விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்
நோக்கம்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி விக்கிப்பீடியர்கள் சந்திப்பும் பரப்புரைகளும் முன்னெடுத்தல். தமிழ் விக்கிப்பீடியாவை இலங்கையில் பரவலாக அறியச்செய்து பயனர்களை அதிகரித்தல்.
இடம்
தொகுநிகழிடங்கள்
தொகுதிண்ணை விடுதி
86, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
பிறைட் இன் விடுதி
51, சிவன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
கம்சியா மகால்
37, சேர் பொன். இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்
வருகை
தொகுகட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணதிற்கு வருவதற்கான வழிகள்
- இலகு வழி:- கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு புறக்கோட்டைக்கு (pettah-பெற்றா அல்லது சிங்களத்தில் பிற்றக்கொட்டுவ) எந்நேரமும் தாராளமான பேருந்து சேவைகள் உள்ளன. புறக்கோட்டைக்கு சென்று அங்கு
- காலையிலிருந்து சுமாராக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவைகள் இருக்கும்.
- அல்லது புறக்கோட்டையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்பாணத்திற்கான பின்வரும் நேரங்களில் புறப்படும் தொடருந்துகளில் வரலாம்.
- 05:45:00 A.C. - INTERCITY - A.C. - INTERCITY
- 06:35:00 YAL DEVI - LONG DISTANCE
- 11:50:00 UTTARA DEVI - A.C. - INTERCITY
- 15:55:00 SRI DEVI - INTERCITY
- 20:30:00 NIGHT MAIL TRAIN - NIGHT MAIL TRAIN
- வேறு வழி:- கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் கொழும்பு-புத்தளம் வீதிக்கு வந்தால் அவ்வீதியால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றில் யாழ்ப்பாணம் வரலாம். (இரவு 9 மணி வரையில்)
- இன்னொரு வழி:- புறக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து மொரட்டுவ செல்லும் (காலி வீதியால் (Galle Road-கோல் ரோட்) செல்லும்) பேருந்தில் ஏறி வெள்ளவத்தையில் இறங்கி அங்கு யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துக்கான பதிவுகளை மேற்கொண்டு இரவு 8 மணியளவில் வெள்ளவத்தையில் இருந்து புறப்படும் பல்வேறு தனியார் பேருந்து சேவைகளில் பயணம் செய்து யாழ்ப்பாணம் வரலாம்.
யாழ்ப்பாண நகரத்தில் இருந்து தங்குமிடம் வந்தடைதல்
- யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் என்பவற்றில் இருந்து தங்குமிடத்திற்கான தூரம் சுமார் 2 கிலோமீட்டர் ஆகும். ஆகவே தங்குமிடத்தை வந்தடைவதற்கான சிறந்த வழி முச்சக்கரவண்டிப் பயணமே. முச்சக்கரவண்டிச் சேவைகள் இரவு-பகல் இருக்கும். முச்சக்கர வண்டியில் ஏறி பலாலி வீதி பரமேஸ்வரா சந்திவரை என்று கூறி வந்தால் அங்கிருந்து கிழக்குப் பக்கம் செல்லும் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் இடக்கைப் பக்கம் தாங்கும் விடுதியான "Bright Inn" உள்ளது.
திகதி
தொகு2019 அக்டோபர் 19, 20
கருத்துக்கணிப்பு
தொகு2019 பிற்பகுதியில் இலங்கையில் நடத்த எதிர்பார்த்திருக்கும் தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு நல்கை பெறுவதற்குத் தமிழ் விக்கிப்பீடியர்களின் கருத்துக்கணிப்பு அவசியமானது. நல்கை விண்ணப்பம் எதிர்வரும் பெப்ரவரி 4இற்கு முன்பதாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. கருத்துக்கணிப்பு சனவரி 20 முதல் சனவரி 27 வரை நடைபெறும். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்று உதவுமாறு நிகழ்வு ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகின்றது. நன்றி. இணைப்பு: தமிழ் விக்கிப்பீடியா 15 ஒன்றுகூடல் - கருத்துக்கணிப்பு
- கருத்துக்கணிப்பு சனவரி 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நல்கை
தொகுஇந்தியாவிலிருந்து ஆகக்கூடியது 20 பேருக்கும், இலங்கையிலிருந்து ஆகக்கூடியது 10 பேருக்கும் தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட நிகழ்வு தொடர்பான செலவுகள் விக்கிமீடியா அறக்கட்டளையின் நல்கையில் அடங்கும். சிஐஎசு-ஏ2கே அமைப்பின் உதவியுடன் மேலும் 5 இந்தியர்கள் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. நல்கை பெறுவோர் பட்டியல் பேச்சுப் பக்கத்தில் காணப்படுகிறது.
தகுதி
தொகுபுதுப்பயனர் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் தவிர ஏனையோர் 2019 மே முதலாம் திகதிக்கு முன்னர் குறைந்தது 500 தொகுப்புகளைச் செய்திருக்க வேண்டும்.
நல்கை விண்ணப்ப நெறியாளர்கள்
தொகுநல்கை பெறுவோர் பட்டியல்
தொகுஇந்தியாவிலிருந்து பங்கேற்கும் பயனர்கள்
தொகு- Arularasan. G
- Balajijagadesh
- Balu1967
- Balurbala
- Deepa_arul
- Hibayathullah
- Info-farmer
- Neechalkaran
- Ravidreams
- Sridhar G
- Thamizhpparithi Maari
- Tshrinivasan
- Vasantha Lakshmi V
- Yercaud-elango
- காந்திமதி
- கி.மூர்த்தி
- தமிழ்க்குரிசில்
- தென்காசி சுப்பிரமணியன்
- Mohammed Ammar
- Abinaya Murthy
- TVA ARUN
- திவ்யாகுணசேகரன்
இலங்கையிலிருந்து பங்கேற்கும் பயனர்கள்
தொகுநட்புவெளிக் கொள்கை
தொகுபங்கேற்கும் பயனர்கள் அனைவரும் பின்வரும் நட்புவெளிக் கொள்கைக்கு அமைவாக நடந்து கொள்ளல் வேண்டும்.
நிகழ்வுகள்
தொகுமுதல் நாள் நிகழ்வுகள்
தொகு2019-10-19
நேரம் | இடம் | விடயம் | வழங்குவோர்/ குறிப்புகள் |
---|---|---|---|
மு.ப 8.30 - 9.30 | திண்ணை விடுதி | வருகைப்பதிவு | |
மு.ப 9.30 - 9.50 | திண்ணை விடுதி | தமிழ் விக்கிப்பீடியா கடந்து வந்த பாதை | இ. மயூரநாதன் |
மு.ப 9.50 - 10.20 | திண்ணை விடுதி | விக்கிப் பயனர்களுக்குப் பயன்படத்தக்க நிகழ்படங்கள் | தகவல் உழவன், இரா. பாலா |
மு.ப 10.20 - 10.40 | திண்ணை விடுதி | நிர்வாகிகளின் பொறுப்புகள், செயற்பாடுகள் குறித்த வழிகாட்டல் | அ. இரவிசங்கர் |
மு.ப 10.40 - 11.10 | திண்ணை விடுதி | தேநீர் இடைவேளை | |
மு.ப 11.10 - 11.40 | திண்ணை விடுதி | உயர் தொழில்நுட்ப நிறுவனமும் விக்கிப்பீடியாவும் - ஓர் அனுபவப் பகிர்வு | |
மு.ப 11.40 - 12.10 | திண்ணை விடுதி | தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் திட்ட அறிமுகம் | |
மு.ப 12.10 - 12.40 | திண்ணை விடுதி | வேங்கைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் | |
பி.ப 12.40 - 1.00 | திண்ணை விடுதி | காப்புரிமை | சீனிவாசன் |
பி.ப 1.00 - 1.30 | திண்ணை விடுதி | தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தக்கூடிய சில நுட்பங்கள் | நீச்சல்காரன் |
பி.ப 1.30 - 2.30 | பிறைட் இன் விடுதி | மதிய இடைவேளை | |
பி.ப 2.30 - 3.30 | பிறைட் இன் விடுதி | விக்கியர் சந்திப்பு | விக்கிப் பயனர் தமக்கிடையிலான நட்பு விசாரிப்பு உரையாடல் |
பி.ப 3.30 - 7.30 | கம்சியா மகால் | அறிவியல் தமிழ் கருத்தரங்கம் | யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்த நிகழ்வு |
அறிவியல் தமிழ் கருத்தரங்கம் - நிகழ்ச்சி நிரல்
தொகுமங்கல விளக்கேற்றல்
வரவேற்பு நடனம்
தலைமை: திரு. மு. சிவகோசரன் (பொறியியலாளர், விக்கிப்பீடியர்)
வரவேற்புரை: திரு. இ. சர்வேஸ்வரா (செயலாளார், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்)
வாழ்த்துரை: பேராசிரியர், இலக்கிய கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் (வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
தொடக்கவுரை: செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன் (தலைவர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்)
அறிமுக உரை: திரு. இ. மயூரநாதன் (ஓய்வுநிலைக் கட்டடக் கலைஞர், விக்கிப்பீடியர்)
பயிலரங்கு: தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்தல் அறிமுகம்
வழங்குபவர்கள்: தமிழ் விக்கிப்பீடியர்கள்
சிறப்புரை: அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஈழத்தவர்களின் பங்களிப்பு
வழங்குபவர்: திரு தி. செல்வமனோகரன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
கலந்துரையாடல்: விக்கிப்பீடியாவில் பங்களித்தல் குறித்த ஐயங்கள்
பரிசில் வழங்கல்: தமிழ் விக்கிப்பீடியா தொடர் பங்களிப்பாளர் போட்டி, புதுப்பயனர் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கல்.
நிறைவுரை: பேராசிரியர் தி. வேல்நம்பி (பொருளாளர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்)
நன்றியுரை: திரு. ச. சிவகுமார் (பிரதிப்பதிவாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், விக்கிப்பீடியர்)
இரண்டாம் நாள் நிகழ்வுகள்
தொகு2019-10-20
நேரம் | இடம் | விடயம் | குறிப்புகள் |
---|---|---|---|
மு.ப 8.30 - 1.30 | கலாசாரச் சுற்றுலா | ||
பி.ப 1.30 - 2.30 | மதிய இடைவேளை | ||
பி.ப 2.30 - 3.00 | பிறைட் இன் விடுதி | புதிய பயனர்களை ஈர்க்கும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் | |
பி.ப 3.00 - 3.30 | பிறைட் இன் விடுதி | தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பை ஈர்க்கும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் | |
பி.ப 3.30 - 4.00 | பிறைட் இன் விடுதி | நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தல், நீக்குதல் குறித்த கொள்கைகள் வகுத்தல் குறித்த கலந்துரையாடல் | |
பி.ப 4.00 - 4.30 | பிறைட் இன் விடுதி | தேநீர் இடைவேளை - நிகழ்வு தொடர்பான கருத்துக் கணிப்பு | |
பி.ப 4.30 - 5.00 | பிறைட் இன் விடுதி | தமிழ் விக்கிப்பீடியா 16ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் |
கலாச்சாரச் சுற்றுலா செல்லும் இடங்கள்
தொகுமு.ப 8.30 - சுற்றுலா ஆரம்பம்
மு.ப 9.00 - நல்லூர் கந்தசுவாமி கோவில்
மு.ப 9.30 - நல்லூர் சங்கிலியன் நினைவிடம்
மு.ப 10.30 - யாழ்ப்பாணக் கோட்டை
ந.ப 12.00 - கீரிமலை
பி.ப 1.30 - சுற்றுலா நிறைவு
நிகழ்ச்சி குறிப்புகள்
தொகுஊடகங்கள்
தொகுநிகழ்ச்சி குறித்த ஊடகங்களை commons:Category:Tamil wikipedia 16 years celebrations என்ற பகுப்பில் பார்க்கலாம்.