பிரயாணி
வாருங்கள்!
வாருங்கள், பிரயாணி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
புதுப்பயனர் போட்டி
தொகுநண்பருக்கு வணக்கம். தாங்கள் புதுப் பயனர் கட்டுரைப் போட்டிகளில் சிறப்பாகப் பங்களித்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.
- கட்டுரையின் முதலில் தமிழ் தலைப்புகளை எழுதுங்கள் அடைப்புக்குள் ஆங்கிலத் தலைப்புகளை எழுதவும் உங்களுடைய கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும்.
- தாங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதுவதால் அந்தக் கட்டுரையத் தமிழ்க் கட்டுரையோடு இணைக்கவும்.
- சான்றுகளை வெளியிணைப்புகளுக்கு முன்பாக சேர்க்கவும்.
- சிவப்புக் குறிகள் இருந்தால் அந்தக் கட்டுரை தமிழில் இல்லை (அ) அந்தப் பெயரில் இல்லை. என்பதை அறியலாம்.
வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.SRIDHAR G (பேச்சு) 09:21, 6 சனவரி 2019 (UTC)
தங்களுக்கும் வணக்கம். எவ்வாறு ஆங்கிலக்கட்டுரையுடன் தமிழ் கட்டுரையை இணைப்பது? அடுத்த கட்டுரையிலிருந்து தங்களின் குறிப்புகளை உபயோகப்படுத்துகிறேன் வாழ்த்துதலுக்கு நன்றி -- −முன்நிற்கும் கருத்து பிரயாணி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இணைப்பு தருவது எப்படி என்று அறிய இந்தக் காணொளி பாருங்கள். --இரவி (பேச்சு) 18:36, 7 சனவரி 2019 (UTC)
சந்தேகங்கள்- புதுப்பயனர் போட்டி
தொகுகட்டுரைப்பெயர் மாற்றப்பட்டால் மறுபடியும் போட்டிக்கட்டுரையில் சமர்ப்பிக்க வேண்டுமா?? குறுப்பிட்ட அனைத்து ஆங்கில கட்டுரைகள் அல்லாமல் வேறு கட்டுரைகளை எழுதினால் போட்டியில் சமர்ப்பிக்கலாமா?? பிரயாணி (பேச்சு) 17:06, 7 சனவரி 2019 (UTC)
- குழப்பங்களைத் தவிர்க்க, பெயர் மாற்றிய கட்டுரையை இன்னொரு முறை சமர்ப்பித்து விடுங்கள்.
- கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளிலேயே கட்டுரைகள் எழுத வேண்டும். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும் என்றில்லை. கூடுதல் தகவல் திரட்டி எழுதலாம். இந்தத் தகவல் நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் வேறு எங்கும் இருந்தும் வெட்டி ஒட்டாமல் பதிப்புரிமை சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.
- உங்களுக்கு வேறு என்ன துறை சார்ந்த கட்டுரைகள் எழுதுவது இலகுவாக இருக்கும் என்று சொல்லுங்கள். அவற்றைப் போட்டியல் சேர்க்க முயல்கிறோம்.
ஆர்வத்துடன் போட்டியில் பங்கு கொண்டு வருவதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 18:24, 7 சனவரி 2019 (UTC)
- நிதித்துறை சார்ந்த தலைப்புகளில் கட்டுரை எழுதுவது இலகுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
- கட்டுரையை மறுபடியும் சமர்ப்பித்து விட்டேன். -- −முன்நிற்கும் கருத்து பிரயாணி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் நிதித்துறை சார்ந்து உள்ள சில கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருகிறீர்களா? அதே போன்ற தலைப்புகளை இங்கும் தர முயல்வோம். கட்டுரைப் போட்டி தொடர்பான உதவிக்கு, இந்தப் பக்கத்தில் கேள்விகள் கேளுங்கள். மற்றவர்கள் உடனுக்கு உடன் பதில் அளிக்க வசதியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 07:39, 9 சனவரி 2019 (UTC)
தேவையற்ற சிவப்பு இணைப்புகள்
தொகுவணக்கம். தாங்கள் துவக்கிய சுவாமிநாத தேசிகர் கட்டுரையின் அதிகப்படியான சிவப்ப்பிணைப்புகளை நீக்கியிருக்கிறேன். இதனை இனிவரும் கட்டுரைகளில் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:21, 13 சனவரி 2019 (UTC)
சொர்க்கத்தீவு (புதினம்)
தொகுவணக்கம்! இக்கட்டுரைக்கு மேற்கோள்கள் சேர்க்கப்படல் வேண்டும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் முழுமை பெறாததாகவே கருதப்படும் என்பதனை கருத்திற் கொள்ளுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 20 சனவரி 2019 (UTC)
- புத்தகத்தைப் பற்றி என்னவிதமான மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும்??
உதாரணம்: மாதொருபாகன் (புதினம்). இணையத்தளத்தில் தேடிப்பார்த்து, மேற்கோள்களைச் சேருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 20 சனவரி 2019 (UTC)
மிக்க நன்றி.
இணையத்தில் காணும் பக்கங்களில் வணிக நோக்கற்ற விவரங்கள் கொண்ட பக்கங்களை மேற்கோளாக இணைக்க வேண்டுகிறேன். (உதாரணத்திற்கு புத்தகத்தின் விலை குறிக்கப்படாத பக்கங்கள்).--Booradleyp1 (பேச்சு) 08:16, 21 சனவரி 2019 (UTC)
நன்றி
நிறமற்ற வானவில்
தொகுவணக்கம். முழுக்கதையையும் இவ்வளவு விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக எழுதுவது நல்லது. --Booradleyp1 (பேச்சு) 08:16, 21 சனவரி 2019 (UTC)
மிகவும் நன்றி
கண்டிப்பாக. அடுத்த முறை சுருக்கமாக எழுதுகிறேன் பிரயாணி (பேச்சு) 08:27, 31 மார்ச் 2022 (UTC)
அ. முத்துக்கிருஷ்ணன்
தொகுவணக்கம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள், முழுமை அடைவது இல்லை என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:42, 28 சனவரி 2019 (UTC)
உதவிக்கு, காண்க:- விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:44, 28 சனவரி 2019 (UTC)
பக்கம் பெயர்மாற்றம்
தொகுபா.தேவேந்திர பூபதி என்ற கட்டுரையானது பா. தேவேந்திர பூபதி என்ற பெயருக்கு நகர்த்தியுள்ளேன். இனி தாங்கள் எழுதும் கட்டுரைகளில் இடும் தலைப்பில் இது போன்று ஒரு இடைவெளி விடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:52, 31 சனவரி 2019 (UTC)
பா. தேவேந்திர பூபதி
தொகுவணக்கம். எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். மிக நன்று. விக்கியாக்கத்திற்காக உங்கள் கட்டுரைகளில் மேற்கோள்ளப்படும் திருத்தங்களைக் கவனித்து அடுத்து வரும் உங்கள் கட்டுரைகளில் அவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கவனத்திற்கு:
- கட்டுரையின் துவக்கத்தில் வரும் தகவற்பெட்டியின் இடப்பக்க விவரங்களை மொழிபெயர்க்கவோ மாற்றவோ வேண்டாம். வலப்புற விவரங்களை மட்டுமே மொழிபெயர்க்கவும்.
- தனிநபர்களின் வலைப்பூக்களை மேற்கோள்களாகத் தராதீர்கள். அவை விக்கியில் ஏற்கப்படுவதில்லை.
- மேற்கோளாகத் தரப்படும் இணையப்பக்கங்களில் உள்ள வாசகங்களைக் கட்டுரையில் மாற்றமின்றி அப்படியே பதிவுசெய்ய வேண்டாம். விக்கி விதிமுறைகளின் படி அது பதிப்புரிமை மீறலாகும்.
- மிகைப்படுத்தும் சொற்களை கட்டுரையில் தவிர்க்கவும். கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அதிகப்படியான வருணனைகள் இன்றி சரியான விவரங்களை மட்டுமே ஆதாரங்களுடன் கொண்டிருக்க வேண்டும்.
- ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது கட்டுரை உருவாக்கியபின் அதனை விக்கித் தரவில் இணைத்து விடுங்கள். உதவிக்கு விக்கிப்பீடியா:விக்கித்தரவு#புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது என்ற இப்பக்கத்தைப் பார்க்கவும்.
உங்கள் கட்டுரைகள் மேலும் சிறப்பாக அமைய இக்குறிப்புகள் உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:05, 31 சனவரி 2019 (UTC)
மிகவும் நன்றி. தேவையான அனைத்து குறிப்புகளையும் கூறியுள்ளீர்கள் மேலும் மாற்றங்கள் செய்யவேண்டுமெனில் உதவவும்
அ.முத்துக்கிருஷ்ணன்
தொகு- அப்புசாமி (கற்பனை கதாபத்திரம்) என்பது அப்புசாமி (கற்பனைக் கதைமாந்தர்)
- பா.தேவேந்திர பூபதி எனும் கட்டுரை பா. தேவேந்திர பூபதி எனும் தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது
- அ.முத்துக்கிருஷ்ணன் எனும் கட்டுரை அ. முத்துக்கிருஷ்ணன் எனும் தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய தலைப்பினை சம்ர்ப்பித்தால் தான் அதர்கு மதிப்பெண் வழங்க இயலும் நன்றிஸ்ரீ (talk) 12:58, 5 பெப்ரவரி 2019 (UTC)
fountain problem
தொகுவணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:32, 17 பெப்ரவரி 2019 (UTC)
தற்காலிக ஏற்பாடு
தொகுவணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:23, 19 பெப்ரவரி 2019 (UTC)
பதிப்புரிமை
தொகுவணக்கம், பிரயாணி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், பிரயாணி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
முனைப்பான பங்களிப்பு
தொகுகட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:26, 23 மார்ச் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி- 2019
தொகுவணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:57, 1 ஏப்ரல் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி முடிவுகள்
தொகுபுதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:21, 7 ஏப்ரல் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
பரிசினைப் பெற்றுக் கொள்க
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த புதுப் பயனர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:37, 24 அக்டோபர் 2019 (UTC)
கடந்த 22ம் தேதி உங்கள் மின்னஞ்சல் வந்ததும் எனது முகவரியை பதிலனுப்பி விட்டேனே... தயவுசெய்து பாருங்களேன். Ebenezer joseph P 803, D wing, Eastern winds, Opp to bhunter bhavan Quareshi Nagar, Kurla East Mumbai 400070 9486060861
இதுதான் எனது அஞ்சல் முகவரியாகும்.
ஆசிய மாதம், 2019
தொகுவணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:54, 4 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 25 நவம்பர் 2019 (UTC)
தொடருந்து பற்றிய கட்டுரைகள்
தொகுவணக்கம் நண்பரே! எனக்கு விருப்பமான தொடருந்துகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டுரைகளில் ஒரே சொற்றொடர் இரண்டு மூன்று முறை வருகின்றன. ஏதும் ஆட்டோமேஷன் கருவி கொண்டு எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இனி எழுதும்பொழுது கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள். சிலவற்றை திருத்தியிருக்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:31, 30 திசம்பர் 2019 (UTC)
மிகவும் நன்றி நண்பரே... கூகுள் குரல்வழி உள்ளீட்டு கருவி முலம் கட்டுரைகளை எழுதி வருகிறேன். எல்லாக் கட்டுரைகளையும் ஒருமுறை சரபார்த்த பின்பே சமர்ப்பிக்கின்றேன். இனியும் நன்றாக சரிபார்த்து சமர்ப்பிக்கிறேன்.. தங்களின் திருத்தத்திற்கும் மேலான நன்றிகள்
கட்டுரைகளில் சான்றிணைத்தல்
தொகுவணக்கம் ஐயா. தாங்கள் உருவாக்கிய தொடருந்து குறித்த கட்டுரைகளில் சரியான நம்பத்தகுந்த சான்றுகளை இணைக்கவும். இல்லையெனில் அவை போட்டியிலிருந்து நீக்கப்படலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:45, 31 திசம்பர் 2019 (UTC)
வணக்கம்....
எல்லா கட்டுரைகளிலும் சான்றுகள் இணைத்துள்ளேனே... ஏதாவது எ.கா சொன்னீர்களென்றால் சரி பண்ணி விடுகிறேன். நன்றி
{{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.
தொகுவணக்கம்,
நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகளில் {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த வார்ப்புரு பயன்படுத்தும் போது தலைப்பையும் (title) கொடுக்கவும். இங்கு பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:00, 2 சனவரி 2020 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:46, 4 சனவரி 2020 (UTC)
சிவப்பு இணைப்பு
தொகுவணக்கம். தாங்கள் வேங்கைத் திட்டம் 2.0 வில் கலந்துகொண்டு சிறப்பாக பங்களித்தமைக்கு வாழ்த்துகள். தங்களது கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை நீக்கவும். நன்றிஸ்ரீ (✉) 11:20, 17 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:25, 17 சனவரி 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
தொகுDear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவின்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில், நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாக திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 10:42, 9 சூன் 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுதொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு
தொகுவணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
கட்டுரையாக்க அடிப்படைகள்
தொகுவணக்கம், பிரயாணி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 07:00, 3 பெப்ரவரி 2023 (UTC)
- மிக்க நன்றி.
- மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதும் போது மாற்றம் செய்தால் மேற்கோள்கள் இணைப்பது கடினமாக உள்ளது. மேலும் இணைய தொடர்பில் ஏற்படும் குளறுபடியினால் சில கட்டுரைகள் தவறாக பதிவிட்டு பின்னர் நிறுத்திக்கொள்கிறேன். கண்டிப்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசை பக்கத்தில் கேட்டு அறிந்து கொள்கிறேன். பிரயாணி (பேச்சு) 08:07, 3 பெப்ரவரி 2023 (UTC)
- கட்டுரையில் சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டல் வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும். நீங்கள உருவாக்கும் கட்டுரைகளை மீண்டும் ஒருமுறை பார்த்து திருத்துங்கள். AntanO (பேச்சு) 03:48, 5 பெப்ரவரி 2023 (UTC)
கண்டிப்பாக. நன்றி பிரயாணி (பேச்சு) 04:19, 5 பெப்ரவரி 2023 (UTC)
பகுப்புகள்
தொகுவணக்கம். உருவாக்கப்படாத பகுப்புகளை கட்டுரைகளில் இணைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவைப்படும் பகுப்பினை உருவாக்கியபிறகு, அந்தப் பகுப்பினை கட்டுரையில் இணையுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 8 பெப்ரவரி 2023 (UTC)
- பகுப்புகளை உருவாக்குவது எப்படி என்று தெரியவில்லையே. உதவி பக்கத்தில் தெளிவாக இல்லை. கண்டிப்பாக அதை தெரிந்துகொண்டு முயற்சிக்கிறேன் பிரயாணி (பேச்சு) 05:48, 9 பெப்ரவரி 2023 (UTC)
புதிய கட்டுரையை உருவாக்குவது போன்றதே புதிய பகுப்பினை உருவாக்குதல். எடுத்துக்காட்டாக, பகுப்பு:தேர்த் திருவிழாக்கள் என ஆரம்பித்து, உள்ளே பகுப்பு:திருவிழாக்கள் எனும் தாய்ப் பகுப்பினை இட்டு சேமிக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:55, 9 பெப்ரவரி 2023 (UTC)
காண்க: உதவி:பகுப்பு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:58, 9 பெப்ரவரி 2023 (UTC)
தானியங்கித் தமிழாக்கம்
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--Kanags \உரையாடுக 06:52, 2 மார்ச் 2023 (UTC)
- பெரும்பாலான கட்டுரைகளை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்திதான் வெளியிடுகின்றேன். ஏதேனும் குறிப்பிட்ட கட்டுரையில் மொழிபெயர்ப்பு,தானியங்கி தன்மையில் காணப்பட்டால் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இயன்ற வரை வாசிக்கும் வகையில் மாற்ற தயாராக உள்ளேன்.
- நன்றி பிரயாணி (பேச்சு) 07:06, 2 மார்ச் 2023 (UTC)
மன்னிக்கவும். என்னால் கண்டும் காணாமல், போக இயலவில்லை. //இதனை நிறுவியவர் இந்த அருங்காட்சியகத்திற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலை மற்றும் புராதன பொருட்களை நன்கொடையாக வழங்கினார் மேலும் அதன் பராமரிப்புக்கு தேவையான நிதியை திரட்டினார். ஒரு ஆடம்பரமான நியோ-பரோக் மிகப்பெரும் மாளிகை இந்த பொருள் சேகரிப்புகளை வைக்க வாங்கப்பட்டது.// எனும் வாக்கியங்கள் கலைக்களஞ்சியத்திற்கு எவ்வகையில் உதவப்போகிறது? கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கானக் கட்டுரைகள், 14 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் - இக்கட்டுரைகளை படிக்கத்தக்கனவாக மாற்ற இன்னமும் 10 ஆண்டுகள் ஆகலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:32, 2 மார்ச் 2023 (UTC)
- யாரால் இவ்வளவு பெரிய அருங்காட்சியகத்திற்கு பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு இந்த பத்தி பதிலாக இருக்கும் என்றெண்ணியே இணைத்துள்ளேன். பிரயாணி (பேச்சு) 09:32, 2 மார்ச் 2023 (UTC)
பிரயாணி, நான் ஒரு எடுத்துக்காட்டிற்காக மட்டுமே அறிமுகப் பந்தியைத் திருத்தினேன். ஆனால், நீங்கள் கட்டுரையில் அதனை மட்டும் திருத்திவிட்டு, மீதம் எதனையும் திருத்தவில்லை. இக்கட்டுரையையும் உங்கள் முன்னைய கட்டுரைகளையும் முழுமையாகத் திருத்தாமல் புதிய கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். தானியங்கி மொழிபெயர்ப்பு அடையாளம் காணப்பட்டால் அவை உடனடியாக நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 09:05, 2 மார்ச் 2023 (UTC)
- எனக்கு சமயம் கிடைக்கும் போது கண்டிப்பாக நீங்கள் கவனப்படுத்திய மாற்றங்களை ஏற்படுத்துவேன். உடனடியாகவே மாற்றுவதென்பது சிறிது கடினமே. நீங்கள் சொல்லிய பிற்பாடு ஒரே ஒரு கட்டுரை அதுவும் பாதியில் மொழிபெயர்த்து கொண்டிருந்ததால் முடித்துவிட்டு வெளியிட்டுளேன். நீங்கள் சுட்டிக்காட்டும் முன்பாகவே தானியங்கி மொழிபெயர்ப்பு ஒரு ஆரம்பம் மட்டுமே என்பதை அறிவேன். என்னுடைய சமீபத்திய பிறமொழி கட்டுரைகளில் தான் அதிகளவு தானியங்கி மொழிபெயர்ப்புகள் காணப்படுகிறது. கண்டிப்பாக அதை திருத்திவிட்டே புதிய கட்டுரைகளை எழுதுவேன். சிறிது தவணை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறி தானியங்கி மொழிபெயர்ப்புகள் அடையாளம் காணப்பட்டால் அதை நீக்கிவிட எனக்கு எந்த தடையும் வருத்தமும் இல்லை. பிரயாணி (பேச்சு) 09:38, 2 மார்ச் 2023 (UTC)
வேண்டுகோள்
தொகுவணக்கம். பெண்ணியமும் நாட்டார் மரபும் 2023 போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிவருவதற்கு பாராட்டுகள்.
கீழ்க்காணும் கருத்துகளை கவனத்திற் கொண்டு, விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைப்படுத்த உதவுங்கள்; நன்றி!
- மொழிபெயர்ப்புக் கருவி உதவியைக் கொண்டு வழக்கமான தருணங்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் ஆசிரியரே கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்துகிறார். போட்டியில் கலந்துகொள்ளும் போது, அடுத்தக் கட்டுரைக்கு கவனம் சென்றுவிடுகிறது. இதனைப் பரவலாக 80% கட்டுரைகளில் காண முடிகிறது. இக்கட்டுரைகள் தவறான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், படித்துப் புரிந்துகொள்ளும் கட்டுரை அமைப்பில் இல்லை.
- ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவப் போவதில்லை. (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் பட்டியலிட்டு உள்ளிணைப்பு தரலாம்).
- சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பு வேண்டும்.
- கட்டுரைத் தலைப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
- உரிய பகுப்புகளை இடுதல் முக்கியம். (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு,வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்புகளை இட வேண்டும்)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 11 மார்ச் 2023 (UTC)
- எனது கட்டுரைகளில் நேரடி மொழிபெயர்ப்பு மட்டுமில்லாமல், கூடுதல் தகவல்களையும் சேர்த்தும் பெரும்பாலும் மேம்படுத்தியே வெளியிடுகின்றேன். சில கட்டுரைகளின் பட்டியல்களில், நூற்கள், திரைப்படங்கள், இசைத்தொகுப்புகளின் பெயர்களை மொழிபெயர்க்கவா இல்லை அப்படியே அந்தந்த மொழிப்பெயர்களையே எழுதவா என்ற குழப்பத்தில் பெரும்பாலும் அப்படியே எழுதியுள்ளேன்.
- மேலும் பார்க்கவும் மற்றும் வெளி இணைப்புகள் ஆரம்பத்தில் அப்படியே மொழிபெயர்த்துள்ளேன். தற்போது சீர்படுத்தி வருகிறேன்.
- ஆங்கிலத்தில் கட்டுரைகள் இருக்கிறது ஆனால் தமிழில் இல்லை எனப்படும் சிவப்பிணைப்புகளை நீக்காமலே வெளியிட்டு வருகிறேன். அவ்வாறு செய்வது பிழை என்றால், கண்டிப்பாக நீக்கியே இனிமேல் வெளியிடுகிறேன்
- உரிய பகுப்புகளை இணைப்பதில் கண்டிப்பாக கவனம் செலுத்துகிறேன்
- மூத்த விக்கியரான உங்களின் இந்த கருத்துக்களை கண்டிப்பாக கவனத்தில் கொண்டு தமிழ் விக்கியின் தரத்தை மென்மேலும் உயர்த்த விழைகிறேன்.. மிகவும் நன்றி பிரயாணி (பேச்சு) 17:25, 11 மார்ச் 2023 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:42, 11 மார்ச் 2023 (UTC)
ரிக்ஷா என எழுதாமல் ரிக்சா என எழுதுமாறு பரிந்துரைக்கிறேன். வழக்கத்தில் இல்லாத இத்தகைய எழுத்துக்களை அறவே தவிர்க்கலாம் என்பதாலும், உச்சரிப்பு மாறவில்லை என்பதாலும் இதனை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 22 மார்ச் 2023 (UTC)
- இதே போன்று உச்சரிப்பு தன்மை மாறாத, தமிழ் சொற்கள் எனது கட்டுரைகளில் தேவைப்பட்டால். கண்டிப்பாக தெரிவியுங்கள். எந்த கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளேன் என்றும் கூறினால், மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும், மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 11:35, 22 மார்ச் 2023 (UTC)
இங்கு காணலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:23, 22 மார்ச் 2023 (UTC)
Feminism and Folklore 2023 - Local prize winners
தொகுPlease help translate to your language
Congratulations on your remarkable achievement of winning a local prize in the Feminism and Folklore 2023 writing competition! We greatly appreciate your valuable contribution and the effort you put into documenting your local Folk culture and Women on Wikipedia. To ensure you receive your prize, please take a moment to complete the preferences form before the 1st of July 2023. You can access the form by clicking here. We kindly request you to submit the form before the deadline to avoid any potential disappointments.
If you have any questions or require further assistance, please do not hesitate to contact us via talkpage or Email. We are more than happy to help.
Best wishes,
MediaWiki message delivery (பேச்சு) 10:47, 10 சூன் 2023 (UTC)
Feminism and Folklore 2023 - International prize winners
தொகுPlease help translate to your language
Congratulations! We are thrilled to announce that you have emerged as the victorious champion in the Feminism and Folklore 2023 writing competition, securing an International prize. Your achievement is truly exceptional and worthy of celebration!
We would like to express our utmost gratitude for your invaluable contribution to the documentation of your local Folk culture and Women on Wikipedia. The dedication and hard work you exhibited throughout the competition were truly remarkable.
To ensure that you receive your well-deserved prize, we kindly request you to take a moment and complete the preferences form before the 10th of July 2023. By doing so, you will help us tailor the prize according to your preferences and guarantee a delightful experience for you. You can access the form by clicking here..
Should you have any queries or require any further assistance, please do not hesitate to reach out to us. You can easily contact us via the talkpage or by email. We are more than delighted to provide any support you may need.
Once again, congratulations on this outstanding achievement! We are proud to have you as our winner and eagerly look forward to hearing from you.
Best wishes,
--MediaWiki message delivery (பேச்சு) 06:03, 29 சூன் 2023 (UTC)
Feminism and Folklore 2023 - A Heartfelt Appreciation for Your Impactful Contribution!
தொகுPlease help translate to your language
Dear Wikimedian,
We extend our sincerest gratitude to you for making an extraordinary impact in the Feminism and Folklore 2023 writing competition. Your remarkable dedication and efforts have been instrumental in bridging cultural and gender gaps on Wikipedia. We are truly grateful for the time and energy you've invested in this endeavor.
As a token of our deep appreciation, we'd love to send you a special postcard. It serves as a small gesture to convey our immense thanks for your involvement in the competition. To ensure you receive this token of appreciation, kindly fill out this form by August 15th, 2023.
Looking ahead, we are thrilled to announce that we'll be hosting Feminism and Folklore in 2024. We eagerly await your presence in the upcoming year as we continue our journey to empower and foster inclusivity.
Once again, thank you for being an essential part of our mission to promote feminism and preserve folklore on Wikipedia.
With warm regards,
Feminism and Folklore International Team.
--MediaWiki message delivery (பேச்சு) 18:37, 25 சூலை 2023 (UTC)
உதவி
தொகுவணக்கம். ஏழு கொடிய பாவங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் செம்மையாக்கம் முடிந்ததை அறிவித்து உதவுங்கள்.
இதற்கு, {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:58, 11 அக்டோபர் 2023 (UTC)
மேற்கோள் சுட்டுதல்
தொகுவிக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் / en:Wikipedia:Citing sources, விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள் ~AntanO4task (பேச்சு) 08:07, 21 திசம்பர் 2023 (UTC)
- நன்கறிந்த குறிப்பிட்ட துறை தொழில்முறை ஆய்வாளர் மற்றும் பரவலாக அறியப்பட்ட இதழாளர் ஒருவரின் சொந்தப் பதிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படலாம். - இதை அடிப்படையாகக் கொண்டே கூகுள் பிளாக் பதிவுகளை மேற்கோள்கள் இட்டுள்ளேன். மேலும் எந்த கருத்துமே சர்ச்சைக்குள்ளானதோ, எதிர்மறையானதோ, தற்புகழ்ச்சியோ அல்ல. எந்த இடத்தில் எனது மேற்கோள் சுட்டல் தவறானது அல்லது மெய்யறிதன்மையற்றது அல்லது நம்பகமற்றது எனக் கூறினால், அடுத்தடுத்து பல புத்தக கட்டுரைகளில் பயன்படுத்த உதவும். பிரயாணி (பேச்சு) 08:51, 21 திசம்பர் 2023 (UTC)
- ஏற்றுக் கொள்ளப்படலாம் என்பதன் பொருள் மெய்யறிதன்மை என்பதன் வழிகாட்டலுக்கு மாறானதல்ல. காண்க: விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை. இதனை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளவும், ஒரு சில பகுதிகளை அல்ல. ~AntanO4task (பேச்சு) 09:16, 21 திசம்பர் 2023 (UTC)
- என்னால் வணிக தளங்களின் மேற்கோள்களை நீக்கியதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் அல்லது அவர்களைப் பற்றிய மற்றவர்களின் கூகுள் பிளாக் பதிவுகளை நீக்குவதை தான் புரிந்துகொள்ள இயலவில்லை. எல்லா எழுத்தாளர்களும் சொந்த இணையதளங்கள் வைத்து எழுதுவதில்லையே அப்படியானவர்களின் வாழ்க்கை வரலாறு, புத்தக சுருக்கம் போன்றவைகளுக்கு வேறெந்த தளங்களை மேற்கோள்கள் காட்ட முடியும்? செய்தித்தாள்களில் முழு வரலாறும், தகவல்களும் கிடைப்பதில்லையே. புரிதலுக்காகவே கேட்டுள்ளேன். பிரயாணி (பேச்சு) 09:33, 21 திசம்பர் 2023 (UTC)
- நீர்வழிப் படூஉம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல் உள்ளடக்கம் உள்ளது. நெருக்கமான பொழிப்புரை, பதிப்புரிமை மீறல் என்பன முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. இது தொடர்ந்தால் தடைக்கு உள்ளாகலாம். ~AntanO4task (பேச்சு) 09:27, 21 திசம்பர் 2023 (UTC)
- கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். மூலத்தை மேற்கோளாகச் சுட்டியிருந்தேன். ஆனாலும் அதிலிருந்து சில வரிகளை மாற்றிதான் எனது சொந்த வார்த்தைகளில் எழுதியுள்ளேன். கட்டுரைகளை திருத்தம் செய்யுமுன்பதாகவே சொல்லிவீட்டிர்கள். நன்றி. இன்னமும் பதிப்புரிமை மீறல் உள்ளதாகக் கருதினால் கூறவும்.
- இனிமேல் கவனமாகவே எழுதுகிறேன் பிரயாணி (பேச்சு) 09:50, 21 திசம்பர் 2023 (UTC)
- விருப்பம் ~AntanO4task (பேச்சு) 09:51, 21 திசம்பர் 2023 (UTC)
- ஏற்றுக் கொள்ளப்படலாம் என்பதன் பொருள் மெய்யறிதன்மை என்பதன் வழிகாட்டலுக்கு மாறானதல்ல. காண்க: விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை. இதனை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளவும், ஒரு சில பகுதிகளை அல்ல. ~AntanO4task (பேச்சு) 09:16, 21 திசம்பர் 2023 (UTC)
வணக்கம், பிரயாணி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 15:29, 6 சனவரி 2024 (UTC)
3 வரிக்குக் (வாக்கியங்கம்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். அறிவித்தல் அளித்தும் ஏன் 3 வரிக்குக் (வாக்கியங்கம்) குறைவான கட்டுரைகளை உருவாக்குகிறீர்கள்? --AntanO (பேச்சு) 05:29, 9 சனவரி 2024 (UTC)
- ஆங்கிலத்தில் உள்ள அழிந்து வரும் தாவரவியல் இனங்களை பற்றிய கட்டுரைகளை தினந்தோறும் ஒன்று என்ற கணக்கில் மொழிபெயர்த்து வருகிறேன். ஆங்கில கட்டுரையில் இவ்வளவே இருக்கிறது. பெரிய கட்டுரைகளை குறைத்து மூன்று வரிகளில் எழுதுவதில்லை. சில கட்டுரைகளில் மூன்று வரிகள் அளவே இருந்தாலும் தகவற்பெட்டியில் சில தகவல்கள் இருக்கின்றன. அதை வாக்கிய நடையில் எழுதினால் மூன்று வரிகளுக்கும் அதிகமாகவே வரும். அப்படி மாற்றி எழுதவேண்டுமா?? அல்லது ஆங்கிலத்தில் இப்படியான 3 வரிகளுக்கு குறைவான கட்டுரைகளை மொழிபெயர்க்காமல் விட்டு விடலாமா??
