விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்

இது பகுப்பாக்கம் தொடர்பான வழிகாட்டல் பக்கம்.

உதவி தொகு

  1. பகுப்புகள் பற்றிய நுட்பங்கள் பற்றி அறிய உதவி:பகுப்பு
  2. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்

நெறிமுறைகள் தொகு

தலைப்பை நகர்த்துதல் தொகு

தலைப்பில் பிழை இருந்தால், தலைப்பை வழிமாற்று இன்றி நகர்த்த வேண்டும்.

ஏன்?
அவ்விதம் செய்யும்போது, முந்தைய தொகுப்புகளுக்குரிய வரலாறு அப்படியே இருக்கும்.

நகர்த்திய பிறகு என்ன செய்ய வேண்டும்?

  • பழைய பகுப்பில் குறைந்த எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், மனித ஆற்றல் கொண்டு அக்கட்டுரைகளில் புதிய பகுப்பினை சேர்க்கலாம்.
  • அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், தானியங்கி உதவி மூலம் புதிய பகுப்பினைப் சேர்க்க வேண்டும்.

பகுப்பினை இடுதல் தொகு

இயன்றளவு துல்லியமான பகுப்பினை (more specific) இடவேண்டும். எடுத்துக்காட்டு:

  • மேட்டூர் அணை எனும் கட்டுரையில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பினை இடுதல் அவசியமானது ஆகும். இந்தியா அல்லது தமிழ்நாடு அல்லது அணைகள் எனும் பகுப்பினை இடுதல் பொருத்தமற்றது. இது பொதுப்படையாக (generic) இருக்கும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பினை இட்டபிறகு, இந்திய அணைகள் எனும் பகுப்பினையும் இடுதல் தேவையற்றது. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பு, இந்திய அணைகள் எனும் பகுப்பினுள் அடங்கும்.
  • சேலம் மாவட்டத்திலுள்ள அணைகள் பகுப்பினை இக்கட்டுரையில் இட்டிருத்தல் மிகவும் சிறப்பானது ஆகும்.
  • தெளிவான புரிதலுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் காணுங்கள்.

துறைசார்ந்த வழிகாட்டல்கள் தொகு

தமிழ்த் திரைப்படம் தொகு

நபர்கள் தொகு

  • பிறந்த ஆண்டு, வாழும் நபர்கள் அல்லது இறந்த ஆண்டு போன்ற பகுப்புகள் நன்று. அத்தோடு, அக்கட்டுரை எதற்காக சிறப்புடையது என்பதை அறிந்து அந்தப் பகுப்பினை இடுதல் அவசியம்.

இயற்கை அழிவுகள் தொகு

கருவிகள் தொகு

இணைய கருவிகள் -

  • Petscan கருவி - பகுப்புகளை ஆராய்வதற்கு பயன்படும் கருவி
  • பகுப்பு நிறைவி - ஒரு குறிப்பிட்ட பகுப்பிற்காக, பிற விக்கியின் பகுப்பில் இருக்கும் பகுப்பு உறுப்பினர்களை கண்டறிவதற்கு (உ.ம். பகுப்பு:1947 இறப்புகள் பகுப்பில் எந்த கட்டுரைகளை இணைக்க வேண்டும் என்றறிவதற்கு, ஆங்கில விக்கியின் en:category:1947 deaths பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளைக் காட்டும் (தமிழ் விக்கியில் உள்ளவை மட்டும்) (Home Language - "ta" , enter category name without "category:". after selecting Go select "en" for enwiki)

செயலாக்கத் திட்டங்கள் தொகு

  1. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு