விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

பகுப்புகளை ஒழுங்கமைப்பது குறித்தான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேம்பாடு

முக்கியத்துவம் தொகு

  1. ஒரு குறிப்பிட்ட தகவல்/துறை குறித்து வேறு என்னென்ன கட்டுரைகள் இருக்கின்றன என்பதனை பங்களிப்பாளரும், வாசகரும் அறிவதற்கு.
  2. விக்கிதானுலவி மூலமாக கட்டுரைகளில் தொகுப்புகளை செய்வதற்கு.

பகுப்பில்லாதவை கட்டுரைகளை துப்புரவு செய்தல் தொகு

செயல்முறை தொகு

  1. காண்க: பகுப்பில்லாதவை
  2. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரையை நீக்க வேண்டும்.
  3. தேவைப்படும் கட்டுரைகளில் உரிய பகுப்பை சேர்க்க வேண்டும்.
  4. உரிய பகுப்பை சேர்த்தபின், சான்றில்லாத கட்டுரைகள் / விரிவாக்கம் தேவைப்படும் கட்டுரைகள் ஆகியன உரிய துப்புரவு பகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

இயற்ற வேண்டிய பகுப்புகளை உருவாக்குதல் / முறைப்படுத்துதல் தொகு

  1. காண்க: தரமுயர்த்தப்பட வேண்டிய பகுப்புகள்
  2. கட்டுரைகளில் duplicate பகுப்புகள் நீக்கப்பட வேண்டும். உதாரணம்: மாவட்டத்திலுள்ள எனும் பெயரில் ஒரு பகுப்பு ஏற்கனவே இருக்கும். அவற்றுள் 40 கட்டுரைகள் அடங்கியிருக்கும். மாவட்டத்தில் உள்ள எனும் பெயரில் பகுப்பு ஒன்று, சுமார் 10 கட்டுரைகளில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பகுப்பு உருவாக்காததால், கட்டுரைகளில் அப்பகுப்பு சிவப்பு நிறத்தில் தோன்றும். இந்தச் சூழலில், சிவப்பு நிற பகுப்புகளை நீக்கிவிட்டு, இக்கட்டுரைகளில் சரியான பகுப்பினை சேர்க்க இயலும்.
  3. வார்ப்புருக்களில் அறிந்தோ / அறியாமலோ செய்யப்படும் சில மாற்றங்களால், தேவையற்ற பகுப்புகள் கட்டுரைகளில் சேர்ந்துவிடுகின்றன. இந்த வார்ப்புருக்களை மீளமைப்பதன் மூலமாக இந்தப் பகுப்புகளை நீக்கிவிடலாம். எடுத்துக்காட்டு: விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#பகுப்புகள் சேர்வது தொடர்பான கேள்வியும், உதவி கோரலும்
  4. பகுப்புகளை முறைப்படுத்தவும் உதவியாக இருக்கும். உதாரணம்: தமிழக மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என பகுத்தல்.

முன்னெடுப்புகள் தொகு