- எப்படிப்பட்ட கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம் என்று உதவுங்கள். பிரயாணி (பேச்சு) 11:12, 9 சனவரி 2024 (UTC)
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
தொகுவேற்றுமொழிச் சொல் ஒன்றின் தமிழ் ஒலிப்பெயர்ப்பில் தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினால், கட்டுரையின் முதல் வரியில் அந்த வேற்றுமொழிச் சொல் ஆங்கிலத்திலும் அந்தந்த மொழிகளிலும் அடைப்புகளுக்குள் எழுதப்பட வேண்டும் என்பது விக்கிப்பீடியா நடைமுறை. எனவே இந்த நடைமுறையை உங்கள் கட்டுரைகளில் பின்பற்றுங்கள். உ+ம்: மதுகா டிப்ளோசுதெமோன்.--Kanags \உரையாடுக 05:44, 30 சனவரி 2024 (UTC) Kanags \உரையாடுக 05:44, 30 சனவரி 2024 (UTC)
- @Kanags நான் உருவாக்கிய கட்டுரைகளில் மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 05:49, 30 சனவரி 2024 (UTC)
- கட்டுரையை தானியங்கி கொண்டு மொழிபெயர்த்தால் மட்டும் போதாது, அதனைச் சீர் செய்ய வேண்டும். தகவல்பெட்டியை ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து படி எடுத்து ஒட்டுங்கள்.--Kanags \உரையாடுக 05:52, 30 சனவரி 2024 (UTC)
- சரிங்க. நன்றி பிரயாணி (பேச்சு) 10:04, 30 சனவரி 2024 (UTC)
- ஓட்டோனேபிலியம் ஸ்டிபுலேசியம் - இதன் உயிரியல் பெயர் என்ன ஆங்கிலத்தில் அல்லது இலத்தீனில்?--Kanags \உரையாடுக 05:59, 31 சனவரி 2024 (UTC)
- தகவற்பெட்டியில் இலத்தின் பெயர் மற்றும் அதன் வகைப்பாடுகள் என தேவையான தகவல்கள் இருக்கும் நிலையிலும், நான் எழுதும் கட்டுரைகள் அனைத்துமே விக்கித்தரவிலும் இணைத்துள்ள நிலையிலும் வேற்றுமொழிச் சொல் கட்டாயம் அவசியமா?? பிரயாணி (பேச்சு) 06:15, 31 சனவரி 2024 (UTC)
- @Info-farmer: இதற்கு மறுமொழி கூறுவீர்களா?--Kanags \உரையாடுக 08:48, 31 சனவரி 2024 (UTC)
- தலைப்பு (தாவர வகைப்பாட்டியல்: தாவரவியல் பெயர், ஆங்கிலப் பெயர்) என்ற வடிவம் இருப்பது, கூகுள் போன்ற தேடு பொறி தேடும் போது விரைந்து காட்டிட உதவும். ஆனால், தற்போதுள்ள கருவி (Content translation tool )தருவதில்லை. அக்கருவிக்கான பக்கத்தில், நாம் தெளிவான பின்னூட்டம் தந்தால் மாற்றுவர். அதுவரை நாம்தான் செய்ய வேண்டும். கருவி 60% மட்டுமே உதவுகிறது. ஆங்கிலமோ, தமிழோ உரிய சொற்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. இருக்கும்போது தருவோம். தேடு பொறிகளுக்காக மேற்கண்ட வடிவத்தை தவறாமல் பின்பற்றுவோம். த♥உழவன் (உரை) 00:22, 1 பெப்பிரவரி 2024 (UTC)
இலக்கணம் வழக்கம்
தொகுமொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம். மேலும், எளிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது வலிந்து கிரந்தம் சேர்க்க வேண்டாம். காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் AntanO (பேச்சு) 15:25, 2 பெப்பிரவரி 2024 (UTC)
- எந்த கட்டுரைத் தொடர்பானது என்று அறியத்தந்தால் கற்றுக்கொள்ள பயனாயிருக்கும்.. பிரயாணி (பேச்சு) 15:41, 2 பெப்பிரவரி 2024 (UTC)
மொழிமுதல் எழுத்தாக மெய்யெழுத்துக்களும் ஆயுத எழுத்து வருவாது தவிர்க்கப்படல் வேண்டும். இயந்திர மொழிபெயர்ப்பு பயன்படுத்தினாலும் தமிங்கிலம் இல்லாத முறையான தமிழில் எழுதுங்கள். விளங்காவிட்டால் பொதுவெளியில் எழுதாமல் மணல் தொட்டியில் எழுதிப்பழகுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 11:03, 4 பெப்பிரவரி 2024 (UTC)
பயிலரங்கு 2024
தொகுவணக்கம்.
1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலை புதிய பயனர்களிடத்து தருவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.
சில குறிப்புகள்:
- திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
- மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.
மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:20, 11 பெப்பிரவரி 2024 (UTC)
விக்கித்தரவு
தொகுநண்பருக்கு வணக்கம், தாங்கள் உருவாக்கும் பகுப்பினை விக்கித்தரவில் இணைத்து உதவவும். இதன்மூலம் அதே பகுப்பு மீண்டும் ஒருமுறை உருவாக்கப்படுவது தவிர்க்கப்படும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:13, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- புதிய தகவல். அறிந்துகொண்டேன். இனி பயன்படுத்தி பகுப்புகளை உருவாக்குகிறேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 15:36, 11 பெப்பிரவரி 2024 (UTC)
திருத்தம் தேவை
தொகு- உங்கள் கட்டுரைகளில் (எ-கா: சோபியா (அறிவு)) </link> என்ற சொல் பல இடங்களில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பியில் உள்ள தவறா?
- வேற்றுமொழிச் சொல் ஒன்றின் தமிழ் ஒலிப்பெயர்ப்பில் தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினால், கட்டுரையின் முதல் வரியில் அந்த வேற்றுமொழிச் சொல் ஆங்கிலத்திலும் அந்தந்த மொழிகளிலும் அடைப்புகளுக்குள் எழுதப்பட வேண்டும் என்பது விக்கிப்பீடியா நடைமுறை. எனவே இந்த நடைமுறையை உங்கள் கட்டுரைகளில் பின்பற்றுங்கள். எ-கா: ஜிஎம் மோமின் மகளிர் கல்லூரி. ---Kanags \உரையாடுக 21:34, 15 பெப்பிரவரி 2024 (UTC)
- வேற்றுமொழியின் ஒலிக்குறிப்பு வார்ப்புருக்கள் சரியாக மொழிபெயர்க்கப்படாததால் அந்த வழு வந்துள்ளது. தற்போது மாற்றிவிட்டேன்.
- கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் கட்டுரைகள் உருவாக்கும் போது இதனை பின்பற்றுகிறேன்
- மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 04:33, 16 பெப்பிரவரி 2024 (UTC)
வணக்கம், பிரயாணி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
- திருத்தம் தேவை
- மொழிமுதல் எழுத்தாக மெய்யெழுத்துக்களும் ஆயுத எழுத்தும் வருவாது தவிர்க்கப்படல் வேண்டும்.
- கட்டுரைகளை உருவாக்கி வேண்டிய கட்டுரையாக்கம் செய்த பின் மறு கட்டுரை உருவாக்குவது நன்று.
--AntanO (பேச்சு) 17:56, 18 பெப்பிரவரி 2024 (UTC)
- எந்தெந்த கட்டுரைகள் எனக்குறிப்பிட்டால், கவனித்து மாற்றம் செய்யவும் மறுபடி அதே பிழையை செய்யாமலிருக்கவும் உதவும். பிரயாணி (பேச்சு) 09:49, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- கடைசியாக உருவாக்கிய 10 கட்டுரைகளில் உள்ள தொகுப்ப்புச் சுருக்கத்தைக் கவனியுங்கள். தயவுசெய்து இங்குள்ள வழிகாட்டல்களின்படி பங்களியுங்கள் அல்லது மணல்தொட்டியில் பயிற்சி செய்யுங்கள். உருவாக்கிய அல்லது தொகுக்கும் கட்டுரைகளில் இடம்பெறும் மாற்றங்களையும் அங்கு இடம்பெறும் குறிப்புக்களையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையாக குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. நீண்ட காலமாகப் பங்களிக்கிறீர்கள். ~AntanO4task (பேச்சு) 13:44, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 18:16, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- வலிந்து கிரந்த, தமிங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டாம். நீங்கள் கட்டுரைகளை உருவாக்கும் வேகம் அக்கட்டுரைகளில் திருத்துவதில் இல்லை. தொடர்ந்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை. ஒன்று நீங்கள் உருவாக்கும் திருத்தப்படாத கட்டுரைகளை நீக்கலாம் அல்லது சிறிது காலத்திற்கு புது கட்டுரைகளை உருவாக்க முடியாதபடி தடை செய்ய நேரிடலாம். நன்றி. AntanO (பேச்சு) 18:25, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- என்னுடைய கட்டுரைகளில் நீங்களும் பிற பயனர்களும் செய்துள்ள மாற்றங்களை கவனித்து புதிய கட்டுரைகளில் தக்க மாற்றங்களை ஏற்படுத்திய பின்னரே வெளயிட்டு வருகின்றேன். இருப்பினும் 250 வார்த்தைகள் கொண்ட கட்டுரைகளில் ஒரு தவறு கூட இல்லாவிட்டால் தான் வெளியிடவேண்டும் அப்படியில்லாமல் 2 அல்லது 3 இடங்களில் கூட மனிதத் தவறுகள் இருந்தால் வெளியிட்ட பயனர்தான் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களா?
- மொழிபெயர்ப்பு கருவி எவ்வாறு வேலை செய்யும் என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள். இன்னமும் 'ரா', 'ல', 'லா' போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகள் பெரும்பான்மை இருப்பதாலேயே கருவியும் அதனையே கருத்திற் கொண்டு மொழிபெயர்க்கிறது. எனக்கு தெரிந்த அளவில் தக்க மாற்றங்கள், கூடுதல் தகவல்கள் மற்றும் மேற்கோள்களை இணைத்தும் தகவல்களை புதிப்பித்துமே எழுதி வெளியிடுகிறேன். வேண்டுமென்றோ, வலிந்தோ கிரந்த, தமிங்கில சொற்களையோ கொண்டு எழுதுவதில்லை. அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். கட்டுரைகளில் பொருளடக்கங்களை விட பிழைத்திருத்தங்களே முக்கியம், அத்தகைய திருத்தங்களோடு இருந்தால் மட்டுமே கட்டுரைகள் வெளியிடலாம் இல்லை நீக்கப்படும் என்றால் தாராளமாக மேற்கோளிட்டு நீக்கலாம், அவ்வாறு இருக்கும் பல்வேறு கட்டுரைகளை நீக்க நானும் பரிந்துரை செய்கிறேன்.
- இரண்டாவாதாக, மொழிபெயர்ப்பு கருவியின் வழியாக வெளியிடப்படும் கட்டுரைகளில் பிறர் தொகுக்கும் தொகுப்புக்கள் எனது பார்வைக்கு வருவதில்லை. ஒவ்வொரு முறையும் கட்டுரைத் தலைப்பிட்டு அல்லது பங்களிப்புகள் பக்கத்தின் வழியாகவே சென்று பார்க்க வேண்டியுள்ளது. அதற்காக ஏதெனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? கூறவும்.
- இறுதியாக ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து, எழுதி, வேண்டிய மாற்றங்கள் செய்து வெளியிட குறைந்தது அரைமணி நேரமாகிறது. எந்த கட்டுரையையும் நேரடியாக இயந்திர மொழிபெயர்ப்பு செய்வதில்லை. கட்டுரைகளை நீக்குவதையும் தடை செய்வதையும் அதனையும் கருத்திற்கொண்டு செய்யவும். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 00:25, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- //இருப்பினும் 250 வார்த்தைகள் கொண்ட கட்டுரைகளில் ஒரு தவறு கூட இல்லாவிட்டால் தான் வெளியிடவேண்டும் அப்படியில்லாமல் 2 அல்லது 3 இடங்களில் கூட மனிதத் தவறுகள் இருந்தால் வெளியிட்ட பயனர்தான் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களா?
- மொழிபெயர்ப்பு கருவி எவ்வாறு வேலை செய்யும் என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள். இன்னமும் 'ரா', 'ல', 'லா' போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகள் பெரும்பான்மை இருப்பதாலேயே கருவியும் அதனையே கருத்திற் கொண்டு மொழிபெயர்க்கிறது.//
- ஒரு கட்டுரையை உருவாக்கிய பின்னர் 2, 3 தடவை படித்துப் பாருங்கள். மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கிய ஒவ்வொரு எழுத்து, வார்த்தை, கட்டுரைத் தலைப்பு உட்பட நமக்கு வேண்டியது போல் நாம் மாற்றலாம். (ராதிகா- இராதிகா), (லட்சுமி- இலட்சமி), இவ்வாறு மொழிமுதல் எழுத்துகளை கவனித்து எழுதத்தான் வலியுறுத்திகிறார். விக்கிப்பீடியாவை செம்மைப்படுத்துவது நம் கடமை. பதிலுக்கு பதில் பதிலுரை எழுதுவதில் என்ன பயன்?. நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 04:07, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- கருத்தில் கொண்டு கட்டுரைகளை வெளியிடுகிறேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 09:53, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- வலிந்து கிரந்த, தமிங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டாம். நீங்கள் கட்டுரைகளை உருவாக்கும் வேகம் அக்கட்டுரைகளில் திருத்துவதில் இல்லை. தொடர்ந்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை. ஒன்று நீங்கள் உருவாக்கும் திருத்தப்படாத கட்டுரைகளை நீக்கலாம் அல்லது சிறிது காலத்திற்கு புது கட்டுரைகளை உருவாக்க முடியாதபடி தடை செய்ய நேரிடலாம். நன்றி. AntanO (பேச்சு) 18:25, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 18:16, 19 பெப்பிரவரி 2024 (UTC)
- கடைசியாக உருவாக்கிய 10 கட்டுரைகளில் உள்ள தொகுப்ப்புச் சுருக்கத்தைக் கவனியுங்கள். தயவுசெய்து இங்குள்ள வழிகாட்டல்களின்படி பங்களியுங்கள் அல்லது மணல்தொட்டியில் பயிற்சி செய்யுங்கள். உருவாக்கிய அல்லது தொகுக்கும் கட்டுரைகளில் இடம்பெறும் மாற்றங்களையும் அங்கு இடம்பெறும் குறிப்புக்களையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையாக குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. நீண்ட காலமாகப் பங்களிக்கிறீர்கள். ~AntanO4task (பேச்சு) 13:44, 19 பெப்பிரவரி 2024 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. - இதுதான் அறிவிப்பு. முறையாக மொழிபெயர்க்காத கட்டுரைகளை உடன் நீக்கலாம். அவற்றுக்கு வார்ப்புரு இடத்தேவையில்லை. மொழிபெயர்ப்புக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது என்பது இங்கு முக்கியமல்ல. மொழிபெயர்ப்புக் கருவியால் பெறப்பட்ட மொழிபெயர்பை முறையான தமிழில் மாற்றுவதே முக்கியம். உங்களுக்கு மொழிபெயர்ப்பதில் சிக்கல் என்றால் மணல் தொட்டியைப் பயன்படுத்தி, முறையாக மாற்றிய பின் இங்கு பதிவேற்றலாம். ஒன்றும் அவசரம் இல்லை. --~AntanO4task (பேச்சு) 14:55, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- @~AntanO4task சரி. விக்கிப்பீடியா கொள்கைமுடிவுகளின் படி என்ன செய்தாலும் சரி. பிரயாணி (பேச்சு) 15:34, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி உங்களால் இயலுமெனில் இவ்வாரத்தின் விடுமுறை நாளில் நாம் உரையாடுவோம். என்னால் இயன்ற வழிகாட்டலைத் தருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:41, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- கண்டிப்பாக உரையாடலாம். கற்றுக்கொள்கிறேன். நன்றி பிரயாணி (பேச்சு) 15:52, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி உங்களால் இயலுமெனில் இவ்வாரத்தின் விடுமுறை நாளில் நாம் உரையாடுவோம். என்னால் இயன்ற வழிகாட்டலைத் தருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:41, 20 பெப்பிரவரி 2024 (UTC)
விளக்கம்
தொகுஇந்த திருத்தத்திற்கு விளக்கம் தரவும். AntanO (பேச்சு) 15:59, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- இதற்கும் விளக்கம் தரவும். --AntanO (பேச்சு) 16:03, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- அந்த பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் காரணம் கொடுத்துள்ளேன். நன்றி பிரயாணி (பேச்சு) 16:09, 20 பெப்பிரவரி 2024 (UTC)
நான் இங்கு கேட்டுள்ளேன். ஆகவே இங்கு பதில் தரவும்.--AntanO (பேச்சு) 16:09, 20 பெப்பிரவரி 2024 (UTC)
மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம் என்றால் எல்லாக் கட்டுரைகளிலும் அவ்வாறு செய்ய முடியுமா? ஆம் எனில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி என்ற இத்தலைப்பை எவ்விதம் மாற்றலாம்? மாற்றலாமா? மேலும், ஏன் மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம் என சில கட்டுரைகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தது? இதற்கான காரணம் என்ன? குறிப்பு: அக்கட்டுரைகள் என்னால் உருவாக்கப்பட்டவை. --AntanO (பேச்சு) 16:13, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- இன்று தான் உங்களின் மாறுதல்கள் மூலம் இவ்விதியை அறிந்து கொண்டேன் எனவே, வரிசையாக மாற்றங்கள் செய்து வருகிறேன். பிரயாணி (பேச்சு) 16:18, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- ஒரு இடத்தில் பேசவும். இங்கும் அங்குமாக கருத்திட வேண்டாம். எனது கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. என் பேச்சுப் பக்கத்தில் கேட்டதையும் இங்க கேட்கலாம். AntanO (பேச்சு) 16:20, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- அந்தந்த கட்டுரைக்குரிய பேச்சுப்பக்கத்தில் அது சம்மந்தமாக பதிலளித்துள்ளேன். உங்களின் பேச்சுப்பக்கத்திலும் நீங்கள் நிர்வாகியென்பதால் உங்களுடைய கட்டுரைகளை வேறு யாரும் தேவையான மாற்றங்களை தொகுக்க முடியாதவாறு காப்புறுதி செய்துள்ளதையும் விளக்கம் கேட்டுள்ளேன். நிர்வாகி என்ற சலுகையை தனிப்பட்ட கட்டுரைகளுக்காக பயன்படுத்துகிறீர்களா? விளக்கவும். இயந்திர மொழிபெயர்ப்பு சரிவர இயங்கவேண்டுமாயின் அதற்கான தேவைகளை செய்தால் அதுவே என்னைப் போல் இலக்கணமறியாதவர்களுக்கு உதவும், அதற்காகவே மாற்றங்கள் நீங்கள் அளித்த குறிப்புகளின் படி உங்களுடைய கட்டுரைகளிலிருந்தே தொடங்கியுள்ளேன். பிரயாணி (பேச்சு) 16:30, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- // உங்களுடைய கட்டுரைகளை வேறு யாரும் தேவையான மாற்றங்களை தொகுக்க முடியாதவாறு காப்புறுதி செய்துள்ளதையும் விளக்கம் கேட்டுள்ளேன். // - எப்படிச் செய்துள்ளேன்.
