம். முற்பதிவும் செய்யலாம். முற்பதிவு செய்தால் எனக்கு அறியத்தரவும்.
- நாளை இரவு நீங்கள் கூறிய தளத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல 18 தியதியில் பயணச்சீட்டு எடுக்கலாம்னு இருக்கிறேன். திரும்புவதற்கு 20 இரவு பத்து மணியளவில் பயணச்சீட்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:58, 15 அக்டோபர் 2019 (UTC)
- யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடக்கும் முகவரியை விமானநிலையங்களில் Tourist VISA சரிபார்த்தலுக்காக கூற வேண்டியிருக்குமா? எந்தெந்த முகவரிகளை கொடுக்க வேண்டியிருக்கும்? பட்டியல் தேவை.
- நிகழிடங்களின் முகவரிகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நீங்கள் நிகழ்வுக்கு வருவதாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.
- சரி. சில நாடுகளில் தங்கும் விடுதி முகவரி கேட்பதாக உடன் பணிபுரிவோர் சொல்கிறார்கள். இலங்கை பற்றி தெரியவில்லை. தங்கும் விடுதி முகவரி கேட்டால் 86, திண்ணை விடுதி, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்று தரலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:34, 13 அக்டோபர் 2019 (UTC)
- இல்லை. பிறைட் இன் விடுதி, 51, சிவன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்பது தங்கும் விடுதியின் முகவரி. --சிவகோசரன் (பேச்சு) 15:23, 13 அக்டோபர் 2019 (UTC)
- சரி. சில நாடுகளில் தங்கும் விடுதி முகவரி கேட்பதாக உடன் பணிபுரிவோர் சொல்கிறார்கள். இலங்கை பற்றி தெரியவில்லை. தங்கும் விடுதி முகவரி கேட்டால் 86, திண்ணை விடுதி, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்று தரலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:34, 13 அக்டோபர் 2019 (UTC)
- கைப்பேசியில் இணையம் இலங்கை வந்ததும் எவ்வாறு இருக்கும்? ஜியோ போன்றவற்றுக்கு தனியாக ரோமிங் பேக்கேஜ்கள் எதுவும் உள்ளனவா?
- இது குறித்து உங்கள் தொலைபேசிச் சேவை வழங்குனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
மற்ற பயனர்களும் ஏதும் கேள்விகள் இருந்தால் இப்போதே கேட்டுத்தெரிந்துகொள்ளவும். நன்றி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:22, 10 அக்டோபர் 2019 (UTC)
- கடவுச்சீட்டு பயணக் காலம் முழுவதும் தேவை, மற்றவை அனைத்தும் மின்னாவணம் என்பதால் அசல் நகல் என்ற குழப்பமில்லை. மின்படி எடுக்கப்பட்டவை அனைத்தும் நகல் தான். 1 இந்திய ரூபாய் என்பது சுமார் 2.5 இலங்கை ரூபாய். விமான நிலையத்திலுள்ள நாணய மாற்று அங்காடி/சர்வதேச பற்றட்டைமூலம் பணவழங்கிகளிலும் உள்ளூர் நாணயத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் நிகழ்வு நடக்கும் முகவரியைக் கொடுக்கத் தேவையில்லை. நாம் சுற்றுலா அனுமதியைத் தான் பெறுகிறோம். தன்னார்வல நிகழ்வுகளுக்கு அங்கே கட்டுப்பாடுகள் அதிகம். நிகழ்விற்கு மட்டும் நீங்கள் வருவதால் பயணம் மற்றும் தங்குமிடச் செலவில்லை. கூடுதல் செலவுகள், தகவல்களை அறிந்தவர்கள் உறுதி செய்வார்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 11 அக்டோபர் 2019 (UTC)
- மேலே மறுமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. --சிவகோசரன் (பேச்சு) 16:20, 12 அக்டோபர் 2019 (UTC)
விமான நிலையத்தில் tourist visa எனச்சொல்லியும் பார்க்கப்போகிறவர்களின் எதாவது புகைப்படம் அடையாள அட்டை நகல் எல்லாம் கேட்பார்கள் என boarding pass தருமிடத்தில் சொல்கிறார்கள். உங்களுடையதை அனுப்ப முடிந்தால் நன்று. வேறு யாராவது இலங்கை வாழ் விக்கிப்பீடியர் புகைப்படம் அடையாள அட்டை என்றாலும் நன்று. இலங்கை விக்கிப்பீடியர்கள் யாராவது மொபைல் எண் தரவும். மின்னஞ்சல் tenkasisubramanian@gmail.com --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:51, 18 அக்டோபர் 2019 (UTC)
நிகழ்வுகள் இற்றை
தொகுதிட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் முதன்மைப் பக்கத்தில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்வுகளில் ஏதாவது மாற்றம் தேவை என்று கருதுவோர் கருத்திடுக. இதுவரை தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வழங்குவோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமக்கான அளிக்கைகளைத் தயார் செய்யவும். நிகழ்வுகள் தொடர்பில் கருத்துவேறுபாடு ஏதாவது இருப்பின் முன்னதாகத் தெரிவித்துச் சீர்செய்ய உதவுங்கள். அனைவரதும் ஒத்துழைப்புக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:29, 13 அக்டோபர் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி பரிசுகள்
தொகுவணக்கம் புதுப்பயனருக்கான போட்டியில் பரிசு பெற்றோர் பட்டியலில் எனது பெயர் உள்ளது ஆனால் எவ்வாறு பரிசு வழங்கப்படும் என்ற விவரங்கள் இல்லை... பரிசுகள் கொடுத்தாகிவிட்டதா?? எங்கு விவரங்களை கண்டறிவது பிரயாணி (பேச்சு) 10:22, 16 அக்டோபர் 2019 (UTC)
