மதுகா டிப்ளோசுதெமோன்
மதுகா டிப்ளோசுதெமோன் (Madhuca diplostemon) என்பது சப்போட்டாசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமெ காணப்பட்ட[1] இதன் அசல் மாதிரிகள் 1835 இல் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்பு எங்குமே பதிவு செய்யப்படாததால்,அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
மதுகா டிப்ளோசுதெமோன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. diplostemon
|
இருசொற் பெயரீடு | |
Madhuca diplostemon (C.B.Clarke) P.Royen |
2020 ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும், ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்காவின் ஷைலஜா குமாரி என்ற ஆராய்ச்சியாளர் அவரது, பிஎச்டி படிப்பின் ஒரு பகுதியாக பல்வேறு தாவர மாதிரிகளை அவரது குழுவினருடன் ஆராயும் போது, கொல்லம் மாவட்டம் , பரவூர் கூனாவில் உள்ள அயலவல்லி சிவன் கோயில் குகையில், 180 ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட இம்மரம் முதிர்ந்த நிலையில் கண்டறிந்துள்ளனர். உள்ளூரில், அத்திமரம் என்று அறியப்பட்ட இம்மரம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மற்ற கோவில்களில் (காவுகளில்) நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வேறு எங்கும் காணப்படவில்லை. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை 'முக்கிய அருகி வரும்' இனம் என வகைப்படுத்தியுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rivers, M.C. (2021). "Madhuca diplostemon". IUCN Red List of Threatened Species 2021: e.T33654A126572431. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T33654A126572431.en. https://www.iucnredlist.org/species/33654/126572431. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ "கொல்லம் தோப்பில் 180 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அழிந்துபோன மரம்". thehindu. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.