- //நிர்வாகி என்ற சலுகையை தனிப்பட்ட கட்டுரைகளுக்காக பயன்படுத்துகிறீர்களா? // - இல்லை. பயன்படுத்தியிருந்தால் குறிப்பிடவும்.
- //இயந்திர மொழிபெயர்ப்பு சரிவர இயங்கவேண்டுமாயின் அதற்கான தேவைகளை செய்தால் அதுவே என்னைப் போல்
- இலக்கணமறியாதவர்களுக்கு உதவும், // - இது தமிழ் விக்கிப்பீடியாவின் வேலையல்ல
- //மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம்// - க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி என்ற இத்தலைப்பை மாற்றலாமா?
- தமிழ் விவிலிய அதிகார மொழிபெயர்ப்பு ராகேல் என்று குறிப்பிடுகிறது. இதனை மாற்ற எந்த விதிமுறை ஏற்றது?
- AntanO (பேச்சு) 16:36, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கேட்கவும். அங்கே உரையாடலாம்.
- அப்படி சலுகையை எடுத்துக்கொள்ளவில்லையெனில் என்ன காரணத்திற்காக என்னுடைய இலக்கணப்படியான மாறுதல்களை மீளமைத்துள்ளீர்கள்?? உங்களுடைய கட்டுரைகளில் மாறுதல்கள் செய்தால் தேவையற்றவை, அதே மாறுதல்கள் பிறரின் கட்டுரைகளில் செய்தால் தேவையானவை என்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்? அது உங்கள் கட்டுரைகளுக்கான சலுகை இல்லையா??
- உலகளாவிய விக்கிப்பீடிய பயனராக தகுந்த மாறுதல்களை செய்து கருவிகளைக் கொண்டு பயன்படுத்த வேண்டிய வேலைகளை செய்ய வேண்டியது என்னுடைய கடமை என நான் கருதுகிறேன். இப்படியான மாறுதல்கள், கருவிகள் தேவையில்லையெனில் அதை விக்கிமீடியா குழுமங்களிலோ தகுந்த இடத்திலோ சொல்லவும். சாதாரண பயனரான என்னிடமல்ல.
- மேற்கொண்டு இதில் விவாதிக்க எதுவுமில்லை எனக்கருதுகிறேன். எந்த கட்டுரைகளில் விளக்கம், மாறுதல்கள் தேவை எனக் கருதுகிறீர்களோ அங்கேயே கருத்திடவும். எனது பேச்சுப்பக்கத்தில் அல்ல. பிரயாணி (பேச்சு) 16:51, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- பேச்சின் தொடர்ச்சியாகப் கருத்திடுவது முறை. காரணம் குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் குறிப்பிடுகிறேன். தமிழ் விவிலிய அதிகார மொழிபெயர்ப்பு ராகேல் என்று குறிப்பிடுகிறது. எனவே, அதனை மாற்ற முடியாது. அல்லது தக்க காரணம் வேண்டும். இங்கு என்னுடைய கட்டுரைகள் எதும் இல்லை. எல்லாமே விக்கிப்பீடியாவினுடையது. ஒவ்வொரு கட்டுரையாகப் பேசாமல் பொதுவான விளக்கம் பெற் தகுந்த இடத்தில் பேசுவது ஏற்புடையது. இதனை விக்கி வலியுறுத்துகிறது. AntanO (பேச்சு) 16:56, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- பொதுவான விளக்கம் பொதுவான பக்கங்களில் நடைபெற வேண்டும். நீங்கள் எனது பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்ட இலக்கணவிதி என்னைப்போண்ற சாதாரண பயனர்களின் கட்டுரைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா? உங்களைப் போன்று நிர்வாகி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உங்கள் கட்டுரைகளை மட்டும் மீளமைப்பது, பிற பயனர்களை உங்கள் பேச்சுப்பக்கத்திலோ, நிர்வாகிகளுக்கான அறிவிப்பு பலகையில் முறையிட முடியாமல் தடை செய்வதையும் விக்கி வலியுருத்துகிறதா?? பிரயாணி (பேச்சு) 17:03, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- பொதுவான விளக்கம் குறிப்பிட்ட பயனருக்கு எனில் பேச்சுப் பக்கத்தில்தான் கருத்திட வேண்டும். இலக்கணம் தெரியாது என்ற பின் எப்படி இலக்கணத்திருத்தம் செய்யலாம்? நிருவாக அணுக்கம் தவறாக பயன்படுத்தினால் மற்றப் பயனர்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். அவர்களால் முறையிட முடியும். நிற்க, தேவைற்று குற்றம் சுமத்திக் கொண்டு ஆக்க பூர்வமற்ற உரையாடல் தொடர்ந்தால் இப்பேச்சுப்பக்கத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்படும். AntanO (பேச்சு) 17:08, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- பொதுவான விளக்கம் பொதுவான பக்கங்களில் நடைபெற வேண்டும். நீங்கள் எனது பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்ட இலக்கணவிதி என்னைப்போண்ற சாதாரண பயனர்களின் கட்டுரைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா? உங்களைப் போன்று நிர்வாகி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உங்கள் கட்டுரைகளை மட்டும் மீளமைப்பது, பிற பயனர்களை உங்கள் பேச்சுப்பக்கத்திலோ, நிர்வாகிகளுக்கான அறிவிப்பு பலகையில் முறையிட முடியாமல் தடை செய்வதையும் விக்கி வலியுருத்துகிறதா?? பிரயாணி (பேச்சு) 17:03, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- பேச்சின் தொடர்ச்சியாகப் கருத்திடுவது முறை. காரணம் குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் குறிப்பிடுகிறேன். தமிழ் விவிலிய அதிகார மொழிபெயர்ப்பு ராகேல் என்று குறிப்பிடுகிறது. எனவே, அதனை மாற்ற முடியாது. அல்லது தக்க காரணம் வேண்டும். இங்கு என்னுடைய கட்டுரைகள் எதும் இல்லை. எல்லாமே விக்கிப்பீடியாவினுடையது. ஒவ்வொரு கட்டுரையாகப் பேசாமல் பொதுவான விளக்கம் பெற் தகுந்த இடத்தில் பேசுவது ஏற்புடையது. இதனை விக்கி வலியுறுத்துகிறது. AntanO (பேச்சு) 16:56, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- அந்தந்த கட்டுரைக்குரிய பேச்சுப்பக்கத்தில் அது சம்மந்தமாக பதிலளித்துள்ளேன். உங்களின் பேச்சுப்பக்கத்திலும் நீங்கள் நிர்வாகியென்பதால் உங்களுடைய கட்டுரைகளை வேறு யாரும் தேவையான மாற்றங்களை தொகுக்க முடியாதவாறு காப்புறுதி செய்துள்ளதையும் விளக்கம் கேட்டுள்ளேன். நிர்வாகி என்ற சலுகையை தனிப்பட்ட கட்டுரைகளுக்காக பயன்படுத்துகிறீர்களா? விளக்கவும். இயந்திர மொழிபெயர்ப்பு சரிவர இயங்கவேண்டுமாயின் அதற்கான தேவைகளை செய்தால் அதுவே என்னைப் போல் இலக்கணமறியாதவர்களுக்கு உதவும், அதற்காகவே மாற்றங்கள் நீங்கள் அளித்த குறிப்புகளின் படி உங்களுடைய கட்டுரைகளிலிருந்தே தொடங்கியுள்ளேன். பிரயாணி (பேச்சு) 16:30, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- ஒரு இடத்தில் பேசவும். இங்கும் அங்குமாக கருத்திட வேண்டாம். எனது கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. என் பேச்சுப் பக்கத்தில் கேட்டதையும் இங்க கேட்கலாம். AntanO (பேச்சு) 16:20, 20 பெப்பிரவரி 2024 (UTC)
February 2024
தொகுதயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:03, 20 பெப்பிரவரி 2024 (UTC)
தடை
தொகுபேசி ஒரு முடிவுக்கு வரமுன்னே தன்னிச்சையாக தேவையற்ற தொகுப்பில் ஈடுபட்டதால், கணக்கு ஒரு வாரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 16:43, 20 பெப்பிரவரி 2024 (UTC)
தமிழ் விக்கிப்பிடியா நிர்வாகிகளில் ஒருவரான அன்றனின் அதிகார மீறல்
தொகுஇலக்கண விதியை எனக்கு சொல்லிக்கொடுத்து தக்க மாற்றங்களை செய்ய வலியுறுத்திய அவரே, அவரது கட்டுரைகளில் அதே இலக்கண விதியை பயன்படுத்தாததை சுட்டிக்காட்டியதையும், திருத்தங்கள் செய்தததையும், அவரின் பேச்சுப்பக்கத்தில் விளக்கம் கேட்டதையும் நீக்கி, பக்கங்களை மீளமைத்து, எனது செய்திகளையும், கருத்துக்களையும் பிறர் பார்வைக்கு செல்ல விடாமல் பண்ணியதோடு என்னை தடைக்கொள்கையின் படி இல்லாத ஒரு காரணத்திற்கு மீண்டும் அதிகார மீறல் செய்து தடை செய்துள்ளார். அதனை முறையீடு செய்ய விரும்புகிறேன். இதனை பார்க்கும் பிற நிர்வாகிகள், பயனர்கள் அறிய அவரின் இந்த முறையற்ற செயல்பாடு குறித்து எனக்கு புகாருள்ளதால் அதுவரை எனது பயனர் கணக்கு தொடர்பாக அவரே தன்னிச்சையாக முடிவு எடுப்பதையும் தமிழ் விக்கி சமூக ஆலோசனையில்லாமலும் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பதையும் எதிர்க்கிறேன். இந்த செய்தியையும் அவர் மீளமைக்க வாய்ப்புள்ளதாலும் இந்த பயனர் பக்கத்தையும் முடக்குவேன் என பகிங்கரமாக மிரட்டியதையும் பதிவு செய்கிறேன்.
- இத்தப்பயனருக்கு எவ்வளவு சொல்லியும் புரியதலில்லை. ஒரு கேள்வி கேட்டால் அல்லது பதில் கொடுத்தால் அவற்றை இவர் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. ஆகவே இவரின் பேச்சுப்பக்கத்தையும் தொகுக்காதவாறு தடைசெய்துள்ளேன். நிச்சயம் மற்ற நிர்வாகிகளாலும் இப்பக்கத்தைக் கவனிக்க முடியும். மேலதிக கவனத்திற்காக: @Selvasivagurunathan m, Almighty34, Arularasan. G, Kanags, சத்திரத்தான், and Sridhar G: --AntanO (பேச்சு) 17:39, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- எபினேசர் ஜோசப் report on Jimbo Wales! --AntanO (பேச்சு) 18:13, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- இருவருக்கும் வணக்கம்,
- @பிரயாணி விக்கிப்பீடியாவின் கொள்கைகள் புரிந்துகொள்வதற்கு சற்று சிக்கலானது தான். கட்டுரைத் தலைப்பு, கிரந்தப் பயன்பாடு ஆகியன சில உதாரணங்கள். அதுபோலவே இலக்கண விதிகளும், எல்லாவிடத்திலும் இலக்கணத்தினைப் பின்பற்றுவது என்பது சரியாக அமையாது தானே. நபர்களின் பெயர்களில் இலக்கணத்தைப் பின்பற்றுவது தொடர்பான உரையாடல் பக்கங்களைப் பார்த்தால் தெரியவரும். எனவே சிக்கலான சம்யங்களில் மற்ற பயனர்களுடன் உரையாடிய பின்னர் முடிவெடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நிர்வாகிகள் தொடர்பாக ஏதேனும் முரண்பாடு எனில் விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.
- @AntanO இந்தப் பயனர் மற்ற பயனர்கள் கூறும் கருத்துக்களுக்கேற்ப செயல்பட்டு வருகிறார். விக்கிப்பீடியாவின் கொள்கைகளில் முரண்கள் இருப்பது தாங்கள் அறிந்ததே. இந்த எழுத்தில் கட்டுரைத் துவங்கக் கூடாது என நாம் கூறும்போது , இந்த எழுத்தில் ஏற்கனவே பல கட்டுரைகள் உள்ளதே எனும் கேள்விகள் எழத் தான் செய்யும். விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற இயலாது என்பதற்காகக் கூறுகிறேன்.இணக்க முடிவிற்காக இப்பயனரின் உரையாடல் பக்கத்தினைத் தொகுப்பதற்கான தடையினை நீக்குகிறேன், மற்ற தடையினை சக நிர்வாகிகளின் கருத்தினைப் பொறுத்து முடிவெடுக்கலாம்.
- மற்ற நிர்வாகிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 11:03, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- மேலேயுள்ள உரையாடல்களைக் கவனித்து கருத்திடுங்கள். விளங்காவிட்டால், கேளுங்கள் அல்லது குறித்த பயனரின் முரண் செயற்பாடுகளைப் பட்டியலிடுகிறேன். மேலும், இப்பயனர் he has many followers and worshippers in the tamil community என்று கருத்திட்டதற்கு உங்கள் பதில் என்ன? //இந்த எழுத்தில் ஏற்கனவே பல கட்டுரைகள் உள்ளதே எனும் கேள்விகள் எழத் தான் செய்யும்.// இதற்கு பதில் அளித்துள்ளேன் நீங்களும் கவனிக்கவில்லையா? AntanO (பேச்சு) 11:17, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- //விளங்காவிட்டால், கேளுங்கள் அல்லது குறித்த பயனரின் முரண் செயற்பாடுகளைப் பட்டியலிடுகிறேன்.// விளங்குகிறது. எனக்கு விளங்கவில்லை எனில் நான் தயங்காது கேட்கிறேன். இவர் எந்த இடத்திலும் மற்ற பயனர்கள் கூறிய அறிவுரைகளை செய்ய மாட்டேன் என்று கூறவே இல்லை.
- // he has many followers and worshippers in the tamil community உங்கள் பதில் என்ன?// அவரது புரிதல் தவறு. இங்கேயே உரையாடியிருக்க வேண்டும்.
- மேலும், இந்தப் பயனர் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்வார் என நான் நம்புகிறேன். மற்ற நிர்வாகிகளின் கருத்துக்கேற்ப முடிவெடுக்கலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 16:11, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்பவர் என்றால், ஏன்நான் கருத்திட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் போக்கிற்கு செயற்பட்டார்? எ.கா: 1 எத்தனை கட்டுரைகளைத் திருத்துவார்? விக்கிச் சமூகம் அனுமதிக்குமா?
- இந்த திருத்தத்தில் என்ன இலக்கணச் சிக்கல் உள்ளது? தனக்கு இலக்கணம் தெரியாது என்றவர் ஏன் இதனை மாற்றினார்?
- நான் உருவாக்கிய கட்டுரைகளை தேடித்தேடி குற்றம் பிடிக்கப்பார்த்தார், ஆனால் தான் உருவாக்கிய கட்டுரைகளை கண்டு கொள்ளவில்லை!? ஆக்கப்பூர்வமான பங்களிப்பா?
- தனக்கு இலக்கணம் தெரியாது என்றுள்ளார். எப்படி இவர் மற்றவர்களுடன் இணங்கிச் செயற்படுவார்?
- இயந்திர மொழிபெயர்ப்பு சரிவர இயங்கவேண்டும் என்றவர், மீண்டும் அதே தவறைச் செய்வார். நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும்? இயந்திர மொழிபெயர்ப்பை நீக்கவும், தொடர்ந்து செய்பவரை தடை செய்யவும் இங்கு இடமுண்டு. AntanO (பேச்சு) 16:41, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- பேச்சுப்பக்க தடையை நீக்கியதற்கு நன்றி பிரயாணி (பேச்சு) 16:10, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- மேலேயுள்ள உரையாடல்களைக் கவனித்து கருத்திடுங்கள். விளங்காவிட்டால், கேளுங்கள் அல்லது குறித்த பயனரின் முரண் செயற்பாடுகளைப் பட்டியலிடுகிறேன். மேலும், இப்பயனர் he has many followers and worshippers in the tamil community என்று கருத்திட்டதற்கு உங்கள் பதில் என்ன? //இந்த எழுத்தில் ஏற்கனவே பல கட்டுரைகள் உள்ளதே எனும் கேள்விகள் எழத் தான் செய்யும்.// இதற்கு பதில் அளித்துள்ளேன் நீங்களும் கவனிக்கவில்லையா? AntanO (பேச்சு) 11:17, 21 பெப்பிரவரி 2024 (UTC)
- எபினேசர் ஜோசப் report on Jimbo Wales! --AntanO (பேச்சு) 18:13, 20 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி: வணக்கம். அன்டன், கனக்சு, சிறீதர், நான் அவ்வப்போது உங்களுக்கு குறிப்புகள் வழங்கி வந்தோம். ஒவ்வொரு முறையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு, கற்றுக்கொள்ளவே முனைந்தீர்கள். கெடுபேறாக, இரு நாட்களுக்கு முன்பு நடந்த உரையாடல்களின் போது... மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் எனக் கருதுகிறேன். அன்டன் முன்பு எழுதிய கட்டுரைகளை தேடிப் பிடித்து, அவற்றில் திருத்தங்களை செய்ய முற்பட்டது ஒரு தொகுத்தல் போர் போன்று அமைந்துவிட்டது. இவ்வாறு செயல்படாது, அக்கட்டுரைகள் குறித்து அவரிடம் நீங்கள் கேள்விகள் எழுப்பியிருக்கலாம். பதில்கள் கிடைத்திருக்கும். கிறிஸ்து, கிறிஸ்தவம் என கிரந்தத்துடன் எழுதுவதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட விவாதங்கள் நிகழ்த்தப்பட்டு, முடிவாக ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள்: கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு. பழைய உரையாடல்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காதுதான். ஆனால், தேடிப் பிடித்து தொகுக்காமல், நீங்கள் விளக்கம் கேட்டிருக்கலாம். விடைகள் கிடைத்திருக்கும். இன்னொன்று, உங்களின் உரையாடல் பக்கம் தடைசெய்யப்பட்டவுடன் ஜிம்மி வேல்சின் உரையாடல் பக்கத்திற்கு சென்று புகாரளித்துவிட்டீர்கள். உண்மைக்குப் புறம்பான பொதுப்படையான குற்றச்சாட்டையும் அங்கு வைத்தீர்கள் (followers and worshippers).
- எனது பரிந்துரை: சிறிது காலத்திற்கு இயந்திர மொழிபெயர்ப்பு செய்யாது, நீங்களாகவே மொழிபெயர்த்தல் செய்து கட்டுரைகளை பதிப்பிடலாம். அப்போது, விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத்தின் முக்கியக் கூறுகள் உங்களுக்குப் புரியவரும். போட்டியில் நீங்களோ, தமிழ் விக்கிப்பீடியாவோ எண்ணிக்கையில் முன்னணி வகிப்பதைக் காட்டிலும், கலைக்களஞ்சியத்தின் தரம்தான் மிக முக்கியம் எனக் கருதுகிறேன். நன்கு கற்றுக்கொண்ட பிறகு, அடுத்த போட்டியிலும் வழக்கமான பங்களிப்புகளின் போதும் இயந்திர மொழிபெயர்ப்பினை செய்யலாம். இன்னொரு பரிந்துரை: இங்கு கட்டுரைகளை எழுதும் நீண்டநாள் பயனர்கள் / தொடர்பங்களிப்பாளர்களின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள். ஒரு தெளிவு கிடைக்கும்.
- @AntanO: நான் தொடர்ந்து கவனித்து வந்ததில், நீங்கள் ஆக்கநோக்கிலேயே பயனர் பிரயாணிக்கு பரிந்துரைகள் / வழிகாட்டல்கள் செய்துவந்தீர்கள். பரபரப்பான உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில், முன்பு நீங்கள் எழுதிய கட்டுரைகளை அவர் தேடிப் பிடித்து தொகுத்தல் போரில் ஈடுபட்டது, உங்களை பொறுமை இழக்கச் செய்துவிட்டது எனக் கருதுகிறேன். அவரின் உரையாடல் பக்கத்தை தடை செய்தவுடன் எங்கு எழுதுவது என தவித்த அவர், ஜிம்மி வேல்சின் உரையாடல் பக்கத்தில் புகாரளித்துவிட்டார்.
- ஒரு பயனர் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அநாகரீகமாக உரையாடுதல் அல்லது வன்தாக்குதல் செய்யவில்லை எனில்... அவரின் பேச்சுப் பக்கத்தை தடை செய்யாது இருக்கலாம் எனக் கருதுகிறேன். ஏனெனில், தனது கருத்தை மேற்கொண்டு தெரிவிக்க இயலாமல் போய்விடுகிறது எனக் கருதுகிறேன். இதற்கு முன்பு அவர் விக்கி சமூகத்தில் நடந்துகொண்ட விதம், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு அவருக்கு இருக்கும் ஆர்வம் இவற்றைக் கருத்திற்கொண்டு அவருக்கு இப்போது இருக்கும் பங்களிப்புத் தடையை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:48, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- உங்கள் கருத்திற்கு நன்றி. இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தெளிவு தேவையாயின், தொகுப்பு மாற்றங்களையும் இங்கு இணைக்கலாம். நான் எழுதிய கட்டுரைகளை மாத்திரம் தொக்கவில்லை. எ.கா: 1, 2, 3. நான் ஒரு முறையான உரையாடலைச் செய்து கொண்டிருக்க, எனக்குப் பதில் அளிக்காமல், இவர் இவ்வித தொகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆகவே, 1 வாரத்திற்கு தடைசெய்தேன், ஆனால் பேச்சுப்பக்கம் திறந்தே இருந்தது. ஆனால், தொடர்பில்லாமல் நான் அதிகார அதிகார மீறல் செய்வதாகக் குற்றம் சுமத்தினார். தடைசெய்யப்பட்ட ஒருவர், தன் தடை நீக்க கோரிக்கைய முன் வைக்கலாம், ஆனால், இவ்வாறகப் பேசுவதை விக்கி விரும்பவில்லை. ஆகவே, பேச்சுப்பக்கத்தையும் முடக்க வேண்டியதாயிற்று. இந்த நடைமுறைகள் ஆ.வியில் உள்ளன. இப்போது சொல்லுங்கள் நான் தடைசெய்தது பிழையா? பேச்சுப்பக்கத்தையும் தடைசெய்தது பிழையா? AntanO (பேச்சு) 18:24, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- ஒரு பயனர் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அநாகரீகமாக உரையாடுதல் அல்லது வன்தாக்குதல் செய்யவில்லை எனில்... அவரின் பேச்சுப் பக்கத்தை தடை செய்யாது இருக்கலாம் எனக் கருதுகிறேன். ஏனெனில், தனது கருத்தை மேற்கொண்டு தெரிவிக்க இயலாமல் போய்விடுகிறது எனக் கருதுகிறேன். இதற்கு முன்பு அவர் விக்கி சமூகத்தில் நடந்துகொண்ட விதம், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு அவருக்கு இருக்கும் ஆர்வம் இவற்றைக் கருத்திற்கொண்டு அவருக்கு இப்போது இருக்கும் பங்களிப்புத் தடையை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:48, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- தடைப்பதிகை
- 16:41, 20 பெப்பிரவரி 2024 AntanO பேச்சு பங்களிப்புகள் தடு 1 வாரம் நேர அளவிற்கு பிரயாணி பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பொறுப்பற்ற நடவடிக்கைகள்) - பேச்சுப் பக்கம் முடக்கப்பவில்லை.
- 17:31, 20 பெப்பிரவரி 2024 AntanO பேச்சு பங்களிப்புகள் தடு-இன் பிரயாணி பேச்சு பங்களிப்புகள்-இற்கான தடை அமைப்பு 1 மாதம் கால அளவிற்கு மாற்றப்பட்டது (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (பொறுப்பற்ற நடவடிக்கைகள்) - பேச்சுப் பக்கம் முடக்கப்பட்ட இரண்டாது முறை. கால அளவு வித்தியாசம்:16:41 - 17:31
Prevent this user from editing their own talk page while blocked, if checked, will prevent the blocked user from editing their own user talk page (and hence, the ability for them to create unblock requests) during the duration of their block. This option is not checked by default, and typically should not be checked; editing of the user's talk page should be disabled only in cases of continued abuse of their user talk page, or when the user has engaged in serious threats, accusations, or attempts at outing that must be prevented from re-occurring. The protection policy has further details in cases where other users are repeatedly causing disruption to the user talk pages of blocked users.
--AntanO (பேச்சு) 18:39, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- @AntanO: உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போது, மற்ற தொகுப்புகள் செய்வதை தவிர்த்திருக்கலாம். அவ்வளவு துரிதம் தேவையில்லை; ஒப்புக்கொள்கிறேன். அதிகார மீறல் என குற்றஞ்சாட்டாது, தடை நீக்கக் கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் என்பதனையும் ஏற்கிறேன். கொள்கைப் பக்கங்கள் முழுமையாக இருக்கவேண்டிய தேவையை இப்போது புரிந்துகொண்டேன். விக்கிப்பீடியா:தடைக் கொள்கை எனும் பக்கத்தை விரிவுபடுத்த என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன். ஏதேனும் உதவி தேவையெனில் கேட்கிறேன். பெண்ணியமும் நாட்டார் மரபும் போட்டி நடைபெற்று வருவதால், அவருக்கு தற்போது இருக்கும் தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பரிந்துரையின் அடிப்படையில் தானாகவே மொழிபெயர்த்து கட்டுரைகளை வெளியிட்டு, தனது பங்களிப்புகளை மேம்படுத்துவார் என நம்புகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:26, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- முழுமையாக நடந்ததைப் புரிந்து கொள்ள சில நாட்கள் தேவைப்பட்டதால் இப்போது கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். மேலே மா. செல்வசிவகுருநாதன் கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். @பிரயாணி: நீங்கள் followers and worshippers என்ற கருத்தைத் தவிர்த்திருக்கலாம். உலக விக்கிப்பீடியர்களின் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியாவின் மதிப்பை அதிகரிக்க முனைந்து வரும் வேளையில் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கின்றன. மாற்றுக் கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக உரையாடி கொண்டு சென்றிருக்கலாம். பயனர் அண்டன் செய்த தடை என்பது உங்களுக்கு எதிரானதாக நினைக்க வேண்டாம் தொகுத்தல் போரைத் தடுக்க இதுவொரு வழிமுறையாகும். தொடர்ந்து எழுதுங்கள். முழு இயந்திர மொழிபெயர்ப்பைத் தவிர்த்தும், தொகுத்தல் போரில்லாமல் ஆக்கப்பூர்வமாக தொகுப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லாவிட்டால் அதைத் திரும்பப் பெற இயலுமான எனப் பாருங்கள். அதனடிப்படையில் தடை நீக்கப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:25, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @AntanO,@Selvasivagurunathan m@Sridhar G மற்றும் அனைவரின் புரிதலுக்காகவும்,
- இதுவே பயனர் அன்ரனால் எனக்கு கொடுக்கப்பட்ட திருத்த வேண்டுகோள். இதன் தொடர்ச்சியாக அவரால் எனது இந்தக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ள இலக்கண விதித் தொகுப்பும் கிரந்த மாறுதல்களையும் புரிந்த பின்னரே அடுத்த இரு நாட்களுக்கும் கட்டுரைகள் எழுதி வந்தேன் ஆனால் தினமும் எனது பேச்சுப்பக்கத்தில் மறுபடியும் மறுபடியும் இதையே ஒரு குறையாகவும், இதனடிபடையில் பக்கங்கள் நீக்கப்படும் தடை செய்ய நேரிடும் என்ற எச்சரிக்கையையும் பதித்துள்ளார். இதுவரையில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கடைசி நாளில் (20-02-24) பயனர் அருணாச்சலம் கொடுத்த விளக்கத்தைப் புரிந்து சரியென ஒத்துக்கொண்டு கருத்திட்ட பின்னாலும் மீண்டும் இதே கருத்தை வலியுருத்தியும் இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் ஒருவித மிரட்டல் தொனியில் பதிவிட்டதை பார்த்த பின்னால்தான் நான் பயனர் அன்றன் உருவாக்கிய கட்டுரைகளை சென்று பார்த்தேன். அதில் சில கட்டுரைகளில் அவர் எனக்கு சரி செய்யச் சொல்லிய இலக்கண விதிகள் பின்பற்றப்படவில்லை. கட்டுரைகளின் பேச்சுப்பக்கங்களில் எந்த குறிப்புகளும் இல்லை எனவே அவருடன் விவாதிக்காமல்
- 1
- 2
- 3
- 4 ஆகிய மாற்றங்களைச் செய்தேன். இதை நான் அவரிடம் உரையாடி விட்டு செய்திருக்க வேண்டும். இதுவே பயனர் அன்றனுக்கும் பயனர் பிரயாணிக்கும் உள்ள கருத்து வேறுபாடு.
- இதன் தொடர்ச்சியாக எனது பேச்சுப்பக்கத்தில் அவர் விளக்கம் கேட்டதோடு அவரின் கட்டுரைகளில் நான் செய்த தொகுப்பை எந்த விளக்கமும் சொல்லாமல் ஏன் இந்த இலக்கண விதி பின்பற்றப்படவில்லை என்ற காரணமும் சொல்லாமல் அவரது நிர்வாக அணுக்க கருவியை பயன்படுத்தி நீக்கிவிட்டு, எனது பேச்சுப்பக்கத்தில் க்ரியாவின் ஒரு கட்டுரையை குறிப்பிட்டு கேள்வியை மட்டுமே எழுப்பினார். மேற்சொன்ன நான்கு கட்டுரைகளில் இவ்வாறு தன்னிச்சையாக நீக்கியதன் காரணமாக அவரின் பேச்சுப்பக்கத்தில் இவ்வாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் என்ற அடிப்படையிலேயெ அவர் தனது நிர்வாக அணுக்கத்தை சலுகையாக பயன்படுத்துகிறாரா என If a user believes an administrator has acted improperly, they should express their concerns directly to the administrator responsible and try to come to a resolution in an orderly and civil manner. இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டிருந்தேன். அதையும் நிர்வாகக் கருவியின் உதவியால் நீக்கிவிட்டார். இது நிர்வாகி அன்றனுக்கும் பயனர் பிரயாணிக்கும் உள்ள கருத்து வேறுபாடு.
இத்தகைய நிலையிலேயே நிர்வாக அணுக்க மீறல், சலுகைகள் என குற்றம் சாட்டியுள்ளேன். இதில் இப்போதும் மாற்றமில்லை. மேலே @Sridhar G அவர்களுக்கு கொடுத்துள்ள பதிலில் "நான் உருவாக்கிய கட்டுரைகளை தேடித்தேடி குற்றம் பிடிக்கப்பார்த்தார், ஆனால் தான் உருவாக்கிய கட்டுரைகளை கண்டு கொள்ளவில்லை!? ஆக்கப்பூர்வமான பங்களிப்பா?" என்ற கேள்வியின் வழியாகவும் அவருக்கும் எனக்கும் பிணக்கு இருக்கும் நிலையில் Conflict of interest or non-neutrality – Administrators should not normally use their tools in matters in which they are personally involved (for example, in a content dispute in which they are a party). See Involved admins. அவரும் நானும் எதிரெதிர் தரப்பாக இருக்கும்போது அவர் தன்னிச்சையாக அவரது எதிர்த்தரப்பான என்னை நிர்வாக அணுக்க கருவியைப்பயன்படுத்தி தடை செய்தது தார்மீகப்படியும் நிர்வாக அணுக்கம்-ஆ.வி என்ற கொள்கையின் படி, தவறு என்று இப்பவும் நம்புகிறேன். இவ்வாறு பயனர் அன்றன் ஒரு தரப்பாக இருக்கும் சமயத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதும், பயனர்களை தடை செய்வதும் விக்கியின் எந்த கொள்கையின் படி சரியானது என்றும் என்னை தடை செய்த விடயத்தில் விக்கியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றானதும் நிர்வாக அணுக்க பயனர்களின் பொறுப்புகளில் ஒன்றானதுமான ' இணக்க முடிவுகள் என்பது எங்கனம் பின்பற்றப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தரவும்.
