இவ்வுரையாடலின் முடிவுகள் விக்கிபீடியா:நடுநிலை நோக்கு அல்லது அதன் பேச்சுப் பக்கத்தில் சேர்க்கப்படவேண்டும்

1996 தேர்தலில் ரஜினிகாந்தின் பங்கு பற்றி தற்பொழுது கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. இது போன்ற Subjective கருத்துகளை விக்கிபீடியாவில் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 1996க்குப்பிறகு அவர் வேறு எந்தக்கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை அல்ல. நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் 1999லும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகவும் பா.ம.க வுக்கு எதிராகவும் 2004 நாடாளுமன்றத்தேர்தல்களில் செயல்பட்டது நாடறிந்தது. 1996ல் மக்களின் மனநிலையே அரசுக்கு எதிராகத்தான் இருந்தது. அப்பொழுது ரஜினி சொன்ன கருத்துகள் மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. அதை கருத்தை ஒவ்வொரு டீக்கடையிலும் திருவாளர் பொது ஜனம் சொல்லிக்கொண்டு தான் இருந்தார். பிரபலமான ரஜினியும் அக்கருத்தை சொன்னதால் கொஞ்சம் பரபரப்பாயிற்று. குருவி உட்கார பனம் பழம் விழுந்தது. அவ்வளவு தான்.

ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பிரச்சாரம் செய்தது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது.அடுத்தடுத்த தேர்தல்களில் ரஜினிகாந்த் எக்கட்சியையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையுடன் இருந்து வருகிறார். என்ற கட்டுரை வாசகங்களை நீக்கக் கோருகிறேன். இது குறித்து எவ்வளவு விவாதித்தாலும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலாது. ஆதலால் இக்கருத்துகளை நீக்கி விடுதல் நலம்--ரவி (பேச்சு) 09:58, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

ஐயப்பாடின்றி நிலைநாட்ட முடியாத கருத்துக்களைத் கூடியவரை தவிர்க்கலாம். இருப்பினும் இங்குள்ள வரிகளை போதிய அளவு பொதுவாக அறுதியிட்டுக் கூறாமல் இருக்கச் செய்தால் போதுமானது என்று தோன்றுகிறது. முதல் வரியில் "காரணங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது" என்றே உள்ளது. தேவையெனில் "இது தேர்தல் புள்ளியியலாளர்களால் (Psephologists) அறுதியிட்டுக் கூறப்படவில்லை" என்ற வரியையும் இணைக்கலாம்.
இரண்டாம் வரியில் இதே போன்ற மாற்றத்தைக் கட்டுரையில் செய்துள்ளேன். -- Sundar \பேச்சு 10:38, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

ஒரு கட்டுரைக்கு பங்களிக்கும் போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்ப்பதோ, சேர்ப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனினும் சர்ச்சைக்குரிய ஒன்றை சேர்க்கும் பொழுது அது உண்மை என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விஷயம் சர்ச்சைக்குரியது என்றாலே அதற்கு கண்டிப்பாக வரலாற்று முக்கியத்துவம் இருக்கும். ஆகவே அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு, தெரியப்படுத்தும் கடமையும் விக்கிபீடியாவுக்கு உண்டு. இந்த கட்டுரையில் சர்ச்சைக்குரியதாக ரவி குறிப்பிடும் விஷயம் தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமில்லாததாக ரவி கருதலாம், எனினும் கட்டுரையில் உள்ள மனிதரின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆக இதை நீக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. 1996இல் ரஜினியின் பேட்டி தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியதா என்பது பற்றி இப்போது பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். எனினும் 1996 தேர்தல் முன் ரஜினி அஇஅதிமுகவுக்கு எதிராக பேட்டியளித்தார் என்பதும் அந்த காலகட்டத்தில் அதைப்பற்றி புகழ் பெற்ற அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் பரபரப்பாக பேசியதும் வரலாற்று உண்மை. ஆகவே ரஜினியின் அரசியல் பற்றிய அந்த பகுதி இக்கட்டுரையில் இடம்பெறுவது முக்கியம்.

"நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் 1999லும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகவும் பா.ம.க வுக்கு எதிராகவும் 2004 நாடாளுமன்றத்தேர்தல்களில் செயல்பட்டது நாடறிந்தது.-ரவி"

உண்மை. வேண்டுமானால் இதையும் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கட்டுரயில் சார்பு நிலை இருப்பதாக எவரேனும் கருதினால் அதை தொகுத்து சரிப்படுத்தலாம், அல்லது பேச்சுப் பக்கத்தில் விவாதிக்கலாம். அதற்கு பதில் எடுத்த எடுப்பிலேயே கட்டுரையில் உள்ள அந்த பகுதியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. - ஸ்ரீநிவாசன் 06:54, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

முற்றிலும் சரி. நடுநிலை நோக்கு எடுத்த எடுப்பிலேயே வந்துவிடாது. பல பயனர்கள் பங்களிக்கும் போதுதான் ஏற்படும். இருப்பினும், இது போன்ற தகவல்களுக்கு தரமான வெளிச்சான்றுகள் தர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 07:06, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆநங்கில விக்கிபிடியாவில் இருப்பதை போன்று ஒவ்வொரு காலகட்ட படங்களை இணைத்தால் நன்றாக இருக்கும்uthayai

தலைப்பு தமிழ்மரபுக்கு மாறாக உள்ளது தொகு

திருத்த வேண்டும். இரசினிகாந்து (இரஜினிகாந்து) என்றிருக்க வேண்டும் தமிழில் -ந்த். என்று முடியலாகாது.--செல்வா (பேச்சு) 01:52, 26 பெப்ரவரி 2020 (UTC)

@செல்வா: அப்படியென்றால் விஜயகாந்த் பெயரையும் மாற்ற வேண்டியதாக இருக்குமே??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:44, 9 ஏப்ரல் 2020 (UTC)

@Gowtham Sampath:ஆம் மாற்றுவதுதான் முறை. ஆங்கிலத்தில் rAjInikAntH என்று எழுதிப்பதிவு செய்ய முடியுமா? ஏன் செய்யமாட்டோம்? ஆங்கிலத்தில் முதலெழுத்து பெரிய எழுத்தாக இருக்கவேண்டும் என்பது விதி. அதேபோல தமிழிலும் இன்னின்ன எழுத்துகள்தாம் அடுத்தடுத்து வரலாம், இன்னின எழுத்துகளில்தான் முடியலாம், தொடங்கலாம் என்று விதிகள் உள்ளன. அவை அறிவார்ந்த விதிகளும் ஆகும். ஒருவர் கையெழுத்தை எப்படி வேண்டுமானலும் இடும் உரிமை உண்டு, ஆனால் ஒருமொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் இலக்கணத்தையும் மரபையும் போற்றியே எழுதுதல் வேண்டும். கலைக்களஞ்சியத்தில் ஒழுக்கமான முறையில் எழுதுதல் தேவை. நரேந்திர மோதி என்றுதான் எழுத வேண்டும். நரேந்த்ர மோதீ என்றெழுதலாகாது. பிறிதோரிடத்தில் நான் எழுதியதை பகிர்கின்றேன்.

"மொழிக்கு மொழி இலக்கணம் மாறுபடும். ஆங்கிலத்திலே மாதத்தின் பெயர்களை எழுதும்பொழுது முதலெழுத்து தலைப்பெழுத்தாக (பெரிய எழுத்தாக) இருக்கவேண்டும். January, February December என்பதுபோல. இவற்றை january, december என்றெல்லாம் சிறிய எழுத்துடன் தொடங்கி எழுதினால் பிழை. அவற்றைத் திருத்துவார்கள். ஆனால் பிரான்சிய மொழியில் இப்படி யன்று. janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre என்றுதான் எழுதுவார்கள். முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதினால் பிழை. பொருள் வேறுபடும். இதே போலத்தான், கிழமையின் பெயர்களையும் ஆங்கிலத்திலே Friday, Sunday என்றெல்லாம் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாகஎழுதவேண்டும். பிரான்சியத்தில் அப்படி இல்லை. lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. என்றெழுதுவார்கள். இடாய்ச்சில் (செருமன்) மேசை நாற்காலி போன்ற எல்லாப் பெயர்ச்சொற்களிலும் முதலெழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதவேண்டும். Tisch, Stuhl, Baum (table, chair, tree).

எசுப்பானிய மொழியிலும் மாதங்களின் பெயர்களும் கிழமைகளின் பெயர்களும் சிறிய எழுத்தில்தான் தொடங்குகின்றன"

எனவே மொழியின் இலக்கணத்தையும் மரபையும் போற்றுதல் தேவை. --செல்வா (பேச்சு) 00:11, 10 ஏப்ரல் 2020 (UTC)

பெயர்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிரந்தத்துடனும், பிறருக்கு கிரந்தம் தவிர்த்து எழுதுவதும் குழப்பத்தை உண்டாக்குகிறது. ஒரே போல இருக்க வேண்டும். உதாரணம்: ஜெ. ஜெயலலிதா, இரசினிகாந்து --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:12, 27 சூன் 2022 (UTC)Reply
@Dineshkumar Ponnusamy: தமிழ் விக்கிப்பீடியாவில் தலைப்பிடுதலில் விடாபிடியான கொள்கைகள் இல்லை. தமிழில் தலைப்பிடும் பயனர்களை, ஏன் தமிழில் தலைப்பிடுகிறீர்கள்? என்றோ
கிரந்தத்தில் தலைப்பிடும் பயனர்களை, ஏன் தமிழில் தலைப்பிடவில்லை? என்றோ கேட்பதில்லை, தலைப்பிடுதலில் தாராளக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. -- சா. அருணாசலம் (பேச்சு) 23:27, 27 சூன் 2022 (UTC)Reply
தாரளமாக கடைபிடிப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு கொள்கை தான் இருக்க வேண்டும்? தங்களுக்கு ஏற்ற பக்கத்தில் மட்டும் தமிழை நிலைநாட்டுவது, மற்ற பக்கங்களில் ஒரு சப்பைகட்டு கட்டுவது என்று தான் உள்ளது. அவருடைய பெயரை ஏன் தமிழ்ப்படுத்த வேண்டும்? அப்படி தமிழ்ப் படுத்தவதாக இருந்தால் எல்லா பக்கங்களிலும் தமிழ்ப் படுத்தலாம், இல்லையெனில் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:04, 28 சூன் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரசினிகாந்து&oldid=3451950" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரசினிகாந்து" page.