ஜிஎம் மோமின் மகளிர் கல்லூரி

ஜிஎம் மோமின் மகளிர் கல்லூரி(G.M. Momin Women's College) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில் உள்ள மகளிர் கல்லூரி ஆகும்.

ஜிஎம் மோமின் மகளிர் கல்லூரி
வகைதனியார் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1989
நிறுவுனர்கொங்கன் முஸ்லிம் கல்விச் சங்கம்
Academic affiliation
பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்சுகைல் ஃபகீஹ்
தலைவர்தலாஹ் என்.ஃபகீஹ்
முதல்வர்முனைவர் தபசும் ஷேக்
அமைவிடம், , ,
421302
,
வளாகம்புறநகர்
மொழிஆங்கிலம், இந்தி, உருது
இணையதளம்கல்லூரி இணையதளம்

1989 ஆம் ஆண்டில் இசுலாமிய சிறுபான்மைக் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிக பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை பயிற்றுவிக்கிறது[1].

வரலாறு தொகு

தானே மாவட்டத்தின் கொங்கன் முஸ்லிம் கல்விச் சங்கம்(KMES) எனப்படும் 1927 இல் நிறுவப்பட்டதும் பல ஆண்டுகளாக கல்வித் துறையில் தனது சேவைகளை வழங்கி வரும் இசுலாமிய தொண்டு நிறூவனத்தின் மூலம் பெண்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை இசுலாமிய மக்கள் மற்றும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே இக்கல்லூரியாகும்.


1989 ஆம் ஆண்டில் வெறும் 94 மாணவர்களுடன் சாதாரணமாக தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 1650 க்கும் மேற்பட்ட பெண் மாணவர்கள் கலை, அறிவியல் மற்றும் வணிக பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் பல்வேறு படிப்புகளுக்காக சேர்ந்து பயின்று வருகின்றனர்.

அங்கீகாரம் தொகு

இந்த கல்லூரி 1989 ஆம் ஆண்டு முதல் மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] அதோடு பல்கலைக்கழக மானியக் குழுவின் (இந்தியா) சட்டப்பிரிவு 12 (பி) மற்றும் 2 (எஃப்) இன் கடிதம் எண்: F8-292/2006 (CPP-1) தேதி: 16 ஜனவரி 2007 மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

தன்னாட்சி நிறுவனமான பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் 03/05/2004 அன்று 77.87% நிறுவன மதிப்பெண்ணுடன் பி + தரத்தோடு முதன் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இரண்டாம் சுழற்சியில் இக்கல்லூரி 23/02/2014 அன்று 3.10 CGPA உடன் "ஏ" தரத்துடன் மறுஅங்கீகாரம் பெற்றுள்ளது. மூன்றாம் சுழற்சியில் 07/09/2021 அன்று 2.84 CGPA உடன் "பி++" தரத்துடன் மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது.



மேற்கோள்கள் தொகு

  1. "Home". gmmomincol.org.
  2. "இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்".
  3. "அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்".