என்னை முழுவதுமாக பயனர் அன்றன் தடை செய்த பின்பே, ஒரு பயனரை தடை செய்வது பற்றியும், அத்தடைக்கு பின்பாக தடை செய்யப்பட்ட பயனர்கள் மீளாய்வுக்கு விண்ணப்பிப்பது பற்றியும் எந்த தகவல்களும் குழுக்களும் இல்லாத காரணத்தாலும், 37 நிர்வாகிகளில் ஒருவர் கூட இந்த பயனரை தோழமைச் சுட்டல் கூட செய்யாதவிடத்து மட்டுமேயும் தமிழ் விக்கியில் இது பற்றிய கொள்கைகள் இல்லாத காரணத்தாலுமே நான் ஜிம்மியின் பேச்சுப்பக்கத்தில் உதவி கேட்டுள்ளேன். காலக்கோடு பார்த்தால் இது எளிதில் விளங்கும்.
என்னுடைய வேண்டுகோள்:
- இந்தத் தடையே பயனர் அன்றனின் சார்பாகவும்(ஒரு தரப்பு), அவரின் தன்னிச்சைப்படியும் பயனர் பிரயாணி(எதிர்தரப்பு) மீதுள்ள கோபத்தால் நிர்வாகி அன்றனால்(நிர்வாகி) விதிக்கப்பட்டது. எனவே செல்லத்தக்கதல்ல. இதைக் கருத்தில் கொண்டு என்மீதான தடையை நீக்க வேண்டுகோள் வைக்கிறேன். குறைந்தபட்சம் இதிலாவது தமிழ் விக்கிச் சமூகம் இணக்க முடிவு எடுக்க விரும்புகிறேன். அந்த இணக்க முடிவுக்கும் கட்டுப்படுகிறேன்.
- பயனர்களை தடை செய்வது பற்றியும், தடை செய்யப்பட்ட பயனர்கள் அதற்காக விண்ணப்பிப்பது பற்றியும், நிர்வாக பயனர்கள் தடைக்கருவியை தன்னிச்சையாக பயன்படுத்துவதைப் பற்றியும் ஆங்கில விக்கியில் உள்ளது போல தகுந்த் கொள்கைகளை வகுக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். விக்கியைப் பற்றிய பரப்புரைகளிலும், கூடுகைகளிலும் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் இளையோரிடமும் விக்கியை பற்றிய வெளிப்படையான குற்றச்சாட்டு இதுவே.
(குறிப்பு:நான் தொகுத்த 8 கட்டுரைகளில் அவரது 4 கட்டுரைகளை மட்டுமே மீளமை செய்துள்ளார்.பிறரின் கட்டுரைகளில் அல்ல) --பிரயாணி (பேச்சு) 13:28, 23 பெப்பிரவரி 2024 (UTC)
@Selvasivagurunathan m and Neechalkaran: உங்கள் நன்னோக்கு புரிகிறது. ஆனால் இப்பயனரில் பதில் உங்கள் கருத்துக்களுடன் முரண்படுகிறது. இப்பயனர் நான் இவரைத் தடைசெய்தது பிழை என்கிறார். ஆகவே தடை நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார். நான் செய்தது பிழை இல்லை. ஆகவே தடை நீக்கமும் தேவையில்லை. (en:Wikipedia:Appealing a block, en:Wikipedia:Guide to appealing blocks) நான் செய்தது பிழை என்றால், அதனை ஆதரத்துடன் முன்வைக்க வேண்டும். என்னால் இப்பயனர் மீதான தடை என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் முன்வைக்க முடியும். --AntanO (பேச்சு) 06:17, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி: கருத்துகளை பதிப்பிடுவதற்கு முன்பு, உங்களுடைய கையொப்பத்தை மறவாது இடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:49, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- மன்னிக்கவும். கையெழுத்திட்டுவிட்டேன். பிரயாணி (பேச்சு) 13:29, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி: கருத்துகளை பதிப்பிடுவதற்கு முன்பு, உங்களுடைய கையொப்பத்தை மறவாது இடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:49, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி:, நீங்கள் குறிப்பிட்ட வரிசையில் நிகழ்வினைப் பார்க்கும் போது உங்கள் இருவருக்கிடையே நடக்கும் சிக்கல் போலத் தெரியவில்லை. சுற்றுக்காவலில் உள்ள ஒருவர் ஒரு கருத்தை முன்வைத்தால் அவரை எதிர்த்தரப்பாக்குவது ஏற்புடையதல்ல. அவர் கட்டுரைக்குச் சென்று தொகுத்தல் போரைத் தொடங்கியதைத் தவிர்த்திருக்கலாம். அவரின் கருத்துடன் முரண்பட்டால் அதை மற்றவர்களிடம் முன்வைக்கலாமே அன்றி அவரை எதிர்த்தரப்பெனக் கருதி நிர்வாக அணுக்கத்தைப் பயன்படுத்துவதே Conflict of interest என்பதும் ஏற்புடையதல்ல. தான் திருத்திய கட்டுரைகளைக் கேள்விக்குள்ளாக்குவார்கள் என நினைத்தால் யாரும் சுற்றுக்காவலில் ஈடுபடமுடியாது.-நீச்சல்காரன் (பேச்சு) 15:20, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- மிகச்சரி. அவரது கட்டுரைக்கு சென்று உரையாடாமல் தொகுத்ததை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். சுற்றுக்காவலில் இருக்கும் நிர்வாகி என் தொகுப்பை தவறானது அல்லது தேவையில்லாதது எனக் கருதி மீளமைப்பது புரிந்து கொள்ளக்கூடியதே, ஆனால் நான் செய்த தொகுப்புகள் அனைத்தும் மீளமைக்கப்படவில்லையே. அவரால் உருவாக்கப்பட்ட கட்டுரைகளையும் ஒரு கட்டுரைப் பேச்சுப்பக்கத்தையும், அவரது பேச்சுப்பக்கத்தில் விளக்கம் கேட்டதையும் மட்டுமே மீளமைத்ததும் conflict of interest அல்ல எனக் கருதுகிறீர்களா?
- நான் உருவாக்கிய கட்டுரைகளை தேடித்தேடி குற்றம் பிடிக்கப்பார்த்தார், -- அவரின் இந்த கூற்றை எப்படிக் கருதுகிறீர்கள்? இதுவும் அவருக்கு என்னுடன் சிக்கல் இல்லை. சுற்றுக்காவலின் ஒரு அங்கம் என்கிறீர்களா? பிரயாணி (பேச்சு) 15:54, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- இவர் இவ்வித தொகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆகவே, 1 வாரத்திற்கு தடைசெய்தேன், ஆனால் பேச்சுப்பக்கம் திறந்தே இருந்தது. ஆனால், தொடர்பில்லாமல் நான் அதிகார அதிகார மீறல் செய்வதாகக் குற்றம் சுமத்தினார். தடைசெய்யப்பட்ட ஒருவர், தன் தடை நீக்க கோரிக்கைய முன் வைக்கலாம், ஆனால், இவ்வாறகப் பேசுவதை விக்கி விரும்பவில்லை. ஆகவே, பேச்சுப்பக்கத்தையும் முடக்க வேண்டியதாயிற்று.(இது அன்றனின் விளக்கம் -- இதுவும் பொய் நான் அவரை அதிகார மீறல் செய்ததாக குற்றம் சாட்டியது என்னை தடை செய்வதற்க்கு முன்னதாக
- இது தான் ஆதாரம் இதையும் அவர் நிருவாக அணுக்க கருவியைப் பயன்படுத்தி நீக்கி விட்டு எனது பேச்சுப்பக்கத்தில் உரையாடச் சொன்னார்.
- கிழே உள்ளது இதற்கான அவரின் விளக்கம்:
- தடைப்பதிகை
- 16:41, 20 பெப்பிரவரி 2024 AntanO பேச்சு பங்களிப்புகள் தடு 1 வாரம் நேர அளவிற்கு பிரயாணி பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (பொறுப்பற்ற நடவடிக்கைகள்) - பேச்சுப் பக்கம் முடக்கப்பவில்லை.
- 17:31, 20 பெப்பிரவரி 2024 AntanO பேச்சு பங்களிப்புகள் தடு-இன் பிரயாணி பேச்சு பங்களிப்புகள்-இற்கான தடை அமைப்பு 1 மாதம் கால அளவிற்கு மாற்றப்பட்டது (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (பொறுப்பற்ற நடவடிக்கைகள்) - பேச்சுப் பக்கம் முடக்கப்பட்ட இரண்டாது முறை. கால அளவு வித்தியாசம்:16:41 - 17:31 -அன்றனின் விளக்கம்
- இவ்வளவு பெரிய பொய்யைக் கூறி தன் நிர்வாக மீறலை நியாயப்படுத்தும் ஒருவரை, அதற்காக விக்கி கொள்கையான Prevent this user from editing their own talk page while blocked, if checked, will prevent the blocked user from editing their own user talk page (and hence, the ability for them to create unblock requests) during the duration of their block. This option is not checked by default, and typically should not be checked; editing of the user's talk page should be disabled only in cases of continued abuse of their user talk page, or when the user has engaged in serious threats, accusations, or attempts at outing that must be prevented from re-occurring. The protection policy has further details in cases where other users are repeatedly causing disruption to the user talk pages of blocked users. பயன்படுத்தும் ஒருவரை இன்னமும் conflict of interest இல்லை என நம்புகுறீர்களா?? @Neechalkaran@Selvasivagurunathan m@Sridhar G பிரயாணி (பேச்சு) 16:20, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- அவரின் பக்க சார்பிற்கும் ஒருதலைப்பட்சமான என் மீதான தடைக்கும் என்னுடைய இறுதிச்சான்று
- விக்கிதானுலாவித் தொகுப்புக்கள் இதில் சக பயனரான பாலாஜி மீது தொகுத்தல் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு இதே அன்ரனால் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் விவாதித்து இணக்கம் ஏற்படாத நிலையில் இதிலும் அவர் நிர்வாகி என்பதால் இதைபற்றிய உரையாடலை துவக்கி மற்றொரு நிர்வாகப் பயனரால் இணக்க முடிவும் எட்டப்பட்டுள்ளது.
- ஆனால் ஏன் என்னுடைய தொகுத்தலில் இதுதான் நான் கடைசியாக செய்தது. இதில் அவர் கற்றுக்கொடுத்த மொழிமுதல் இலக்கண விதி மட்டுமல்லாது சில கூடுதல் தகவல்களையும் அதற்கான மேற்கோள்களையும் சேர்த்தே தான் தொகுத்துள்ளேன். இவ்வாறு இணக்க முடிவுகள் எடுக்கவில்லை. இதுவும் நிர்வாக சுற்றுக்காவலின் அங்கமா??
- நிர்வாகி என்ற முறையிலோ, அல்லது சக பயனர் என்ற முறையிலோ தொகுத்தல் காரணமாக ஒரு பயனரை, தவறான சொற்களைப் பயன்படுத்தாத நிலையில், தனிப்பட்டு எவரையும் தாக்கி பதிவிடாமல் அன்றனின் அதிகார அணுக்கத்தன்மையை கேள்வி கேட்ட காரணத்தால் மட்டுமே ஆலமரத்தடியிலோ, என்னுடைய பயனர் பக்கத்திலோ பிற பயனர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தையோ கேட்காமல் தன்னிச்சையாக தடை செய்வது எந்த விக்கி கொள்கையின் அடிப்படையில் என்று மட்டும் அறியத் தாருங்கள்.
- என்னுடைய புரிதலிலும், தொகுத்தலிலும் கூட தவறிருக்கலாம் ஆனால் மிக நீண்ட நாள் பயனரும், நிருவாகக் கொள்கைகளை நன்றாகத் தெரிந்த ஒருவருமான அன்றனின் இந்த தடைக்கு அவர் கட்டுரைகளை நான் திருத்திய கோபமும், நிதானமின்மையும், பொறுமையின்மையும் மட்டுமே காரணமல்லாமல் வேறென்ன இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
- இறுதியாக அனைத்து பயனர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், ஒருவரை பங்காற்றுவதிலிருந்து தடை செய்வது விக்கியைப் பொறுத்தமட்டில் அதிகபட்ச தண்டனை எனக் கருதுகிறேன். இதுநாள் வரை கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தினாலும், தவறான தகவல்களை தொகுத்தாலும் மட்டுமே தடை என்றிருந்ததையும், மீதமுள்ள எல்லா சமயங்களிலும் அணுக்க முடிவுகள், இணக்க கொள்கை, சனநாயகத்தன்மை போன்ற கொள்கைகளும் எல்லாரின் கருத்துக்களையும் பயனர்களையும் சமமான முறையில் நடத்துவதையுமே அறிந்த எனக்கு கடந்த இரு நாட்களாக அவரின் தவறுகளை நியாயப்படுத்துவதோடு மீண்டும் விக்கிக்கு வெளியில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளில் பயனரை சேர்த்துச் செயற்படுவதை தவிர்க்குமாறும் முன்மொழியப்போவதாக அவர் கூறுவதும் இவ்வளவு வன்மத்தோடு என்னை விக்கியிலிருந்தும் விக்கி செயல்பாடுகளில் இருந்தும் விலக்கி வைக்க முன்னெடுக்கும் வகையில் நான் என்ன கெடுதல் செய்தேன் என்ற எண்ணமும் என்னை சோர்வடையச் செய்கிறது. என் மனசாட்சிக்கு தெரியும் இது முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்பது. ஆனால் இதற்கு பின்பும் நான் எவ்வளவு கவனமாக இருந்தாலும் என்னை ஏதாவது ஒரு விதத்தில் எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தத்துடிக்கும் இரு கண்கள் கவனித்துகொண்டே இருக்கும் என்பதும் வருத்தமளிக்கிறது. இதற்கு மேல் நான் இதில் விவாதிக்கவோ விளக்கமளிக்கவோ விரும்பவில்லை. அன்றன் விளக்கமளித்தாலும் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும் எதிர்த்தாலும் என் தடையை நான் நீக்கக் கோரப்போவதில்லை. முடிவு விக்கிசமூகத்தின் கையில்.
- தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. இதைத் தவிர சொல்ல வேறோன்றுமில்லை பிரயாணி (பேச்சு) 17:54, 23 பெப்பிரவரி 2024 (UTC)
ஏன் தடை?
தொகு- எபினேசர் ஜோசப்புக்கு 2019 முதல் பலராலும் பல அறிவிப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் உள்வாங்கிக் கொண்டதென்பது கேள்விக்குறி.
- உங்களால் இயலுமெனில் இவ்வாரத்தின் விடுமுறை நாளில் நாம் உரையாடுவோம். என்னால் இயன்ற வழிகாட்டலைத் தருகிறேன் என செல்வசிவகுருநாதன் குறிப்பிடுகிறார். கண்டிப்பாக உரையாடலாம். கற்றுக்கொள்கிறேன் என்றவர் எதற்காக ராகேல் உட்பட்ட பிற கட்டுரைகளில் மாற்றம் செய்யத் தொடங்கினார்?
- ஏன் பேச்சுப்பத்தில் உரையாடும்போது அது தவிர்க்கப்பட்டது? இதுதானே முறை? விளக்கம் என்ற தலைப்பின் கீழ் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க, பயனர் கருத்தினை உள்வாங்கமல் பேச்சை மாற்றிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். உடன்பாடு, இணக்கம் என்பதே இல்லை.
- ஆக்கபூர்மான உரையாடல் நடத்துவதை தவிர்க்க, இப்பயனருக்கு விக்கியில் எந்த வழிகாட்டல் உள்ளது?
- தனக்கு இலக்கணம் தெரியாதென்றவர் ஏன் மணல்தொட்டியைப் பயன்படுத்துமாறு நான் குறிப்பிட்ட குறிப்பை ஏற்க மறுத்தார்?
ஆகவே, ஆக்கபூர்வமாகப் பேசாமல், ஆக்கமற்ற தொகுப்பைச் செய்யும் ஒருவரை தடை செய்ய ஒவ்வொரு நிர்வாகிக்கும் இடமுள்ளது. நான் தடைசெய்யாதுவிட்டால் பல நூறு கட்டுரைகள் சிக்கலுக்காக இடமிருந்தது. காரணம் இவருக்கு இலக்கணம், கிரந்தம், கொள்கை பற்றிய தெளிவில்லை. Blocks are used to prevent damage or disruption to Wikipedia, not to punish users.
குறிப்பு: பேச்சுப்பக்க தடைக்கு காரணம் தெரிவித்தாயிற்று.