- பரிசுகள் 19ஆம் திகதி மாலை நிகழ்வில் வழங்கப்படும். திட்டப்பக்கத்தில் இலங்கை வந்துள்ள பயனர்களின் பட்டியல் உள்ளது. அவர்களில் எவராவது உங்கள் ஊருக்கு அருகில் இருந்தால் அவர்களிடம் உங்களிற்கான சான்றிதழைக் கொடுக்க முடியும். அல்லது தபாலில் அனுப்ப முடியும். உங்களுக்கான பரிசுக் கூப்பன் (Amazon eGift Card) 19ஆம் திகதி அல்லது வரும் வாரத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தயவுசெய்து kosaran@gmail.com எனும் எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள். --சிவகோசரன் (பேச்சு) 14:00, 17 அக்டோபர் 2019 (UTC)
வாழ்த்துகள்
தொகுதிட்டமிட்டபடி தமிழ் விக்கிப்பீடியாவின் 16ஆம் ஆண்டு நிகழ்வுகள் யாழில் நடப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆவல் இருந்தும், சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு கவலை இருப்பினும், நிகழ்வுகள், கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நிகழ்வதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நிகழ்வில் கலந்துகொள்ளும் இலங்கை, இந்திய தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் மகிழ்வாகவும், பயன்மிக்கதாகவும் இந்த நிகழ்வை நடத்த வாழ்த்துகிறேன். --கலை (பேச்சு) 09:54, 18 அக்டோபர் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டவர் என்ற ரீதியில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இலங்கையில் இருந்து கலந்து கொள்ள முயற்சித்தேன். தனிப்பட்ட காரணங்களால் முடியாமல் போனது. நிகழ்ச்சி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்--Fathima (பேச்சு) 14:53, 18 அக்டோபர் 2019 (UTC)
- போட்டியில் கலந்து கொண்டவர்கள் தான் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. உடன் நண்பர்/உறவினரையும் அழைத்துவரலாம். முயன்று பாருங்கள். உங்களைப் போன்ற இலங்கைப் பயனர்களைச் சந்திக்கவே நாடுகடந்து வந்துள்ளோம். -நீச்சல்காரன் (பேச்சு) 23:40, 18 அக்டோபர் 2019 (UTC)
16 ம் ஆண்டில் தமிழ் விக்கிச் சமூகம் - ஐந்து எண்ணங்கள்
தொகு16 தமிழ் விக்கி கொண்ட்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- Digital Tamil Encyclopedia Collection - கணியம் அறக்கட்டளை ஊடாக அனைத்து அரச வெளியீடுகளும் விக்கியில் ஏற்றக் கூடிய உரிமையில் கிடைத்துள்ளன. முதலாவதாக கலைக்களஞ்சிங்களில் கவனம் செலுத்தி விக்கி மூலத்தில் நாம் ஏற்ற வேண்டும். இலகுவாக navigate செய்யக் கூடியவாறு. தற்போதைய விக்கிமூலம் இலகுவாக navigate செய்யக் கூடியவாறு இல்லை.
- கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம் - விக்கித் தரவினைப் பயன்படுத்தி அல்லது விக்சனரியைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட, API ஊடாக அணுகக் கூடிய அகராதியை நோக்கி நாம் நகர வேண்டும்.
- விக்கித் தரவினைப் பற்றி கூடுதலாக நாம் சிந்திக்க வேண்டும். வெளித் திட்டங்களில் இருந்து விக்கித் தரவுக்கு நாம் தரவுகளை எப்படிச் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் விக்கித் தரவு integration இனை நிறைவேற்ற வேண்டும்.
- Deletionism movement இனை தமிழ் விக்கியில் மட்டுப்படுத்த காத்திரமான, தெளிவான கொள்கை, செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் தமிழ் விக்கிபீடியாவில் ஈடுபாடு குறைந்தற்கு இது ஒர் முக்கிய காரணம். https://meta.wikimedia.org/wiki/Inclusionism#Arguments_against_deletion
- எழுத்து மட்டும் அறிவல்ல. தொழிற்கலைகள், நாட்டுப்புறவியல், காட்சிப்புலக் கலைகள், நிகத்து கலைகள் என்று எழுத்துக்கு அப்பால் உள்ள அறிவினை நோக்கி நாம் செயற்திட்டங்களை மேலும் மேலும் முன்னெடுக்க வேண்டும். அது பல்வேறு கூட்டுச் செயற்பாடுகளேயே சாத்தியம்.
நன்றி. --Natkeeran (பேச்சு) 14:14, 18 அக்டோபர் 2019 (UTC)
Deletionism movement என்ற சொல்லாடலை ஆங்கில விக்கிப்பக்கத்திலும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதை மட்டும் இங்கே தனியே கொடுப்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும். Deletionism movement என தனியாக சொல்வதற்கு பதிலாக தரக்கண்காணிப்பில் ஒரு பகுதியான Deletionism movement என்று பயன்படுத்துவது சரியானதாக இருக்கலாம் என்பது என் பரிந்துரையும் வேண்டுகோளும் ஆகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:46, 25 அக்டோபர் 2019 (UTC)
அறிக்கை ஏற்பு
தொகுதமிழ் விக்கிப்பீடியா 16ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் அறிக்கை விக்கிமீடியா அறக்கட்டளையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். --சிவகோசரன் (பேச்சு) 16:24, 5 சூலை 2020 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 09:54, 6 சூலை 2020 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:21, 6 சூலை 2020 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:16, 6 சூலை 2020 (UTC)
- விருப்பம்- ஒருங்கிணைத்து வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் பாராட்டுகள். --கி.மூர்த்தி (பேச்சு) 16:35, 6 சூலை 2020 (UTC)