சில குறிப்புகள்
தொகு- // உங்களைப் போன்று நிர்வாகி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உங்கள் கட்டுரைகளை மட்டும் மீளமைப்பது // இப்பயனர் மீளமைப்புக்கும் நிர்வான அணுக்கத்திற்கும் எவ்விதம் முடிச்சுப் போடுகிறார் பாருங்கள்!
- //அவரால் உருவாக்கப்பட்ட கட்டுரைகளையும் ஒரு கட்டுரைப் பேச்சுப்பக்கத்தையும், அவரது பேச்சுப்பக்கத்தில் விளக்கம் கேட்டதையும் மட்டுமே மீளமைத்ததும் conflict of interest அல்ல எனக் கருதுகிறீர்களா?// 100 வீதம் ஆக்கபூர்வமற்றதை மீள்விக்கலாம். மீள்வித்தவற்றுக்கு பேச்சுப்பக்கத்தில் பதில் உள்ளது.
- //இதுநாள் வரை கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தினாலும், தவறான தகவல்களை தொகுத்தாலும் மட்டுமே தடை என்றிருந்ததையும்// இது பிழையான கருத்து. இதற்கு முன்னரும் பலருடைய பேச்சுப்பக்கம் இவையல்லாத காரணங்களுக்காகவும் முடக்கப்பட்டுள்ளது. நீர்வாகிகளால் அவற்றைக் காண முடியும். மேலும், த.வியில் இல்லாத கொள்கைகள் ஆ.வி கொள்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுண்டு.
குறிப்பு: ஆதரமற்ற பயனரின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்கவில்லை. சில கருத்துகள் மழுப்பலாகவும், திசை திருப்பலாகவும் உள்ளன. --AntanO (பேச்சு) 19:28, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- //இப்பயனர் மீளமைப்புக்கும் நிர்வான அணுக்கத்திற்கும் எவ்விதம் முடிச்சுப் போடுகிறார் பாருங்கள்!// இதைத்தான் மறுபடியும் மறுபடியும் என் தொகுத்தலுடன் போரிட்ட பயனரான உங்களுக்கு, நீங்கள் என்னுடன் முரண்பட்ட சம்மந்த்தப்பட்ட பயனர் என்பதால் தான் conflict of interest என்ற சாரம்சம் இருக்கிறது. அதனடிப்படையில் என் மீதான எந்த ஒரு நிர்வாக அணுக்க கருவிகளையும் பயன்படுத்த அனுமதி இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் தன்னிச்சையால் எடுக்கப்பட்ட முடிவு என எதிர்த்துள்ளேன்.
- நீங்கள் உங்கள் கட்டுரைகளை மீளமைத்தது பயனர் அன்றன் என்ற முறையிலேயே அந்த நேரமே என் மீதான நிர்வாக பயனரான அன்றனின் நிர்வாக உரிமை சம்மந்த்தப்பட்ட பயனர் மற்றும் conflict of interest ஆகிய விக்கி கொள்கைகளின் படியும் தார்மீகப்படியும் இல்லை எனும் பட்சத்தில் என் மீதான தடையோ, மற்ற நடவடிக்கைகளோ பிற நிர்வாகிகளாலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதைத்தான் மீறல் என்று முறையிடுகிறேன்.
- @Neechalkaran நீங்கள் அன்றன் அவரது கட்டுரைகளை மீளமைத்தது சுற்றுக்காவலின் ஒரு அங்கம் என கருதுகிறீர்களா?? அல்லது அவரது தனிப்பட்ட செயலாக கருதுகிறீர்களா?? பிரயாணி (பேச்சு) 17:58, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- மீளமைப்புச் செய்ய நிர்வாக அணுக்கம் தேவையில்லை.--AntanO (பேச்சு) 18:15, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- In general, editors should not act as administrators in disputes in which they have been involved. This is because involved administrators may be, or appear to be, incapable of making objective decisions in disputes to which they have been a party or about which they have strong feelings. (இதன்படி:கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு- இந்த தலைப்புக்களில் அன்ரனுக்கு இவ்வளவு தீவிர உணர்ச்சி இருக்கும் என முன்னமே தெரியாது)
- Conflict of interest or non-neutrality – Administrators should not normally use their tools in matters in which they are personally involved (for example, in a content dispute in which they are a party). See Involved admins.
விக்கியின் நிர்வாகக் அணுக்க கொள்கைகளான இதன்படி அவரால் என் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது. இதுவே எனது முறையீடு. இதற்கு ஏன் யாருமே நேரடியான பதிலளித்து என்னுடைய புரிதல் தவறு என்று விளக்க முற்படக் கூட செய்யவில்லை. இக்காரணத்தாலேயே தடையை நீக்க முறையீடு செய்ய நான் விரும்பவில்லை. நிர்வாகியின் முறையற்ற செயற்பாடு என்ற காரணத்தில் முறையிட எனக்கு நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் அனுமதியில்லாத காரணத்தால் மட்டுமே அங்கு கூறப்பட்டுள்ள வழிமுறையின்படியே ஜிம்மியின் பக்கத்தில் முறையிட்டுள்ளேன்.
அவரது தடை சரியானது என்ற பட்சத்தில் தானே தடையை நீக்க வேண்டுகோள் வைக்க முடியும்.? ஆக தமிழ் விக்கிச் சமூகம் அவரது இந்தத்தடையை 100% சரியானது என ஏற்றுக்கொள்கிறதா?? இதை பற்றிய உங்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். நேரடியாகவே பதில் சொல்லுங்கள். தார்மீகபடியும் மேற்சொன்ன கொள்கைகளின் படியும் அன்ரனின் இந்தத்தடை முழுக்க முழுக்க விக்கியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, தன்னிசையானது அல்ல என்ற அவரது விளக்கத்தை தமிழ் விக்கி சமூகம் ஏற்றுக்கொள்கிறதா?? --பிரயாணி (பேச்சு) 08:59, 25 பெப்பிரவரி 2024 (UTC)
//In general, editors should not act as administrators in disputes in which they have been involved. This is because involved administrators may be, or appear to be, incapable of making objective decisions in disputes to which they have been a party or about which they have strong feelings. (இதன்படி:கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு- இந்த தலைப்புக்களில் அன்ரனுக்கு இவ்வளவு தீவிர உணர்ச்சி இருக்கும் என முன்னமே தெரியாது)// இங்கு யோசேப்பு சொல்ல விரும்புவது என்ன?
//Conflict of interest or non-neutrality – Administrators should not normally use their tools in matters in which they are personally involved (for example, in a content dispute in which they are a party). See Involved admins.// தொந்தரவு தரும் செயற்பாடுகளில் சொல்லியும் கேட்காமல் ஈடுபடும் பயனரை தடை செய்யலாம். இவ்வாறான தொகுப்புக்கள் எத்தனை செய்யத்திட்டமிட்ருந்தார்?
//சாதாரண பயனரான என்னிடமல்ல. மேற்கொண்டு இதில் விவாதிக்க எதுவுமில்லை எனக்கருதுகிறேன். எந்த கட்டுரைகளில் விளக்கம், மாறுதல்கள் தேவை எனக் கருதுகிறீர்களோ அங்கேயே கருத்திடவும். எனது பேச்சுப்பக்கத்தில் அல்ல.// விவாதிக்காமல் தொந்தரவு தரும் செயற்பாடு தொகுப்புக்களில் ஈடுபடும் பயனரை தடுக்காமல் எந்த நிர்வாகி வேடிக்கை பார்ப்பார். --AntanO (பேச்சு) 11:48, 25 பெப்பிரவரி 2024 (UTC)
விளக்கம் தேவை
தொகுஇங்கு he has many followers and worshippers in the tamil community என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த பின்பற்றுபவர்கள் (followers) எனவும் வழிபாட்டாளர்கள் (worshippers) எனவும் விளக்கவும். எத்தனைபேர் உள்ளார்கள்? அவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவும். இதற்கு முறையான சான்றுகளை இணைக்கவும். இல்லாதுவிடின், விக்கிக்கு வெளியில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளில் பயனரை சேர்த்துச் செயற்படுவதை தவிர்க்குமாறு முன்மொழிய எண்ணியுள்ளேன். விக்கியைப் பற்றிய பரப்புரைகளிலும், கூடுகைகளிலும் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் இளையோரிடமும் விக்கியை பற்றிய வெளிப்படையான குற்றச்சாட்டு இதுவே என மேலேயுள்ள கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்த பரப்புரைகள் கூடுகைகள் பற்றியும் ஆராய வேண்டும். AntanO (பேச்சு) 06:32, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- உங்கள் மீது நிர்வாக அணுக்கத்தை என் மீது தவறாக பயன்படுத்திய என் குற்றச்சாட்டுக்கு இன்னமும் உரையாடல் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு தற்போது எந்த விளக்கமும் அளிக்க மறுக்கிறேன். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால் அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் இதே வார்த்தைகளோடும், காரணத்தோடும் நீங்கள், ஜிம்மியின் பேச்சுப்பக்கத்திலேயே என்னிடம் உரையாடவும் விளக்கம் கேட்கவும் உங்களை அன்புடன் அழைக்கிறேன். பிரயாணி (பேச்சு) 13:33, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- ஜிம்மி கூட இக்கோரிக்கையை வைக்க முடியாது. அதற்கு இடமுமில்லை. தடை நீங்கியதும் இது குறித்துப் பேசலாம். --AntanO (பேச்சு) 19:35, 23 பெப்பிரவரி 2024 (UTC)
@பிரயாணி, he has many followers and worshippers in the tamil community என்று நீங்கள் ஜிம்மியின் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்திருப்பது தமிழ் விக்கிப்பீடியாவிற்கே பொருத்தமற்றது. பொதுப்படையாக இவ்வாறு கூறியதன்மூலம் நீங்கள் ஏனைய அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறீர்கள். விக்கிப்பீடியாவில் அவ்வாறு யாரும் followers ஆகவோ worshipers ஆகவோ இருக்க முடியாது. இது பாரதூரமான சொற்பிரயோகம். இதனை அங்கு நீக்கிவிடுமாறு அன்பாக வேண்டுகிறேன். இந்தச் சிக்கலைத் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெளியே கொண்டுசெல்லாது இங்கு பேசித் தீர்க்க முன்வாருங்கள்.
@AntanO, பயனர் கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தாதவிடத்து, தமிழ் விக்கியில் தற்போதுள்ள தடைக்கொள்கையில் இல்லாத வகையில் அவரது பேச்சுப்பக்கத்தைத் தடை செய்ததற்கு உங்களிடம் விளக்கம் ஏதாவது உள்ளதா? --சிவகோசரன் (பேச்சு) 16:04, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @Sivakosaran தடைக் கொள்கை, பேச்சுப் பக்கத் தடை ஆகியவற்றை இந்தத் தலைப்பின்கீழ் உரையாடாது, மேலேயுள்ள தலைப்பின்கீழ் உரையாடுவோம். இல்லையெனில், தெளிவற்ற நிலையில் உரையாடல்கள் தொடரும். நிலைமை இன்னும் சிக்கலாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:14, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- செல்வசிவகுருநாதன் 17:48, 22 பெப்பிரவரி 2024 என்ற கையொப்பத்தின் கீழ் பதில் உள்ளது. --AntanO (பேச்சு) 19:35, 23 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி // ஜிம்மியின் பேச்சுப்பக்கத்திலேயே// தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்காக தனிப் பக்கம் உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பின் எதற்காக அங்கு முறையிட வேண்டும். ஜிம்மி வேல்சின் பக்க முறையீட்டினை மீளமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:21, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- அந்தப்பக்கங்களில் எனக்கு அனுமதியில்லாத காரணத்தாலும் முறையீட்டு குழுவோ,நடுவர் குழுவோ, பிற மொழி விக்கிகளைப் போல இல்லாத காரணத்தாலும் மட்டுமே அங்கே உதவி கேட்டேன். எனது பேச்சுப்பக்க அனுமதி கொடுத்த பின்னர் அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன். விக்கி சமுகத்தால் சனநாயக முறையில் எனது விசயத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அதையும் அப்பக்கத்தில் பதிந்து, எனது முறையீட்டினை திரும்ப கட்டாயம் பெற்றுக்கொள்வேன். நமது தமிழ் விக்கி சமுதாய மாண்பை எக்காரணம் கொண்டும் கீழ்மை படுத்த மாட்டேன் என்ற உறுதியையும் இங்கே பதிவு செய்கிறேன். பிரயாணி (பேச்சு) 17:39, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி //எனது பேச்சுப்பக்க அனுமதி கொடுத்த பின்னர் அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.// நீங்கள் எழுதியிருப்பது எனக்குப் புரியவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- ஜிம்மியின் பக்கத்தில் எனது பேச்சுப்பக்க இணைப்பை கொடுத்து இங்கு என் மீதான தடை குறித்த் விவாதம் நடைபெறுகிறது என இற்றைப்படுத்தியுள்ளேன். விவாத முடிவை அங்கே பதிந்து எனது உதவிக் கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்வதே முறை எனக்கருதுகிறேன். மாறாக பக்கத்தை மீளமைப்பது என்னளவில் தவறானது என்பதே.
- திரும்பவும் ஒரு விசயத்தை மீண்டும் பதிவு செய்கிறேன். என்னளவில் நிர்வாகி அன்றன் பயனர் அன்றனுக்காக விவாதித்து, அவரின் தன் இச்சையாக இந்த என்மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தான் அவரின் மீதான எனது ஒறே குற்றச்சாட்டு. மற்றபடி ஜிம்மியின் பக்கத்தில் சிவகோசரன் பயனர் குறிப்பிட்டுள்ளதைப் போல் பிற பயனர்களைப் பற்றிய தவறான புரிதல் வரும் என்னுடைய வார்த்தைகள் சரியான புரிதலின்றியும் எங்கும் முறையிட வழியில்லாது போன தவிப்பிலும் பயன்படுத்தப்பட்டவை. அதன் தவறான பயன்பாட்டுக்கு மனமாற வருந்துகிறேன். இதையும் ஜிம்மியின் பக்கத்தில் கண்டிப்பாக பதிவு செய்வேன்.
- மற்றபடி, எனது குற்றச்சாட்டான அன்றனின் என் மீதான தடை தன்னிச்சையானது, விக்கியின் கொள்கையான சம்மந்த்தப்பட்ட பயனர் மற்றும் conflict of interest என்பதோடு சம்மந்தப்பட்டது, தமிழ் விக்கி சமுதாய இணக்க முடிவின் பேரில் எடுக்கப்படவில்லை என்பதற்க்கு என்னுடைய விளக்கமும் உள்ளது. அவரின் விளக்கமும் உள்ளது. அதனடிப்படையில் பிற நிர்வாகிகளும் பயனர்களும் இணைந்து எந்த முடிவு எடுத்தாலும் அதையும் மனமார ஏற்றுக்கொள்வேன். அதன்படி தடை சரியானது என்றால் ஒரு மாத காலத்திற்கு பின்னர், மணற்தொட்டியை பயன்படுத்தியும் இதர பயனர்களின் குறிப்பின் படியும் கண்டிப்பாக என்னால் முடிந்த பங்களிப்பை விக்கி கொள்கைகளுக்கு உட்பட்ட வகையில் செய்வேன் @AntanO உங்களின் விக்கிக்கு வெளியில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளில் பயனரை சேர்த்துச் செயற்படுவதை தவிர்க்குமாறு முன்மொழிவிற்கு முதல் ஆதரவு என்னுடையதே. பிரயாணி (பேச்சு) 18:17, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி //எனது பேச்சுப்பக்க அனுமதி கொடுத்த பின்னர் அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.// நீங்கள் எழுதியிருப்பது எனக்குப் புரியவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- அந்தப்பக்கங்களில் எனக்கு அனுமதியில்லாத காரணத்தாலும் முறையீட்டு குழுவோ,நடுவர் குழுவோ, பிற மொழி விக்கிகளைப் போல இல்லாத காரணத்தாலும் மட்டுமே அங்கே உதவி கேட்டேன். எனது பேச்சுப்பக்க அனுமதி கொடுத்த பின்னர் அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன். விக்கி சமுகத்தால் சனநாயக முறையில் எனது விசயத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அதையும் அப்பக்கத்தில் பதிந்து, எனது முறையீட்டினை திரும்ப கட்டாயம் பெற்றுக்கொள்வேன். நமது தமிழ் விக்கி சமுதாய மாண்பை எக்காரணம் கொண்டும் கீழ்மை படுத்த மாட்டேன் என்ற உறுதியையும் இங்கே பதிவு செய்கிறேன். பிரயாணி (பேச்சு) 17:39, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி // ஜிம்மியின் பேச்சுப்பக்கத்திலேயே// தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்காக தனிப் பக்கம் உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பின் எதற்காக அங்கு முறையிட வேண்டும். ஜிம்மி வேல்சின் பக்க முறையீட்டினை மீளமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:21, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- முறையிட முடியாவிட்டாலும், சில நிர்வாகிகளின் கவனத்திற்கு ping கொண்டுவர செய்யப்பட்டது.--AntanO (பேச்சு) 18:13, 24 பெப்பிரவரி 2024 (UTC)
இங்கு உரையாடிக் கொண்டு இருக்கும்போது மீண்டும் ஜிம்மியின் பக்கத்தில் தொடர்ச்சியான முறையிடல் இடம்பெற்றுள்ளது! --AntanO (பேச்சு) 18:18, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- இற்றைப்படுத்தியுள்ளேனே தவிர. வேறேந்த முறையிடும் செய்யவில்லை. முற்றிலும் தவறான தகவல். பிரயாணி (பேச்சு) 18:21, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி //மற்றபடி ஜிம்மியின் பக்கத்தில் சிவகோசரன் பயனர் குறிப்பிட்டுள்ளதைப் போல் பிற பயனர்களைப் பற்றிய தவறான புரிதல் வரும் என்னுடைய வார்த்தைகள் சரியான புரிதலின்றியும் எங்கும் முறையிட வழியில்லாது போன தவிப்பிலும் பயன்படுத்தப்பட்டவை. அதன் தவறான பயன்பாட்டுக்கு மனமாற வருந்துகிறேன். இதையும் ஜிம்மியின் பக்கத்தில் கண்டிப்பாக பதிவு செய்வேன்.// தவறை உணர்ந்து, வருத்தம் தெரிவித்தமைக்கு நன்றி!
- //விக்கி சமுகத்தால் சனநாயக முறையில் எனது விசயத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அதையும் அப்பக்கத்தில் பதிந்து, எனது முறையீட்டினை திரும்ப கட்டாயம் பெற்றுக்கொள்வேன்.// நீங்கள் இவ்வளவு இறுக்கமாக ஏன் இருக்கவேண்டும் என்பது புரியவில்லை. இப்போது இங்கு முறையிடவும், உரையாடவும் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இப்போதே அங்கு இவற்றைத் தெரிவித்து முறையீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே! உங்களை கட்டாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். இதனை நல்லெண்ண அடிப்படையில் (goodwill) நீங்கள் செய்யவேண்டும் எனக் கருதுகிறேன். எமது மற்றப் பணிகளை நிறுத்திவிட்டு, சிறீதர், நீச்சல்காரன், சிவகோசரன், நான் எதற்காக உரையாடிக் கொண்டிருக்கிறோம் எனில்... இணக்கமான முடிவினை எட்டி, தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்ந்து வளர்க்க வேண்டும் எனும் நல்லெண்ண அடிப்படையே. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 24 பெப்பிரவரி 2024 (UTC)
:@AntanO சேர்க்கப்பட்டுள்ள சொற்கள் என்ன என்பதனை காண முடிகிறது. ஆனால், அச்சொற்கள் அப்பக்கத்தில் இற்றையாகவில்லையே! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி: நாம் அனைவரும் பதட்டப்படாமல் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிம்மி வேல்சின் பேச்சுப் பக்கத்தில் வேறொருவர் ஆரம்பித்த தலைப்பின்கீழ் தவறுதலாக இம்முறை பதிவிட்டுள்ளீர்கள். தனது பேச்சுப் பக்கத்தை அவர் படிப்பார் எனில், அவர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடும் சூழல் ஏற்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:40, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடும் போதும், உணர்ச்சிவசப்படாது, சரியான பக்கங்களில், சரியான தலைப்பின்கீழ், சரியான தகவல்களை பொறுமையாக நாம் எழுதவேண்டும். மேலேயுள்ள தலைப்பின்கீழ் நீங்கள் எழுதிய வாசகங்களாகிய //பயனர்களை தடை செய்வது பற்றியும், தடை செய்யப்பட்ட பயனர்கள் அதற்காக விண்ணப்பிப்பது பற்றியும், நிர்வாக பயனர்கள் தடைக்கருவியை தன்னிச்சையாக பயன்படுத்துவதைப் பற்றியும் ஆங்கில விக்கியில் உள்ளது போல தகுந்த் கொள்கைகளை வகுக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். விக்கியைப் பற்றிய பரப்புரைகளிலும், கூடுகைகளிலும் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் இளையோரிடமும் விக்கியை பற்றிய வெளிப்படையான குற்றச்சாட்டு இதுவே.// என்பதுவும் தவறான கூற்று. தாம் எழுதும் கட்டுரைகள் அழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுபவர்களுக்கு, அவ்வாறு ஏன் நடக்கிறது என்பதனையே நாம் அனைவரும் விளக்கிக் கூறி, வழிகாட்டல் செய்கிறோம். பயனர்களுக்கு விதிக்கப்படும் தடைகள் பற்றி எனக்குத் தெரிந்து யாரும் இதுவரை நேரில் சந்திக்கும்போது (in-person meet) தெரிவித்ததில்லை; பேசியதில்லை.
- பரபரப்பான சூழலில் தவறான தகவலை எழுதிவிட்டால், அது மிகப்பெரிய அளவில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்; ஆதாயம் எதுவும் எதிர்பார்க்காது, தனது தாய்மொழியிலிருக்கும் கலைக்களஞ்சியத்தின் முன்னேற்றத்திற்காக செயலாற்றுபவர்களின் செயல்கள் கேள்விக்குள்ளாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:32, 24 பெப்பிரவரி 2024 (UTC)
- // பயனர்களுக்கு விதிக்கப்படும் தடைகள் பற்றி எனக்குத் தெரிந்து யாரும் இதுவரை நேரில் சந்திக்கும்போது (in-person meet) தெரிவித்ததில்லை// ஆம்
- @பிரயாணி , விக்கிப்பீடியா:தடை மீதான மேல்முறையீடு இந்தப் பக்கம் உங்களுக்கு உதவலாம். வினா 2 என்பதனை சற்றுக் கவனிக்கவும்.சற்று கால அவகாசம் எடுத்த பின்னர் உங்களுக்கு விருப்பம் எனில் தடை நீக்கல் கோரிக்கை வைக்கலாம். பொறுமையாக இங்கு நடந்த உரையாடல்களைப் படியுங்கள். ஸ்ரீதர். ஞா (✉) 04:16, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- என்னுடைய தவறுதான். மாற்றிவிட்டேன். நன்றி.
- //பரபரப்பான சூழலில் தவறான தகவலை எழுதிவிட்டால், அது மிகப்பெரிய அளவில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்;// என்னுடைய இற்றைப்படுத்தலை தவறாக நான் தொடர்ச்சியாக முறையீடு செய்ததாக தவறான தகவலைப் பதிப்பதும் முறையா??
- @Sridhar G என்னுடைய முறையீடே, எனக்கு விதிக்கப்பட்ட தடை, தன்னிச்சையானது, விக்கியின் நிருவாக அணுக்க கொள்கையின் படி அல்ல என்பதே. அதற்கு எங்கு முறையிடுவது. எனது பேச்சுப்பக்கத்தில் நடைபெற்று வரும் உரையாடல்களே போதுமானதா?? பிரயாணி (பேச்சு) 08:17, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- @AntanO பிரயாணி, ஜிம்மி வேல்சின் உரையாடல் பக்கத்தில் இற்றைதான் செய்திருந்தார். மேற்கொண்டு முறையீடு எதுவும் செய்யவில்லை.
- @பிரயாணி மேலே நான் முதல் பத்தியில் தெரிவித்திருந்தது - ஜிம்மி வேல்சின் பேச்சுப் பக்கத்தில் வேறொரு தலைப்பின்கீழ் தவறுதலாக பதிவிட்டது தொடர்பானது. இரண்டாவது பத்தியில் தெரிவித்திருந்தது - பரப்புரை, கூடுகை தொடர்பானது. இரண்டையும் வெவ்வேறாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- இருக்கட்டும். //என்னுடைய இற்றைப்படுத்தலை தவறாக நான் தொடர்ச்சியாக முறையீடு செய்ததாக தவறான தகவலைப் பதிப்பதும் முறையா??// முறையல்ல தான்; இது குறித்து அன்டனுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
- இது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம்... 'நல்லெண்ண அடிப்படையில்' என்பதாக சில கருத்துக்களை எழுதியிருந்தேன். அவை குறித்து நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. நிர்வாகிகளின் பொறுப்புகளில் ஒன்று, இணக்கமான முடிவை அடைதலாகும். அதற்காகத்தான் தொடர்ந்து இங்கு கருத்துக்களை இட்டு வருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:03, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- நல்லெண்ண அடிப்படையிலும், நமது தமிழ்ச் சமூகத்தின் மேலுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் முறையீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளேன். பிரயாணி (பேச்சு) 09:33, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- @பிரயாணி மிக்க நன்றி. இப்போது தீர்வை நோக்கி நகர முயற்சி செய்வோம். மற்ற இரு நிர்வாகிகளிடம் சில கேள்விகளை இந்தத் தலைப்பின் கீழும், மேலேயுள்ள தலைப்பின்கீழும் வைத்துள்ளீர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதனைப் பார்ப்போம். நானும் சற்று நேரமெடுத்துக் கொண்டு, மேலேயுள்ள தலைப்பின்கீழ் எனது உரையாடலைத் தொடர்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- Cambridge dictionary about update: to make something more modern or suitable for use now by adding new information or changing its design. இது (இற்றை) வெறுமனே இற்றைப்படுத்தலாகவும் இருக்கலாம், ஒன்றுமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை காண்பிப்பதாகவும் இருக்கலாம் அல்லது தற்போதுள்ளதுபோல் 'நான் கருத்தை பின்வாங்கிக் கொள்கிறேன்' என்பதாகவும் இருக்கலாம். AntanO (பேச்சு) 11:29, 25 பெப்பிரவரி 2024 (UTC)
- வணக்கம் @AntanO. மேற்கொண்டு உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், ஜிம்மி வேல்சின் உரையாடல் பக்கத்தில் வைத்திருந்த முறையீட்டை பிரயாணி திரும்பப் பெற்றிருந்தார். எனவே, அவர் மீதான ஒரு மாத கால தடையை நல்லெண்ண அடிப்படையில் சற்று முன்னதாகவே நீக்குவதற்கு உங்களின் சம்மதத்தைத் தருமாறு (consent) கேட்டுக்கொள்கிறேன். 'பெண்ணியமும் நாட்டார் மரபும் 2024' திட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்பாளராக அவர் தனது பெயரை பதிவுசெய்திருந்தார். அப்பணியானது தொடரும் பொருட்டு, இந்த வேண்டுகோளை நான் வைக்கின்றேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 10 மார்ச்சு 2024 (UTC)
- வணக்கம், இப்பயனர் தான் செய்த தவறை இனி செய்ய மாட்டேன் என்று இங்கு தடை நீக்கக்கோரிக்கை வைத்தால், தடை நீக்கம் சாத்தியமானது. ஆனால், தடை செய்தது பிழை ஆகவே தடை நீக்குங்கள் என்கிறார். இவரின் கருத்துக்கு ஆம் என்பவர்கள் அது தொடர்பில் கருத்திட்டு, நான் தடை செய்தது பிழையென்ற முடிவுக்கு த.வி சமூகம் முன்வந்தால், யாராவது தடையை நீக்கலாம். செல்வசிவகுருநாதன் உங்கள் நல் நோக்கத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால், பிழையான முன்னுதாரணங்களை உருவாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. திட்டங்களை நிகழ்த்த தமிழ் விக்கிப்பீடியா தனி நபரில், குழுவில் தங்கயிருக்கக்கூடாது என்பதில் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு இராது என நம்புகிறேன். AntanO (பேச்சு) 18:11, 10 மார்ச்சு 2024 (UTC)
- சரி. வேறு ஏதேனும் கருத்துக்கள் வருகின்றனவா என்பதனைப் பார்ப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:37, 11 மார்ச்சு 2024 (UTC)
- வணக்கம், இப்பயனர் தான் செய்த தவறை இனி செய்ய மாட்டேன் என்று இங்கு தடை நீக்கக்கோரிக்கை வைத்தால், தடை நீக்கம் சாத்தியமானது. ஆனால், தடை செய்தது பிழை ஆகவே தடை நீக்குங்கள் என்கிறார். இவரின் கருத்துக்கு ஆம் என்பவர்கள் அது தொடர்பில் கருத்திட்டு, நான் தடை செய்தது பிழையென்ற முடிவுக்கு த.வி சமூகம் முன்வந்தால், யாராவது தடையை நீக்கலாம். செல்வசிவகுருநாதன் உங்கள் நல் நோக்கத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால், பிழையான முன்னுதாரணங்களை உருவாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. திட்டங்களை நிகழ்த்த தமிழ் விக்கிப்பீடியா தனி நபரில், குழுவில் தங்கயிருக்கக்கூடாது என்பதில் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு இராது என நம்புகிறேன். AntanO (பேச்சு) 18:11, 10 மார்ச்சு 2024 (UTC)
- வணக்கம் @AntanO. மேற்கொண்டு உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், ஜிம்மி வேல்சின் உரையாடல் பக்கத்தில் வைத்திருந்த முறையீட்டை பிரயாணி திரும்பப் பெற்றிருந்தார். எனவே, அவர் மீதான ஒரு மாத கால தடையை நல்லெண்ண அடிப்படையில் சற்று முன்னதாகவே நீக்குவதற்கு உங்களின் சம்மதத்தைத் தருமாறு (consent) கேட்டுக்கொள்கிறேன். 'பெண்ணியமும் நாட்டார் மரபும் 2024' திட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்பாளராக அவர் தனது பெயரை பதிவுசெய்திருந்தார். அப்பணியானது தொடரும் பொருட்டு, இந்த வேண்டுகோளை நான் வைக்கின்றேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 10 மார்ச்சு 2024 (UTC)
- நல்லெண்ண அடிப்படையிலும், நமது தமிழ்ச் சமூகத்தின் மேலுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் முறையீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளேன். பிரயாணி (பேச்சு) 09:33, 25 பெப்பிரவரி 2024 (UTC)
Organising Feminism and Folklore
தொகுHello Community Organizers,
Thank you for organising Feminism and Folklore writing competition on your wiki. We congratulate you in joining and celebrating our cultural heritage and promoting gender equality on Wikipedia.
To encourage boost for the contributions of the participants, we're offering prizes for Feminism and Folklore local prizes. Each Wikipedia will have three local winners:
- First Prize: $15 USD
- Second Prize: $10 USD
- Best Jury Article: $5 USD
All this will be in gift voucher format only. Kindly inform your local community regarding these prizes and post them on the local project page
The Best Jury Article will be chosen by the jury based on how unique the article is aligned with the theme. The jury will review all submissions and decide the winner together, making sure it's fair. These articles will also be featured on our social media handles.
We're also providing internet and childcare support to the first 50 organizers and Jury members for who request for it. Remember, only 50 organizers will get this support, and it's given on a first-come, first-served basis. The registration form will close after 50 registrations, and the deadline is March 15, 2024. This support is optional and not compulsory, so if you're interested, fill out the form here.
Each organizer/jury who gets support will receive $30 USD in gift voucher format, even if they're involved in more than one wiki. No dual support will be provided if you have signed up in more than one language. This support is meant to appreciate your volunteer support for the contest.
We also invite all organizers and jury members to join us for office hours on Saturday, March 2, 2024. This session will help you understand the jury process for both contests and give you a chance to ask questions. More details are on meta page.
Let's celebrate our different cultures and work towards gender equality on Wikipedia!
Best regards,
Rockpeterson
MediaWiki message delivery (பேச்சு) 05:56, 29 பெப்பிரவரி 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,713 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
Congratulations to the Feminism and Folklore Prize Winner!
தொகுDear Winner,
We are thrilled to announce that you have been selected as one of the prize winners in the 2024 Feminism and Folklore Writing Contest! Your contributions have significantly enriched Wikipedia with articles that document the vibrant tapestry of folk cultures and highlight the crucial roles of women within these traditions.
As a token of our appreciation, you will receive a gift coupon. To facilitate the delivery of your prize and gather valuable feedback on your experience, please fill out the Winners Google Form. In the form, kindly provide your details for receiving the gift coupon and share your thoughts about the project.
Your dedication and hard work have not only helped bridge the gender gap on Wikipedia but also ensured that the cultural narratives of underrepresented communities are preserved for future generations. We look forward to your continued participation and contributions in the future.
Congratulations once again, and thank you for being a vital part of this global initiative!
Warm regards,
The Feminism and Folklore Team